Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

இனியொரு... by இனியொரு...
04/29/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, வரலாற்றுப் பதிவுகள், அரசியல்
0 0
223
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) என்ற நான் சார்ந்த அமைப்பு பெயர் சூட்டப்பட்ட பின்னர், எம்மத்தியில் பல முரண்பாடுகள் உருவாகின்றன. சுந்தரம், உமா மகேஸ்வரன், கண்ணன், சந்ததியார் ஆகியோரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. அவர்களின் தன்னிச்சையான போக்குகள் பல உறுப்பினர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது. அழகன், நெப்போலியன் போன்றோர் ஏற்கனவே விலகியிருந்தனர்.

சாந்தன், நான், நாகராஜா, ரவி, குமணன் ஆகியோர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை முன்வைக்கும் நிலையில் காணப்பட்டோம்.

அச்சு ஊடகம் ஊடான கொள்கைப் பிரச்சாரமாகப் பத்திரிகை வெளியிட வேண்டும் என்றும் மக்கள் அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் பொதுவான முடிவுகளாக இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதே வேளை இராணுவத் தாக்குதல்களையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் யாராலும் நிராகரிக்கப்படவில்லை.

பின்னதாக உமா மகேஸ்வரன், சுந்தரம், கண்ணன் ஆகியோர் இராணுவத் தாக்குதல்கள் மத்திய குழுவின் முடிவின்றியும் மேற்கொள்ளப்படலாம் என்ற கருத்தையும் முன் வைக்க இது எமக்கு மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. எண்பதுகளில் களில் ஏற்பட்ட பிழவுகள் முரண்பாடுகள் என்பன அனைத்துப் போராளிகள் மத்தியிலும் வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் ஒரு உடனடியான எதிர்ப்பை யாரும் தெரிவிக்கவில்லை.

மக்கள் அமைப்புக்களை உருவாக்க எண்ணிய எமது நோக்கங்கள் திசை மாறுகின்றன. முதலாளித்துவ நிறுவன வடிவிலான அமைப்பை நோக்கிச் செல்லும் நிலையைப் பலரும் அவதானித்தோம். மக்களில் தங்கியிராத எமக்கு மத்தியில், உறுப்பினர்களைப் பராமரிக்கவும், இயக்கத்தை விரிவுபடுத்தவும் பணத்திற்கான தேவை அதிகரிக்கிறது. அவ்வேளையில் சுந்தரம் ஊடாக வட்டுக்கோட்டைத் தபால் நிலையத்தின் பணத்தைக் கொள்ளையிடுவதற்கான தகவல்கள் கிடைக்கின்றன.

வட்டுக்கோட்டை தபால் நிலையத்தைக் கொள்ளையிட உமாமகேஸ்வரன், சுந்தரம், ரவி ஆகியோர் செல்கின்றனர்.

புளட் இயக்கம் நிகழ்த்திய முதலாவது இராணுவ நடவடிக்கையாக அதனைக் கருதலாம்.

ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் வரையில் கொள்ளையிடப்படுகிறது. இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே மத்திய குழுவிற்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னதாக சுந்தரமும் உமா மகேஸ்வரனும் வவுனியா சென்ற வேளையில் ஒரு பொலீஸ் உத்தியோகத்தரைக் கொலைசெய்து அவரது துப்பாக்கியைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் மத்திய குழுவிற்குத் தெரிவிக்கப்படவில்லை. சில காலங்களின் பின்னரே இது குறித்து நாம் அறிந்து கொண்டோம்.

சுந்தரம் மற்றும் உமா மகேஸ்வரன் தலைமை வகித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் தவறான வழியில் மக்கள் தொடர்பற்ற அவர்களிலிருந்து அன்னியப்பட்ட ஆயுதப் போராட்டத்தையே முன்னெடுப்பதான தோற்றம் ஒன்று உருவாகிறது. நாம் எதற்காக பிரபாகரன் குழுவோடு முரண்பட்டோமோ அதே திசையில் நாமும் பயணிப்பதாக உணர்கிறோம்.

பொது வாக்கெடுப்புக்கள் நடந்த வேளைகளிலெல்லாம் அனைவரிலும் அதிகமாக வாக்குகளைப் பெற்றவரும் அனைவரது அபிமானத்தைப் பெற்றிருந்தவருமான சாந்தன் இயக்க வேலைகளிலிருந்து விலகிச்சென்றுவிடுகிறார். அவரைத் தொடர்ந்து குமணனும் ஒதுங்கிக்கொள்கிறார்.

சாந்தன் கொழும்பிற்குச் சென்று சொந்த வாழ்க்கையில் ஈடுபட, குமணன் தனது ஊருக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்.

இவர்கள் சென்றபின்னர், உமா மகேஸ்வரன், கண்ணன், சுந்தரம், சந்ததியார் போன்றோரிடம் தவறுகள் குறித்து நாகராஜா, ரவி, நான் ஆகியோர் விவாதிக்கிறோம்.

உமா மகேஸ்வரனைப் பொறுத்தவரை இடதுசாரி அரசியலில் எந்த ஆர்வமும் கொண்டவராக இருந்ததில்லை. ஒய்வுகிடைக்கும் நேரங்களில், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நூல்களைப் படிக்கும் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலின் வன்முறைத் தொடர்ச்சியாகவே காணப்பட்டார். சுந்தரத்திற்கு ஆரம்ப காலங்களில் சில இடதுசாரிகளின் தொடர்புகளூடாக சில விடயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அதற்கு மேல் முற்போக்கு அரசியலை நோக்கிய எந்த நகர்வையும் அவர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தூய இராணுவ வழிமுறையை உமாமகேஸ்வரன் கண்ணன் ஆகியோரோடு இணைந்து முன்னிலைப்படுத்தினார்.

கண்ணன் மற்றும் சந்ததியார் போன்றோர் கூட மக்களமைப்புக்கள் குறித்தோ அவற்றின் முக்கியத்துவம் குறித்தோ எந்த பிரக்ஞையும் அற்றவர்களாகவே காணப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளோடு நீண்ட விவாதங்கள் போராட்டங்களூடாக நாம் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய உமாமகேஸ்வரன், சுந்தரம் குழுவினர் அதற்கான எந்த அடிப்படை நகர்வுகளையும் ஊக்குவிக்கவில்லை.

ஆக, நான், நாகராஜா, ரவி ஆகியோர் எமது செயற்பாடுகளைக் கைவிடுவதாகத் தீர்மானிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். நாம் புளட் அமைப்புடன் செயற்பாடுகளை இடைநிறுத்துவதை உமா மகேஸ்வரன் குழுவினரும் மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்த்திருந்தனர்.

இப்போது ஒரு புறத்தில் பிரபாகரன் சார்ந்த குழுவினரும் மறுபுறத்தில் சுந்தரம், உமாமகேஸ்வரன் சார்ந்த குழுவினரும் இடையில் நாமும் என்று நிலை உருவாகிவிட்டது. இதையெல்லாம் தவிர நாங்கள் தேடப்படுகின்ற போராளிகள்.
நானும் நாகராஜாவும் சிறுப்பிட்டிப் பகுதியில் தலைமறைவாக வாழ்கிறோம். அங்கிருந்து எதாவது என்றாவது ஒரு நாள் மாற்றங்களோடு எம்மையும் இணைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தோம். உமா மகேஸ்வரன், சுந்தரம், கண்ணன், சந்ததியார் போன்ற அனைவரோடும் எமக்கு முற்றாகவே தொடர்புகள் அற்றுப் போயிருந்தன.

இதேவேளை பிரபாகரனோடு அவரது முன்னைய குழுவில் செயற்பாடற்றிருந்த பலரும் இணைந்து கொள்கின்றனர்.

மனோ 83 களின் ஆரம்பத்தில் ரெலோ அமைப்புடன் இணைந்து கொண்டதாக அறிந்திருந்தேன்.

7ம் திகதி ஜனவரி மாதம் 1981 ஆம் ஆண்டு குரும்பசிட்டி என்ற புறநகர்ப் பகுதியில் நகை அடகுபிடிக்கும் கடையொன்ற இயக்கத் தேவைகளுக்காக பிரபாகரன், குட்டிமணி ஆகியோர் கொள்ளயிடுகின்றனர்.

நீர்வேலி வங்கியில் பெருந்தொகையான பணத்தைக் கொள்ளையிடுவதற்கான முன் தயாரிப்புகளில் ஈடுபடுவதற்காகவே இந்தக் கொள்ளை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அந்தக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய பொதுமக்களில் இருவரான ஐயாத்துரை குலேந்திரன் என்போர் ஆயுதம்தரித்த போராளிகளால் கொலைசெய்யப்பட்டனர். தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தக் கொலைகளை மேற்கொண்டதாகக் பின்னதாக அவர்கள் கூறினர்.

“தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக” என்ற தலையங்கத்தில் மக்களைக் கொன்று போட்ட முதலாவது வெளிப்படையான தாக்குதல் இது தான். இந்தத் தாக்குதலின் பின்னணியிலிருந்த அரசியல் முள்ளிவாய்க்கால் வரை மக்களை அழைத்து வந்திருக்கிறது.

அங்கும் போராளிகளைக் காப்பாற்றுவதற்காக மக்கள் பலியெடுக்கப்படிருக்கிறார்கள்.

இதே காலப்பகுதியில் செயல் வீரனாகத் தன்னை ஆட்கொண்டதாகப் பிரபாகரன் கூறிக்கொள்ளும் செட்டியைப் பிரபாகரனும், குட்டிமணியும் இணைந்து சுட்டுக்கொலை செய்கின்றனர்.

குரும்பசிட்டி கொள்ளை நிகழ்ந்து மூன்று மாதங்களில் 25.03.1981 அன்று நீர்வேலி வங்கிக் கொள்ளை திட்டமிட்டு நடத்தப்படுகிறது. குட்டிமணி தலைமைதாங்கிய இந்தத் தாக்குதலில் பிரபாகரனும் பங்கெடுத்திருந்தார். 7.9 மில்லியன் ரூபாய். பணத்தை அவர்கள் கொள்ளையிட்ட போது முழு இலங்கையுமே ஒருகணம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பலர் “பெடியள்” வென்றதாகப் பேசிக்கொண்டார்கள்.

thangathuraiநீர்வேலி வங்கிக் கொள்ளை உட்பட அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நாம் தலைமறைவாக வாழ்ந்த இடத்திற்கு மிக அருகாமையிலேயே கைவிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் பாதுகாப்புப் படைகளின் தேடுதல்களிலிருந்து தப்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவை அனைத்தும் எம்மீதான எதிர்ப்புணர்வில் திடமிட்டு மேற்கொள்ளப்பட்டதா, இல்லை தற்செயல் நிகழ்வுகளா என்பது குறித்து தெளிவற்றிருந்தாலும், இலங்கையில் இனிமேல் வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேற வேண்டிய நிலைலிருந்தோம்.

மக்கள் திரளமைப்புக்களிலிருந்து ஆயுதப்போராட்டத்தைக் கட்டமைக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த ஒரே காரணத்திற்காக நாம் அனுபவித்த துயரங்கள் பல. இவை அனைத்தும் தமிழினத்தின் சாபக்கேடோ என துயரில் துவண்டதுண்டு.

நாம் இலங்கையிலிருந்து தலைமறைவாக எங்காவது செல்ல வேண்டுமானால் தமிழ் நாடு ஒரு இலகுவான வழி மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட. நாம் இந்தியா செல்வதென முடிவெடுத்த பின்னர் அழகனைத் தொடர்புகொள்கிறோம். சண்டிலிப்பாய் பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்த ரவியையும் தொடர்புகொள்கிறோம். அவரும் எம்மோடு இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்ததும், நாம் தமிழ் நாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம்.

அழகன் ஊடாக அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பணத்திலிருந்து தலைமறைவாகவே மூவரும் மன்னார் செல்கிறோம்.

மன்னாரிலிருந்து அழகன் ஒழுங்கு செய்த விசைப்படகில் ராமேஸ்வரம் செல்கிறோம்.

முன்னைய காலங்களில் பல தடவைகள் தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறேன். இந்தத் தடவை எதையோ இழந்தது போன்று உணர்கிறேன். நம்பிக்கையோடு படகில் ஏறிய நாட்கள் போன்று இருந்ததில்லை. எனது தோழர்கள், இலங்கை அரசின் அடக்குமுறை,நான் நேசித்த மக்கள், நான் தேர்ந்தெடுத்த போராட்ட வழிமுறை, நானும் இணைந்து வளர்த்தெடுத்த போராட்டம் அனைத்தையுமே மன்னார் கரையோரத்தில் விட்டுச் செல்வதான உணர்வு ஏற்படுகிறது.

என்னோடிணைந்த தோழர்கள் மட்டுமல்ல இன்னும் சமூகத்தின் சிந்தனை முறையோடு போராடித் துவண்டுபோகும் ஆயிரமாயிரம் தோழர்கள் மண்ணோடு மண்ணாக மரணித்துப் போயிருக்கிறார்கள். ஆயினும் நான் சார்ந்த காலகட்டம் போராட்டத்தின் திசை வழியும் அணி சேர்க்கையும் தெளிவாகத் தெரிந்த வரலாற்றுப் பகுதி. இனியொருவில் வெளியான எனது தொடரின் ஊடாக அக்காலகட்டத்தின் போராட்ட அரசியல் அசைவியக்கத்தை வெளிக்கொண்டுவர முயற்சித்துள்ளேன். நூலுருவில் வெளியாகும் போது அதனை மேலும் செழுமைப்படுத்த முயற்சிக்கிறேன்.

முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் என்னோடிணைந்த பகுதிகள் இத்தோடு நிறைவடைவகிறது.

குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.

(முற்றும்)

தொடரின்  முன்னைய பதிவுகள்……

பாகம் 24 பாகம் 23 பாகம் 22 பாகம் 21 பாகம் 20 பாகம் 19 பாகம் 18 பாகம் 17 பாகம்16 பாகம்15 பாகம்14
பாகம்13 பாகம்12 பாகம்11 பாகம்10 பாகம்9
பாகம்8 பாகம்7 பாகம்6 பாகம்5 பாகம்4

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலிகள் மீது தடையை நீக்கமாட்டோம் : தமிழக அரசு

Comments 223

  1. mamani says:
    15 years ago

    சந்ததியாருக்கு இடதுசாரி போக்கு இல்லையென்பதை ஏற்றுகொள்ள முடியாது. தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் தற்போது இயங்கும் பயஸ்(சுமதி) என்ற கிழக்கிலங்கை போராளி பற்றி ஐயர் ஏதும் குறிப்பிடவில்லை

    • தமிழ்வாதம் says:
      15 years ago

      பயஸ் கிழக்கிலங்கை போராளி அல்ல.திருகோணமலையில் சாள்ஸ் அன்ரனியின் ஆசிரியராக இருந்தவர்.பின் ஆபிரிக்க ஆசிரியத் தொழிலுக்கு அள்ளுப்பட்டு,ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து வேலை செய்தார்.அவரிடம் ஈழப் போராட்டத்தில் இணைந்து செயல்படும்படி அழைப்பு விட்ட போது,தனது பணி பெரிதெனப் புகழ்பாடிக் கடிதம் வரைந்தார்.

      சந்ததியார் கண்ணாடி போடுவதால்,அவரது( சந்ததியாருக்கு இடதுசாரி போக்கு?)வாக்குப்போக்கு மற்றவர்களால் அறிந்து கொள்வது மிகக் கடினமே.

      அய்யருக்கு மத்திய குழு,சத்தியசோதனை,மக்கள் அமைப்பு,போராட்டம் எல்லாம் கடலோடும்,கால்வாயோடும் போயிற்று.

      அய்யரே! உங்களோடு இருந்து இன்னும் உயிரோடிருக்கும் ஒருவரைத் தன்னுமா இணைத்து எழுத, உங்களால் முடியாமல் போயிற்று?

      • mamani says:
        15 years ago

        ஐயர் சாதாரண நிலையில்தான் இருக்கிறார் அவரால் ஐரோப்பாவிலிருக்கும் மற்றவர்களை தொடர்பு கொள்வதில் சிரமங்கள் உள்ளன. அத்துடன் சிலர் சில ஸ்தாபன முடிவுகளுடன் இருக்கிறார்கள் எவ்வளவு தூரம் ஐயருக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்பது கேள்விகுறி.
        குறிப்பாக ராகவன் (எ) சிவகுமார் சின்னையா மகிந்த அரசுக்கு எதிராக மூச்சு விடவே பயப்படுகிறார். பாலமோட்டை சிவம் போதை இல்லாதநேரங்களில் கேட்டால் ஏதாவது சொல்வார் ஆனால் அது எப்போது என்பது ஐயருக்கெப்படி தெரியும்.

        • Sri says:
          15 years ago

          ஐயர் சாதாரண நிலையில்தான் இருக்கிறார் ” என்றால் நாகராஜா என்ன கப்பலா ஓட்டுகிறார்? அதே ஊரில் அதுவும் ஆறு மயிலுக்கு அப்பால் அசாதாரண நிலையில்தான் இருக்கிறார்.மற்றும் ரவி(சண்டிலிப்பாய் பரா) ,ராகவன்,கலாபதி லண்டனில்,குலம் சுவிசில் உள்ளனர்.. யாரும் யாருக்கும் பயப்பிடுகிற சூழ்நிலையில் இல்லை.புஸ்பராசா பாணியில் வரலாறு எழுதுவதினால்தான் ஒத்துழைப்பு வழங்கபடவில்லை? . இவர்கள் எந்த ஸ்தாபனத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல குறிப்பாக குலம் ஒதுக்கப்பட்டு ஒதுங்கியிருக்கிறார்.பாலமோட்டை சிவம் பொதுவாக நல்ல மனுஷன் செய்த தவறுகளை நினைத்து உளரீதியா பாதிக்கப்பட்டுள்ளார்.மூர்த்தி அயர் வாழும் அதே தேசத்தில்,ஒதுக்குப்புறமாக சேரியில் குடிசையில் வாழ்கிறார். சாதாரண நிலை என்பதற்கு என்ன அர்த்தம் மாமணி? உடுத்த உடையுடன் படகேறி வந்த நிலையிலா ஐயர் இருக்கிறார்?

          • mamani says:
            15 years ago

            இவ்வளவு பேசும் சிறி அவர்களே, உங்களால் முடியாதை ஒன்றும் நான் கோரவில்லை. ஐயர் எழுதிய இந்த தொடரை குலத்திடமோ அல்லது ராகவனிடமோ எடுத்து சென்று அதன் தவறுகள் அல்லது சேர்க்கைகளுடன் மீண்டும் இனியொருவிற்கு அனுப்பினால் வெளிவரும் புத்தகம் ஓரளவு சீராக இருகுமல்லவா? நீங்கள் சுவிஸ், லண்டன் கரோ செல்ல முடியாதரவாக இருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

          • பாலாமணி says:
            15 years ago

            உப்பில்லாப் பண்டம் குப்பையிலை

          • venkattan says:
            14 years ago

            சரியாக சொன்னீர்கள். ஐயர் ஒரு பின்புலத்துடன் எழுதும் போது யாரையும் சேர்க்க முடியாது. ஒட்டுமொத்தமாக முதல் பகுதியில் இருந்து இறுதிவரை பிரபா புராணம் போல பாடிவிட்டு நைசாக பிரபாவை குற்றம்சாட்டும் ஐயர் புத்தி… விடவில்லை…

        • sivam says:
          15 years ago

          /குறிப்பாக ராகவன் மகிந்த அரசுக்கு எதிராக மூச்சு விடவே பயப்படுகிறார்/.மாமணி இந்த இணைப்பப்பாருங்கள்.http://www.dantv.tv/arch_arasiyalkalam.html

          • நெருஞ்சி says:
            15 years ago

            அடடா! மூச்சு மட்டுமல்ல,ஏப்பமும் விட்றார்.இல்லாத புலிகளால் இவர் முகம் காட்டுகிறார்.76 இலிருந்து இலங்கை அரசால் தேடப்பட்டவர்,எவரது மன்னிப்பால் இவர் முகம் காட்டுகிறார்? ராகவன் என்ற பேரைத் தூக்கி நிறுத்தி முகம் காட்டுவது ஏனோ?

            பொய்மையும்,புறமுதுகும்….

    • alex.eravi@gmail.com says:
      15 years ago

      சுமதி என்று அழைக்கப்பட்ட கிறீஸ்த்தவரான பயஸ் வலிகாமம் மேற்கை சேர்ந்தவர். அவருடைய பணி பெரிதுதான். அவர் ஓர் சிறிய வட்டத்திற்குள் இல்லாமல் வெளியிலிருந்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து எமத்து ஈழப் போராட்டத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரை, அவரின் தொடர்புகளை சரியான வழியில் பாவிக்காதது எம்மவர் சிலரின் பிழைகளே. ஆனால் அவரின் தொடர்பை சிலர் பாவித்ததாலேயே தென்ஆபிரிக்காவில் இன்று காலூன்றக் கூடியதாக இருந்ததாக அறியக்கூடியதாக இருந்தது. மேலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் அவர் ஓர் முக்கிய உறுப்பினராவார்.

      ஐயர் அவர்கள் இப்படி சிலரை, சிலவற்றை விட்டிட்டார். ஆனால் ஒட்டு மொத்தத்தில் ஐயர் அவர்களின் பதிவு வரவேற்க்கத்தக்கது. இது ஓர் அவரின் அனுபவத்தின் பதிவே… இது ஓர் ஆரம்பமாகட்டும். நூலுருவில் வெளிவரும்போது விட்டது எல்லாவற்றையும் தொகுத்து வெளியிடுவார் என எதிர்பார்ப்போம். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்தாசையாக கொடுக்க வேண்டிய தகவல்களை கொடுத்தால் அவருக்கும் உதவியாக இருக்கும்.
      – அலெக்ஸ் இரவி

      • THAMILMARAN says:
        15 years ago

        எதிர்பார்த்தேன் எங் கே நமது தகவல் களஜ்ஜியத்தைக் காணவிலையே என்றூ, அடிக்கடி வந்து முகத்தைக் காட்டுங்கள்.

      • தமிழ்வாதம் says:
        15 years ago

        சுமதி என்று………………………. பயஸ்………………….. அவர் பணி என்ன பெரிது? கொஞ்சம் விரிவா அவிட்டு விடலாமே.

        உள்ளூரில் உழாத மாடு….கூடாரம் கட்டப்பட்டபின் கொடி பிடிக்க வந்த பங்களிப்பா?

        அய்யர் இருக்கையில் அவர் எதுவும் செய்திருந்தால் எழுதியிருப்பார்.திருகோணமலை சிங்களக் கொடி எரிப்போடு ஓடியவர்தான்.நோகாமல் தூர இருந்து,நெம்புகோல் வைச்சு,புரட்டு பண்ணும் புலம் பெயர் தமிழர்களில் ஒருவர்…………………..

        • mamani says:
          15 years ago

          எங்களை விட சுமதியின் பங்களிப்பு பரவாயில்லைதானே தமிழ்வாதம்.

        • பாலாமணி says:
          15 years ago

          உட் கொலைகள்நாட்ட்த்தும் போது மவுனித்திருக்காமல் இருப்பதை விட மேலானதுதானே? ஐயர் பண்ணைக்கு பொறுபா இருந்தவர்(காலை உணவை போராளிகளுக்கு பங்கிட்டு கொடுப்பது அதுவும் அதிக நாள் பாண்தான் காலையில் வழங்கப்பட்டது) மற்றும் படி சொல்லும்படியாக என்ன செய்திருக்கிறார்? திட்டமிடும் திறமையோ செயல் படுத்தும் திறமையோ அவரிடம் …………………………………………………….

          • THAMILMARAN says:
            15 years ago

            பாலாமணீ போன்ற பலரால்தான் பாழாய்ப் போனானோ தமிழன்? முட்டையில் மயிர் புடுங்குவது, முழங்காலுக்கும் மொட்டைக்கும் முடிச்சு போடுவது.என்றூம்,இன்றூம் எங்கிருந்தாலும் தன்னை மாற்றா தமிழன்.

          • பாலாமணி says:
            15 years ago

            தமிழ்மாறன் உங்களப்போன்றோர்
            தலைவரை தூக்கி தலையிலை

            வைத்து பலர் வரலாறு எழுதியபோது கொடியோடு திரிந்தீர்கள் இப்ப அது அறுந்து போச்சு ஆகவே ஐயருக்கு ஆலவட்டம் பிடியுங்கோ.

          • mamani says:
            15 years ago

            ஐயரிடம் திட்டமிடும் திறமையிருந்திருந்தால் தலைவன் ஐயருக்கு பொட்டு வைத்திருப்பார்.

          • thamilmaran says:
            15 years ago

            பாலரமனி கடவுளீன் அதிசயம் என்பது இதுதான்.நமது கொடி நந்திக் கொடிதான் நாம் ஆலவட்டம் பிடிப்பது கோயில்களீல்தான்,பூஜை செய்வது அய்யரே ஆக இங் கே தவறூ எங்கும் இல்லை.அந்தப் பரம்பொருளே எமக்குத் தலைவர் எம் தெய்வம் அவர் இருக்க நாம் கலங்க வேண்டியதே இல்லை.பாலரமணீ இந்து மதம் எவரையும் வற்புறூத்துவதில்லை

      • venkattan says:
        14 years ago

        அலக்ஸ். ஐயர் விடவேண்டிய அனைத்தையும் விட்டு விட்டுத்தான் எழுதியிருக்கிறார். நிச்சயமாக பிரபாகரனோ புண்ணாலைக்கட்டுவனில் அவருக்கு உணபு கொடுத்தவர்களோ அல்லது செட்டியின் நண்பரோ இப்போது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்ன நம்பிக்கயைில் எழுதுகிறார். ஐயயின் எழுத்தில் நடுநிலமை கிடையாது. “ஐயர்” வேலைதான் தெரிகிறுது.

      • Pius master says:
        13 years ago

        Thanks for your comments. I am pius master(sumathy). My students in Trincomalee district know about my work in trincomalee district especially in Kiliveddy. I do not agree with separate state . I strongly believe in fighting for the rights of the Tamil people as I fought in trincomalee and as I fought against apartheid in south africa. Rights for the Tamils can be achieved only with the support of the progressive forces within Sinhalese and Muslim community. It should be part of general struggle for genuine democracy and multiracialism in srilanka. Anything else will only end in disaster like mullaitivu. Although I spent my time with ANC I still kept in touch Tamil struggle. In 1984 I went to India after Charles Antony death and met with ragavan from LTTE and plote leadership trying to advice them without any avail. In 1990 and 1992 I met Kittu in London and did my best to advice without any avail.

    • Pius master says:
      13 years ago

      I am pius master (sumathy). My former students in trincomalee know about my contibution to the protection of Tamils in trincomalee. I never agreed with the concept of separate state for Tamils. Disaster at mullaitivu proves it. Contradictions in south Africa was worse than srilanka. South African liberation struggle by having the support of all the communities was able to defeat apartheid. In Srilanka Tamils can only win their rights( which are still much better than what blacks had in the apartheid rule) by winning the support of progressive segments of Sinhalese and Muslims..

  2. selvan says:
    15 years ago

    அயயா தனது பதிவை,நோகாமல் ஆரம்பிக்கவேன்டிய இடத்திலாரம்பித்து முடிக்கவேண்டிய இடத்தில் முடித்துள்ளார்.அர்சியல் சாணக்கியனுக்கு சபாஸ்! சபாஸ்!!

  3. rathan says:
    15 years ago

    எனக்கு முழு திருப்தி ஜ்யரின் பதிவுகளை வாசித்தது. தெரிந்தும் தெரியாமலும் பல விடயங்கள் இருந்தன.அவை ஓரளவிற்கு தீர்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்லாலாம்.மிகுதி உமாவும்,பிரபாவும் உயிருடன் திரும்பிவந்தால் தான் சொல்லலாம.

  4. ranjini says:
    15 years ago

    நேர்காணலுக்கான எனது கேள்வி,
    புலிகள் தொடர்பாக இன்று என்ன நினைக்கிறீர்கள்?
    பிரபாகரன் தியாகியா துரோகியா??

    • manithan says:
      15 years ago

      பிரபாகரன் தியாகியும் இல்லை துரோகியுமில்லை வெறும் முட்டாள்.

      • yazhavan says:
        13 years ago

        மன்னிக்கவேண்டும் அவர் முட்டாள்களுக்கெல்லாம் முட்டாள். அதவது கடைஞ்செடுத்த முட்டாள். சிங்களப் பேரினவாதிகளுக்கு மறைமுகமாக பேருதவி புரிந்தவர். அதாவது தழிழ் தலைவர்களையெல்லாம் சுட்டடுத்தள்ளி பேரிவாதிகளுக்கு சுலபமாக வழியேற்ப்படுத்திக் கொடுத்த கடைகெட்டமுட்டாள்

        • Suresh Manicks says:
          12 years ago

          Too little, too late.

      • yazhavan says:
        13 years ago

        ம்…… சிங்களுத்திற்கு எதிராகப்போராடாமல் புலிப்பெயரை யார் பாவிப்பது என்ற பிரச்சனையிலேயே கொஞ்சக்காலம் சண்டைபிடித்தார்கள். பின் யார் தழிழீழத்திற்காக போராடுகின்றார்கள் என்று சண்டை. அதன்பின் யார் தலைவர் எண்டதில் சண்டை. கடைசிவரைக்கும் தமிழ்மக்களுக்காக ஒருவரும் போராடவில்லை. இப்ப யார் யாராலே சுடப்பட்டார்கள் என்பதில் வாக்குவாதம். நீங்கள் எல்லோரும் தமிழ்மக்களுக்காக போராடவெளிக்கிட்டீர்களா அல்லது நீங்கள் கதாநாயகர்கள் ஆகவேண்டுமென்தற்காக போராட்டத்தை ஒரு கவருவியாக பாவித்தீர்களா என்பது விளங்கவில்லை. போராட்டக்காரர்கள் மோதிக்கொண்டார்கள் என்று நினைக்கும்போது மிகவும் வெட்கமாகவே இருக்கின்றது. பார்த்தீர்களா! இன்றுவரைக்கும் ஒருபொதுமகன்தன்னும் இந்தப்பக்கத்தில் தன்னுடைய பதிவை தரவில்லை. தங்களுக்கேன் வீண்வம்பு என்று ஒதுங்கிக்கொண்டார்கள் போலும். பாவம் வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞர்கள். அவர்களால் இங்கு தரப்படும் தமிழை வாசிக்கத்தெரியவில்லை போலும். அதனால் தான் அவர்களும் ஒதுங்கிக்கொண்டார்கள். வரலாறு ஆயுதம் தூ க்கியவர்கள் எல்லாரும் போராட்டக்காரர்கள் என்று ஆகிவிடாது. போராட்டக்காரர்கள் சிங்கள பேரினவாதிகளை கொன்றதைவிட தழிழ் மக்களைக்கொன்ற எண்ணிக்கைதான் அதிகம்போலிருக்கின்றது. சிங்கள பேரினவாதிகளைமட்டும் குறிவைத்து போராட்டம் ஆரம்பித்திருந்தால் தழிழ் மக்களுக்கு எப்போதோ விடிவு கிடைத்திருக்கும். ஏன் ஜே.வி.பி ஐ ஆரம்பித்தவரகள்கூட முன்பு தழிழ் மக்களோடு ஒன்றாக இருந்தவர்கள் தானே. அந்தச்சந்தர்ப்பத்தைக்கூட தவறவிட்டார்கள். சிங்கள் மக்களைமட்டும் தன்னகத்தே கொண்டிருந்த ஜே.வி.பி ஐகூட அழித்தொழித்த இலங்கை அரசாங்கம்> தமிழ் போராட்டவாதிகளைமட்டும் எப்படி விட்டுவைக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கின்றிர்களா??????.

      • Rathan says:
        11 years ago

        பிரபாகரன் முட்டாள்தான், நன்றியில்லாத ரோசமில்லாத மானம்கெட்ட தமிழனுக்காக போராட வெளிக்கிட்ட முட்டாள்.  அதாலதான் இப்ப எல்லா  பரதேசிகளும் வெளிநாட்டில இருந்து  கதை விடுகினம்

  5. proffessor says:
    15 years ago

    நான் அறிந்தவரையில் ஜயர் இன்றும் கூட பிரபாவின் தீவிர விசிறி. பிரபா இறந்துவிட்ட செய்தி அறிந்து வாய்விட்டு அழுததாகவும் அறிகிறேன்.

    • mamani says:
      15 years ago

      வாய்விட்டு அழுதால் நோய் விட்டு போகும் என்று அழுதிருப்பார்..

      • saravanan says:
        15 years ago

        பார்றா மாமணிக்கு அது கூட போருக்க முடியல

        • Vellian says:
          15 years ago

          ஜால்ரா மச்சி ஜால்ரா

    • venkattan says:
      14 years ago

      ஐயரின் ஒப்வொரு பதிவவிலும் பிரபாவை குற்றம் சாட்டாமல் விட்தில்லை. மற்றும் படி இது ஒரு முட்டாள்தனமான கதை.

  6. wicky says:
    15 years ago

    என்னை பொறுத்தவரை புளட் கும்பலைப்பற்றிய சரியான சித்திரமாகவே ஐயரின் பதிவு அமைந்திருக்கின்றது. ஒரே குறை கூடுதலான விவரணங்களை தந்திருக்கலாம். புளட் உண்மையில் கூட்டணியின் தொடர்ச்சிதான். சந்ததியார் இடதுசாரியல்ல. யாழ் மத்தியதரவர்க்கத்தின் தூய்மைவாதத்தையும்,இலட்சியவாதத்தையும் இடதுசாரியமாக குழப்பிக்கொண்டவர். தொழிற்சங்கவாதபோக்கும்,ஒரளவு சமூகஜனநாயக விழுமியங்களில் ஆர்வமும் கொண்டிருந்தார் என கூறமுடியும். எண்பதுகளில் தமிழர்களின் அரசியல்போராட்டத்திற்கு ஊறுவிழைவித்ததும், மக்களைமோசமாக ஏமாற்றியதும் புளட் கும்பலே. புலிகள் தங்கள் பாசிச அரசியலை வெளிப்படையாகவே பேசினார்கள். புளட் மக்கள் போராட்டம்,அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்,தேசியவிடுதலையுடன் வர்க்கவிடுதலையையும் முன்னெடுத்துசெல்லுதல், என்று கபடமாக ஒருவகை வெள்ளாள சோசலிசம் பேசினார்கள். உமாகும்பல் புலிகளின் இராணுவவாதத்தை விமர்சித்து மாற்றுஅரசியலை முன்வைப்பதாக பாவ்லா காட்டி சமூக உணர்வுள்ள பலரையும் பெருந்தொகையான மத்தியதரவர்க்க இளையோரையும் உள்வாங்கி ஒருஇளையதலைமுறையையே நாசப்படுத்தினார்கள். இறுதியில் மிகமோசமான இராணுவ துணைப்படையாக மாறி மனிதப்படுகொலைகளிலும், ச்மூகவிரோதநடவடிக்கைகளிலும் நேரடியாகவே ஈடுபட்டார்கள். புலிகளின் அரசியலுக்கு எதிரான மாற்று அரசியல் பேசியோரை எல்லாம் சாதாரண மக்கள் “தண்ணி தெளித்து” தள்ளி வைப்பதற்கு புளட்டின் கபடத்தனத்தால் ஏற்பட்ட வடுவும், புளட்டின் சரணாகதியும் ஓரளவுக்கு காரண்மாக இருந்ததெனலாம். சுந்தரத்தை பற்றி புனையப்பட்ட போலியான கற்பனைகளை சுந்தரத்தால் வளர்க்கப்பட்டதாக கூறிக்கொண்ட விசுவாசிகளான சுழிபுரம் கும்பல் தங்கள் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தார்கள். சுந்தரத்தின் அரசியல் ஆசான் என கூறப்பட்ட சீன சார்பு பொதுவுடமைகட்சி சுப்ரமணியத்தின் மைந்தனே சுந்தரம் படைப்பிரிவு என்ற பெயரில் அராஜகம் புரிந்த மீரான் மாஸ்ரர்.

    • THAMILMARAN says:
      15 years ago

      மக்கள் விடுதலைக்கழகம் ஒரு தனித்துவமான அரசியல் பாதையில் பயணீத்ததுடன் சிறப்பான புத்தகங்களயும் வெளீயிட்டு மக்கள அரசியல் பாதையில் வழிநடத்தியது.எல்லா விடயங்களீலும் முன்னோடியாக இருந்த முகுந்தன் தன்னுடன் இருந்தவர்களயும் தன க்கு உதவி புரிந்தோரையும் சந்தோசப்படுத்த முனைந்த்தே அவரது பலகீனமாய் அமைந்து போனது.சந்ததியாருக்கு ஈடான ஒரு அரசியல் சித்தாந்தியை உங்களால் காட்ட முடியுமா?உமா மகேஸ்வரனது தெளீவான நோக்கு யாரிடமும் இருந்ததில்லை.சிறந்த போராளீகளாக மக்கள் விடுதலைக் கழக போராளீகள உதாரணம் காட்ட முடியும்.

      • wicky says:
        15 years ago

        ஐயா! சைவப்பழம் உங்களுக்கு பரிச்சயமான வேதங்கள்,வேதாந்தங்கள், உபநிடதங்கள், வருணாச்சிரமதர்மம் போன்றவற்றை பற்றி கருத்துக்கூறுவது சாலச்சிறந்தது

        • THAMILMARAN says:
          15 years ago

          விக்கி உங்கள் குற்றச்சாட்டுக்களூக்கான ஆதாரங்கள் எது?எழுந்தமானமாக் செய்தார்கள், செய்தார்கள் என்பது தங்களூக்கு புலொட் மீதான வெறூப்பை மட்டுமே காட்டுகிறதே அன்றீ குற்றச் சாட்டை நிறூவ எதையும் ஆதாரமாக கொண்டிருக்கவில்லை ஆக………………………………………………..

          • பாலாமணி says:
            15 years ago

            ஐயர் ஏதாவது செய்திருந்தால் தானே?
            நேராக பிராபாவுடனோ உமாவுடனோ விவாதித்திருக்கிறாரா?

          • wicky says:
            15 years ago

            புளட் பயிற்சி பாசறையில் காலையில் தேவாரம் பாட அனுமதிக்கவில்லை. அட திருநீறு பூசக்கூட இடமளிக்கவிலை என்றால் பாருங்கள் தமிழ்மாறன். கந்தசஸ்டி கவசத்தை அந்த விரதகாலத்தில் படிக்க இடம்கொடாமை கொடுமையிலும் கொடுமை .இந்த ஆதாரங்கள் போதாதா உங்களுக்கு.

      • கழகம் says:
        15 years ago

        இலங்கை வரலாற்றில் பாரிய வங்கிக் கொள்ளை ஒன்றை நடாத்தியவர்கள் ப்ளொட் அமைப்பினரே ஆவர். 1981ம் வருடம் ஒக்டோம்பர் மாதம் 23ம் திகதி கிளிநொச்சி மக்கள் வங்கிக் கிளையைத் தாக்கி 27 மில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளயிட்டனர். இதன் போது நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கோப்ரல் விஜயசிறி என்பவர் கொல்லப்பட்டார்.

        சுந்தரம் ‘புதிய பாதை’ இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.

        1981ம் வருடம் ஜூலை மாதம் 28ம் திகதி ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைக் கைப்பற்றியதில் இவரின் பங்களிப்போ முக்கியமானது. தமிழர் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் தாக்கியழிக்கப்பட்ட பொலிஸ் நிலையம் இதுவாகும்.

        சுந்தரம் ‘புதிய பாதை’ பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்தவர். 1982ம் வருடம் ஜனவரி மாதம் 2ம் திகதி சுடப்பட்டிருந்தார்.

      • Soorya says:
        15 years ago

        உண்மை, முகுந்தன் தனக்கு உதவி புரிந்த பிரமிளாவை சந்தோசப்படுத்த முனைந்தார். கொளும்புத்துறை புதையல் பற்றி தெரியுமா?

        • mamani says:
          15 years ago

          முகுந்தன் பெண்கள் விடயத்தில் பலவீனமானவர் என்பது உண்மைதான் ஆனால் மறுதரப்பு விருப்பின்றி எதையும் செய்யவில்லை. ஏன் காஸ்ரோ, மாவோவும் அப்படியானவர்களே. ஆனால் நம்மாளோ அடுத்தவன் காதலியை கடத்தி காந்தர்வ மணம் புரிந்து கல்யாணத்திற்கு முன்பே ———— மபியா பாணி வீரனல்லவா

          • saravanan says:
            15 years ago

            மாமணி தான் இவை எல்லாம் நடக்கும் பொது கூட இருந்தவா…

          • ponniah says:
            15 years ago

            this is out of order

      • மணித்துரை says:
        15 years ago

        இலங்கை வரலாற்றில் பாரிய வங்கிக் கொள்ளை ஒன்றை நடாத்தியவர்கள் ப்ளொட் அமைப்பினர ஆவர்.

        அவ்வங்கிக் கொள்ளையில் யார் யார் பங்குபற்றினார்கள்?

        அவர்கள் இப்போ எங்கே?

        கொள்ளையிட்ட 27 மில்லியன் ரூபா பணத்திற்கும், நகைகளுக்கும் என்ன நடந்தது?

        முதன்முதலில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைக் கைப்பற்றியதில் யார் யார் பங்குபற்றினார்கள்?

        அவர்கள் இப்போ எங்கே?

        பின்தளத்தில் இருந்து கடல் வழியாக சென்று சிங்கள இடத்தில் வாமதேவன் தலைமையில் வங்கி ஒன்றை கொள்ளையடித்தார்கள்.

        அவர்கள் இப்போ எங்கே?

        கொள்ளையிட்ட மில்லியன் ரூபா பணத்திற்கும், நகைகளுக்கும் என்ன நடந்தது?

        தற்போது இவை மூன்றிலும் சம்பந்தப்பட்டவர்களில் இவர்களில் இறந்தவர்கள் யார்?

        கொல்லப்பட்டவர்கள் யார்? (யாரால் கொல்லப்படவர்கள்)

        உயிருடன் தப்பியவர்கள் யார்?

        தற்போதும் வன்னி, மன்னாரில் இவர்களின் கொலைகள், கொள்ளைகள் தொடர்கிறதா?

    • mamani says:
      15 years ago

      புளட்டை பற்றி ஐயரின் பதிவினூடே தெரிந்து கொள்ளும் அளவிற்கு புளட்டிடம் இரகசியம் ஒன்றும் இருந்ததில்லை. புளட் 80 களின் ஆரம்பத்தில் தொடங்கி முழுவீச்சிடன் வளர்ந்து(சோத்தி) 80களின்நடுப்ப்குதியிலேயே காணாமல் போய்விட்ட ஒன்று. ஆனால் ஐயரின் பதிவினூடே மக்கள் அறிந்து கொண்டது 30 வருடமாக மக்களிடமிருந்த மாயை தலைமையின் சுயரூபம். சந்ததியாரின் ” வங்கம் தந்த பாடம்” எமது போராட்டதின் பாடனூல் அதனை சரியாக புரிந்து கொள்ளாமல் விட்டதன் விளைவே இன்று “றோ” வின் தாண்டவம் முட்டாள்களால் முள்ளிவாய்க்கால் வரை எமது மக்களை அழைத்து வந்தது.

    • பிரபா says:
      15 years ago

      விக்கி உங்கள் குற்றச்சாட்டு தவறு!

      1989 இல் அமரர் மீரான் மாஸ்ட்ர் (சத்தியராஜன்) தியாகி திலீபன் பற்றி எழுதிய கவிதை.
      —————————————————–

      உண்ணா விரதம் என்பது உண்மையில்….
      எண்ணமும் செயலும் ஒன்றாக இணைந்ததென்று…….
      காந்திமகானின் கருணை வழியினிலே……
      சாந்தியளிக்கும் சமாதானம் பிறக்குமென்று

      மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் நீ பழகி-”நமக்குள்
      வேற்றுமை இருந்தால்–விரியுமே எதிரி பலம்
      ஆற்றுப் படுத்துவோம், ஆதரவாய்க் கைகொடுப்போம்……”என்று கூறி
      தோற்றுப் போனதால்தான்*, துணிந்தாயோ உயிர்துறக்க?

      “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்று
      அடுத்துவரும் சந்ததிகள் ஐக்கியத்தைப் பேணிநிற்க….
      மாற்று இயக்கங்கூட தமிழின விடுதலைக்காய்…..
      வீற்றிருக்க வேண்டுமென விட்டாயோ உன்மூச்சை?

      சோற்றுப் பருக்கையல்ல: சொட்டுத் தண்ணீரே அருந்தாமல்…..
      வேற்று மனிதனாகி வெளிக்கிட்டு ஓடாமல்…….
      காற்றிலே மிதந்துலாவும் கருணைச் சுவாசமே……!
      போற்றும் தியாகத்தால் திலீபா நீ தீபமானாய்..!

      இரண்டு ஆண்டுகள் மறைந்தாலும்….
      இனத்தின் ஐக்கியமே நீ கண்ட கனவப்பா!
      வனத்தின் நிலவாக வாய்ப்பற்றுப் போகாமல்…..
      உனக்கும் ஆத்மசாந்தி ஒற்றுமையில் கிடைக்குமப்பா!

      *தியாகி திலீபன், 1985/86 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ்ப்பாண பொறுப்பாளராக இருந்த அமரர் விஜயபாலன் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன மெண்டிஸ் வோடு மிகுந்த மதிப்பு, நட்பு பாராட்டுகிறவர்.- சத்தியராஜன் 26-09-1989.

      நன்றி சத்தியமனை

      • sutha says:
        15 years ago

        பிரபா நவாலியில் பிளாட் அமைப்பினருக்கும் புலிகளுக்கும் இடையே சிறு பிரச்சினை ஒன்று ஏற்பட்டபோது தீலீபன் பிளாட் அமைப்பினரில் தவறு இல்லை என தெரிந்துகொண்டு அந்த இடத்திலையே தவறு செய்த புலிகளுக்கு தண்டனை கொடுத்த பண்பாளர் உண்மையில் அவரை போல் பல தியாகிகள் எம் மத்தியில் வாழ்ந்தார்கள். சின்ன மெண்டிசை புலிகள் கைது செய்து மானிப்பாயில் உள்ள பிளாட் முகாமுக்கு அழைத்து வந்திருந்தார்கள் அப்பொழுது அவர் எம்மை பார்த்து சிரித்து செல்லும் போது அது தான் நாம் அவரை சந்திக்கும் கடைசி தருணம் என்பது எமக்கு தெரியாது. கிட்டு என்ற பொம்பிளை பொறுக்கி அந்த மாமனிதனை கொன்றது தான் கொன்றான் கையில் விலங்கு இட்டல்லவா கொன்றான் தனிக்கு தனி மோதி இருந்தால் மெண்டிசுக்கு கிட்டு ஒரு தூசு.

        • suganthan says:
          15 years ago

          அதிகமாக தமிழ்சினிமா பார்க்கீறீர்கள் என நினைக்கிறேன். சின்னமெண்டீசால் கொல்லப்பட்டவர்களை ஒத்தைக்குஒத்தை மோதியா கொன்றார்.

          • mamani says:
            15 years ago

            சின்ன மென்டிசால் கொல்லப்பட்டவர்கள் யார் யார் என்று பட்டியலிட முடியுமா? சுகந்தன்

      • mamani says:
        15 years ago

        தியாகி திலீபனை கூட புலிகள் தண்டனை அடிப்படையில்தான் மேடைக்கு அனுப்பினர். நான் அறிந்த வகையில் சின்ன மென்டிசைபோல்
        ஒருநல்ல மனிதனை ஆயுதம் ஏந்தியவர்களில் சந்திக்கவில்லை. அதனால் இரண்டு அமைப்புகளிலும் இருந்த நல்ல மனிதர்களிடையே நல்ல புரிந்துணர்வு இருந்திருக்கிறது. கிட்டுவை நம்பிதான் மென்டிஸ் சென்றாராயினும் மென்டிஸ் கொல்லப்பட்டதில் கிட்டுவிற்கு உடன்பாடில்லை. அந்தாளுக்கு நல்ல மனிதர், புத்திஜீகள் பிடிகவே பிடிகாது.

        • suganthan says:
          15 years ago

          சின்னமெண்டிஸ் ஆயுதங்கள் இன்மையாலும் இயக்கத்திற்குள் ஏற்பட்டமுரண்பாடுகளாலும் பல்லுபிடுங்கப்பட்ட பாம்பு நிலை ஏற்பட்டபின்னரே மற்ற அமைப்புக்களுடன் குறிப்பாக கிட்டு திலீபன், டக்லஸ் போன்றோருடன் ந்ல்லுறவைபேணிவந்தார். புலிஆதரவான பாடசாலைமாணவர்கள் கந்தசாமி கும்பலால் சுழிபுரம் பகுதியில் சித்திவதைசெய்து கொன்று புதைத்தபோது அதனை மூடிமறைப்பதில் சின்னமெண்டிஸே பெரியபங்கு வகித்தார். புளட் பலமாக இருப்பதாக நம்பப்பட்ட அக்காலத்தில் அந்த மாண்வர்களுக்கு என்ன ந்டந்தது என்று கிட்டுவும் திலீபனும் சின்னமெண்டிஸிடம் இரந்தார்கள். மெண்டிஸ் நீங்கள் என்ன போதைமருந்து பாவிக்கின்றீர்களா திரும்ப திரும்ப அதேகேள்வியை என்னிடம் தொடுக்கிறீர்கள் என திமிராக பதிலளித்தார். வரலாற்றிக்கு திரும்பவும் அதே புள்ளிக்கு வருகின்ற பழக்கமிருக்கின்றது போலிருக்கின்றது. பல்கலைகழக மாண்வன் விஜிதரன் கடத்தப்பட்டபோது மெண்டிஸை போலவே கிட்டு திலீபன் ந்டந்துகொண்டார்கள். பெரியமெண்டிஸால் டகலஸின் மெய்ப்பாதுகாவலரான இப்ராகிமின் சகோதரர் கொலைசெய்யப்பட்டதனை தொடர்ந்து எழுந்த முரண்பாட்டில் எத்தனை ஈ.பி.ஆர்.எல்.வ் உறுப்பினர்கள் சின்னமெண்டிஸ் கும்பலால் தாக்கப்பட்டார்கள். செல்வன்,அகிலன் படுகொலைக்கு உத்தரவிட்டது சின்னமெண்டிஸ்தான். புளட்டுடன் முரண்பட்டு ஊர்திரும்பிய முன்னாள் மத்தியகுழு உறுப்பினரான ஈஸ்வரனை கொலைசெய்யமுயன்றது சின்ன்மெண்டிஸ் கும்பல்.(இதில் ஈஸ்வரன் படுமோசமாக தாக்கப்பட்டார்) சுழிபுரம், உடுவில், தெல்லிப்பழை, கொக்குவில் பகுதிகளில் ஆரம்பத்தில் வேர்விட்டிருந்த புளட் இயக்க உறுப்பினர்களிடமிருந்த புலிஎதிர்ப்பில் சாதியமும் மறைமுகமான காரணியாகவிருந்தது என்றால் மிகையல்ல. சங்கிலி போன்ற சுழிபுரம் கும்பல் பண்ணாகததை சேர்ந்த பண்டாரிகளுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்ட சாதியதெருச்சண்டியரே. படுகொலைசெய்து புதைத்துவிட்டு கதையளக்கின்ற சாதியநிலப்பிரபுத்துவ போக்கு புளட்டில் நிலவியது தற்செயலானது அல்ல.

          • mamani says:
            15 years ago

            நீங்கள் குறிப்பிடிருப்பவை நான் முன்பு அறியபடாதவொன்று.

          • சின்னன் says:
            15 years ago

            /////சங்கிலி போன்ற சுழிபுரம் கும்பல் பண்ணாகததை சேர்ந்த பண்டாரிகளுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்ட சாதியதெருச்சண்டியரே. ///// பண்டாரிகள் பண்ணாகம் அல்ல பண்ணாகத்துக்கு பின் புறமாக உள்ள பனிப்புலம் என்னும் சிறிய ஊர். இருந்தாலும் நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது

        • suganthan says:
          15 years ago

          மெண்டிஸ் தன்னுடன் பழகுபவர்களுக்கு இனியவர் என்று சொல்லப்படுவதுண்டு. ஏன் கதிர்காமரை கூடததான் கொழும்பு உயர்குடியில் இவ்வாறு கருதப்படுவதுண்டு.

          • Soorya says:
            15 years ago

            மாமணி,
            இதுபோல் நீங்கள் அறியப்படாதவை இன்னும் இருக்கிறது. ஒத்துக்கொண்டது பெரும்தன்மைதான்.

            ஐயர் இதுவரை எழுதியது தன் பார்வைக்குச் சரியெனப் பட்ட சொந்த அனுபவம் மட்டுமே. சில முக்கிய விபரங்களைத் தவிர்ததன் நோக்கம் இன்னும் உயிர்வாழும் கொலையாளிகளுக்குக் பயந்துதான். இவர் தவறவிட்ட வரிகளை நிரப்பும் கடமை இன்று எம்மத்தியில் உயிர்வாழும் சாட்சிகளால்தான் முடியும்.

          • mamani says:
            15 years ago

            இன்னும் கொலையாளிகள் இருக்கிறார்களா சூர்யா நான் எல்லா கொலையாளிகளும் முள்ளிவாய்க்காலுடன் போய்விட்டார்கள் என்றல்லவா நம்பியிருக்கிறேன். அதனால்தானே ஐயர் 30 வருடம் கழித்து இவ்வளவு துணிவாக எழுதினார்.

          • Soorya says:
            15 years ago

            மாமணி, நீங்கள் ஒஇன்னும் எவ்வளவோ படிக்கவேண்டியுள்ளது. முள்ளிவாய்க்காலில் இறந்த்தது மக்களும் போராளிகளும்தான். கொலையாளிகளும், காட்டிக்கொடுப்போரும் இன்னமும் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.நா. க. த. அ. நடப்பு இன்னமும் அறியவில்லையா?

      • yazhavan says:
        13 years ago

        இதே திலீபன் தானே கந்தன் கருணை இல்லத்தில் “கருணைக் கொலை” செய்ததாக கேள்விப்பட்டேன். இது உண்மையா?

    • buby says:
      15 years ago

      தன்னுடைய மூத்த மகனாக இருந்தும் தோழர் மணியம் அவர்கள் ,ஐந்து  வருடங்கள் சிறை இருநத தன்  மகனை சென்று பார்கவில்லை..காரணம்  தன்னுடைய  கொள்கைக்கு மாறாக இருந்தார் என்பதே , சுந்தரம் ,தோழர் மணியம் அவர்களிடம் உலக அரசியல் ,நடைமுறை அரசியல் மாக்சியம் பற்றிய  தெளிவுகளை கேட்டு அறிந்தார். அதைவிடவும் மீரான் மாஸ்டர் சுந்தரம் மீது சிறு வயது முதல் மதிப்பும் ஈடுபாடும் வைத்திருந்தார். அவர் அராஜகம் செயதார் என்பது மிகைபடுதலே.ஆறு பேரின் மரணத்துக்கும் மீரானுக்கும்  எந்தவித தொடர்பும் இல்லை என்பது  சுழிபுரம் அறிந்த உண்மை. ஐயர் அவர்கள் எந்தவித மிகை படுதலும் இல்லாமல் உண்மை பேசக்கூடியவர். பிரபாகரன் மரணம் அவரை அழ வைக்கவில்லை . போராடம் மரணித்தது என்று தான் கவலைபட்டார். இவை  அனைத்தும் உண்மை. விக்கி புரிந்து பேசி பழகுங்கள்..முடிந்தவை முடிந்தவையாக இருக்க ,புதியன உண்மையுடன் பிறக்கட்டும் . மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும் ! நன்றி

      • suganthan says:
        15 years ago

        இன்று உயிருடன் இல்லாத மீரான் மாஸ்ரரைப்பற்றி அவ்தூறு பேசுவதற்கு தேவை ஏதுமில்லை. சுழிபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் சுந்தரம் படை என்ற பெயரில் இயங்கியதும் அதற்கு பொறுப்பாக மீரான் மாஸ்ரர் செயல்பட்டதும் தெரிந்திருக்குமென நம்புகின்றேன். அதே போல நித்திகுழு என்று அறியப்பட்ட இன்னொரு குழு உடுவிலில் செயல்பட்டது. இரண்டு குழுக்களும் எவ்வகை அரசியல் ந்டவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என விசாரணை மேற்கொண்டாலே மீரான் மாஸ்ரர் அராஜகத்தில் ஈடுபட்டாரா? இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனை உங்களிடமே விட்டுவிடுகின்றேன். எண்பதுகளில் புளட்டின் தள இராணுவ பொறுப்பாளரான பார்த்திபனின் கட்டுப்பாட்டிற்கு வெளியிலேயே சுந்தரம் படை இயங்கியது. இறுதியில் இராணுவ பயிற்சிக்காக இந்தியா சென்று கந்தசாமியின் உளவுப்படையாகவும், மெய்பாதுகாவலர்களாகவும் உமாவின் வலதுபக்கத்தில் வீற்றிருந்தார்கள். இதில் மீரான் மாஸ்ரர்மட்டும் கைது செய்யப்பட்டார்.

        • பாலாமணி says:
          15 years ago

          மீரான் வாத்தி,மூர்த்தி,ஆச்சிராஜன்,பாலமோட்டைசிவம் ஆகியோர் தாங்கள் செய்த அட்டகாசங்களை கூடியிருந்து பேசும்போது கேட்டிருக்கிறேன். பாலமோட்ட்டை சிவத்தார் கூடுதலாக அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார். வாய்திறக்கமாட்டார்.மீரான் பற்றிய விபரம் கண்டிப்பாக அவ்ருக்கு தெரியும்.

          • Maniam says:
            15 years ago

            பக்கத்தில் படுத்திருந்தவன் தன்னை கொலை செய்துவிவானோ என சிறு சந்தேகம் நடு இரவில் வலுத்து தன் தூக்கம் கெட்டுவிட்டதே என்ற கோபத்தில் அருகில் படுத்திருந்தவனை “போட்டுத்தள்ளிய” புளட் சீனியர் போராளி யார் ? மூர்த்தியா? பா.மோ சிவமா? மீரானா?

      • yazhavan says:
        13 years ago

        ஐய்யர் அழுதாரோ இல்லையோ நான் நன்றாகவே சந்தோசப்பட்டேன் இனிஒரு உண்மையான போராட்டம் ஆரம்பிக்கப்போகிதென்று.

    • kethiesh says:
      12 years ago

      wiky, u r cent percent correct. I agree with u. people treated them as their god.

  7. raj says:
    15 years ago

    ஐயரின் இத்தொடர், முதல் கோணல்முற்றிலும் கோணல் என்ற அனுபவ மொழியை மெய்ப்பிக்கின்றது. புலிகளும், புலி ஆதரவாளர்களும்,புலி ஊடகங்களும்,  புலி பெயர் சொல்லி இன்றும் உழைப்பவர்களும் முற்றாக ஒதுக்கபட்டால் தான் தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டம் இனிமேலும் சரியான திசையில் பயணிக்க முடியும். ஏனைய இயக்கங்களில் சில பல பிழைகள் இருந்தாலும் அவர்கள் அந்நிய நாடுகளால் அன்னியப்படுத்த படவில்லை. இவ்வகையில் அவர்கள் செய்திருக்கும் பங்களிப்பைஏற்றுக்கொன்டு அவர்கள் எல்லோறையும் அணைத்து ஒற்றுமையாக பயணிப்பதே இலங்கை தமிழர்களும் அவர்கள் நிலங்களும் தப்பி பிழைப்பதற்கான ஒரே வழி ஐயர் போன்றவர்கள் தம் அனுபவங்களை இவ்வகையில் துணிந்து வெளியிடுவது பாராட்ட வேண்டியது. இப்போதும் உயிருடன் இருப்பவர்களை பாத்காக்க சில விடயங்களை சொல்லாமல் விடுவதும் புரிந்து கொள்ள கூடியதே. 

    • saravanan says:
      15 years ago

      /////ஏனைய இயக்கங்களில் சில பல பிழைகள் இருந்தாலும் அவர்கள் அந்நிய நாடுகளால் அன்னியப்படுத்த படவில்லை//// சிங்களம் சொல்வதற்கும் செய்வதற்கும் ஆமாம் போட்டால் எதற்க்காக இவர்களை சிங்களம் விளக்க போகிறது

  8. ரூபன் says:
    15 years ago

    ஒரு சிறு குறிப்பு…

    குரும்பசிட்டியில் இருந்த வன்னியசிங்கத்தின் அடகுக்கடைக் கொள்ளை (07.01.81), பகல் பொழுதில் நடந்தது. இக்கொள்ளையில் பாவிக்கப்பட்ட வான் இளவாலை பத்தாவத்தையைச் சேர்ந்த குமரகுலசிங்கத்துக்குச் சொந்தமானது. இவ்வானை இவர் -இச்சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்னர்தான் – தான் வாங்கியதாக உறவினருக்குக் கூறியும் இருந்தார். இக்கொள்ளையின் போது இவரே இவ்வாகனத்தை ஓட்டியும் இருந்தார்!

    இவ்வாகனம் கொள்ளை நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கவில்லை! அருகிலிருந்த ஊரில், இவரது உறவினரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தது.

    இக்கொள்ளைச் சம்பவத்தில் மதிறேறிப் பாஞ்சு கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட ஐயாத்துரை, குலேந்திரன் சுருட்டுச்சுற்றும் தொழிலாளிகளாகும். இவ்வறிய தொழிலாளிகளின் மீதான படுகொலை என்பதாலேயே, இவ் மரணங்கள் அன்று எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பது இன்றும் பேசப்படாத பொருளாகிவிட்டது!

    குமரகுலசிங்கம் இக்கொள்ளைச் சம்பவத்துக்கு முன்னரே ஒரு பொரிய கட்டிடத்தையும், சுற்றுமதிலையும் கட்டியிருந்தார். ஒரு புதுக்கிணற்றையும் வெட்டியும் இருந்தார். இக்கட்டிடத்தில் நெசவாலைக்கான இயந்திரங்களும் கொண்டுவந்து வைக்கப்பட்டும் இருந்தது.

    இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னர், இவ்வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டு இருந்தது. இவ்வாகனம் நீர்வேலி வங்கிக்கொள்ளையிலும் பயன்படுத்தப்பட்டதா? என்பதற்கான சரியான செய்திகள் (ஆதாரங்கள்) பெற முடியவில்லை.

    நீர்வேலி வங்கிக் கொள்ளையை (25.03.1981) அடுத்து, குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்… போன்றவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

    இக்கைது நடந்து ஒருசில வாரத்துக்குள்…

    ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது, பலாலி இராணுவத்தினரால் குமரகுலசிங்கம் கைது செய்யப்பட்டார்.
    இவர் இக்கோவில் வளவுக்குள்ளேயே இராணுவத்தினரின் பலத்த தாக்குதலுடன் விசாரிக்கப்பட்டார். ஊரிலே ”பெட்டைப் பூனை” என்று பட்டத்தொளித்து பேசப்பட்ட இவர், இந்த இராணுவத்தின் தாகுதலால் இரத்தவாந்தி எடுத்ததை, அத்திருப்பலியில் கலந்துகொண்ட பலரும் கண்டனர்.

    இதன்பின்னர்….

    இவர், அவரது புதிய கட்டிடத்துக்கு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார். புதிய கிணற்றைச் சுற்றியிருந்த ‘மக்கி’ இராணுவத்தால் கிளறப்பட்டது. இதற்குள் மறைக்கப்பட்டு இருந்த வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. அதேபோல அக்கட்டிடத்தின் கோடிக்குள் இருந்த ஆட்டுக் கொட்டிலும் கிளறப்பட்டது. (பண்டிதரின் கைதின் போதும் இவ்வாறே நடந்திருந்தது என்பதை ஞாபகப்படுத்துகிறது) இங்கிருந்தும் மேலதிகமாக வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக, வேடிக்கைபார்த்த சுற்றத்தார் அன்று பேசிக்கொண்டனர்.

    கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட குமரகுலசிங்கம், வெலிகடைப் படுகொலையில் 53 பேரில் ஒருவராக கொல்லப்பட்டும் விட்டார்!

    பிகு:
    வன்னியசிங்கம் வீட்டுக் கொள்ளையை அடுத்து மிகக்குறிய காலத்துக்குள், பக்கத்து ஊரிலிருந்து புதிய கொள்ளைக் கோட்டீயினர் இவ்வூரில் ஓர் வீட்டைக் கொள்ளையடித்திருந்தனர். இக்கொள்ளைக்கான தகவல்கள் இச் சுருட்டுச் சுற்றும் தொழிலாளிகளில் ஒருவராலேயே வழங்கப்பட்டும் இருந்து. இத் தொழிலாளியும் இதில் பங்குபற்றியும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வன்னியசிங்கம் வீட்டுக்கொள்ளை கொள்ளையர்கள் உருவாக்கத்துக்கும் காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது…!

    ரூபன்
    23 09 10

    • Killinochi Boy says:
      15 years ago

      Neirveli bank money was then safely taken to VVT by kittu in morrisminor car and hidden in a garage near to a temple. After kuttimani, jagan & thangathurai was arrested in vallipuram sea side (tip was given by Sudalingam Appa for money). Thanthai selva son santhrakasan was the solicitor & barrister to them bought by RAW meet Sri Sabarathinam to over throw rasupillai and recover money from them. As they succeeds now Sri Sabharathinam is new leader to TELO and Prabhakarn Agreed to give all Nirvalli money to release of Kuttimani group release. But Sandrakasan & Sri Sabharatnam try to hide the with Maran (DMK Kalainager Son in Law) later it was invested as cable TV which now called SUNTV so, we rope the money from Sri Lankan Goverment at the nd it was eaten by indian it is a continuous story untill today therefore reason DMK against LTTE till today.

      Basically SUNTV Group technically belong to TELO & LTTE.

      • mamani says:
        15 years ago

        கிளிநொச்சி பையா வரலாற்றை கற்பனையில் எழுதாதீர்.

        • Selva says:
          15 years ago

          அவர் கிளிநொச்சியில்லை உள்ளூர்ப் பெடியன்

        • venkattan says:
          14 years ago

          ஐயர் மட்டும் எழுதலாமோ.. கிளிநோச்சி சொல்வதை பொய்என்று சொல்லமட்டேன். உண்மையாகவும் இகுருகலாரம

  9. mamani says:
    15 years ago

    ஐயரிடம் சில கேள்விகள்:
    நீங்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கும்போது “புளட்டிலா அல்லது எல்ரிரியிலா இருந்தீர்கள்.
    சுந்தரம் கொலை செய்யப்படும்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்.
    சுந்தரத்தின் படுகொலையை உரிமை கோரியவர்களும், எதித்தவர்களும் புலிகள் பெயரை பயன்படுத்தியதன் நோக்கம் என்ன?
    இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலையில் சந்ததியார் பங்கு உண்டா?
    நீங்கள் நேரடியாக எந்த உயிர்பறிப்லாவது பங்கு பற்றியிருகிறீர்களா? அல்லது உத்தரவிடிருக்கிறீர்களா?

    • buby says:
      15 years ago

      எனக்கு தெரிந்த வகையில் சொல்கிறேன். ஐயர் அவர்கள்  இரண்டில் இருந்தும் ஒதுங்கி சில முற்போக்கு நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டார் .சுந்தரம் இறந்த போது இந்திய ல இருந்தார்.சுந்தரம் ஐ கொலை செய்தது புலிகள் தான் என்பது உலகம் அறிந்த உண்மை. சந்ததியாருக்கும் உள் படுகொலைகளுக்கும் தொடர்பு இல்லை .ஐயர் எழுதிய தொடரை முழுக்க வாசியுங்கள்.பதில்கள் தானாக கிடைக்கும்.

      • man says:
        15 years ago

        தோழர் வி.விசுவானந்ததேவன்.மறைந்து 25ஆண்டுகள்

        இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முக்கிய செயற்பட்டாளரும், தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT) தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) என்ற அமைப்புகளை ஸ்தாபித்தவருமான தோழர் வி.விசுவானந்ததேவன் மறைந்து இன்றுடன் (15-10-2010) 24 ஆண்டுகளாகின்றன. தோழர் வி.விசுவானந்ததேவனை இன்று நினைகூரும் முகமாக, 27 முன்னர் மலையக மக்கள் தொடர்பாக அவரால் எழுதப்பட்ட கட்டுரையொன்று இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

        இக்கட்டுரை 1983 ஆண்டு ஏப்பிரல்-மே காலப்பகுதியில் வெளியான 7வது புதுசு இதழில் பிரசுரமானது. மலையகத்தின் அக்காலகட்ட சூழலினையும், மலையக மக்கள் தொடர்பாக அக்காலத்தில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களையும், 1983 ஆண்டு காலப்பகுதியிலான நாட்டின் மொத்த அரசியல் நிலைமைகளையும் கருத்திற்கொண்டு இக்கட்டுரை வாசிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்த தோழர் வி.விசுவானந்ததேவனின் அக்காலகட்டத்து கருத்து என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

        மலையக மக்களின் பிரச்சனை

        இலங்கையின் மலைப்பகுதியில் உள்ள பெரும் தோட்டங்களில் தொழிலாளர்களாக வாழும் தமிழ் மக்களையே மலையக மக்கள் என அழைக்கிறோம். இவர்களில் பலர் கொழும்பு போன்ற நகரங்களுக்கும் வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்ததாலும் இவர்கள் சமூக, கலாச்சார, மொழி ஒருமைப்பாட்டால் மலையக மக்களில் ஒரு பகுதியினராகவே தம்மை இனங் காட்டுகின்றனர். கொழும்பில் வாழும் ஞானம் மற்றும் பெரும் இந்திய முதலாளிகள் தம்மை இவர்களுடன் இனம் காட்டுவதில்லை. நாமும் இவர்களை மலையக மக்களில் ஒரு பகுதியினராகக் கருத முடியாது. மலையக மக்களின் பிரச்சனை இன்று மிகவும் சிக்கலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எமது பொருளாதாரத்தின் பெரும்பகுதியை ஈட்டித்தரும் (1) நாம் தினமும் அருந்தும் தேனீருக்கான தேயிலையை உருவாக்கும் இம்மக்களைப் பற்றி நம்மில் எத்தனைபேர் சிந்திக்கின்றோம்? கடந்த காலங்களில் நவீன அடிமைகளாய் வாழ்ந்த இம்மக்களைப்பற்றி தமிழ், சிங்கள பாராளுமன்ற அரசியல்வாதிகள் அக்கறைப்பட்டதே கிடையாது. மலையக மக்களிடையே உருவான தலைவர்கள் இவர்களை வைத்துப் பிழைப்பு நடத்தினார்களே தவிர ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை. மலையக மக்களின் பிரச்சினையின் தோற்றப்பாட்டையும் அது வளர்ந்து வந்த வரலாற்று, சமூக, பொருளாதார காரணிகளையும் ஆராய்வது அத்தியாவசியமானது. இப்பிச்சினையை முழுமையாக இச்சிறு கட்டுரையில் ஆராய முடியாதெனினும் சில அடிப்படைப் பிரச்சனைகளை முன் வைப்பதுடன் மேலும் ஆக்க பூர்வமான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடத்த வழியைத்திறந்து விடுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

        மலையக மக்களின் வருகையும் அதன் தாக்கங்களும்

        இலங்கைக்கு பிரிட்டிசார் வருகைதந்தவுடன் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். எமது பொருளாதாரத்தை தமது தேவைக்கேற்ப மாற்றினர். எமது நீர்ப்பாசன முறைகள் அழிக்கப்பட்டன அல்லது கவனிக்கப்படாமல் விடப்பட்டன. மலையகத்தில் கண்டிய நிலப்பிரபுக்கள் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு மலைகளிலுள்ள காடுகளும் அழிக்கப்பட்டு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அந்த காலத்தில் தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய வறட்சியான சூழ்நிலையைப் பாவித்து அங்கிருந்து தோட்டங்களிற்கு கூலித்தொழிலாளர்களை கொண்டு வந்தனர். அக்காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சாதிமுறையைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தினர். உயர்சாதியினரைக் கங்காணியாக நியமித்து அவர்களே ஆட்களைச் சேர்த்து வந்தனர். ஆரம்பத்தில் வீதிகள், புகையிரதப்பாதைகள் அமைப்பதற்கும், பின் காடுகளை அழித்து தோட்டங்கள் உருவாக்கவும் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் நவீன அடிமைகளாக தோட்டங்களில் வைக்கப்பட்டனர். மற்றைய ஆலைத்தொழிலாளருக்கு உரிய உரிமையான தொழில் சுதந்திரமில்லை. தமது உழைப்பு சக்தியை விரும்பிய இடத்தில் சுதந்திரமாக விற்கும் உரிமை கூட இருக்கவில்லை. ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு நிர்வாகத்தின் அனுமதியின்றிப் போகமுடியாது. சிங்கள கிராமங்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டனர். பிரிட்டிசார் இங்குள்ள மக்களைக் கூலிக்கமர்த்தாது இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்ததன் காரணங்களை பின்வருமாறு தொகுக்கலாம்.

        1. இங்குள்ள மக்கள் குறைந்த கூலிக்கு வேலைசெய்யத் தயாராக இருக்கவில்லை.
        2. உள்ளுர் மக்களின் சுதந்திர வேட்கை
        3. இவர்களைக் கொண்டு வருவதன் மூலம் இனங்களுக்கிடையில் குரோதத்தினை உருவாக்கி தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தல்.

        பிரிட்டிசார் பல தேசிய இனங்களையும் வலுக்கட்டாயமாக ஒரு நிர்வாகத்தில் இணைத்து பின் பிரித்தாளும் தந்திரத்தையும் கையாண்டனர். ஆரம்பத்தில் 1830 ஆம் ஆண்டளவில் தோட்டப்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் கோப்பித் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்டனர். கோப்பிச் செய்கை எதிர்பார்த்த வருவாயைத் தராததினால் கோப்பிச் செய்கை கைவிடப்பட்டது. தேயிலை, றப்பர், தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. கோப்பிப் பயிர்ச்செய்கை காலத்தில் சில மாதங்களில் மட்டும் தொழிலாளர் வந்து பின் திரும்பி செல்லும் போக்கிருந்தது. தேயிலை, றப்பர் செய்கை ஆரம்பமானவுடன் பெரும்பான்மையோர் நிரந்தரமாகவே தங்கிவிட்டனர். 1860 ஆம் ஆண்டளவிலிருந்து தேயிலை, றப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

        தோட்டத் தொழிலாளரது பெருமளவான வருகை 1930 ஆண்டு வரைக்கும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்தே தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணர்வுகள் சிங்கள மக்களிடம் சிங்களத் தலைவர்களால் ஊட்டப்பட்டன. இவர்கள் வந்தனாலேயே சிங்கள விவசாயிகளுக்கு நிலப்பிரச்சனை ஏற்பட்டதாகப் புகட்டப்பட்டது. மேலும் தோட்டங்களுடன் கிராமங்கள் தொடர்புபட முடியாமல் தோட்ட நிர்வாகம் வைத்திருந்ததனால் ஒருவரையொருவர் புரியவோ தமது பொதுப்பிரச்சனைக்காக இணைந்து போராடவோ முடியாத நிலை நிலவி வந்தது. இவர்களிடம் போராட்ட குணாம்சம் மறைந்திருந்ததை யாரும் மறக்க முடியாது. ஆலைத் தொழிலாளர்போல் முன்னேறிய உற்பத்திச் சாதனங்களுடன் உறவில்லாமை, நிலப்பிரபுத்துவத்தை உடைத்து வராமல் ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி உறவு என்பன காரணமாக இவர்கள் நகர்ப்புற பாட்டாளிகளின் அளவு அரசியல் உணர்வு பெற்று முன்னணி பாத்திரம் வகிக்க முடியவில்லை. சில போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1939 ஆம் ஆண்டு ஹங்குராங்கந்தவில் உள்ள முள்ளோயா தோட்டத்தில் முதன்முதலாக கோவிந்தன் என்னும் தொழிலாளி வீரமரணம் எய்தினார்.

        தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணர்வுகளைத் தொழிலாளாகள் தலைவர்களும் கொண்டிருந்தனர். முதலாவது அரசாங்க சபையில் (1931க்கு பின்) பெரும் தொழிலாளர் தலைவர் எனச் சொல்லப்படும் ஏ.ஈ. குணசிங்கா போன்றோர் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான குரலெழுப்பினர். தம்மை சோசலிஸ வாதிகளாகக் காட்டிய சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம். பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் அரசாங்க சபையில் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். தோட்டத் தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்த முதலில் முனைந்தவர் எஸ். நடேசஜயராகும். இவர் 1931 இல் அகில இலங்கை உழைப்பாளர் சம்மேளனம் எனும் அமைப்பை உருவாக்கினார். இது 1933 வரையும் தான் நிலைத்து பின் 1940 இல் ஜவகர்லால் நேருவின் ஆலோசனைப்படியே இலங்கை – இந்திய காங்கிரஸ் உருவானது. இதுவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக உருவெடுத்தது. தொண்டமானின் தலைமையில் தொழிலாளர்கள் அணிதிரண்டனர். 1947 பாராளுமன்றத் தேர்தலில் 7 பிரதிநிதிகள் மலையக மக்களிலிருந்து தெரிவாயினர். அத்தோடு மலையக மக்கள் இடதுசாரிகளை ஆதரித்து அவர்களது வெற்றிக்கு உதவினர். அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் இலங்கரத்தினாவுக்கு ஆதரவு நல்கி வெற்றி பெறச்செய்தனர்.

        இவை யாவும் சேர்ந்து டி.எஸ். சேனநாயக்காவை விழிப்படைய வைத்தது என்றும், இவர்கள் இடதுசாரிகளுடன் நிற்பார்கள் என்பதைப் புரிந்து, சுதந்திரம் கிடைத்தவுடன் 1948 இல் முதல் செய்த வேலை பிரஜா உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இவர்களது பிரஜா உரிமையை இல்லாது செய்தார். டி.எஸ். இன் இந்நடவடிக்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் தனிப்பெரும் தழிழ் தலைவரான ஜீ.ஜீ அவர்கள.; டி.எஸ்.உம் ஜீ.ஜீ உம் தமது வர்க்க நலனில் ஒன்றிணைந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஏற்கனவே தோட்ட நிர்வாகத்திலும், தோட்டப்பாடசாலை ஆசிரியர்களாகவும் இருந்த யாழ்ப்பாணத்தவர் நடந்து கொள்ளும் மோசமான போக்கினால் யாழ்ப்பாண எதிர்ப்பு தோட்டத் தொழிலாளரிடையே இருந்தது.

        ஜீ.ஜீ யின் இத்துரோகத்தனம் யாழ்ப்பாண எதிர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஜீ.ஜீ யின் இந்நடவடிக்கையை எதிர்த்தே தமிழ்க் காங்கிரஸிருந்து வெளியேறி தழிழரசுக்கட்சியை செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்றோர் உருவாக்கினாலும் தோட்டத்தொழிலாளரை அணிதிரட்டிப் போராடவில்லை. தமிழரசுக்கட்சி தமிழ் தேசிய, குட்டி முதலாளிகளின் நலனையே ஆரம்பத்தில் பிரதிபலித்தது. தோட்டத் தொழிலாளரின் நலனில் தேசிய, குட்டி முதலாளிகளின் நலன் தங்கியிருக்காததும், தமிழரசுக்கட்சி பாராளுமன்றக்கட்சி ஆகையால் தோட்டத்தொழிலாருக்கு வாக்கினமையாலும், தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி அக்கறைப்படவேயில்லை. தொண்டமான 1948 இல் பிரஜா உரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒருநாள் ஹர்த்தாலுடன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். பின் தொண்டமான் தோட்டத்தொழிலாளரைக் காட்டிக்கொடுத்து நியமன எம்.பி பதவிக்கும் மந்திரிப்பதவிக்கும் யூ.என்.பி யுடன் சங்கமமானார். இடதுசாhரிக் கட்சிகளான லங்கா சம சமாஜக்கட்சி, கம்ய+னிஸ்ட்கட்சி ஆகியவை கூட வாக்கு இல்லாத இவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. மற்றும் இடதுசாரிகள் பலரும் பராமுகமாயிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினர் 1971 கிளர்ச்சிக்கு முன்பு மிகவும் கீழ்த்தரமான முறையில் இவர்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தனர்.

        1971 ஏப்ரல் கிளர்ச்சியின் முனனோடியான தயாரிப்பு வகுப்புகள் ஜந்தில் இரண்டாவது வகுப்பு முழுவதும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற பொருளில் பிரதானமாக மலையகத் தொழிலாளருக்கெதிராகவும் பொதுவாக தமிழ் மக்களுக்கு விரோதமானதாகவுமே இருந்தது.

        மலையக தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள்

        இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் ஆரம்பத்தில் பெரிய சங்கமாக இருந்தது. இதன் இந்திய சார்புத்தன்மை பிற்போக்கு தலைமை காரணமாக தொழிலாளர்கள் சிந்திக்கும் ஆற்றலிழந்து தொழிற் சங்க சேற்றுக்குள்ளேயே இருந்தார்கள். இப்பிற்போக்குத் தலைமை சிங்களத் தொழிலாளர்களுடன் தோட்டத்தொழிலாளர் இணைய முடியாதவாறு தடுத்தே வைத்திருந்தது. பின்னர் உருவான அஸிஸ். வெள்ளையன் போன்றோரின் சங்கங்களும் தொழில் தகராறுகள் போன்ற சிறு பிரச்சினைகளுக்கான தொழிற் சங்க நடவடிக்கை என்ற எல்லைக் கோட்டிற்கு அப்பால் செல்லவில்லை. சம சமாஜக்கட்சி, கம்ய+னிஸ்ட்கட்சிகளினால் உருவாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளருக்கான தொழிற் சங்கங்களும் தொழிற் சங்க வாதத்திலேயே மூழ்கின. 1965ஆம் ஆண்டிற்குப் பின் உருவாக்கப்பட்ட சண்முகதாசனின் தலைமையிலான செங்கொடிச்சங்கம் ஒரளவு தொழிலாளர்களை அரசியல் மயப்படுத்தினர். இவர்கள் பாராளுமன்றப் பாதையில் செல்லாததனால் இப்படிச்செய்வது சாத்தியமாயிற்று. செங்கொடிச்சங்கத் தோட்டங்களில் தலைமையின் வழிகாட்டலின்றியே பல போராட்டங்கள் நடத்தினர். மடக்கும்பரை, கீனாக்கலை, றங்கலை ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தினர். கீனாக்கலை போராட்டத்தில் இரு தொழிலானர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினார். இவ்வமைப்புக் கூட தொடர்ந்து முன்செல்ல முடியாது போயிற்று. இதற்கான காரணங்கள்:

        1: மலையகமக்களின் யதார்த்த நிலைமையை உணராத வறட்டு மார்க்ஸிய பார்வை.
        2: தோட்டத் தொழிலாளரே புரட்சியின் முதன்மை சக்தி எனும் தவறான கண்ணோட்டம் (இவர்கள் முக்கியமான சக்தி, முதன்மை சக்தியன்று).
        3: தொழிற்சங்கத் தலைமையின் துரைத்தனம்.
        இன்னொரு தவறான போக்கும் மலையகத்தில் இருந்த சில அதிதீவிர சக்திகளால் முன்வைக்கப்பட்டது. தொழிற்சங்க வேலையே திரிபுவாத வேலை எனவே தொழிற்சங்கங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்பதே இத்தவறான கண்ணோட்டம் இந்தியாவிலுள்ள சில அதிதீவிரவாதிகளிடமிருந்து இவர்களுக்குக் கிடைத்தது. 1971 ஏப்ரல் கிளர்ச்சியைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் பயம் காரணமாகவும் சுயலாபம் கருதியும் அரசியலற்ற தொழிற் சங்கம், தொழிற்சங்கத்தின் சுயாதீனம் எனும் தவறான கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் செங்கொடிச்சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் கூட சில துரைமார்களின் வியாபார நிறுவனங்களாக மாறியுள்ளன.

        ஒப்பந்தங்கள்

        இந்நாட்டில் காலத்திற்கு காலம் பல ஒப்பந்தங்கள் பொருட்களை விற்பது வாங்குவது போல் செய்யப்பட்டன. ஆயினும் நாடற்றவர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. முதலில் இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டு 1இலட்சத்து 35ஆயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டது. பின்னர் 1954ஆம் ஆண்டு நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. நாடற்றவர் பிரச்சனையைத் தீர்க்க எண்ணி ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் 1964ஆம் ஆண்டு செய்யப்பட்டது இது மக்களினுடைய எந்த விருப்பு வெறுப்பையும் கணக்கிலெடாது இரு நாட்டுத் தலைவர்களும் சரக்கு பரிவர்த்தனை போன்ற தமது ஒப்பந்ததைச் செய்து முடித்தனர்.

        இவ்வொப்பந்தப்படி 5இலட்சத்து 25ஆயிரம் பேரை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவும் 3இலட்சம் பேரை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாகவும் உடன்பாடானது. இவ்வொப்பந்தம் 79ஆம் ஆண்டுடன் காலாவதியாகியும் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப்பட்டது. இதுவரைக்கும் 3இலட்சத்து 50ஆயிரம் பேர் தான் இந்தியா சென்றுள்ளார்கள். இனப்பெருக்கத்தைக் கணக்கிலெடுப்பின் 3இலட்சம் பேர்தான் இந்தியா சென்றுள்ளனர். 1974ஆம் ஆண்டு ஸ்ரீமாவும் இந்தியாவும் எஞ்சிய 1லுஇலட்சம் பேருக்கான ஒப்பந்தம் செய்தார்கள். 75ஆயிரம் பேரை இலங்கையும் 75ஆயிரம் பேரை இந்தியாவும் ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. மொத்தமாக 6இலட்சம் பேருடன் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களையும் இந்தியா ஏற்க வேண்டும். மொத்தமாக 4இலட்சமும் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களும் இலங்கையில் குடியுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள். ஆனால் இலங்கையரசு 7பேர் இந்தியா சென்றால் 4பேருக்குத்தான் பிரஜா உரிமை வழங்குகிறது. எப்படியிருப்பினும் இதுவரைக்கும் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் நாடற்றவர் பிரச்சினை தீராத ஒரு பிரச்சனையாகவேயுள்ளது. இவ்வொப்பந்தங்கள் எழுதிய காலத்தில் குறிப்பாக ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் எழுதிய பொழுது சில வறட்டுவாதிகள் இரு முதலாளித்துவ அரசுகளுக்கும் இவ்வொப்பந்தம் எழுதும் அருகதையில்லை. இதுபற்றி நாம் அக்கறைப்படத் தேவையில்லை. சோஷலிஸம் வந்த பின்தான் இவையெல்லாம் தீ�

        • Suresh Manicks says:
          12 years ago

          Your views about GG are totally wrong. It seems that you learnt politics from Suthanthiran newspaper. GG did NOT vote in favor of citizenship act which deprived the citizenship to many Indian labourers. In 1949, GG manipulated DS brought Indo Pakistani Act 1949 which gave back citizenship to some Indian workers. SJV did not like this as he took the view that passing Indo Pakistani Act, the citizenship issue was over. GG said nothing can be done but they have to work with the govt. to get more benefits to Tamiks which he did. SJV said instead of benefits they have to fight for basic rights and defected fromTC. Finally he did not get the rights or benefits. SJV messed up the whole Tamil issue. He did not have the farsightedness of GG. SJV, liked VP, learnt politics while practicing it and failed. The only difference between SJV and VP was the one was solely non violent and other violent. Whereas GG was a genius and had the politcal sagacity which the Tamil fools failed to see!

  10. proffessor says:
    15 years ago

    நீர்வேலி கொள்ளையில் ஒபரோய் தேவன்(மாறன்); யெலோ, ராசுப்பிள்ளை, ரோல்சிறி (சிறிசபாரத்தினம்) ஆகியோரும் பங்கெடுத்ததாக அறிகிறேன்.

    நீர்வேலி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வாடகைக்கு கார் ஓட்டும் துன்னாலையை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் காரை கடத்தி சின்னத்துரையை டிக்கியில் போட்டுவிட்டு சென்றதாக அறிகிறேன். பின்னர் சின்னத்துரை என்ற ரைவர் பொலிசாரால் கைது செய்து விசாரிக்கப்பட்டார்;

  11. OORAAN says:
    15 years ago

    இப் பதிவு ஒரு நல்ல ஆரம்பம்.
    ஐயர் இப்பொழுது உயிருடன் உள்ள பழைய போராளிகளையும் தொடர்பு கொண்டு விடுபட்டுப்போன விடயங்களை இணைத்தால் நல்லது.

    • பாலாமணி says:
      15 years ago

      உயிருடன் உள்ள பழைய போராளிகள் யாவரும நவகோள்கள்.

  12. ரவீன் says:
    15 years ago

    ஜயர் அவர்களே, உமாமகேஸ்வரன் பொன்னியின் செல்வன் போன்ற பகுதிகளை வாசித்ததாலா? நீர் முதல் எழுதிய கட்டுரையில் அவர் கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் நேர்த்தியாக எழுதி வைத்து கொள்பவர் என்றும் எழுதியுள்ள நீரே. இறுதியில் உமாமகேஸ்வரனுக்கு இடதுசாரி பாதை தெரியாது என்றும் மாக்சீசம் போன்ற புத்தகங்களை வாசிக்காதவர் என்றும் எழுதியுள்ளீர்

    • mamani says:
      15 years ago

      புளட் தத்துவாத்த ரீதியிலும் , ராணுவ ரீதியிலும் மிக பலமாகவே இருந்தது. ஆனால்நடைமுறையில் சங்கிலி, வாமதேவன், மாணிக்கதாசன், வாசுதேவா,மொக்கு மூர்த்தி போன்ற ————- யும் மத்திய குழுவிலும், அதிகார பீடத்தில் இருத்தி தலைமை விசுவாசம் என்ற பெயரில் அழிவு செய்தது.

      • மாயா says:
        15 years ago

        உமா மகேசுவரன் எனும்  முகுந்தன் குறித்த ஐயரின் சில தகவல்களில் எனக்கு உடன்பாடில்லை. புளொட் பல தவறுகளை இழைத்தது. அதில் மாற்றுக் கருத்தில்லை அதில் முக்கியமானது தலைமை விசுவாசம் என்ற பெயரில் அழிவு செய்ததுதான்.  இதைத் தட்டிக் கேட்க முகுந்தனால் முடியாமல் போனதற்கு , அவரது பலவீனங்களின் பிடிகள் இவர்களிடம் இருந்ததேயாகும்.  அனைத்து இயக்கங்களும் சென்னையில் குழுமிய போது ,  ( இக் காலத்தில் சபாவை புலி போட்டு விட்டது.) முதல் முறையாக செல்வம் அடைக்கலநாதன் அதன் பொறுப்புக்கு வருகிறார். புலிகள் சார்பாக  திலகர் பங்கேற்கிறார். ரத்னசபாபதி, பத்தமநாபா , செல்வம் அடைக்கலநாதன் , திலகர் மற்றும் உமா மகேசுவரன் மேடையில் இருக்கின்றனர். (இங்கேதான் PLOTE முகாம்களில் இடம் பெற்ற   கொலைகளை முகுந்தன் ஏற்றுக் கொண்டு, போராட்டத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் என பகிரங்கமாக சொன்னது .)  புலம் பெயர் நாடுகளில் இருந்து வந்தோரும் , இந்தியாவில் இருந்த பலரும்  தமிழீழ போராட்டம் தொடர்பான கேள்விகளைக் கேட்கின்றனர். ” நாங்கள் ஆளாளுக்கு ஏதாவது சொல்வதை விட இதைத் தெளிவு படுத்தும் அறிவு முகுந்தனுக்கே உண்டு. கேள்விகளை முகுந்தனிடம் கேளுங்கள்” எனச் சொல்கிறார் இரத்தின சபாபதி. பத்மநாபாவும்  முகுந்தனை நோக்கி தலையால் சைகை செய்து அனுமதிக்கிறார். திலகரும், செல்வமும் அமைதியாக இருக்கின்றனர். போராட்டத்தின் நாயகர்களான சோசலிச சிந்தாந்த திலகர்களே முகுந்தனை பகிரங்கமாக அங்கீகரித்த நிலையில் , //முகுந்தனுக்கு அரசியலே தெரியாது , உமா மகேஸ்வரனைப் பொறுத்தவரை இடதுசாரி அரசியலில் எந்த ஆர்வமும் கொண்டவராக இருந்ததில்லை. ஒய்வுகிடைக்கும் நேரங்களில், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நூல்களைப் படிக்கும் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலின் வன்முறைத் தொடர்ச்சியாகவே காணப்பட்டார். – ஐயர் // என்பது யதார்த்தமாக இல்லை. அல்லது ஐயருக்கு முகுந்தன் குறித்த தெளிவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
         முகுந்தன் இந்தியாவில் இருந்த காலத்தில், இந்தியாவின் அரசியல்வாதிகளே பெரியவரோடு (முகுந்தன்) பேச முடியாது. அவருக்கு எங்களை விட ரொம்ப விசயம் தெரியும் என்பதை  பகிரங்கமாகவே சொன்னார்கள். முகுந்தன் வெறும் ஆயுதத்தோடு , தமிழருக்கு வாழ்வு மலரும் என்று நினைக்கவில்லை.  அனைத்து இயக்கங்களும் செய்யும் இப்படியான தாக்குதல்கள்  இலங்கை  ஆயுதப்படைகளை பலமாக்க உறுதுணை புரிந்து விடும். ஒரே சமயத்தில் சிங்கள இடதுசாரிகளோடு இணைந்து நடத்தும்  நாடு தழுவிய தாக்குதல் ஒன்றின் மூலமே  தமிழர்களது உரிமைகளை பெற முடியும் அல்லது சுவிசின் கன்டோன் (மாநில)  வாரியான அதிகாரமே அனைத்து மக்களுக்கும்  விடிவைத் தரும் என மெனிபெச்டோவில் எழுதியவர்.  தவிரவும் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது. இது நீண்ட காலப் போராட்டமாக இருக்கும் என தீர்க்க தரிசனமாக சொன்னவர். இதை விட ஒருபடி மேலே போய் இந்தியாவுடனான உறவு நம்பிக்கை அற்றது. சீனாவுடனான நட்பை  நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என தமது கழக வடிவத்தை  மாற்றியவர். இதுவே உமா எனும் முகுந்தனின் மேல் இந்தியா சந்தேகம் கொள்ள வழியானது. அதுவே அவரது சாவுக்கும் வழி கோலியது.  (மேலே சொன்ன பல விடயங்கள் இன்று யதார்த்தமாகியுள்ளன .)

        அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணையுமாறு கலைஞர் அழைப்பு விடுத்த போது புளொட் மட்டுமே இணைய மறுத்தது. பிரபாகரனோடு கை கோர்த்தது நல்லதுக்கில்லை , அழிவு நெருங்கி விட்டது. என்றார் உமா. அது உண்மையானது. புலிகள் கலைஞர் சொல்லை அன்று கேட்டு இணைந்தனர். பின்னர்தான் MGR பாதைக்கு தடம் புரண்டது. இங்கும் புலிகளிடம் கொள்கை இருக்கவில்லை. 
        புளொட்டின் உண்மையான போராளிகளை எவராலும் மாற்ற முடியாது. தற்போதைய புளொட் புளொட்டே அல்ல. இப்போதிருப்போரில் அநேகர் அரசியல்வாதிகள். உண்மையான புளொட் போராளிகள் மௌனமாக இருக்கிறார்கள். புலிகளிடம் கவர்ச்சி இருந்தது. புளொட்டில் கருத்து இருந்தது. கவர்ச்சி அழியும். கருத்துகள் அழியாது. இதுவே யதார்த்தம். ஐயரின் தகவல்கள் புலி சார்ந்தே இருக்கிறது. இதுவும் விற்பனை நோக்கமா? அல்லது  இருக்கும் அலையை பாவிக்கும் நோக்கமா? எதுவானாலும் உண்மைகள் அழிவதில்லை. அது வெளிவரும். அதுவரை  தொடரட்டும்……

        • villangam says:
          14 years ago

          இந்த உமா தான்  பிரிட்டிஷ் நந்தி  என்ற பத்திரிகையாளருக்கு இரண்டு வருடத்தில் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று  திருவாய் மலர்ந்தருளியவர் 

  13. புளொட் உறுப்பினர் - says:
    15 years ago

    ஜயர் அவரே உமாமகேஸ்வரனுக்கு, இடதுசாரி பாதை தெரியாமலா சிங்கள இடதுசாரிகளையும் அரவணைத்து சிங்கள இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சிங்கள மக்களிற்கு தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்தை விளக்கும் முகமாக தமிழீழத்தின் குரல் என்ற வானொலி மூலமாக சிங்களமக்களிற்கு விளக்கி இன்றுவரை அந்த வானொலியின் கருத்தை ஆதரித்துவரும் சிங்கள மக்கள் இன்றுவரை உமாமகேஸ்வரனை ஏற்றுக்கொண்டு அவரது பெயரை நினைவு கூர்ந்து வருவதுடன். அவ்வாறு உமாமகேஸ்வரனின் பெயரில் இன்றுவரை இயங்கிவரும் உமாமகேஸ்வரனின் புளொட் இயக்கத்திற்கு சிங்கள பெண்மணியொருவரே சொத்து ஒன்றை ஈனமாக வழங்கியுள்ளார்.

    ஆகவே இன்றுரை உமாமகேஸ்வரனின் இடதுசாரி கருத்துக்களை ஆரம்பத்திலேயே கற்று கொண்டு அவரது பாசறையில் புளொட் இயக்கம் வளர்க்கப்பட்டதால்தான் இன்றுவரை வெளிநாடுகளில் தமது அடையாளத்துடனேயே புளொட் இருந்த வருகின்றது.

    • mamani says:
      15 years ago

      உமா இடதுசாரி பாதையில் ஒழுகாமலிருந்திருக்கலாம் ஆனால் அவருக்கு மார்க்சிச- லெனினச பற்றி நல்ல அறிவிருந்தது. 1985 வெளி வந்த ஜுனியர் விகடனில் தான் அம்புலிமாமா, பொன்னியின் செல்வன் விரும்பி படிப்பதாகவும் தனக்கு சித்திரம் வரைய தெரியுமென்று கூறி பாலர் வகுப்பு பிள்ளைபோல் கொக்கு, கிளி படங்களை வரைந்திருந்தார் மேதகு பிரபாகரன்.

    • suganthan says:
      15 years ago

      சமூக விரோத அரசியல் வெட்கமறியாதது. அதனால்தான் சொந்தபெயரில் எங்கும் இயங்கிவருகிறீர்கள். உமா கொல்லப்பட்டது அவரது மெய்ப்பாதுகாவலர்களாலேயே என்பதை மனங்கொள்க. என்னதான் நீங்கள் ஊதிபெருப்பித்தாலும் உமாவின் மரணம் பறவையில் இருந்து உதிர்ந்த சிறகு போன்ற தாக்கத்தையே அன்று தமிழ்மக்களிடையே ஏற்படுத்தியது. புளட் ஜே.வி.பிலிருந்து பிரிந்த சிறுகுழுவான என்.ஜே.வி.பி க்கு வவுனிக்குளத்தில் கோன் ( முன்னாள் முல்லைத்தீவு இராணுவபொறுப்பாளர், இயக்கத்தில் இருந்து விலகி தையல் தொழில்செய்து பிழைத்துக்கொண்டிருந்தவரை இரண்டு ஆண்டுகளிற்கு முன்னர் புளட் வவுனியாவில் படுகொலை செய்தது.) தலமையில் பயிற்சி அளித்தது. அந்தசிங்கள இளையோர் இடதுசாரிகளல்ல. இவர்களில் பலர் இலங்கை அரசிடம் சரணடந்தனர். சிலர் ஜே.வி.பி யால் அழிக்கப்பட்டனர். நிக்கரவெட்டியா வங்கி கொள்ளையின்போது கொல்லப்பட்ட சிங்களபொலிசாரின் குடும்பங்களிற்கு வானொலியில் முகுந்தன் அஞ்சலி செலுத்தினார். ஆனால் நிக்கரவெட்டியாவில் எத்தனை அப்பாவி சிங்களவர்களை வாமதேவன் தலமையில் கொன்றார்கள் என்ற உண்மையை பேசமறந்தார். பின்னர் ஜே.வி.பி காலத்தில் பல அரசியல்வாதிகளுக்கு (சில அமைச்சர்கள் உட்பட) மெய்ப்பாதுகாவர்களாக உமாமகேஸ்வரன் பல புளட் உறுப்பினர்களை கூலிக்கு அனுப்பினார். அவர்களில் சிலர் சுற்றியிருந்த சிங்களவீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளையடித்து( சிலர் பொலிசாரிடம் பிடிபட்டனர் உ+ம் சண்டிலிப்பாய் லோரன்ஸ்) உமாவின் இடதுசாரியத்தை இன்னொருபடி உயர்த்தினார்கள்.

    • yazhavan says:
      13 years ago

      உமாமகேஸ் வரனின் கருத்துக்கள் மிகவும் தீர்க்கமானவை. அவர் ஒடுக்கப்பட்ட மக்ளுக்காக போராட தலைப்பட்டார். தமிழ் மக்கள் மட்டுமன்றி ஒடுக்கபட்ட சிங்கள மக்களையும் சேர்த்திருந்தால் இலங்கை எப்போதே மலர்ந்திருக்கும். ஆனால் நாங்கள் சுயநலமாக சிந்தித்துவிட்டோம். சுயவிமர்சனம் செய்துபார்த்திருந்தால் பிரபாகரன் எப்பவோ காட் அற்றாக் வந்து செத்திருப்பான்.

  14. தமிழ்வாதம் says:
    15 years ago

    புலிகளோடிருந்து PLO பயிற்சிக்குச் சென்று,மணல்மேடுகளை பார்த்து வந்து,புலிகளில் (PLOT) சதி செய்து மக்கள் அமைப்பு கட்டுவதாகப் புறம் போய்,புலிகளைப் போலவே ஈ(LTT E)யடிச்சு,உருவாக்கியதுதான் PLOTE ஆகும்.

    PLO—->PLOT—–>PLOTE.

    இடறும் சாறித் தலைப்புகளில் இடதுசாரிக் கருத்துகளா இவர்கள் தேடினார்கள்?புலிகளிருந்து ‘புதியபாதை’ எனப் புறப்பட்டவர்கள் அதே பாதையில் பயணித்த போது, இவர்கள் மக்கள் விடுதலைக்காக போராடவில்லை;தாம் கூடாரம் அமைக்கவும்,நாட்டாமை காட்டவும் வெளிகிட்டவர்கள் எனக் காட்டி நின்றார்கள்.

  15. Bharathi says:
    15 years ago

    ஐயர் மிக நேர்மையானவர் என பேரெடுத்தவ்ர். அவரின் நேர்மை பற்றியும் அவரது அரசியல் வழி பற்றியும் பிரபாகரன் கூட பிழை கூற துணியவில்லை. பிரபாகரனோடு இருந்த சிலர் தனிப்பட்ட அவதூறு நடத்தினார்கள். சிவப்பு சட்டைக் காரன் என்று ரோனியோ பிரசுரம் விட்டார்கள். ஐயர் பின்னர் என்.எல்.எப்.ரி அமைப்பில் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். பின்னர் தீப்பொறி அமைப்பிலும் மத்திய குழு உறுப்பினர். 30 வருடத்தின் பின் ஒரு உண்மை சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது ஐயரது அசாத்திய நேர்மையால் மிகவும் சாதாரண நிலையிலேயே உள்ளார். 46 வயதில் புரட்சித் திருமணம் செய்து கொண்டவர். இப்பவும் மிகவும் நேர்த்தியான அரசியலை அவரது தொடர் மூலம் கொண்டு வந்துள்ளார். எதிர்காலத்தில் இது போராட்டங்களின் பொக்கிசமாகப் பயன்படும்.ஐயர் போன்ற போராளிகள் போராடிக்கொண்டு தான் இருப்பர். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் உண்மைக்காகவும் சமூகத்தை எதிர்த்து போராடும் மிகச் சிலருள் ஐயரும் ஒருவர். அது மட்டுமல்ல ஐயரது இந்த ஆவணம் மட்டும் தான் போராட்டத்தில் நம்பக் கூடிய ஒரே ஆவணம்.

    • chandran .raja says:
      15 years ago

      காலம் கடந்து சொன்ன உண்மை தான். இருந்தாலும் இது ஆவணமாக்கி பாதுகாக்கப்
      படவேண்டும்.

  16. kariyavan says:
    15 years ago

    உறங்கியிருந்த உண்மையை வெளியுலகிற்கு சொன்ன ஐயாவிற்கும் வெளியிட்ட இனியொருவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
    ஐயருக்கு பின்னர் இருந்தவர்களைக் கண்டு, பிந்தய வரலாற்றையும் வெளிக்கொண்டுவரப் பாருங்கள்.

    • ரூபன் says:
      15 years ago

      பாரதி!

      எமது கடந்தகால வரலாறு மிகவும் கசப்பானது. நீங்கள் சுட்டிக்காட்டும்: ”ஐயர் மிக நேர்மையானவர் என பேரெடுத்தவ்ர். அவரின் நேர்மை பற்றியும் அவரது அரசியல் வழி பற்றியும் பிரபாகரன் கூட பிழை கூற துணியவில்லை. ” பிரபாகரன் குறைபிடிக்கவில்லை என்பதால் ஐயரின் வரலாறுகள் சரியாகிவிடாது.
      30 வருடங்களாக ஐயர் உண்மைகளை பேசாதபோதும் மக்களிடம் உண்மைகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. …
      எந்தக்கொள்ளையும் கொலைகளும், ஏன் போராட்டங்களும் புரட்சிகளும் சந்திரமண்டலத்தில் நிகழவில்லை! எல்லாம் மக்கள் அன்றாடாம் நடமாடும் உலகத்தில்தான் நடந்தது…
      மேலும்…

      ”46 வயதில் புரட்சித் திருமணம் செய்து கொண்டவர். இப்பவும் மிகவும் நேர்த்தியான அரசியலை அவரது தொடர் மூலம் கொண்டு வந்துள்ளார். ”

      ஐயரின் தொடரில் அரசியல் அலசப்படவில்லை! சம்பவங்களின் ‘இரகசியம்’ சிலது வெளிப்பட்டுள்ளது.
      ”அது மட்டுமல்ல ஐயரது இந்த ஆவணம் மட்டும் தான் போராட்டத்தில் நம்பக் கூடிய ஒரே ஆவணம்.”

      பாரதியின் இன்தச்சுட்டிக்காட்டலும் ஓர் அரசியலுக்கு உரியது. மக்கள் முள்ளிவாய்கால்வரை வாழ்ந்து பிழைத்துள்ளார்கள். அவர்களிடம் இல்லாத எந்த வரலாறும் பொய்யானது.
      இன்னும் அழுத்திச் சொல்வதானால்….

      ‘ மக்கள் மட்டுமே வரலாற்றைப் படைப்பவர்கள்’

      ரூபன்
      250910

  17. Maniam says:
    15 years ago

    அய்யரின் பதிவு படி தற்போது உயிருடன் உள்ள போராளிகள்
    1,குலம்; பால்ய நண்பன் எந்தூரைச் சேர்ந்தவர். 2 நாகராஜா & ரவி: பிரபா குழுவிலிருந்து என்னுடன் பிரிந்து உமா குழுவில் சேர்ந்தவர்கள். பின்னர் உமா குழுவிலிருந்தும் என்னுடன் சேர்ந்து விலகினர்.3,ராகவன் எனதூரைச் சேர்ந்தவர் பிரபாகரனை முத்லில் எனக்கு அறிமுகப்படுத்தியவர். ஐயரே இவர்களிடமிருந்து தகவல்களை பெற்று ஏன் உங்களால் எழுத முடியாமல் உள்ளது???? இவர்களில் இருவர் உங்கள் ஊரவர்கள் அதிலொருவர் பால்ய நண்பர். மற்றய இருவர் உங்களுடன் பிரபா குழுவில் ஒன்றாய் இருந்தவர்கள் ஒரே கருத்தை முன் வைத்து விலகினவர்கள் பின்னர் உமா குழுவிலும் அதே கதி பின்னர் ஒன்றாய் தமிழகம் வந்தீக”!

  18. rathan says:
    15 years ago

    ஜ்யரின் பதிவைவிட பல பின்னோட்டங்கள் இன்ரெரெஸ்டாக இருக்கின்றது.ஒட்டுமொத்தமாக முழுஇயக்கங்களும் ஆரம்பத்தில் தொடங்கும் போது அவர்களிடமிருந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி வேறொரு கோணத்திற்கு போய்விட்டன.குறிப்பாக தலைமைகள்.இதற்கு ரோ வின் பங்குதான் முக்கிய காரணம்.ரோ வின் தங்களின் மீதான தாக்கத்தைக் கூட அறியாத நிலையில் தான் தலமைகள் இருந்தன அல்லது தேவை வரும்போது வெட்டிவிடலாம் என்று நம்பியிருந்தன.ரோவின் பலம் இன்றுகூட எம்மவரால் புரியாமல் இருப்பதுதான் வேடிக்கை.பாவம் விடுதலை என்று புறப்பட்ட இளைஞர்கள்.வீணாக இயக்கங்களுக்குள்ளேயும்,இயங்கங்களுகிடையிலேயும் அடிபட்டு செத்ததுதான் மிச்சம்.ரோவை விட்டுவிலகி வர புலிகளால் மட்டுமே ஓரளவிற்கு முடிந்தது அதைக் கூட தப்பவைத்துக்கொள்ளாமல் கடைசியில் வீணாக அப்பாவிமக்களியும் அழித்து தாமும் அழிந்து போனார்கள்.

  19. rathan says:
    15 years ago

    நான் அறிய நாகராசா,ராகவன்,கலாபதி,குலம்,அன்டன்(சிவகுமார்),ராஜா(ஒன்று சேர்க்க வந்தவர்)பாலமோட்டை சிவம, ஆகியோர் இன்னமும் இருக்கின்றார்கள்.இவர்கள் எந்த அளவிற்கு இன்னமும் அரசியலில் அல்லது பழையதுகளில் ஆர்வத்தில் இருக்கின்றார்கள் என்பது கேள்விக் குறியே.
    உமா தர்கத்திற்காக மாக்ஸிசம் வாசித்த அரசியல்வாதி,எமது போராட்டத்தை ஓரளவாவது சர்வதேசமயப்படுத்தி ஒரு தீர்வை எட்டவேண்டும் என நினைத்திருந்தார்.தனது இருப்பில் அதீத அக்கறை கொண்டிருந்ததால் ஒரு கொள்ளைகூட்டத்தயே சுத்தவர வைத்திருந்தார் அவரது இந்த இருமுகதனமை தான் புளொட்டின் அழிவிற்கு மூல காரணம்.அந்த கொளைக் கூட்டம் தான் கடைசிவரை அதாவது இன்றுவரை புளட்டாக நீடித்து இருக்கின்றது

    • தமிழ்வாதம் says:
      15 years ago

      அன்புடன் அய்யா!

      உங்களை பலர் நேர்மையானவராக,நல்லவரா நோக்குகிறார்கள்.அது உண்மைதானா என்பது எனக்கு பிரம்மரகசியம். ஆனால் இயக்கம் உடைந்து போனதில் நீங்கள் பெரும் உபயகாரர் என்பதில் எனக்கு ஐயமில்லை.உங்கள் அறியாமை,உடனே முரண்பட்டுக் கொள்ளாத இயல்பு,பணம்,பண்ணைக்கான பொறுப்பு, மத்திய குழு இருப்பிடம் , சமூகக் கட்டமைப்பில் உங்கள் பாரம்பரியம் என்பன அதற்கு துணை போயின.

      புறத்தாக்கங்களின் கூர்மையினால்,முப்பது வருடங்களின் பின் மீண்டும் முன்தள்ளப்பட்டு நிற்கிறீர்கள்.

      குளத்தைக் கலக்கி மீண்டும் பருந்துக்கு வழி செய்கிறீர்களா என்பதுதான் இன்றைய என் ஆதங்கம்.

    • xxx says:
      15 years ago

      பருந்துகள் ஏற்கெனவே இரை கொண்டாயிற்றே.
      அது ஏன் எப்படி நடந்தது என்றாவது அறிய வேண்டாமா?
      ஏன் உண்மைகளுக்கு இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?

      • yazhavan says:
        13 years ago

        இல்லை!!! அவருக்கு சுயவிமர்சனம் என்றால் வயிற்றால் அடிக்கும் போல இருக்கு………

  20. கிறுக்கு says:
    15 years ago

    உலக வரலாற்றில் மிக மோசமாக அநீதி இழைக்கப்பட்ட இனத்தின் ஒரு காலத்தின் பகுதியை உங்கள் பார்வையில் தந்துள்ளீர்கள். ஒரு முக்கியமான காலகட்டத்தை தவிர்த்துள்ளீர்கள். அந்தக்காலகட்டம் உங்களின் பார்வையில் நம்பிக்கைக்குரிய நாட்களாக இருந்த்திருக்கும். அவற்றை ஏன் வரலாறக்காமல் விட்டீர்கள். சரியான பாதையென நீங்கள் கருதிய காலம் ஒன்று உங்களுக்கு இருந்தது. அதையேன் சொல்லவில்லை. அதுதான் உங்கள் எழுத்தின் நோக்கம் என்ன என்று குழப்புகிறது. விடுதலைப்போராளிகளை மிகவும் மதிக்கும் தன்மை கொண்ட ஒரு மனிதனின் கேள்வி இது. உங்கள் எழுத்துக்கள் யாருக்கு உதவியாகப் போகின்றது. தமிழினத்தின் தார்மீக கோபத்தை திசை திருப்ப நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவும். அழிந்து கொண்டிருக்கும் எமது இனத்தை விட அழித்துக் கொண்டிருப்போருக்கே நன்மையாக இருக்கப்போகிறது. பதிவுகள் முடிந்து விட்டது. நூல் வெளி வரும் போது தாக்கம் கூடுதலாக இருக்குமென்பதே உங்களை நேசிக்கும் எனது கருத்து. இந்த உலகில் மீண்டும் காந்தியும் புத்தரும் பிறந்தால் அவர்கள் கூட வாள் ஏந்தி தமிழினத்திற்காக போராடக்கூடும். நீதியுள்ள மனிதர்கள் யாராகினும் தமிழினத்திற்காகவே குரல் கொடுப்பார்கள். நாம் எமது அன்புக்குரிய மக்களை அநியாயமாக பறிகொடுத்துள்ளோம். மக்களை தமது உயிரினும் மேலாக நேசித்த போராளிகளை பறிகொடுத்துள்ளோம். ஆனாலும் நீதியிலும் தர்மத்திலும் வைத்த நம்பிக்கையை எமது இனம் இழக்கவில்லை. இந்த உலகம் நீதியினாலேயே இது வரை காக்கப்பட்டிருப்பது உண்மையானால் எமது இனத்திற்கும் நீதி கிடைத்தே தீரும். எமது இனம் ஆயிரக்கணக்கில் தமது உறவுகளை இழந்த போதும் இலங்கைத்தீவை ஒரு அடிமைத்தீவாக்க முயலவில்லை. அது ஒன்று மட்டுமே சாட்சியாகின்றது எமது மக்களின் உறுதிக்கு. இது வீழ்ந்து போயிருக்கும் மனிதரின் மேல் கல்லெறிய மறுக்கும் ஒரு மனிதனின் குரல்.

    • THAMILMARAN says:
      15 years ago

      மக்கள தம் உயிரினும் மேலாக நேசித்த போராளீகளூம் இறந்திருக்கிறார்கள் ஆனால் மக்கள புலிகள் முழுமையாக நேசித்திருந்தால் அந்த நேசிப்பு தியாகங்கள் செய்யத் தூண்டும்.தலைவனுக்காக சாதல் என்பது மாபியாத்தானம்.தன்னை நம்பி முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றூதான் தலைமையும் முடிவுகள எடுத்தது.மக்கள் நேசித்தல் என்பது சிவபெருமான் பிரம்படி பட்டதே,

    • mamani says:
      15 years ago

      83 கலவர எழுச்சியின் பின்னர்தான் இயக்கங்கள் திடீர் வளர்ச்சியடைந்தன. அக்கலவரத்தால் பாதிக்கபட்டது தெற்குவாழ் தமிழர்கள் ஆனால் அந்த விகிதாசாரத்தில் இயக்கங்களில் அவர்கள் இணையவில்லை. ஆனால் இப்போது பல்லாயிரக்கணக்கான இளையர்கள் அரசின் முகாம்களில்நேரடியாக இன பாகுபாட்டை அனுபவிக்கிறார்கள். அவர்களின் எழுச்சி எப்படியிருக்கும் என்பது இன்னும் சிலகாலம் செல்லதான் தெரியும். அவர்களை போராடாவோ அல்லதுநாம் ஆதரவு தருவோம் என்ற ஊக்குவிப்போ இப்போ கொடுப்பது அந்த வடுவிலிருக்கும் மக்களுக்கு நாம் செய்யும் தீங்கு. எமது போராட்ட வரலாறு எப்படிநாம் போராட வேண்டும் என்பதைவிட எப்படி நாம் போராடக்கூடாது என்பதை அதிகம் கற்று தந்திருக்கிறது. அதேபோல் புலம்பெயர்ந்த எமது உசுப்பேத்தல்கள் அ ந்த மக்களை எவ்வளவு தூரம் பாதித்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      • THAMILMARAN says:
        15 years ago

        போராடுவார்களோ எனும் அரசின் அச்சமே தமிழரை சிறயின் உள்ள வைத்திருக்கிறது அவர்கள் இனவாத்தால் பாதிக்கப்படுவதற்கு போராட்டத்தின் பிழயான அணூகுமுறயே காரணம்.தம்மை தம் தலமை பலிகொடுத்ததே எனும் கோபத்தோடு இருக்கும் அவர்கள் போராடத் துணீயமாட்டார்கள்.தமது குடும்பத்தை இனியாவது காப்பாற்றூவோம் எனும் நினைப்பிலிருப்போரை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

        • SINHALAMAARAN says:
          15 years ago

          🙂 சிங்களவர் என்ன செய்தாலும், தமிழர் நீங்கள் யாரும் போராடா வேண்டாம், நம்ம தமிழ்மாறன் ஜ்யா , வானத்துக்குப் போய் , மீட்பர் ஒருவரைக் கூட்டி வருவார். வந்துட்டார் கொப்பியும் , பேனையும் கொண்டு எங்களுக்கு பாடம்படிப்பிக்க.

          • THAMILMARAN says:
            15 years ago

            சிங்களமாறன் இயேசு என்றூ பக்கத்து வீட்டுக்காரர் அனுப்பி வைக்கட்டே அவர்தான் நீங்கள் தேடுற மீட்பரோ தெரியாது,கொப்பியையும், பேனையையும் கொண்டு வந்து உங்களூக்கு படிப்பிக்கேலாது நீங்கள் கொம்பில் ஏறீ நிற்கிற ஆள் எது வசதி எண்டு இந்த மிருக வைத்தியரைத்தான் கேக்கோணூம் நில்லுங்கோ வாறன்.

          • mamani says:
            15 years ago

            ஒருவர் தமிழ்மாறன் என்று பெயர் வைத்தால் அவருக்கு மாத்திரம் எதிர்கருத்து கூறவந்தவர்போல் சிங்களமாறன் என்று வருவது நியாயமா?

          • xxx says:
            15 years ago

            தமிழ்மாறன் ஐயா அவசரப்படாதையுங்கோ.
            சில வேளை உங்கடை வைத்தியர் உங்களை மறிச்சுப் போட்டாலும் போடுவர்.

        • கிறுக்கு says:
          15 years ago

          மாமணி, தமிழ்மாறன் மற்றும் சந்திரனுக்கு,நீங்கள் மனிதனின் தீர்ப்பையே இறுதியாக நம்புகிறீர்கள் என நம்புகிறேன்.  நான் அறத்தின் தீர்ப்பை நம்புகிறவன்.  எம் இனத்திற்கு தொடர்ந்து தீங்கு செய்பவர்கள் தமது குற்றத்தைக் கூட்டிக்கொண்டே போகிறார்கள் என்றே நம்புகிறேன்.

          • THAMILMARAN says:
            15 years ago

            நல்லறம்.இல்லறம்.துறவறம் என்றூ அறமெல்லாம் வகைப்படுத்திய சைவம் சாமாதனத்தை தருமெனும் அசையாத நம்பிக்கை என் க்கும் உண்டு.ஆனால் மாமணீ உங்களயும் தேசப்பற்றாளர்,மாவீரர் என் மாற்றீ இருப்பார்கள் உங்கள் நல்ல காலம் லண்டன் முருகன் உங்கள காப்பாற்றீனார்.

    • chandran .raja says:
      15 years ago

      கிறுக்கு! ஈழவிடுதலை இயக்கம் என்றால் போட்டுத் தள்ளுவது தான். இதில் மற்றைய
      இயக்கங்கள் கணிசமான பங்கு வகித்த போதும் புலம்பெயர் தயவாலும் புண்ணியத்தாலுமே! மொத்த குத்தகையும் புலிகளால் எடுக்க முடிந்தது. இதன் விளைவாலேயே உறுதியான விசாவும் குடியுரிமையும் கிடைக்கப் பெற்றது.
      இந்த நன்றி இன்றும் புலம்பெயர் தமிழர்களிடம் இருப்பதைக் காணலாம்.
      அடுத்து வருகிற செய்தி- ஆய்வு என்னவென்றால் 70-80 காலப் பகுதியில் பலஸ்தீனாவுக்கு
      இஸ்ரேலிலுக்குஆயுதப் பயிற்சிக்கு புறப்பட்டது. இதுவெல்லாம் அறிவாளிகளின் கைவரிசை.இதை கேட்டால் எனக்கே தலையை சுத்தும்.
      சோமாலியாவில் ஒரு கோழியின் விலையை விட குறைவானதே ஏ.கே47. இதை நான்
      சொல்லவில்லை பி.பி.சீ யின் செய்தி.
      ஆகமொத்தத்தில் பத்தொன்பதாம் நுற்றாண்டு சுரண்டல் தத்துவத்தை விட மூளையை
      கழுவுவதே சிறந்தவழி என்பதை ஏகாதிபத்தியவாதிகள் கண்டுகொண்டார்கள். அதற்கே
      நாம் பலியாகப்போனோம் என்பதை நினைக்க…..ஆகவே இதற்கான அதாவது பிரிந்து
      வாழவேண்டும். சிங்களவன் தரமாட்டான் என்பது போன்ற கோஷசத்திற்கான குத்துவிளக்கு கறுப்புசட்டை பிரக்கிராசிமார்களால் வட்டுக்கொட்டையில் குத்துவிளக்கு
      கொழுத்தி வைக்கப்பட்டது. மிகுதி உங்கள் சிந்தனைக்கு(சண்டைக்கு வராதீர்கள்).

      • chandran .raja says:
        15 years ago

        கிறுக்கு! நீங்கள் சொல்லும் அறத்தில் எனக்கும் நம்பிக்கையுண்டு. எதை
        விதைக்றோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும். எதை எய்கிறோம்மோ அது தான் திரும்பி வரும் என்பது மட்டோடு தான்
        அவ்வளவு தான்.அப்பாற்பட்டது வேறு ஒன்றுமே! இல்லை.மனத்தளவில்
        அசைபோட… தியானிப்பதற்கு மட்டுமே உதவும்.
        கடலில் இறங்காமல் மீன் பிடிக்க முடியுமா? வயலில் இறங்காமல் நெல்லை உருவாக்க முடியுமா? உலையை ஊதாமல் இரும்பை இளக்க
        முடியுமா? போராடாமல் வாழ்க்கை கிடைக்குமா? (போராட்டம் என்றால்
        ஆயுதப் போராட்டம் என புலிப்பாணியில் கற்பனை செய்யாதீர்கள்)
        எட்டுமணிவேலை பன்னிரண்டுமணி வேலை இதுவும் போராட்டம் தான.மணைவி பிள்ளைகளுக்காக வாழ்வதும் போராட்டம் தான்.
        நாட்டுக்காக வாழ்வதும் போராட்டம் தான்.இதில் அறம் என்பது என்ன?
        ஒன்று இயங்கியலுக்குள் வருகிறது.மற்ற அறம் கற்பனாவதத்திற்குள்
        அடங்குவது. கொலைகளை செய்துகொண்டிருப்பவனை நான் அறத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று விட்டுவிட முடியுமா?.

        • yazhavan says:
          13 years ago

          போரட்டம் என்பது வெறும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுதல் இல்லை. சட்டப்படியாக அங்கீகரிக்கப்பட்டு அதை வழங்காமல் இருப்பதற்கும் போராடலாம். உதாரணமாக பிரித்தானியாவல் 8 மணித்தியாலத்திற்கு சட்டப்படியான சம்பளம் எவ்வளவு? எங்களுடைய தமிழ் முதலாளிகள் தமிழ் வேலையாட்களுக்கு அந்தந்த நாட்டு சட்டப்படி சம்பளம் வழங்குகின்றார்களா? அவுஸ்திரேலியாவில் அப்படி இல்லை. 20 மணித்தியாலம் வேலை செய்தால் 10 மணித்தியாலச் சம்பளம் தான் கொடுக்கின்றார்கள். இதைப்பற்றி நாங்கள் நினைத்தது உண்டா? இங்கு மட்டும் எமது உரிமை மறுக்கப்படவில்லையா?

  21. a voter says:
    15 years ago

    ஐயர் அவர்களுக்கு
    நீங்கள் பின்னர் என்.எல.எப்.ரி அமைப்பிலும் தீப்பொறி அமைப்பிலும் அங்கம் வகித்ததாக அறிகிறேன. அதுபற்றியும் தொடர்ந்து எழுதலாமே.

    • kariyavan says:
      15 years ago

      //ஐயர் அவர்களுக்கு
      நீங்கள் பின்னர் என்.எல.எப்.ரி அமைப்பிலும் தீப்பொறி அமைப்பிலும் அங்கம் வகித்ததாக அறிகிறேன.//
      ஆகா, கெளம்பீட்டாங்கையா கெளபம்பீஈஇட்டங்க….
      கட்டன் நசனல், கட்டுவன், இன்னொரு முறை மறுப்பு சேறடிப்பு, அவ்தூறு…
      எஸ்கேப்..

      • Vellian says:
        15 years ago

        அவசரப்படாதீர்கள்! என். எல் எப்.டி, தீப்பொறி அமைப்புகளின் பங்களிப்பு பற்றிய விபரம் இன்னுமொரு முப்பது வருடத்தால் ஐயா அவர்கள் எழுதுவார் அதுவரையில் காத்திருங்கள்

      • a voter says:
        15 years ago

        என்.எல.எப்.ரி அமைப்பிலும் தீப்பொறி அமைப்பிலும் கட்டன் நசனல் கட்டுவன் தவிர எழுத எதுவுமே இல்லையா?

        முக்கியமாக தத்துவ ரீதியாக இங்கு நடந்த போராட்டங்களைப்பற்றி எழுத எவ்வளவோ உள்ளது.

      • Selva says:
        15 years ago

        யாழ் வலிகாமம் பகுதியில் கட்டுவன், புன்னாலைக்கட்டுவன் என இரு கிராமங்கள் இருக்கின்றன. இவை இரண்டும் வெவ்வேறுகிராமங்கள்.இங்கு கட்டுரை எழுதும் அய்யர் புன்னாலைக்கட்டுவனைச்சேர்ந்தவர்.கட்டுவனுக்கும் புன்னாலைக்கட்டுவனுக்கும் கட்டன்நச்சனலுக்கும் எதுவித சம்மந்தமும் கிடையாது வாசகர்களே குளம்பவேண்டாம்

        செல்வரத்தினம்,கட்டுவன்,தெல்லிப்பளை. (பூர்வீகம்)

        • ரூபன் says:
          15 years ago

          செல்வாவுக்கு,

          உங்கள் முதல் பதிவு திடீரென மறைக்கப்பட்டதுக்கும்….

          தற்போது தங்களது பதவு ஏறியதுக்கும், பின்னாலுள்ள பூர்வீகமும் யாருமறியார்.

          இது உங்களுக்கும் ஐயருக்கும் தான் முழு வெளிசமாகத் தெரியலாம்.. (இது நான் நினைக்கும் செல்வாவாக இருந்தால் மட்டுமே ! இக்கணிப்பீடு சரியானது.)

          இருப்பினும் …

          வலிகாமம் வடக்கில் வாழ்ந்தவன் என்பதால்..

          தங்களது ” செல்வரத்தினம்,கட்டுவன்,தெல்லிப்பளை. (பூர்வீகம்) ”

          தற்பொழுது மூளை குடைகிறது..

          எதுவாக இருப்பினும் செல்வா, வாசகரை கற்பனையில் அலையவிடாதீர்கள். உண்மைகளை (உங்களுக்குத் தெரிந்த வகையில்) உரத்துச்சொல்லத் தாமதம் வேண்டாம்….
          ரூபன்
          280910

    • xxx says:
      15 years ago

      கரியவன்
      நீங்கள் ஏன் தகவல்களைப் பற்றி இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?

  22. wicky says:
    15 years ago

    ஐயருக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும். தனிமனிதபுகழ்பாடல்களோ காழ்ப்புக்களோ இன்றி நடந்த சம்பவங்களை கோர்வையாக உள்ளது உள்ளபடியே பதிவு செய்தமை பாராட்டுக்குரியது. எண்பதுகளில் அரசியலில் ஈடுபட்ட பலருக்கும் முன்னைய வரலாறு சம்பந்தப்பட்ட இயக்கங்களிற்கு சார்பாகவும் தனிமனித புகழ்ச்சியாகவும், திரிவுபடுத்தியும் மற்ற இயக்கங்கள் பற்றியதான காழ்ப்பாகவுமே கூறப்பட்டிருக்கின்றது. ஆயுதபோராட்டத்தின் அடிப்படையான அரசியல் குறைபாட்டையும் எவ்வாறு முற்போக்கான அரசியல்தலைமையை உருவாக்குவதற்கான முன்முயற்சிகள் ஆரம்பகால உட் கட்சி போராட்டங்கள் இன்னொரு பிற்போக்கான குழுவை உருவாக்குவதில் முடிந்திருக்கிறதென்பதையும் பதிவுசெய்திருக்கின்றார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை(புலிகள் தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும்வரை) வரலாறு பலமுறை மீளுருவாக்கம் செய்திருக்கின்றது. இயக்கங்களில் ந்டந்த புதிய அரசியல்தலைமையை உருவாக்குவதற்காக ,புதிய அரசியல் ராணுவமூலோபயங்களை நோக்கிய போராட்டங்களை நடத்திய சமூக உணர்வுள்ள இளையோர் பலருக்கு ஐயருக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இந்திய-இலங்கை ஒப்பந்த்திற்கு பின்னரான காலத்தில் பிரபாகரனை சுற்றி கட்டப்பட்ட பிம்பத்தை மாத்திரமல்ல, முக்கியமாக பல ஆரம்பகால உறுப்பினர்களை பற்றிய அவருடைய கணிப்பீட்டையும் முன்வைக்கின்றார். உதாரணத்திற்கு சுந்தரம் தனிமனித பயங்கரவாதத்தால் பலிகொள்ளப்பட்ட மாவோவுக்கு நிகராக வளர்ந்திருக்கக்கூடிய தளபதி என்ற பிம்பத்தினையும் எதிர்கொண்டிருக்கின்றார். சுந்தரம் எளிமையானவர். இரண்டு நபர்க்ளுடைய ச்ண்டையை விலக்கு பிடிக்கச் சென்ற சுந்தரத்தின் கைத்துப்பாக்கி தவறிவிழுந்ததாகவும் ஒன்றுமே பேசாமல் எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு சென்றதாகவும் ஒருவர் பதிவிட்டிருந்தார். முன்னரும் பலதடவை கூறகேள்விப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு கூறுபவர்களுக்கு தெரியாத விடயம் பிரபாகரனோடும் இப்படியான குணாம்சமுள்ளவர்கள் இருந்தார்கள் என்பதுதான். எல்லோரும் கிட்டுவைப்போல இருக்கவில்லை. பசீர் காக்கா (மனோகரன் நாயன்மார்கட்டை சேர்ந்தவர். பொட்டுவின் உறவினர். இயக்கத்தில் மூத்தவர்.) வை உதாரணத்திற்கு குறிப்பிடமுடியும். சுத்த இராணுவவாதத்தில் ந்ம்பிக்கையுள்ளவர். பிரபாகரனின் தீவிரவிசுவாசி. இவரே மட்டுநகர்சிறையுடத்து நிர்மலாவை மீட்டவர். ந்ல்லூரை சேர்ந்த சில புளட் உறுப்பினர்களை காப்பாற்றியிருக்கின்றார். பண உதவிகூட செய்திருக்கின்றார். மட்டுநகரில் காக்கா இருந்தபோது புளட் ஈஸ்வரனுடன் ந்ல்லுறவு கொண்டிருந்தார். ஆனால் அவரது அரசியல் பிற்போக்கான தூய ராணுவவாதம்தான். தோற்றத்தில் சிறியவரான காக்கா பாவ்லா காட்டுகின்ற சிறு ஊர்ச்சண்டியரிடம் கன்னத்தில் அடிவாங்கியிருக்கின்றார் இடுப்பில் துப்பாக்கியை வைத்திருந்தவாறே. இந்த சிலதனிமனித குணாம்சங்களை கொண்டு அவர்களை சிறந்த தலைவர்களாக உருவகித்து விடமுடியாது. அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற அரசியல்பாதையே கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

    • செல்லம் says:
      15 years ago

      ஊர்மிளா கூட அன்னை தெரெசாவுக்கு நிகராக வளர்ந்திருக்கக்கூடிய பெண்மணி என்ற பிம்பத்தினையும் எதிர்கொண்டிருக்கின்றார்….

      • mamani says:
        15 years ago

        செல்லம் நீங்கள் பெண்மியத்தை கொச்சைபடுத்துகிறீர்கள்.

    • mamani says:
      15 years ago

      விக்கி நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் அந்த இடத்தில் சண்டைபிடித்த இருவரில் ஒருவரில் குற்றம் கண்டு அவரை போட்டு தள்ளியிருந்தால் மேதகு சுந்தரமாகியிருபாரா?
      ஆனைக்கோட்டை பொலிஸ்நிலைய , கிளிநொச்சி வங்கி கொள்ளை அவர் இராணுவ திறனையும், புதிய பாதை அவர் அரசியல் அறிவையும் பறைசாற்றுகிறது. சுந்தரம் தேர்ந்தெடுத்த பாதையில் நீங்கள் காணும் குற்றம் என்ன. பிரபாகரன் துப்பாக்கியால் சுடுதல் தவிர வேறு ஏதாவதுபற்றி வாய்திறந்திருப்பாரா? பத்திரிகையாளர் மாநாட்டில் வாய் திறந்ததை பார்த்தீர்கள்தானே?

      • wicky says:
        15 years ago

        மாமணி உங்கள் கேள்விக்கான பதில் ஐயரின் பதிவிலேயே உள்ளது. பேரினவாத அரசின் இராணுவ ஒடுக்குமுறைக்கெதிராக கிளர்ந்த மத்தியதரவர்க்க இளையோர் எவ்வாறு வலதுசாரிய சுத்த இராணுவவாதத்திற்குள் சிக்கி சீரழிந்தார்கள் என்பதும், மொத்த தமிழ்மக்களையும் அழிவுப்பாதையை நோக்கி கொண்டு சென்ற அரசியல்வழி, எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதனையும் கற்றறிதல் அவசியமாகும். இதில் தனிப்பட்ட காழ்ப்புக்கு இடமில்லை. இலக்கு ந்டவடிக்கைகள் அனைத்தையுமே நியாயப்படுத்திவிடுகின்றது என்ற வாதம் திரு.வே.பிரபாகரன் கண்டுபிடித்தல்ல. இது மாக்கியவல்லியன் வாதமாகும். இதுவே நாசிச,பாசிச, பிரபாகரனிச சிந்தனை முறையின் அடிநாதமாகும். எங்கள் இலக்கு சிறந்தது அதனை பாதுகாக்க மக்கள் என்ன விலையும் கொடுத்தேயாக வேண்டும் என்ற சிந்தனை சொந்த மக்களுக்கெதிராக துப்பாக்கியை திருப்புவதில் முடிந்திருக்கின்றது. அதேவேளை மாற்றுஅரசியல். ஜனநாயக மத்தியத்துவம். தலித்தியம், மனித உரிமை பேசிய சிலர் அதற்குரிய பதிலை அம்சாவினதும்,டக்லஸினதும், மகிந்த வினதும் வேட்டிமடிப்புக்குள் தேடியதனையும் கண்டோம்.

        • ரூபன் says:
          15 years ago

          விக்கி,
          இதில் கடந்தகால அரசியலை எவ்வாறு -ஐயரின் வரலாற்றிப் பதிவிலிருந்து – பெற்றறிவது? கொஞ்சம் விளக்கமாக, விரிவாக (ஐயரின் அரசியலை விளக்கி எழுதுங்களேன்)

          — (மாற்று அரசியல் ‘சரிநிகர்’ ஈறாக ‘தமிழரங்கம் ‘ வரை இன்று வரை முன்வைக்கப்படுகிறது)—

          ஆனால் சரிநிகரோ மாயமாக மறைந்து விட்டது. இந்நிலைமைக்கான அரசியல் பின்னணியை இதுவரை இவர்கள் வாசகருக்கு தெளிவுபடுத்தவில்லை. இதற்கு விடாப்பிடியாக எழுதிய ‘புத்திஜுவிகளும்’ -( சரிநிகரின் ‘முகமன்’ முன்னோட்டத்தின்படி) தாம் ஏன் தொடர்ந்தும், ”மாற்றுத்தளத்தில்” எழுதமுடியாமல் போய்வி்டது என்பதையும், இதன் அரசியலையும் இன்றுவரை பரமரகசியமாகக் காப்பாற்றி வருகிறார்கள்……

          இதற்குள்….

          ‘வெள்ளை வேட்டிகளும்’, ”வேட்டிமடிப்புக்ளும்” – உதாரணங்களுக்கு இன்னும் குறைவே இல்லை!

          கடைசியாக..
          சுத்த இராணுவக் கண்ணோட்டத்துக்கும், இவர்கள் தேர்தெடுத்ததாகக் கூறும் ஆரசியலுக்கும்… கவனிக்கவும்…

          ” பசீர் காக்கா (மனோகரன் நாயன்மார்கட்டை சேர்ந்தவர். பொட்டுவின் உறவினர். இயக்கத்தில் மூத்தவர்.) வை உதாரணத்திற்கு குறிப்பிடமுடியும். சுத்த இராணுவவாதத்தில் ந்ம்பிக்கையுள்ளவர். பிரபாகரனின் தீவிரவிசுவாசி. இவரே மட்டுநகர்சிறையுடத்து நிர்மலாவை மீட்டவர். ந்ல்லூரை சேர்ந்த சில புளட் உறுப்பினர்களை காப்பாற்றியிருக்கின்றார். பண உதவிகூட செய்திருக்கின்றார். மட்டுநகரில் காக்கா இருந்தபோது புளட் ஈஸ்வரனுடன் ந்ல்லுறவு கொண்டிருந்தார். ஆனால் அவரது அரசியல் பிற்போக்கான தூய ராணுவவாதம்தான். தோற்றத்தில் சிறியவரான காக்கா பாவ்லா காட்டுகின்ற சிறு ஊர்ச்சண்டியரிடம் கன்னத்தில் அடிவாங்கியிருக்கின்றார் இடுப்பில் துப்பாக்கியை வைத்திருந்தவாறே. இந்த சிலதனிமனித குணாம்சங்களை கொண்டு அவர்களை சிறந்த தலைவர்களாக உருவகித்து விடமுடியாது. அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற அரசியல்பாதையே கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.–

          இந்த அரசியல்பாதையைத்தான் தெளிவாக கூறிவிடுங்களேன் விக்கி…

          ஏன், சொக்குப்பொடி போடுகிறீர்கள்? இது புலிகளின் (பிரபாவின்) அரசியல் இலையா? இல்லையென்றால் அதை வாசகருக்கு தெளிவுபடுத்துங்கள்….
          ரூபன்
          280910

          • Bharathi says:
            15 years ago

            தமிழரங்கமா? மாற்று அரசியலா?? காஆஆமடி கீமடி பண்னலீயே? ரூபன்.!

          • ரூபன் says:
            15 years ago

            பாரதிக்கு,
            பித்தக் கோளாறா?? (மன்னிக்கவும் பாரதி!)

            அரசுக் கெதிரான பிறவுபட்ட எல்லாக் கருத்தியலும் மாற்றுக் கருத்தியல் என்றால்??

            ” தமிழரங்கமா? மாற்று அரசியலா?? காஆஆமடி கீமடி பண்னலீயே? ரூபன்.!”

            உங்களின் மேற்கூறிய கருத்தை வகைப் படுத்தவும்…

            இதைவிட்டுவிட்டு ஏதாவது ஒரு அரசியற் கருத்தில் நின்றுகொண்டு, (புலியின் பம்மாத்து அரசியல்) அப்பாவிபோல் போல் கேள்வி கேட்டால், ஏதாவது நியாயம் அல்லது (இரங்கல்) கிடைக்கும். -என்ற நினைப்பு –

            சரி பாரதி நண்பரே எனக்குத்தான் எதுவும் தெரியவில்லை….
            தமிழரங்கத்தை விடுவம்…
            .’இனியொரு’ என்ன மாற்றுக்கருத்தை வைத்தது?

            பாரதி, ‘சீரியசாகச்’ சொல்ல முடியுமா?

            புலிகள் ஏன் தேற்றுப்போனார்கள் என்று ‘நேப்பாள் – மக்சிட்டிடம்- கேட்டுவந்து எமக்குச் சொல்லுவார்கள்…
            ஏனென்றால் இவர்களுக்கு ‘இருண்டது விடந்தது’ எதுவும் தெரியாது. இந்த இலட்சனத்தில்….

            உம்மட பின்னூட்டமும்!…நீரும்!—

            (நேப்பாள் மாக்சிட்டுக்களுடன், ஈழப்போராட்டத்தின் 85க்கு முன்பிருந்தே சில அமைப்புக்களுக்குத் தொடர்பிருந்தன. )—-

            இதை இன்னொரு வகையில் சொல்வதானால்:

            அன்று மாக்சிசவாதிகள் ரசியா சென்றார்கள்…

            பின்னர் பிளவுபட்டு, சீனா சென்றார்கள்…

            இன்று, ஓரளவு நம்பிக்கைக்குரிய நேபாளுக்குச் சென்று வந்துள்ளார்கள்….

            (ஆனால் எமது மக்கிளிடம் செல்ல (கம்யூனிஸ்டாக) இவர்கள் எவரும் தயாராகவில்லை)

            முன்பு சென்றவர்கிளிடம் கற்றதையே பின்புசென்றவர்களிடம் தமது யதார்த்த அனுபவ நிலைமைக்கு ஏற்பகிரகித்து தமது புறநிலை அறிவை அவர்கள் கொடுத்துள்ளார்கள் என்று நம்பலாம்.-…

            ஏனெனில் எந்த நேப்பாள் போராளியும் எமது தாய்நாட்டு சூழலில் போராடி எந்த அனுபவத்தையும் படிப்பினையாகப் பெறவில்லை!…

            ஏன் நீட்டிக்கொண்டு போவான்..
            நாட்டிலுள்ள மக்கள் அங்குள்ள நடைமுறையை அறிவர்!..

            ரூபன்
            280910

            பி.கு
            பாரதிக்கு பதில்போட முடியாததால் இதில் இடுகிறேன்.
            ரூபன்
            280910
            23:13:14

          • wicky says:
            15 years ago

            சிலருக்கு தொப்பி அளவாக இருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

          • THAMILMARAN says:
            15 years ago

            மாற்றூ அரசியல் என்றால் நாம் நண்பர்களாகவும் தொடர்வது,கருத்து ரீதியில் முரண்படுவது ஆனால் அபபடியா இருக்கிறோம்?ஒருவரை ஒருவர் குதறூவது,குற்றம் சாட்டுவதா மாற்றூ அரசியல்?வெளீப்படையாகப் பேசும் உண்மைத்தன்மைக்கு நாம் இன்னும் வரவில்லை அது இங்கிலாந்திலேயே முடியவில்லை எனும் போது வேதனையாக்

      • yazhavan says:
        13 years ago

        ஓம்….. பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் தான் வாயைத்திறந்துவைத்துக்கொண்டிருந்தோம். அவர் மட்டும் மூடிக்கொண்டிருந்தார். பாவம் பல்லுக்கொதி போல. அதாலதான் கடைசியில திறந்துகொண்டு ………. வேண்டாம்!.

  23. பிரபா says:
    15 years ago

    புதியபாதை சுந்தரம்- வள்ளியம்மை சுப்பிரமணியம்
    ———————————–
    ’புதியபாதை’ பத்திரிகை தானாக முளைக்கவில்லை
    பதியம்வைத்து நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்
    வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியினில்
    சுட்டும் செழிப்பான சுழிபுரக் கிராமத்தில்…
    சதாசிவம் ஆசிரியரின் சாந்தமான மகனாய்…
    உதாரணம் காட்டும் முன்மாதிரி மாணவனாய்….
    ’விக்ரோறியா’ கல்லூரிப் படிப்பின் பின்னர்
    தக்கதான வழிசொன்ன சிவசண்முக மூர்த்தியிவன்.

    ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபத்து ஒன்பதிலே
    ஆயிரக் கணக்கில் அரசாங்க ஊழியர்கள்
    பாதிக்கப் பட்டார்கள் சிங்கள மொழியறிவு
    சோதனையில் தேறினால் தான்வேலை நிரந்தரமென்று….
    அரசாங்கக் கட்டளைக்குக் கட்டுப் பட்டபலர்
    அரசாங்கக் கடமையில் ஓய்வுபெற்ற டாக்டர்
    திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்த ஆசான்
    திருவாளர் தம்பையா இல்லத்திலே நடாத்தும்
    சிங்களமொழி வகுப்பில் நானும்போய்ச் சேர்ந்திட்டேன்.
    அங்குவந்த மாணவருள் சண்முகமும் தம்பியானார்.

    சகலரையும் மதிக்கும் சந்ததியார் தன்னுடனே
    குகபூசணி, பவானி, குருக்கள்பிறை சூடிக்குரு
    அப்படிப் பலபேர் அவ்விடத்தில் படித்தார்கள்.
    “அக்கா”வென அழைத்து எனக்குற்ற துணையானார்கள்.
    “புத்தரின் போதனைகள் ஏற்கெனவே திருக்குறளில்
    பத்திரமாக இருப்பதைப் பயன்படுத்தி வாழுங்கள்”
    என்றெமக்குக் குருவானவர் எடுத்தியம்பிக் கூறியவை
    நிற்கிறதே மானிட நெஞ்சத்தில் பசுமையாக.

    அந்தாண்டு ‘மே’தின ஊர்வலத்தைத் தடைசெய்து
    குண்டாந் தடியடிகள் கோரமாகத் தாக்கியதால்
    என்துணைவர் உட்பட எண்ணரிய தோழர்கள்
    துன்புறுத்தப் பட்டுக்கண் துடைப்பாக வைத்திய
    சாலையில் சேர்த்துப் பாதுகாப்புக் கொடுத்தனரே!
    வேலையை வைத்தியர்கள் விசுவாசமாய்ச் செய்தார்கள்.
    உறவுகளின் துணையற்று உருக்குலைந்த எந்தனுக்கு
    மறவாத தோழர்கள்போல் என்வகுப்புச் சோதரரும்
    தாமாகமுன் வந்தென் மதலைகட்கு உதவினரே!
    ஆமாம்! சண்முகனின் அன்பினை என்னென்பேன்!

    வருடங்கள் பத்துக் கழிந்து ஓடியபின்……
    பெருமைபெறு ‘சுந்தரம்’ என்துணைவர் மணியத்தார்
    மதிக்கின்ற பொதுவுடமைத் தத்துவத்தின் பூரணத்தால்
    ’புதியபாதை’ பத்திரிகை– புத்தாக்கச் சிந்தனையில்
    அடிமைப் பட்டதமிழ் மக்கள் விழிக்கவேண்டி
    முடிவான உறுதியுடன் அச்சகத் தொடர்புகொண்டார்.
    சித்திரம் வரைவதிலே சிறந்த சுந்தரத்தார்
    அத்தனை திறமைகளும் ”தாய்மாமன் இராச
    ரத்தினதின் வாரிசு” என்று மகிழ்ந்திட்டார்.
    தன்னடக்கத் தலைவனாய் இருந்ததெல்லாம்
    பறைசாற்ற விரும்பவில்லை விளம்பரமும் தேடவில்லை.
    குறைகூறல் விரும்பாது செயல்வீரனாய் வாழ்ந்திருந்தான்.

    எண்பத்து ஈராமாண்டு ஜனவரி இரண்டாம்நாள்
    ”கண்மறைவாய் உன்கருத்தை வெல்ல முடியாதோர் சுட்டானராம்”
    என்றசெய்தி வந்தபின்தான் அறிந்தோமே உன் திறமையெல்லம்….
    கன்றிழந்த பசுப்போலப் பசுந்தரம் அம்மா புலம்பியதும்
    தோழொடிந்த தோழர்கள் அவசரத்தில் பழிவாங்கத் துடித்ததுவும்
    வாலொடிந்த பல்லிக்கு மீண்டும் முளைப்பதுபோல் உன்
    எண்ணத்தை நிறைவேற்ற மக்கள்யுத்தம்வேண்டி கழகத்தின் பின்னாலே
    வண்ணத்துப் பூச்சிகள்போல் வாலிபர்கள் பறந்ததுவும் கண்கூடு.

    நன்றி சத்தியமனை 28, 12 2009

  24. பிரபா says:
    15 years ago

    விக்கி உங்கள் குற்றச்சாட்டு தவறு!

    2010 ஜனவரி 16ந் திகதியன்று, புலிகளால் 28 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட, புதிய பாதை பத்திரிகை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் நினைவுக் கூட்டம், கனடாவின் மார்க்கம் நகரில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு, இலங்கை மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட பிரதேச்ச் செயலாளர் ச.சுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரையைக் கீழே தருகின்றோம்.

    தலைவர் அவர்களே, நண்பர்களே, தோழர்களே!

    தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, அதற்காகவே தமிழ் பாசிச சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட, ஒரு உன்னத போராளியான சுந்தரம் என அழைக்கப்படும் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் மறைவின் 28வது ஆண்டை நினைவு கூர்வதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். அந்த மகத்தான போராளியுடன் நான் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகியவன் என்ற ரீதியில், அவர் என் மனதில் பதித்துவிட்டுச் சென்ற அழியாத சுவடுகளை நினைவு மீட்டி, சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தந்த இந்த கூட்ட அமைப்பாளர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சுந்தரத்துடனான எனது தொடர்பு ஆரம்பித்த காலகட்டம், சரியாக நினைவில்லாவிட்டாலும், 1970களின் பிற்பகுதி என்று நினைக்கிறேன். 1977ம் ஆண்டில் நான் சார்ந்திருந்த இலங்கை மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சிலர், இணைந்து, யாழ்ப்பாணத்தில் அச்சகம் ஒன்றை நிறுவினோம். அதன் நோக்கம் எமது கட்சி வெளியீடுகளை அங்கு அச்சிடுவதுடன், எமது நேச சக்திகளின் வெளியீட்டு முயற்சிகளுக்கும் உதவுவதாகும். அன்றைய காலகட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் கொடிகட்டிப் பறந்த்தால், அவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எதையும் யாழப்நபாணத்திலிருந்த அச்சகங்களில் யாரும் லேசாக அச்சிட்டுவிட முடியாத ஒரு சூழல் நிலவியது.

    அப்படியான ஒரு சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் உருவாகிய இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு தமது பிரசுரங்களை வெளியிடுவது ஒரு பிரச்நசினையாக இருந்து வந்த்து. காரணம் அவ்வாறான ஒரு பிரசுரம் வெளியிட்ட, யாழ்ப்பாணம் சி.எஸ்.கே சந்தியிலிருந்த அச்சகம் ஒன்றைத் தொடர்பு கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இனிமேல் அவ்வாறான பிரசுரங்களை வெளியிடக்கூடாது என, சற்று எச்சரிக்கும் தொனியில் கேட்டிருந்தார். அதனால் அச்சமடைந்த அச்சக உரிமையாளர்கள், மாற்றுக் கருத்தாளர்களின் பிரசுரங்களை அச்சிடுவதைத் தவிர்த்துக் கொண்டனர். அதாவது, தம்மை ஜனநாயக வழியில் செயல்படும் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் த.வி.கூ, அன்றே தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு கடிவாளம் போட்டுவிட்டது. எனவே பிற்காலத்தில் புலிகள் அமுல்படுத்திய முற்றுமுழுதான கருத்துச் சுதந்திர மறுப்பு என்பது, த.வி.கூ தொடக்கி வைத்ந்த நடைமுறையின் ஒரு உச்சகட்ட வளர்ச்சியே.

    இத்தகைய ஒரு சூழலில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை ஆரம்பத்தில் தொடங்கிய பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றோருக்கு, தமது பிரச்சாரப் பத்திரிகையை அச்சிடுவதற்கு யாழ்பாணத்தில் அச்சகம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே சிலர் வழங்கிய ஆலோசனையை அடுத்து, அவர்கள் என்னிடம் தமது உணர்வு என்ற பத்திரிகையை அச்சிடுவதற்கான உதவியைக் கேட்டு சிலரை அனுப்பி வைத்தனர். அவ்வாறு வந்தவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அப்போது கல்வி கற்றுக் கொண்டிருந்த அன்ரன் சிவகுமார் (இவர் பின்னர் திம்பு பேச்சுவார்த்தையின்போது புலிகளின் சார்பாக பங்குபற்றிய பிரதிநிதிகளில் ஒருவர்), தனிநாயகம், கோண்டாவிலைச் சேர்ந்த குணரத்தினம் ஆகியோராவர்.

    இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். புலிகள் மட்டுமின்றி, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஈழ மாணவர் பொதுமன்றம், தமது ஈழ மாணவர் குரல் பத்திரிகையை அச்சிடும் பொறுப்பையும் எம்மிடம் தான் வழங்கினர். அதேபோல புலிகளுடன் தொடர்பு என இரு வருடங்களின் முன்னர் கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கரவெட்டியைச் சேர்ந்த தேவதாசன் என்பவரும், தனது பலிபீடம் என்ற பத்திரிகையை அச்சிட எம்மிடம் தான் வந்தார். அத்துடன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தினால் வெளியிடப்பட்ட உதயசூரியன், சிவாஜி ரசிகர் மன்றத்தால் வெளியிடப்பட்ட சிம்மக்குரல் பத்திரிகைகளையும் எமது நொதேர்ன் பிறின்ரேர்ஸ் என்ற அச்சகத்தில் தான் அச்சிட்டுக் கொடுத்தோம். ,துதவிர யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு விசுவாசமாக இயங்கிய மறுமலர்ச்சிக் கழகத்தின் வெளியீடுகள் பலவற்றையும் கூட நாம் அச்சிட்டுக் கொடுத்தோம். தவிர என்.எல்.எப்.ரி, தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ ,ராணுவம், தமிழ் ,ளைஞர் பேரவை போன்றவற்றின் சில துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டுக் கொடுத்தோம். அதேவேளையில் எமது கட்சியின் இருவார வெளியீடான போராளி பத்திரிகையையும் அச்சிட்டு வந்தோம்.

    புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட உணர்வு பத்திரிகையை நாம் அச்சிட்டு வந்த வேளையில,ந பிரபாகரனுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அவர்கள் ,ருவரும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள பாண்டி பஜார் என்ற இடத்தில் கைத்துப்பாக்கியால் பரஸ்பரம் சுட்டு மோதிக் கொண்டார்கள். இந்த மோதலைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு, உமாமகேஸ்வரன் தலைமையில் ஒரு குழுவினர் பிரிந்து சென்று தனியாக இயங்க ஆரம்பித்தனர். அவ்வாறு இயங்க ஆரம்பித்தவர்கள் தமக்கென ஒரு தனியான பத்திரிகையை ஆரம்பிக்க முடிவு எடுத்து, அதை அச்சிட்டுத் தரும்படி என்னிடம் வந்தனர்.

    அவ்வாறு என்னிடம் வந்தவர்கள் குழுவில் சுந்தரம், கண்ணன் என அழைக்கப்படும் சோதீஸ்வரன் (இவர் பின்னர் மட்டக்களப்பில் புலிகளின் தாக்குதல் ஒன்றில் வாசுதேவா போன்றோருடன் கொல்லப்பட்டவர்) கோண்டாவில் குணரத்தினம் போன்றோர் இருந்தனர். அவர்கள் தமது பத்திரிகைக்கு புதியபாதை என பெயர் சூட்டிக் கொண்டனர். நாம் அவர்களது பத்திரிகையையும் அச்சிட்டுக் கொடுத்தோம். அதாவது ஏக காலத்தில் பிரதான ஆயுதப்போராட்ட இயக்கங்களான புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்பனவற்றினதும், ஏனைய சில இயக்கங்களினதும் வெளியீடுகளை நாம் அச்சிட்டுக் கொடுத்தோம்.

    நாம் இவ்வாறு செய்த்திற்கு அரசியல் ரீதியான சில காரணங்கள் இருந்தன. ஒன்று, அன்றைய காலகட்டத்தில், இலங்கையில் ஏகாதிபத்தியத்தின் மிக விசுவாசமான ஏவல் நாயான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தலைமையிலான படு பிற்போக்கான ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் ஆட்சியிலிருந்த்து. அது இலங்கை மக்கள் முழுப் பேரினதும் வாழ்க்கையை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருந்த்து. மறுபக்கத்தில், தமிழ் மக்கள் மேல் பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்த்து. இடதுசாரிகளான எம்மைப் பொறுத்தவரை ஐ.தே.க எப்பொழுதுமே எமது பொது எதிரி என்றபடியால், அதற்கெதிரான சக்திகளை நாம் எமது நேச சக்திகளாக்க் கருதினோம். ,ன்னொரு பக்கத்தில் எப்பொழுதும் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவும், பிற்போக்கு ஐ.தே.கவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்த தமிழ் பிற்போக்கு சக்திகளின் அன்றைய பிரதிநிதியான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜே.ஆர். அரசுடன் கூடிக்குலாவியது. எனவே ஐ.தே.கவுக்கு எதிராகவும், த.வி.கூ எதிராகவும் போராடிய தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு உதவுவது எமது கடமை என்ற அடிப்படையிலேயே, நாம் இப்பிரசுரங்களை அச்சிட்டுக கொடுத்தோம். அத்துடன் அமிர்தலிங்கம் போன்றவர்கள் மற்றைய அச்சகங்களை மிரட்டியது போல, எம்மை எக்காரணம் கொண்டும் மிரட்டவும் முடியாது என்பதுவும் ஒரு காரணமாக இருந்த்து.

    ஆனால் அமிர்தலிங்கம் தனது ஆதரவாளரான சுந்தரத்தின் தந்தையாரான சதாசிவம் மூலம், சுந்தரத்துக்கு நெருக்கடி கொடுத்து, புதிய பாதை பத்திரிகையை நிறுத்திவிட பல வழிகளில் முயன்றார். சுந்தரம் அமிர்தலிங்கத்தின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடவில்லை. சுழிபுரத்தை சேர்ந்த சுந்தரம், தனது பத்திரிகையின் வெளியீட்டாளராக தனது ஊரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் பெயரை பத்திரிகையில் போட்டிருந்தார். அதை அவதானித்த அமிர்தலிங்கம், தனது இன்னொரு ஆதரவாளரான சுரேந்திரனின் தந்தையாரை அணுகி, அவரது மகனை புதிய பாதை பத்திரிகை வெளியீட்டிலிருந்து விலகி விடும்படி நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார்.

    தந்தையின் நெருக்குதலைத் தாங்க முடியாத சுரேந்திரன், தனது சம்மதம் இன்றியே தனது பெயர் பத்திரிகை வெளியீட்டாளராகப் போடப்படுகிறது என்று ஒரு பொய்யை தந்தையிடம் கூறித் தப்ப முயன்றார். அதை உண்மை என நம்பிய அவரது தகப்பனார், அவ்விடயத்தை அமிர்தலிங்கத்திடம் தெரிவித்தார். அதற்கு அமிர்தலிங்கம் அவருக்கு சில பாதகமான ஆலோசனைகளை வழங்கியதாக நாம் பின்னர் சுந்தரத்தின் மூலம் அறிந்தோம்.

    அதாவது அப்பொழுது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்., தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்க பயங்கரவாத்த் தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்திருந்த்துடன், யாழ்ப்பாணத்தில் அதை கொடூரமாக அமுல்படுத்துவதற்காக, தனது சொந்த மருமகனான ராணுவ பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, அவர் யாழ் கோட்டையிலிருந்த அரச விருந்தினர் விடுதியான கிங்ஸ் ஹவுஸில் இருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
    பிரிகேடியர் வீரதுங்க யாழ்ப்பாணம் வந்த பின்னரே, நவாலியைச் சேர்ந்த இன்பம், செல்வம் உட்பட அரசுக்கெதிராகச் செயல்பட்ட பல தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு, தெருவோரங்களில் வீசப்பட்டனர். அப்படியான வீரதுங்கவிடம் சென்று, தனது மகனின் சம்மதம் இன்றி அவரது பெயரை புதிய பாதை வெளியீட்டாளராகப் போட்டுள்ளனர் என ஒரு முறைப்பாட்டை எமது அச்சகத்துக்கு எதிராக செய்வதற்காக, சுரேந்திரனின் தந்தை ஒரு கடித்த்தைத் தயாரித்து, வீரதுங்கவுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தார். ஆனால் எமது அதிஸ்டமோ என்னமோ, சுரேந்திரனின் நெருங்கிய உறவினரும், பின்னர் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவருமான, நவ சம சமாஜக் கட்சியின் யாழ் மாவட்ட செயலாளருமான தோழர் ஆ.க.அண்ணாமலை அங்கு தற்செயலாக சென்றபோது இதைக் கேள்வியுற்று, உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தியதுடன், எனக்கும் உடனடியாகத் தகவல் தந்தார். அதன் மூலம் வீரதுங்கவிடமிருந்து எமது உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இதைக் கேள்வியுற்ற சுந்தரம,ந தனது நண்பர் சுரேந்திரனை வெளியீட்டாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு, குணரத்தினத்தை அதற்கு நியமித்து, எம்மையும், தனது நண்பர் சுரேந்திரனையும் இக்கட்டான நிலையிலிருந்து விடுவித்தார். இது அவரது நேர்மையையும், உயர்வான பண்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.

    அமிர்தலிங்கம் இவ்வளவு தூரம் புதிய பாதை பத்திரிகையை நிறுத்துவதற்கு முயற்சித்த்தில் இருந்தே, அந்தப் பத்திரிகை அரசியல் அரங்கில் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதற்கு வழி சமைத்த சுந்தரத்தின் ஆளுமையையும் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் சுந்தரத்தின் மீதான அமிர்தலிங்கத்தின் கோபம் தணிந்தபாடாக இல்லை. அதனால் தானோ என்னவோ, பின்னர் சுந்தரம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போது, அதனுடன் சேர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையின் பெயரும் மக்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

    இது இவ்வாறு இருக்க, வெளியே புலிகளுக்கும் புளொட்டுக்குமான முரண்பாடு தீவிரமாகிக் கொண்டிருந்த்து. அவர்கள் பல இடங்களில் ஆயுதங்களால் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியது. எம்மிடம் பத்திரிகை அச்சிட வரும் அந்த இரு இயக்கங்களின் உறுப்பினர்களும், எப்பொழுதும் ஆயுதபாணிகளாகவே வருவது வழமை. அவர்கள் சில வேளைகளில் எமது மேசை லாச்சிகளில் கூட கைத்துப்பாக்கிகளை வைத்துவிட்டுச் செல்வார்கள்! இரு பகுதியினரையும் ஒரே நேரத்தில் வருகை தராமல் இருக்க, நாம் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், அதையும் மீறி சில வேளைகளில் இரு பகுதியினரும் ஏக காலத்தில் வருகை தருவதும், ஒருவரை ஒருவர் பார்த்து முறைப்பதுமாக நிலைமைகள் தொடர்ந்தன.

    இந்தக் காலகட்டத்தில் யாழ் குடாநாட்டில் சில முக்கிய சம்பவங்கள் நடந்தேறின. ஒன்று சுந்தரம், கண்ணன் போன்றோரின் தலைமையில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் 1981 யூன் 04ந் திகதி யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல் நடக்கவிருந்த சூழலில், மே 31ந் திகதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அதில் இரு பொலிசார் இறந்தனர். இதை நிகழ்த்தியது சுந்தரம் தான் எனக் கூறப்பட்டது. அதுதவிர யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட, முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ.தியாகராசா மீது மூளாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது. அதுவும் சுந்தரத்தால் மேற்கொள்ளப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.

    இந்த சம்பவங்களுக்கு சுந்தரம் தலைமைதாங்கியதும், அவர் தனியான பத்திரிகை அச்சிடப் புறப்பட்டதும், புலிகளால் தாங்கிக் கொள்ள முடியாத்தாகவிருந்த்து. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில், தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மத்தியில், கநசழளைஅ எனப்படும் வீர சாகசம் ஒரு போட்டிச் செயல்பாடாக இருந்த்து. ஆரம்பம் முதல் 2009 மே 18ல் புலிகள் இறுதியாக அழியும் வரை, எந்த ஒரு போராட்டத்திலும் தாமாக முன்வந்து பங்குபற்றாத தமிழ் பொதுமக்கள்- அதாவது ஏற்கெனவே தென்னிந்திய சினிமா சாகசங்களின் தாக்கத்துக்கும் உள்ளாகியிருந்த அவர்கள் – இந்த வீர சாகசத்தை மிகவும் ரசித்து, யார் கூடுதலாக சாகசம் புரிகிறார்களோ, அவர்களுக்கே தமது ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தனர். அந்த அடிப்படையில், புளொட் இயக்கத்தின் மீதும், சுந்தரத்தின் மீதும், தமிழ் பொதுமக்களுக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டிருந்த்து. அது, ஏகப் பிரதிநிதித்துவம் நோக்கிப் பயணிப்பதற்குத் தயாராகி வந்த புலிகளுக்குப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகவும் இருந்த்து.

    புலிகளுக்கும் புளொட்டுக்கும் ,டையே வளர்ந்து வந்த மோதல் நிலைமையைக் கண்டு, உண்மையிலேயே நாம் கவலை கொண்டோம். ஏனெனில் தமிழ் மக்களின் விமோசனத்துக்கான போராட்டம் என்பது, தனித்து ஒரு இயக்கத்தால் மட்டும் போராடி அடையப்பட முடியாத்து என எமது மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த்து. இந்த இ.யக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், 1970ல் பதவியேற்ற சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்கம், 1972ல் கொண்டு வந்த புதிய அரசியல் சாசனத்தை முற்றுமுழுதாக நிராகரித்த தமிழரசுக்கட்சித் தலைமை, பிரிவினைவாத கோசங்களை முன்வைத்து, அரசுக்க

    • wicky says:
      15 years ago

      இயக்க அராஜகங்களில் கொல்லப்பட்டோரை பட்டியலிடும்போது சந்ததியார்,சிவநேசன்,இறைகுமாரன்,உமைகுமாரன் ஏன் சொந்த ஊரான சுழிபுரத்தில் கொன்று புதைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களையோ, இந்தியாவில் சுழிபுரத்தை சேர்ந்தவர்களால் கொன்று புதைக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட இளையோரை பற்றி தோழர். மணியம் குறிப்பிடாதது தற்செயலானது என்றே திடமாக நம்புகின்றேன். தோழர் குறிப்பிட்ட அதே அப்பாபிள்ளை.அமிர்தலிங்கம் தனது மகன் பகீரதன் தலைமையில் தமிழீழ இராணுவம் என்ற பெயரில் ஆயுதப்படை ஒன்றை அமைத்தபோது உமாவின் கழகமே அதன் உறுப்பினர்கள் சிலரை நாட்டுக்கு அழைத்து வந்து உதவினார்கள் என்பது தோழர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

    • xxx says:
      15 years ago

      இது கின்னஸ் உலகச் சாதனைக்கான பின்னூட்டமா?
      இந்த நீளதில் திரை முன் அமர்ந்து பார்க்க யாரும் இருந்தால், அதுவும் ஒரு சாதனை தான்.

    • ரூபன் says:
      15 years ago

      பிரபா,
      சுந்தரம் பற்றி பலர் அன்று பல அபிப்பிராயங்ளை வைத்திருக்கலாம்.

      உதாரணமாக:-
      ” தலைவர் அவர்களே, நண்பர்களே, தோழர்களே!
      தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, அதற்காகவே தமிழ் பாசிச சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட, ஒரு உன்னத போராளியான சுந்தரம் என அழைக்கப்படும் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் மறைவின் 28வது ஆண்டை நினைவு கூர்வதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். அந்த மகத்தான போராளியுடன் நான் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகியவன் என்ற ரீதியில், அவர் என் மனதில் பதித்துவிட்டுச் சென்ற அழியாத சுவடுகளை நினைவு மீட்டி, சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தந்த இந்த கூட்ட அமைப்பாளர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
      சுந்தரத்துடனான எனது தொடர்பு ஆரம்பித்த காலகட்டம், சரியாக நினைவில்லாவிட்டாலும், 1970களின் பிற்பகுதி என்று நினைக்கிறேன். 1977ம் ஆண்டில் நான் சார்ந்திருந்த இலங்கை மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சிலர், இணைந்து, யாழ்ப்பாணத்தில் அச்சகம் ஒன்றை நிறுவினோம். அதன் நோக்கம் எமது கட்சி வெளியீடுகளை அங்கு அச்சிடுவதுடன், எமது நேச சக்திகளின் வெளியீட்டு முயற்சிகளுக்கும் உதவுவதாகும். அன்றைய காலகட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் கொடிகட்டிப் பறந்த்தால், அவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எதையும் யாழப்நபாணத்திலிருந்த அச்சகங்களில் யாரும் லேசாக அச்சிட்டுவிட முடியாத ஒரு சூழல் நிலவியது.”

      இவைகூட சுந்தரம் தொடர்பான யதார்த்த நடைமுறையிலான விமர்சனமல்ல!

      சுந்தரத்தின் அன்றைய கொள்கைரீதியான நடைமுறையை இவர்கள் ஏற்றுக் கொண்டவர்களல்ல. இவர்களால் அன்று முடியாததை சுந்தரத்தின் ‘புதியபாதை’யின் 6,000 இதழ்கள் நிறைவேற்றியது….

      இதுதான் அதன் மர்மம்…
      இன்னும் இவர்களின் பாசையில் சொல்வதென்றால் ‘ ஐக்கிய முன்னணிக்கான தந்திரம்’ என்னும் இயக்கங்களின் நடைமுறை ‘எளிய பாசையில்’ சொல்வதால் ”நாம் இவர்களைப் பயன்படுத்துகிறோம்” …….

      ஆனால் சுந்தரத்தின் படுகொலை ஒரு அரசியற் படுகொலை! என்பதில் எனக்கு கருத்துவேறுபாடில்லை!
      இக்கொலையும், கூட்டணியின் அரசியல் இலாபங்களுக்காக பிரபா -சாள்ஸ் அன்ரனி – மூலமாக நடத்திய ஓர் அரசியற் படுகொலையே!!

      சுந்தரத்தின் படுகொலைக்கு முன்னர் நடந்த கூட்ணியின் கூட்டத்தில் ”இனி புதியபாதை வெளிவராது” என்று ஆமீர் உறுதியாக தமது சகாக்களுக்கு தெரிவித்திருந்தார். (இதற்கு புதியபாதையில் தம்மை விமர்சித்து -”சுதந்திரனை’ ‘- எழுதவேண்டாம் என அமீர் குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது!

      இன்னொரு பக்கத்தில் இராணுரீதியில் (பிரபாகரனின் ராணுவ பார்வையில்) சுந்தரத்தின் துணிவின் முன்…. பிரபா அன்று கால் தூது!….

      ரூபன்
      280910

      • mamani says:
        15 years ago

        இந்த ஏவல் பேய் அமிர் ஏவ சுந்தரத்தை கொன்றது. பின் சி.ஐ.ஏ ஏவ ராஜீவை கொன்றது பொட்டன் ஏவ கருணா கொல்ல முயன்று கடைசியில் றோ ஏவிய பக்சவால் கதையை முடித்துக்கொண்டது.

    • suganthan says:
      15 years ago

      என்னுடைய விவாதம் எல்லாம் புலிகளைப்பற்றிய அவர்களின் பிற்போக்கான அரசியலை மதிப்பீடுசெய்கின்ற அதேவேளை சுந்தரத்தை பற்றியும் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் சரியான மதிப்பீடு தேவை. சுந்தரத்தின் படுகொலை பிரபாகனின் பாசிச அரசியலால் நிகழ்த்தப்பட்ட மோசமான படுகொலையென்பதில் விவாதத்திற்கு இடமில்லை. ஐயரின் பதிவிலிருந்து எழுகின்ற கேள்விகளுக்கு பதில் தேவை. தனிநபர்பயங்கரவாத வழிமுறைகளிலிருந்து, மாற்றுஅரசியல் வழிமுறை,ஜனநாயக மத்தியத்துவம் போன்ற கோரிக்கைகளுக்காக போராடி வெளியேறியோருடன் சேர்ந்து புதியபாதையை ஆரம்பிக்கின்றார். புதியபாதையில் சுந்தரத்தின் பங்கு முக்கியமானதாகவிருந்தாலும் இது கூட்டுமுயற்சியே. [நிச்சயமாக கண்ணனின் (ஜோதீஸ்வரன்) பங்கு எடுபிடிவேலையாக மட்டுமே இருந்திருக்கும்.] இவ்வாறானவர்களை தனிமைப்படுத்தி கூட்டணியின் தொடர்ச்சிகளான முகுந்தனையும்,சந்ததியாரையும் முதன்மைப்படுத்தியதற்கு காரணம் என்ன? புலிகளின் தனிநபர்பயங்கரவாத, பிரபாகரனது தன்னிச்சையான போக்குகளிற்கு எதிரானவரான சுந்தரம் புளட்டின் மத்தியகுழு எவ்வாறு மாவட்டசபை தேர்தலை எதிர்கொள்வது என்று கூடிப்பேசியபோது சிலமணித்தியாலங்கள் அவகாசம் கேட்டு சென்று வட்டுக்கொட்டை தியாகராசாவை வணக்கம் கூறி போட்டுதள்ளி பழைய வழிக்கே சென்றதை எவ்வாறு புரிந்துகொள்வது? தெருச்சண்டியர்களான சுழிபுரம் கும்பலை தன்னுடைய விசுவாசிகளாக கொண்டிருந்ததிற்கு என்னகாரண்ம்? அவர்களை அரசியல் மயப்படுத்தினார் என்றுவாதிட்டால் பொல்பொட் டை மட்டும்தான் அறிமுகப்படுத்தியிருக்கின்றார் என்று கொள்ளவேண்டியிருக்கும். சுந்தரத்தை தெரிந்தவர்கள், அல்லது சத்தியமனையிலிருந்து சத்தியம் பேசுவோர் விளக்கிக்கூறின் ந்ன்று. மற்றும்படி சுந்தரத்தின் கடின உழைப்பு, எழிமை,இடதுசாரி அரசியல்விருப்பு,மக்கள் நலனில் அக்கறை கொண்ட பலர் புளட்டில் சுந்தரத்திற்கு பின்னரும் இருந்திருக்கின்றார்கள். உதாரண்த்திற்கு ஈஸ்வரனை குறிப்பிடலாம். கிழக்குமாகாணத்தில் அரசநெருக்கடியின் கோரத்தால் கிழக்கில் எந்த அரசியல் ந்டவடிக்கைக்ளிலும் ஈடுபட பலர் பின்நின்றபோது தனிமனிதனாக (அரசபடைகளால் கடுமையாகதேடப்பட்டபோதும்) புளட்டை வளர்த்தெடுத்தார். அவருடைய குடும்பமே பெரியவிலை கொடுத்தது. பிஜசேனா என்ற அதிரடிப்படை அதிகாரியால் தாயார் நடுவீதியில் தாக்கப்பட்டார். தயாருக்கும்,சிறுவயது சகோதரனுக்கும் சொந்தவீட்டில் வாழமுடியாத நிலையேற்பட்டது. பத்துவயதில் சிறிய சகோதரன் க்ல்விகற்கமுடியாமல் கடல்தொழில் கூலியாக வேண்டியேற்பட்டது. ஆங்கிலத்திலும்,சிங்களத்திலும் சரளமாக உரையாடக்குடியவரான ஈஸ்வரன் லொறியில் கிளீனர் போல பிரசுரங்களை கிழக்குக்கு கொண்டுசெல்வார். புளட்டிற்கு பின்னர் மலையக்த்திற்கு சென்று அங்குள்ள சிலருடன் சேர்ந்து வறிய மாணவர்களுக்கு இலவச க்ல்விநிலையம் நடத்தினார். சுந்தரத்தின் பலகுணாம்சங்களை கொண்ட ஈஸ்வரனை புளட்டே கொலைசெய்வதற்காக தேடியது. ஈஸ்வரன் மாவோ அல்ல. இடதுசாரி அரசியல் பார்வையுள்ள செயல்பாட்டாளர். செயல்படாமல் இருக்கமுடியாதவர். ம்லையகத்தில் மலைகளை பேசவிடுங்கள் என்பது போன்ற நாடகங்களை மாண்வர்களுடன் மேடையேற்றி செளமியமூர்த்தி தொண்டைமானின் கவனத்தை ஈர்த்ததினால் கைதுசெய்யப்ப்ட்டு சித்திவதைக்கு உள்ளானார். நீண்டகாலம் காந்தியத்தில் வேலைசெய்தவரான ஈஸ்வரன் சிறந்த செயல்பாட்டாளர். மாற்று அரசியல்வழிக்கு தலைமை தாங்கக்கூடிய அரசியல் சிந்தனையாளர் அல்ல. இதனை குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள். சுந்தரத்தின் குணாம்சங்களை கொண்டவர்கள் புளட்டிலேயே கொலைவெறி பார்வைக்கு உள்ளானார்கள். எவரைப்பற்றியும் சரியான மதிப்பீடு அவசியம் என்பதை உணர்த்தவும் ம்ட்டும்தான்

      • நெருஞ்சி says:
        15 years ago

        “அந்த வாக்கெடுப்பின் போது,சாந்தன் 27வாக்குகளை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து பெற்று அனைவரினதும் அபிமானம் பெற்ற போராளியாகிறார்.சாந்தனுக்கு அடுத்ததாக எனக்கும் அன்டனுக்கும் 26 வாக்குகள் கிடைக்கின்றன. பிரபாகரன் 25 வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். தனி 21 வாக்குகளையும், மனோமாஸ்டர் 19 வாக்குகளையும், ராகவன் 16 வாக்குகளையும் பெற்றுக்கொள்கின்றனர் நாகராஜா, பேபி, குமணன் போன்ற கோடிட்டுக் காட்டக் கூடிய பலர் பத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டனர்.” ஐயர் (பாகம் 22)

        ஒருங்கிணைந்த அமைப்பில் கூட ஒரு வாக்கைத்தன்னும் பெற்றுக் கொள்ள முடியாத சுந்தரத்தை தூக்கிப் பிடிப்பது, பிரபாகரன் குழுவினால் கொல்லப்பட்டமை என்றால் இன்னும் பலரைத் தூக்கிப் படிக்க வேண்டி வரும்.

        • mamani says:
          15 years ago

          நீங்கள் குறிப்பிடும் தேர்தல் பற்றி பார்த்தால் கூட மூன்றாவது நிலையிலிருந்த பிரபாகரன் எப்படி தலைவனார். சுந்தரத்திற்கு 13 வாக்குகள் கிடைத்ததாகவும் அறிந்தேன். அத்துடன் அவர் தன்னை முன்மொழிய வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் அறிந்தேன். ஐயர், ராகவன் , குலம் யாராவது புனை பெயரிலாவது வந்து சில திருத்தங்களை இனியொரு இணையத்தினூடே செய்யலாமே. பிரபாகரன் – சுந்தரம் ஒப்பீடு பார்ப்போமானால் சுந்தரம் கொல்லப்படுவதற்கு முன்னர் இருவரும் செய்தநேரடி தாக்குதல்கள் மற்றும் அரசியல் முன்னெடுப்புகளைத்தான் பார்க்க வேண்டும் . என்னை பொறுத்தவரை உமா – பிரபா என்ற சாக்கடை சண்டையில் மறைக்கப்பட்ட ஒரு உண்மை போராளி சுந்தரம்.

      • பிரபா says:
        15 years ago

        Suganthan, மக்களை நேசித்த மகத்தான சமூக போராளி சுந்தரம் 1981 இல் எழுதிய கடிதமும் மனம் வருந்திய தவறும் !
        http://sathiamanai.blogspot.com/2010/09/1981.html
        முழுக்க வாசியுங்கள்.பதில் தானாக கிடைக்கும்.

        • mamani says:
          15 years ago

          தெளிவாக வாசிக்க முடியவில்லை. மூலப்பிரதி வைத்திருப்போர் யாராவது பதிவு செய்தால் நன்றாகவிருக்கும். தயவுசெய்து என் அதிவிருப்பு தளபதியின் கருத்துகளை மேலும் அறிய விரும்புகிறேன்.

  25. தமிழ்வாதம் says:
    15 years ago

    இந்தியத் தெருக்களில் காகிதம் பொறுக்கும் போது,கண்டெடுக்கப்பட்ட கிழிந்து போன ஒற்றைத்தாளில் இருந்து பதிவு செய்யப்பட்டது.ஒரு போராளியின் அனுபவம்.வாசகர்களுக்காய்…

    ”
    —————
    அய்யரை முன்னுக்குத் தள்ளி,மக்கள் அமைப்பின் பிதாமகர்களாக,மாக்சிசத்தை மந்திரம் பண்ணி,விடுதலை இயக்கத்தைப் பிளந்து,நாங்கள் மக்களோடு வாழ்ந்து புதிய பாதை பயிலப் போகிறோம் என்றார்கள்.

    நட்புடன் வழி விட்டோம்.

    எங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க ஆயுதங்களை ஒருவருடத்திற்கேனும் மௌனம் செய்யுங்கள் என்றார்கள்.

    பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டோம்.

    கூலி வேலை செய்து நாம் விடுதலைப்போராட்டத்தின் படிக்கற்களை செப்பனிடுகிறோம் என்றார்கள்.

    இதய வலியோடு நன்றாகவே
    நம்பினோம்.

    இவர்கள் கொள்ளை அடிக்காமல்,ஆயுதம் சேர்க்காமல் இருக்கமாட்டார்கள் என்று நச்சரித்த வாயை தைத்து வைத்தோம்.

    ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கையையும்,தோழமையும் மீறி,அந்த ஓடுகாலிகள், வட்டுக்கோட்டை தபால் நிலைய கொள்ளையில் பெரிய மூடையை விட்டு விட்டு,சிறிய மூடையுடன் தப்பியோடினார்கள்.

    அப்போதுதான் நான் என் கோவணத்தை காப்பாற்றி நின்றேன்.

    எனக்குள் மாக்சிசமும்,மக்கள் அமைப்பும்,முக்காடு போட்டுக் கொண்டன……………….”

    • xxx says:
      15 years ago

      இந்தியத் தெருக்களில் காகிதம் பொறுக்குவது உங்கள் தொழிலா அல்லது பொழுதுபோக்கா?
      பொறுக்குகிற எல்லாக் காகிதங்களையும் வாசிப்பீர்களா?

    • wicky says:
      15 years ago

      அதன் பிற
      கான தலைவரின் வழியை இவ்வாறு மதிப்பிடலாம். முக்காலமும் உய்ந்துணர்ந்த தலைவர் மகிந்த குடும்பம் கையூட்டு கொடுப்பதற்கு தயாராக இருந்தும் மகிந்த குடும்பத்தின் பாசிச அரசியலுக்கு எதிராக வியூகம் அமைத்து மொத்த மக்களையும் காப்பாற்றினார். தலைவரின் வலியைகொடுத்தவனுக்கு வலியை திருப்பிகொடு. எதிரியைவிட துரோகியே முதலில் அழிக்கப்படவேண்டியவன் போன்ற ஒப்பற்ற தத்துவங்கள் ஏனைய புரட்சிகர தத்துவங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதாக உலக தத்துவாசிரியர்கள் மெச்சுகிறார்கள். பேரினவாத அரசின் கூட்டுச்சதியில் வறிய எல்லைகிராமத்து சிஙகள மக்களையும், முஸ்லீம்களையும் படுகொலை செய்த மக்கள்விரோதிகளை கண்டுபிடித்து தலைவர் தண்டித்தார். எல்லைக்கிராமத்து வறியசிங்கள மக்களும்,முஸ்லீம் மக்களும் பிரபாகரனை தங்கள் தலைவராகவும் கொண்டாடினர். புலிகள் மனித உரிமை பற்றி தமது உறுப்பினர்களுக்கும், மாண்வர்களுக்கும் கிரமமாக கலந்துரையாடல்களும், வகுப்புக்களும் நிகழ்த்தினார்கள். தன் மூலம் எந்தவொரு மனித உரிமை மீறல்களும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள். இவ்வாறானதொரு கலந்துரையாடலில் பிறிதொரு நாட்டிலே நிகழ்ந்த மாற்று இயக்க உறுப்பினர்களை உயிருடன் ரயர் போட்டு கொளுத்தியமை, சிறுவயது மாணவர்களை படையில் சேர்ப்பதற்கு எதிராக இருந்த பெற்றோருக்கு பச்சைமட்டையால் அடித்தமை, மாற்றுக்கருத்துள்ளோரையும் அன்றாடபிரச்சினைகளில் முரண்பட்டோரையும் பங்கர் கிடங்குகளில் அடைத்து சித்திரவதைசெய்தமை,கொலை செய்தமை போன்றவற்றை கேட்ட பல முக்கிய புலிகளின் தளபதிகள் மயக்கமுற்று ஒருவார விடுப்பு எடுத்துக்கொண்டார்கள். தலைவர் எல்லோரையும் போலவே கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் அரிசிவாங்கினார். அதன்மூலம் மக்களின் பிரச்சினைகளை அன்றாடம் தெரிந்து கொண்டார். இதனை கேள்விப்பட்ட பிடல்காஸ்ரோ தலைவருக்கு கடிதம் எழுதினார். சமய,சாதிய பெண்ணிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கு முற்போக்கான கருத்தியல்பொதுப்புலத்தை உருவாக்குவதற்கு தலைவர் முன்னின்று உழைத்தார். ஜனநாயக மத்தியத்துவம் தொடர்பான தலைவரின் செயல்பாட்டை அறிந்த டானியல் ஒட்டேகா தலைவரை சந்த்திப்பதற்கு முயற்சித்தார்.

      • Ram says:
        15 years ago

        Hey, I am very confused??? I thought Meeran’s father Comrade Maniam passed away long time back. When did he visit Canada? Can any one help to clarify?

        • பிரபா says:
          15 years ago

          மீரான் மாஸ்ட்ர் தந்தை –
          எமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்று தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய அமரர் (1989) கே ஏ சுப்பிரமணியம், தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியவர்.
          அவர் பாதைதனைத் தொடர்ந்து செல்லும் அன்னை திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்.

          கனடாவில் உரை ஆற்றிய தோழர் ச.சுப்பிரமணியம், இலங்கை மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட பிரதேசச் செயலாளர்.

      • xxx says:
        15 years ago

        பிரபா, ராம்,
        இந்தச் சுப்பிறமணியம் முந்தி தோழர் சண்ணிட்டை இருந்து 1972இலை உடைச்சுக்கொண்டு போனவர்.
        கே.ஏ. சுப்பிறமணியத்தைத் திட்டித் தீர்த்து வந்தவையிலை முக்கியமானவர்.
        கொஞ்சக் காலமா “நூறு பூக்கள்” எண்டு புலுடா விடுகிற ஒரு கூட்டத்திலை இருந்து வாறவர் எண்டும் ராசபக்சவுக்க்கு ஆலாத்தி எடுத்து வருகிறவையோட சேர்த்தி எண்டும் தெரியுது.

        இலங்கை மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி எண்டு இப்ப ஒண்டும் இல்லை.
        இனி “முன்னால் வடை பிரதேசச் செயலாளர்” தான் மேலை சொல்ல வேணும்.

        • a voter says:
          15 years ago

          இதைக் கேட்கும் போது “தோசை வடை அப்பிற்ற எப்பா” என்ற கோஷம் ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது.

        • Ram says:
          15 years ago

          Thanks for the clarification but based on above feedbacks, looks to me that Sundaram used 3 printers simultaneously Chitra, Sathiamanai and Northern printers…..We all lost the REAL HERO in 1982!

    • xxx says:
      15 years ago

      a voter,
      “வடை” என்று ஏளனமாகக் குறிப்பிட்டதன் கருதாப் பிழைக்கு வருந்துகிறேன்.
      சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

      மேற்படி செயலாளரும் அக் கட்சிப் பேருக்கு உரிமை கோருவோரும் “தோசை வடை அப்பிற்ற எப்பா” என்று கோஷம் எழுப்பிய அரசியற் பரம்பரையை மிக வருந்தத் தக்க விதமாக இப்போது ஆதரித்து நிற்கிறார்கள் என்பதை எனக்கு நினைவூட்டிவிட்டீர்கள்.

  26. ஆவி says:
    15 years ago

    கரூத்தாடல் காரர்கள் ஐயா அவர்களை ரொம்ப புகழ்ந்து பேசும்போது எனக்கு மெய் சிலிர்க்கிறது(ஆவிக்கும் மெய் சிலிர்க்கும்) அய்யா கடைமை,கண்ணியம்,கட்டுப்பாடு நேர்மைக்கு இலக்கணமா வாழ்ந்த மகா புருசர்(மனிதர்)
    பீட்டர். செல்லத்துரையின் ஆவி

  27. மாயா says:
    15 years ago

    //புளட் தத்துவாத்த ரீதியிலும் , ராணுவ ரீதியிலும் மிக பலமாகவே இருந்தது. ஆனால்நடைமுறையில் சங்கிலி, வாமதேவன், மாணிக்கதாசன், வாசுதேவா,மொக்கு மூர்த்தி போன்ற ————- யும் மத்திய குழுவிலும், அதிகார பீடத்தில் இருத்தி தலைமை விசுவாசம் என்ற பெயரில் அழிவு செய்தது. – mamani//
    உமா மகேசுவரன் எனும்  முகுந்தன் குறித்த ஐயரின் சில தகவல்களில் எனக்கு உடன்பாடில்லை. புளொட் பல தவறுகளை இழைத்தது. அதில் மாற்றுக் கருத்தில்லை அதில் முக்கியமானது தலைமை விசுவாசம் என்ற பெயரில் அழிவு செய்ததுதான்.  இதைத் தட்டிக் கேட்க முகுந்தனால் முடியாமல் போனதற்கு , அவரது பலவீனங்களின் பிடிகள் இவர்களிடம் இருந்ததேயாகும்.  அனைத்து இயக்கங்களும் சென்னையில் குழுமிய போது ,  ( இக் காலத்தில் சபாவை புலி போட்டு விட்டது.) முதல் முறையாக செல்வம் அடைக்கலநாதன் அதன் பொறுப்புக்கு வருகிறார். புலிகள் சார்பாக  திலகர் பங்கேற்கிறார். ரத்னசபாபதி, பத்தமநாபா , செல்வம் அடைக்கலநாதன் , திலகர் மற்றும் உமா மகேசுவரன் மேடையில் இருக்கின்றனர். (இங்கேதான் PLOTE முகாம்களில் இடம் பெற்ற   கொலைகளை முகுந்தன் ஏற்றுக் கொண்டு, போராட்டத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் என பகிரங்கமாக சொன்னது .)  புலம் பெயர் நாடுகளில் இருந்து வந்தோரும் , இந்தியாவில் இருந்த பலரும்  தமிழீழ போராட்டம் தொடர்பான கேள்விகளைக் கேட்கின்றனர். ” நாங்கள் ஆளாளுக்கு ஏதாவது சொல்வதை விட இதைத் தெளிவு படுத்தும் அறிவு முகுந்தனுக்கே உண்டு. கேள்விகளை முகுந்தனிடம் கேளுங்கள்” எனச் சொல்கிறார் இரத்தின சபாபதி. பத்மநாபாவும்  முகுந்தனை நோக்கி தலையால் சைகை செய்து அனுமதிக்கிறார். திலகரும், செல்வமும் அமைதியாக இருக்கின்றனர். போராட்டத்தின் நாயகர்களான சோசலிச சிந்தாந்த திலகர்களே முகுந்தனை பகிரங்கமாக அங்கீகரித்த நிலையில் , //முகுந்தனுக்கு அரசியலே தெரியாது , உமா மகேஸ்வரனைப் பொறுத்தவரை இடதுசாரி அரசியலில் எந்த ஆர்வமும் கொண்டவராக இருந்ததில்லை. ஒய்வுகிடைக்கும் நேரங்களில், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நூல்களைப் படிக்கும் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலின் வன்முறைத் தொடர்ச்சியாகவே காணப்பட்டார். – ஐயர் // என்பது யதார்த்தமாக இல்லை. அல்லது ஐயருக்கு முகுந்தன் குறித்த தெளிவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. முகுந்தன் இந்தியாவில் இருந்த காலத்தில், இந்தியாவின் அரசியல்வாதிகளே பெரியவரோடு (முகுந்தன்) பேச முடியாது. அவருக்கு எங்களை விட ரொம்ப விசயம் தெரியும் என்பதை  பகிரங்கமாகவே சொன்னார்கள். முகுந்தன் வெறும் ஆயுதத்தோடு , தமிழருக்கு வாழ்வு மலரும் என்று நினைக்கவில்லை.  அனைத்து இயக்கங்களும் செய்யும் இப்படியான தாக்குதல்கள்  இலங்கை  ஆயுதப்படைகளை பலமாக்க உறுதுணை புரிந்து விடும். ஒரே சமயத்தில் சிங்கள இடதுசாரிகளோடு இணைந்து நடத்தும்  நாடு தழுவிய தாக்குதல் ஒன்றின் மூலமே  தமிழர்களது உரிமைகளை பெற முடியும் அல்லது சுவிசின் கன்டோன் (மாநில)  வாரியான அதிகாரமே அனைத்து மக்களுக்கும்  விடிவைத் தரும் என மெனிபெச்டோவில் எழுதியவர்.  தவிரவும் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது. இது நீண்ட காலப் போராட்டமாக இருக்கும் என தீர்க்க தரிசனமாக சொன்னவர். இதை விட ஒருபடி மேலே போய் இந்தியாவுடனான உறவு நம்பிக்கை அற்றது. சீனாவுடனான நட்பை  நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என தமது கழக வடிவத்தை  மாற்றியவர். இதுவே உமா எனும் முகுந்தனின் மேல் இந்தியா சந்தேகம் கொள்ள வழியானது. அதுவே அவரது சாவுக்கும் வழி கோலியது.  (மேலே சொன்ன பல விடயங்கள் இன்று யதார்த்தமாகியுள்ளன .)அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணையுமாறு கலைஞர் அழைப்பு விடுத்த போது புளொட் மட்டுமே இணைய மறுத்தது. பிரபாகரனோடு கை கோர்த்தது நல்லதுக்கில்லை , அழிவு நெருங்கி விட்டது. என்றார் உமா. அது உண்மையானது. புலிகள் கலைஞர் சொல்லை அன்று கேட்டு இணைந்தனர். பின்னர்தான் MGR பாதைக்கு தடம் புரண்டது. இங்கும் புலிகளிடம் கொள்கை இருக்கவில்லை. புளொட்டின் உண்மையான போராளிகளை எவராலும் மாற்ற முடியாது. தற்போதைய புளொட் புளொட்டே அல்ல. இப்போதிருப்போரில் அநேகர் அரசியல்வாதிகள். உண்மையான புளொட் போராளிகள் மௌனமாக இருக்கிறார்கள். புலிகளிடம் கவர்ச்சி இருந்தது. புளொட்டில் கருத்து இருந்தது. கவர்ச்சி அழியும். கருத்துகள் அழியாது. இதுவே யதார்த்தம். ஐயரின் தகவல்கள் புலி சார்ந்தே இருக்கிறது. இதுவும் விற்பனை நோக்கமா? அல்லது  இருக்கும் அலையை பாவிக்கும் நோக்கமா? எதுவானாலும் உண்மைகள் அழிவதில்லை. அது வெளிவரும். அதுவரை  தொடரட்டும்……

    • THAMILMARAN says:
      15 years ago

      தத்துவார்த்த ரீதியிலும்,தெளீவோடும்,அறீவு சார்ந்தும் புளோட் இயங்கியதாலேயே புளோட் குறீ வைக்கப்பட்டது எனும் யதார்த்தத்தை மாயா வை அன்றீ யார் புரிய வைக்க முடியும்.ஆயுதக் கவர்ச்சிதான் புளீகளீன் வளர்ச்சியாக இருந்தது எனும் உண்மை நிஜமானது.சிந்திக்கும் யாழ்ப்பாணத்தவர்களயே முட்டாளாக்கி புலிகள் புரிந்த சாகசங்கள் போதையாகி இன்றூ அதன் பக்க விளவுகள் தமிழ் மக்கள பாதித்துக் கொண்டிருக்கின்றன.

      • sinhalamaaran says:
        15 years ago

        🙂 தமிழர்கள் புலிகழை ஆதரித்ததால் பக்கவிளைவுகளை மட்டும் தான் அனுபவிக்கிறார்கள்:நல்ல வேளை புளட்டை ஆதரித்து இருந்தால்நேரடிவிளைவுகளை அனுபவித்து, அழிந்தே , விலாசமே இல்லாது போய் இருப்பார்கள். புலிகளை எதிர்த்து நேருக்கு நேர் எதிர்கொள்ளமுடியாத கோழைகள்நீங்கள் தான் ,தமிழ்மக்கழை இராணுவத்திடமிருந்து காப்பாற்றி இருப்பீர்கள் ஆக்கும். உட் கொலைகளிருந்து உங்களையே உங்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்தலட்சணத்தில் ” ஆடத்தெரியாதவள் மேடை சரி இல்லை எண்டாளாம்” எண்ட கணகாய், புலிகள் எங்களை அழித்துப் போட்டார்கள் எண்டு ஒப்பாரி வேற வைக்குறீர்கள்.

        • Sri says:
          15 years ago

          சிங்கள மாறன்! “புளட்” என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு இப்பவும் இருதயம் டபக் டபக் என்று இடிக்கும். அவர்கள் “தமிழ் இனத்துக்கு செய்த அட்டூழியங்கள் கொன்சம் கூடத்தான்(ஈழ்த்த்மிழர்,&தமிழக தமிழர்) அந்த அமைப்பிலிருந்து விலகி சொந்த வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கும் அதன் தாக்கம் இப்பவும் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு உறவினர்,பால்யநண்பர்கள் என்ற விலக்கு இல்லை. என்பது அதிர்ச்சியை தரும் விடயம்.

          • mamani says:
            15 years ago

            உண்மை பாதிகப்பட்டவருக்குதான் அதன் வலி தெரியும். வன்னி மக்களுக்கு “புலி” என்று சொல்லி பாருங்கள் .

    • suganthan says:
      15 years ago

      ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான புலி,புளட் இரண்டிடமும் எவ்விதமாக தனிநபர் வழிபாடு வளர்க்கப்பட்டதென்பதனையும், உறுப்பினர்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்ப்ட்டார்கள் என்பதனையே மேலே உள்ள பின்னூட்டம் வெளிப்படுத்துகின்றது. அவர்களுடைய பிழையான புரிதல்களின் அடிப்படை மதநம்பிக்கைக்கு ஒப்பானது. ஒரு விடயத்தை ஒத்துக்கொள்ளலாம் இந்தியாவில் இருந்த காலத்தில் இந்திய அரசியல் வாதிகள் மூக்கில் விரல் வைக்கக்கூடிய அளவுக்கு முகுந்தன் (உங்கள் பெரியய்யா) களவாணி அரசியல்வாதியாக மாறிவிட்டிருந்தார். தமிழ்நாட்டு கழகங்களை போலவே திருமணவிழாக்களுக்கெல்லாம் சென்று அரசியல் பேசிக்கொண்டிருந்தார். இந்திய உள்வுப்பிரிவை சேர்ந்த சேகர் மாஸ்ரரை மத்தியகுழுவில்(தெரிந்த படியே) சேர்த்து வைத்திருந்தார். இதே சேகர் மாஸ்ரர் தான் இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு பின்னர் ஈ.பி.ஆர்.எல்.வ், ஈ.என்.டி.எல்.வ் ஆல் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்ட மாணவர்களையும், இளையோரையும் கொண்டு உருவாக்கப்பட்ட”தொண்டர் படை”யின் உத்தியோக பயிற்சியாளராக இந்தியா களமிறக்கியது. ஆரம்பத்தில் எம்ஜிஆரின் நெருக்கமானவராக முகுந்தனே இருந்தார். எஸ்.டி .சோமசுந்தரத்தின் தொகுதியில் அவருக்காக தேர்தல்வேலைகளில் புளட் உறுப்பினர்கள் ஈடுபடும் அளவுக்கு நெருக்கம். அந்தக்காலங்களில் மற்ற இயக்கங்களை உமாவின் தலைமையில் ஒன்று படுமாறு எம்ஜிஆர் மற்ற இயக்கங்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். தமக்கு தேவையான கடிநாயாக புலியை இந்திய கொள்கைவகுப்பாளர்கள் தேர்வுசெய்த பிறகு எம்ஜிஆரின் தொனி மாறியது. பிரபாகரனது தலைமையில் ஒன்று பட கோரினார். சிலவேளை கண்ணாடியில் தெரிகின்ற சொந்த விம்பத்தை போலவே முகுந்தனின் குணாம்சங்களும் இருந்ததினால் எம்ஜிஆர் அதிர்ந்திருக்கவும் கூடும். புலி,புளட் தவிர்ந்த மூன்று இயக்கங்களே முதலில் ஒன்று சேர்ந்தன. புலிகளிற்கு முதல் புளட்டுடனே அவை பேச்சு நடத்தின. முகுந்தன் புளட்டுடன்,ரெலாவையும்(இதற்கிடையில் ரெலாவில் பலரை புளட் கொலைசெய்து மீதமானோரை தொங்குதசையாக மாற்றியிருந்தனர்.) இணைத்து கொள்ளுமாறு முகுந்தன் கோரிக்கை வைத்தார். இதனை ஈரோஸ் பாலகுமாரன் க்டுமையாக எதிர்த்தார். பேச்சுவார்த்தை முறிந்தது. முகுந்தன் மறுநாள் கந்தசாமி, மாணிக்கதாசன் சகிதம் ஈரோஸ் அலுவலகத்திற்கு படையெடுத்தார். அலுவலகத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி எளிமையாக அலுவலக ஊழியரைப்போல எல்லோரையும் சந்திப்பவரான பாலகுமாரன் திக்குமுக்காடிப்போனார். வேட்டியை மடித்துக்கட்டிய உமா “டேய் உன்ர இயக்கத்தில் எத்தினை பேரடா இருக்கிறீயள். பெரிசு சின்னனை பற்றி கதைக்கிறாய் கவனம்” என தெருச்சண்டித்தனம் பண்ணினார். இதற்கு பிற்கு பாலகுமாரன் பேச்சுவார்த்தையை புலிகளை நோக்கி நகர்த்தினார். இதனை ஈரோசில் முக்கிய உறுப்பினர்களாக இருந்த யாருடனாவது உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இப்படித்தான் முகுந்தனின் தீர்க்க தரிசனத்திற்கும், உண்மைக்கும் உள்ள தொடர்பு அமைந்திருந்தது.

      • thamilmaran says:
        15 years ago

        பால்குமாரனும் புலிகளோடு சராணாகதி அடைந்து பின்னர் பிரபாகரன் துதி பாடி தன்னையும் தொலைத்துக் கொண்டார்.

        • mamani says:
          15 years ago

          பாலகுமாரனின் எளிமைகண்டு வியந்தகாலம் இருந்தது. ஒரு தடவை அண்ணாநகரில் ஆட்டோவில் அவரை நண்பரொருவர் அடையாளம் காட்டியபோது என்னால் ஒரு இயக்கத்தின் தலைவரின் எளிமைநம்ம முடியாமல் இருந்தது. ஆனால் அதேபோல் பாலசிங்கம் சுகவீனமுற்றிருந்தபோது தான் எழுதிக்கொடுத்த மாவீரர் உரைக்கு தானே பொழிப்பு சொல்லி மேதகுவை உச்சிமோந்ததை மறக்க முடியாது.

      • a voter says:
        15 years ago

        நீங்கள் சொல்வதில் எதை நம்பினாலும் வேட்டியை மடித்துக்கட்டிய உமா “டேய் உன்ர இயக்கத்தில் எத்தினை பேரடா இருக்கிறீயள். பெரிசு சின்னனை பற்றி கதைக்கிறாய் கவனம்” என தெருச்சண்டித்தனம் பண்ணினார் என்ற வசனத்தை நம்புவது கடினம். உமா மகேஸ்வரன் வேட்டி கட்டிக் கொண்டு படையெடுத்தாராம்.

        • suganthan says:
          15 years ago

          நாலு முழ வேட்டி அதிகமாக அணியும் வழக்கமுள்ளவர் உமா என்பதனை முன்னாள் புளட் உறுப்பினர்களிடம் அறியலாம். பாலகுமாரன் சம்பந்தப்பட்ட ச்ம்பவத்தினை நீஙகள் யாரும் ஈரோசில் முக்கிய பங்காற்றிய முன்னாள் உறுப்பினர்களிடம் சரிபார்த்துகொள்ளலாம். பொய்மை எவ்வாறெல்லாம் விரவியிருந்தது என்பதனை சுட்டிக்காட்டவும், உண்மை பேசுகின்ற அறத்தில் இருந்துதான் விமர்சனங்களை செழுமைப்ப்டுத்த் வேண்டும் என்பது மட்டுமே சில ச்ம்பவங்களை, சில நபர்களை பற்றிய எனது குறிப்புகளுக்கு காரணம். நம்பமுடியாததாக கருதுபவைகளை சரிபார்த்துக்கொள்ளுதல் ந்ன்றூ.

          • THAMILMARAN says:
            15 years ago

            வீட்டில வேட்டி கட்டுவது மலையாளீகளீன் வழக்கம் சாறம் கட்டுவது தமிழரின் வழக்கம் அதிலும் முகுந்தன் கொழும்பில் வாழ்ந்தவர்.நீங்கள் சொல்வது நம்பக் கூடியதாக இல்லை.

      • xxx says:
        15 years ago

        வோட்டர், எங்கள் வரலாறு இப்படித்தான் எழுதப் படுகிறது.
        யாரொடு நோவோம்!

        • ramu says:
          15 years ago

          மாறன்! நீங்கள் லண்டனில் இருந்தாலும் சாதிபார்த்துத்தான் திருமணம் செய்துகொள்கிறீர்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிற்தா?

          • THAMILMARAN says:
            15 years ago

            நேற்றய தலைமுறதான் இன்னும் த்ன்னைச் சாதியைச் சொல்லிப் பெருமை கொள்கிறது.இன்ற தலைமுற தன்னைச் சொல்லியே பெருமை கொள்கிறது.கரம்பொன் எனும் அழ்கிய தீவுப்பகுதிக் கிராமம் உதாரணமாக விளங்குகிறது.வேளாண்மைக் கிராமம் தன்னுள் இப்போ பலரையும் உள்ளடக்கி மேலாண்மைக்கு உதரண்மெள உள்ள்து.

  28. தமிழ்வாதம் says:
    15 years ago

    “அம்புலி மாமா” பிரபாகரன் என அழைக்கிற மாயா,”பொன்னியின் செல்வன்” உமாவை காவேந்து பண்ணுவது வேடிக்கையானது.

    அய்யரும்,மாயவும் பழகிய உமாவின் காலங்கள் வேறுவேறானவை.

    உமாவின் இயக்கம் பிழையான ஆரம்பத்தைக் கொண்டது.கருத்து முரண்பாடு காரணமாக இவர்கள் பிரியவில்லை.தம்மைக் காக்கவும், தம்மைச் சுற்றி கூடாரம் போடவும் வெளிக்கிட்டவர்கள்.கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டவர்கள்.இனத்தின் பிற்போக்கான சிந்தனைகளுக்கு செவிமடுத்தவர்கள்.

    ஒடுக்கப்பட்ட இனத்தின் விடிவைத் தேடும் தலைவர்களாகவோ இவர்கள் வளரவுமில்லை,வளர்க்கப்படவுமில்லை.

    ஆயிரம் மாயைகளை,விம்பங்களை தொலைந்து போனவர்களில் கட்டுகிறதை விட்டு விட்டு,தோற்றுப் போன இனத்தை தூக்கி நிறுத்துகிற வழிகளைப் பார்ப்போம். மத,சாதி பிரிவுகளை வளர்ப்பது,மெருகேற்றுவது என சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கிற மனிதர்கள்,இப்போது ‘தேசம்’ கடந்து வந்து, இயக்கப் பெரிது,சிறிது என்பதையும் கூர்மைப்படுத்துவது ஆரோக்கியமானதல்ல.

    • mamani says:
      15 years ago

      ஆயிரம் மாயைகளை,விம்பங்களை தொலைந்து போனவர்களில் கட்டுகிறதை விட்டு விட்டு,தோற்றுப் போன இனத்தை தூக்கி நிறுத்துகிற வழிகளைப் பார்ப்போம். மத,சாதி பிரிவுகளை வளர்ப்பது,மெருகேற்றுவது என சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கிற மனிதர்கள்,இப்போது ‘தேசம்’ கடந்து வந்து, இயக்கப் பெரிது,சிறிது என்பதையும் கூர்மைப்படுத்துவது ஆரோக்கியமானதல்ல.

      இது ஆரோக்கியவாதம்.

  29. மாயா says:
    15 years ago

    //தமிழ்வாதம்Posted on 09/29/2010 at 2:15 pm“அம்புலி மாமா” பிரபாகரன் என அழைக்கிற மாயா,”பொன்னியின் செல்வன்” உமாவை காவேந்து பண்ணுவது வேடிக்கையானது.//

    நாம் அம்புலி மாமாவும் , பொன்னியின் செல்வனும் வாசிக்காதவர்கள்தானே? நாம் கால்மாக்சின் , எங்கெல்சின் , லெனினின் புத்தகங்களை காவிக் கொண்டுதானே பள்ளி சென்றோம்?  யாருக்கும் புரியாத பொருள் முதல் வாதம் , அந்த வாதம் இந்த வாதம் என எமது மக்களுக்கு புரியாத வார்த்தை சாலங்களால்  தலையை பிய்த்துக் கொள்ள வைத்த, வைத்தவர்கள் இடையே , புலி மட்டும் சினிமா கதாநாயகர்கள் போல மக்களிடம் நெருங்கியது. எனவே சண்டை சினிமாவுக்கு போன ரசிகர்கள் போல, புலியும் மக்கள் மனங்களை இலகுவில் கொள்ளை கொண்டது.  இயக்கத்தின் தலைமை தாங்கிய அனைவருமே அராசக மனம் படைத்தவர்கள்தான். இவர்களில் எவர்தான் அப்பாவிகளை மிரட்டவில்லை. கொலை செய்யவில்லை? உமாவையும் நல்லவர் என நான் சொல்லவில்லை. அவரது பலவீனங்கள்  கழகத்துக்குள் சிலரை பாதுகாக்க  மௌனமாக்கியது. இதில் வெளிக் கொலைகளை விட உரத்தநாட்டில் (தஞ்சாவுர்) நடந்த  உட் கொலைகள் புளொட்டின் சிதைவுக்கு காரணமாயின. 
    இங்கே உமாவுக்கு அரசியல் ஞானமே இல்லை என சொல்லிய  ஐயரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. புலிகளை விட முகுந்தன் புத்திசாலி என MGR பல முறை சொன்னதுண்டு. புலிகளுக்கு போலவே புளொட்டுக்கு MGR உதவிகளை வழங்கியே வந்தார். புளொட் அதை வெளிப்படையாக சொல்லவில்லை. அது தன்னை வெளிக் காட்டவில்லை. MGRரின் வலது கரமான S.D.சோமசுந்தரத்தின் (நமது கழகம்) தஞ்சை பகுதியில் புளொட்டுக்கு அதிகமான முகாம்கள் இருந்ததற்கு காரணமே MGRன் அணுசரனைதான். என்ன இருந்தாலும் MGR சொல்வதையெல்லாம் முகுந்தன் செய்யாததால் , உறவுகளில் சற்று தூரம் இருந்தது.  புளொட்டின் அரசியல் கண்ணோட்டமும், பயிற்சிகளும் , எதிர்காலத் திட்டங்களும் சரியாகவே இருந்தன. ஆனால் முகந்தனோடு இருந்த சங்கிலி , செந்தில், வாமர்…………….. இப்படி  சுற்றி நின்றவர்களால் கழகம் சின்னா பின்னப்பட்டது.  இவர்களை தாம் இன்டலிசன்ட் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால் பாதாள குழுக்களுக்கு ஒப்பான முட்டாள்கள். இவை புளொட்டில் மட்டுமல்ல , அனைத்து இயக்கங்களிலும் இருந்தது. இல்லையென சொல்ல முடியாது. இவர்கள் எவரும் காந்தீயவாதிகள் அல்ல. அதை நாம் உணர வேண்டும். 

    ஈழத் தமிழர்கள் அனைவருமே தனி மனித வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள்தான். இன்றும் எவரும் இயக்கங்களை விட அதன் தலைவர்களைப் பற்றியேதான் பேசுகின்றனர். தனி மனித வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட இனம், தமிழ் இனம்.  இல்லை என்றால்,  கடந்த காலத் தலைமைகளின் மறைவுக்கு பின்னர் , அதே இயக்கங்கள் அது போலவே பலமாக இன்றும் இருந்திருக்க வேண்டும்.? அதைக் காண முடியவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு பின்னர் புலிகள் சிதைந்து போயினர். எனவே இங்கும் தனி மனித வழிபாடுதானே தவிர, இயக்கத்தின் பேரிலான  உறுதி எவருக்கும் இல்லை. “அண்ணைக்கு எல்லாம் தெரியும் ” என்றுதான் அனைவரும் சொன்னார்களே தவிர விடுதலைப் புலிகளது கொள்கை  தொடரும் என சொல்ல எவராலும் முடியவில்லை. இன்றும் பிரபாகரன் வருவார்  அடுத்த கட்ட போராட்டதை தொடர்வார் என மட்டுமே சொல்ல முடிகிறது. அந்த வழியைத் தொடருவோம் எனு சொல்ல எவராலும் முடியவில்லை.  இங்கு எவருமே உண்மையானவர்களாக இல்லை. இந்த வகையில் ஏனைய இயக்கங்கள்  எவ்வளவோ மேல். அவர்கள் தமது தலைவர்கள் இறந்ததை ஏற்றுக் கொள்கின்றனர். அஞ்சலி செலுத்துகின்றனர். இங்கே ………… எனவே பிரபாகரனின் சாவுக்கு பின்னர் புலிகள் சிதைந்தது மட்டுமல்ல, தனது எதிரியிடமே சங்கமமும் ஆகி விட்டனர். இன்று மகிந்தவின் பலம் புலிகளின் வீழ்ச்சியல்ல,  புலிகளினால் மகிந்தவுக்கு கிடைக்கும் ஒத்துழைப்பு. இதற்கா இவ்வளவு மனித அழிவுகள்?  இன்னும்  தமது  வயிற்றுப் பிழைப்புக்காக மக்களை மாக்களாக ஆக்குவோரே அதிகம். அன்று தமிழ் அரசியல்வாதிகள் இளைஞர் பேரவை என்ற பெயரில் , இளையோரை  கவர்ந்து தவறான வழிகளில் இட்டுச் சென்று முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று தமது தாகத்தை தீர்த்துக் கொண்டனர் என நினைத்தேன். இல்லை இப்போது அவர்கள் புலம் பெயர் குழந்தைகளை காவு கொள்ள வீசாவோடு வெளிக்கிட்டிருக்கின்றனர்.உதாரணத்துக்கு இது: 
    http://www.youtube.com/watch?v=qKConvId1Oo&feature=player_embedded
    கடந்த காலத்தை விடுவோம். இவை இனியும் தொடர வேண்டுமா?

    • theni says:
      15 years ago

      புளட்டில் மாயமான் போன்ற அந்தசிறந்த அரசியல் க்ண்ணோட்டமும், அவர்கள் வைத்திருந்த எதிர்கால திட்டங்களும் தான் என்ன? வெளிப்படையாக கூறலாமே. நேரடியாக பதில் கூறாமல் ச்மூகத்தை குறைசொல்வதும், புலியை குறைசொல்ல்வதும் மேதாவிதனமாக பேசுவதும் நிச்சயமாக முகுந்தன் பாணிதான்.

    • Garammasala says:
      15 years ago

      இத் தொடர் புளொட் பற்றியதல்ல.
      முக்கியமாகப் புலிகள் பற்றியது.
      தகவல்கள் வருகின்றன. சில திருத்தப்படுகின்றன, திருத்தங்களும் திருத்தப்படுகின்றன.
      நம்மில் யாரும் எதற்கு அஞ்சுகிறோம்?
      பொய்த் தகவல்களை உண்மைத் தகவல்கள் மட்டுமே வெல்லும்.
      யாரையும் வைது என்ன பயன்?

  30. மாயா says:
    15 years ago

    //செல்லம்Posted on 09/27/2010 at 8:10 pmஊர்மிளா கூட அன்னை தெரெசாவுக்கு நிகராக வளர்ந்திருக்கக்கூடிய பெண்மணி என்ற பிம்பத்தினையும் எதிர்கொண்டிருக்கின்றார்….//
    இவர் தவறிழைத்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இவரால்தான்  பெண்களின் பங்களிப்பு இயக்கங்களுக்கு கிடைத்தது. அதை எவராலும் மறுக்க எவராலும் முடியாது.  அன்றைய காலப் பகுதியில் நாலு , ஐந்து பொடிகள் போராட்டத்துக்கு வந்ததே சிம்ம சொப்பனமாக வாயைப் பிளந்த இனம் நமது தமிழினம். அந்த வகையில் ஊர்மிளா ஒரு முன்மாதிரிதான்.

  31. Bharathi says:
    15 years ago

    //பாரதி நண்பரே எனக்குத்தான் எதுவும் தெரியவில்லை….
    தமிழரங்கத்தை விடுவம்…// – ரூபன்.

    அன்பரே, எனக்கு 25ம் புலிகேசி ஞாபகத்துக்கு வந்ததால் கொஞ்சம் நகைச்சுவையாக எழுதிவிட்டேன் அவ்வளவு தான்.
    அவர் தன்னைப்பற்றி தானே புழந்து எழுதிக் கொள்வார். இடைக்கிடை பு.. சு… எல்லாம் பாவித்து ஊழியர்கள் பக்கப்பாட்டு பாடுவர். புகழ்பாடலின் உச்சக் கட்டத்தில் அகப்பட்டவர்களை அவதூறு செய்து தாக்கிவிட்டு செல்வார். அவதூறு தாக்குதலின் உச்சகட்டத்தில்.. காதறுப்பு, மூக்கறுப்பு, கழுத்தறுப்பு போட்டிகளும் நடத்துவார். அமைச்சரே நீங்கள் வரியெல்லாம் வசூலித்துவிட்டீர்களா, அடுத்த தாக்குதலுக்கு காலம் குறித்து விட்டீர்களா? – இப்படி எழுதத் தோன்றியதில் சிரிப்புத்தான் வந்தது. சரி, 24ம் புலிகேசி பார்த்திருக்கிறீர்களா??

  32. மாயா says:
    15 years ago

    // theniPosted on 09/29/2010 at 10:19 pmபுளட்டில் மாயமான் போன்ற அந்தசிறந்த அரசியல் க்ண்ணோட்டமும், அவர்கள் வைத்திருந்த எதிர்கால திட்டங்களும் தான் என்ன? வெளிப்படையாக கூறலாமே. நேரடியாக பதில் கூறாமல் ச்மூகத்தை குறைசொல்வதும், புலியை குறைசொல்ல்வதும் மேதாவிதனமாக பேசுவதும் நிச்சயமாக முகுந்தன் பாணிதான்.//

    இங்கே சமூகத்தை குறை சொல்லவில்லை. உண்மைகளை மறைத்து , வியாபார நோக்கோடு , பலரை மகிழ்ச்சிப்படுத்தும்  எழுத்துக்கள் சரியல்ல. உண்மைகளோடு , பொய்களையும் யாருக்கும் தெரியாமல் திணிப்பதால் பொய்யும் உண்மையாகி விடுகின்றன. புலிகள் அல்லது பிரபாகரன் உயிரோடு இருக்கும் போது எழுதாத கட்டுரை , புலிகள் அழிந்த பிறகு வருகிறது. அதில் குறிப்பிடப்படும் சம்பவங்களின் பாத்திரங்களின் அநேகர் உயிரோடு இல்லை. ஒரு சிலர் புலத்தில் இருந்தாலும் , அவர்கள் புலியாக இல்லை அல்லது புலிகளாலேயே ஒதுக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இங்கே தமது பங்கை செலுத்த வேண்டும். இவர்களும் தமது முகங்களை பதிவு செய்து எழுத வேண்டும். இயக்குனர் சீமான் போன்று போட்டோ சொப் காமடிகளை காட்டி , அண்ணன் சொன்னார். தம்பி சொன்னார் என வயிறு வளர்போரை வளர்த்து , சமூகத்தை ஏமாற்ற விடலாகாது. இந்த மாயாசாலக் கதைகள் நமக்குள்  தொடராலாகாது.
    – புளொட் , தமிழருக்காக மட்டுமே போராட வேண்டும் என  நினைத்ததை மாற்றி , அனைத்து அடக்கு முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும் என தமது நிலைப்பாட்டை மாற்றியது. – தமிழீழம் சாத்தியமானதல்ல, அதாவது தனிநாடு சாத்தியமானதல்ல, அடக்கப்படும் அனைத்து மக்களும் இணைந்து , அதாவது தமிழ், சிங்கள , இசுலாமிய , பறங்கியர், மலாயர் என இலங்கை வாழ் அனைத்து மக்களும் இணைந்து பாசிசத்துக்கு எதிராக போராட வேண்டும் என நினைத்தே தமிழீழத்தின் குரல் எனும் வானோலி ( இதுவே போராளிகளின் முதலாவது வானோலி) மூலமாக  கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கியது.- அன்றைய JVPயின் , தமிழருக்கு சார்பான  தலைமைகளோடு அடிப்படை வேலைத் திட்டங்களில் இறங்கியிருந்தது. அதற்கு அடுத்த கட்டமாக சந்திரிகாவின் கணவர் நடிகர் விசய குமாரணதுங்கவுடனான கட்சியினரோடு , ஒரு சில திட்டங்களை அடிப்படையாக வைத்து சில நடவடிக்கையில் இறங்கியது.- முக்கியமாக இந்தியாவின் போக்கு நிச்சயம் தமிழருக்கு விசோனத்தை தராது , அது தனது தேவைகளுக்காக  போராளிகளையும் , போராளிக் குழுக்களையும் பயன்படுத்துவதை உணர்ந்து , சீனாவுடனான நட்புடன் தமது பயணத்தை ஆரம்பித்தது.- இலங்கை வாழ் பாட்டிளி மக்களோடு இணைந்து , ஒட்டு மொத்த போராட்டமொன்றில் அனைத்து மக்களும் பங்கு பற்ற வேண்டும் , தனிநாடு சாத்தியமல்ல , சுவிற்சாந்தின் மாநில ஆட்சி போன்ற ஆட்சி முறை மூலமாக நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகள் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனும் கொள்கை  அடிப்படையில் பல வேலைத் திட்டங்களை நகர்த்தது தொடங்கியது.
    இருந்தாலும் உள்ளே இருந்த சண்டியர்களுக்கும் அது புரியவில்லை. வெளியே இருந்த மக்களுக்கும் அது புரியவில்லை. சாதியம் , பிரதேச வாதம், கீரேயிசம் போன்றவற்றை நம்பிய தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கும் உண்மையான அடிப்படை வாதங்களை ஏற்கவில்லை. 
    மேலே இவ்வளவு விடங்களை எழுதும் ஐயரால் , எனது சில கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அழிப்பாரா?
    ———————————————————————————————————————–
    1. பிரபாகரன் உயிரோடு இருக்கிறா? இல்லையா?2. பிரபாகரன் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடைந்தாரா?  போராடிச் செத்தாரா?3. கேபீ, பிரபாகரனைக்  காட்டிக் கொடுத்தாரா? அல்லது காப்பாற்ற முனைந்தாரா?
    மேலே உள்ளவை இன்றைய நிலையில் மக்கள் மனங்களில் இருக்கும் சந்தேகக் கேள்விகள். இத்தனை விடயங்களை எழுதும் ஐயரால் இதையும் எழுத முடியும். பதில் தாருங்கள்.

    • mamani says:
      15 years ago

      1. பிரபாகரன் உயிரோடு இருக்கிறா? இல்லையா

      இதற்கு பதில் எழுதுவதை விட ஐயர் தான் தியாகியா? துரோகியா என்று சொல்லி விடலாம். மாயா மக்கள் இன்னமும் தனி மனித கவர்ச்சியிலேயே மயங்கி கிடக்கின்றனர்.

    • ramu says:
      15 years ago

      உள்ளேயிருந்த சண்டியர்களுக்கும், மக்களுக்கும் புரியாத காரணித்தினால்தான் மாலைதீவு மக்களுக்கு புரிய வைப்பதற்கு புறப்பட்டாரா? பெரியய்யா. பொய்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் அளவே இல்லையா?

      • mamani says:
        15 years ago

        ஒரு கோல்வ் மைதானத்திற்குள் நின்று 200,000 இராணுவத்தினரை எதிர்த்து போராடாலாம் என்று 30 வருட அனுபவத்தின் பின்னே புலிகள் எண்ணியதற்கும் . அண்மைத்தீவில் தளம் அமைத்தால் வசதியாகவிருக்கும் என உமா நம்பியதற்கும் உண்மையில் உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லையா?

  33. மாயா says:
    15 years ago

    சிறீ நீங்கள் புலத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். புளொட்டை பற்றி நினைத்தால் இதயம் டபக் டபக் என்கிறது…….  நான் அண்மையில்தான் வன்னிக்கும் சென்று வந்தேன். புலிகள் குறித்து கதைத்தால் வாயை திறக்க முடியாமல் அவர்களது முகங்கள் விறைத்து போகின்றன. புலிகளை காட்டிக் கொடுப்பவர்கள், புலிகளாகவே  இருப்பதும், புலிகளை டோச்சர் செய்து உண்மைகளை வெளிக் கொண்டு வருவதும் புலிகளாகவே இருப்பதை அறிந்து,   அதிர்ச்சியாக இருந்தது. அடுத்தவர்களை துரோகிகள் என முத்திரை குத்தியவர்கள். இன்று தமக்கே முத்திரை குத்துவதில் போட்டா போட்டியாக இருப்பது தமிழர்களின் தலைவிதி. 

    //SriPosted on 09/30/2010 at 4:24 amசிங்கள மாறன்! “புளட்” என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு இப்பவும் இருதயம் டபக் டபக் என்று இடிக்கும். அவர்கள் “தமிழ் இனத்துக்கு செய்த அட்டூழியங்கள் கொன்சம் கூடத்தான்(ஈழ்த்த்மிழர்,&தமிழக தமிழர்) அந்த அமைப்பிலிருந்து விலகி சொந்த வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கும் அதன் தாக்கம் இப்பவும் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு உறவினர்,பால்யநண்பர்கள் என்ற விலக்கு இல்லை. என்பது அதிர்ச்சியை தரும் விடயம்.//

    • Sri says:
      15 years ago

      உண்மைச்சம்பவம்.ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இருமைந்தர்களில் தம்பி புலி<அண்ணன் டெலொ. டெலோவை புலிகள் அழித்தபொது தம்பியின் குண்டுக்கு அண்ணன் பலியானான். .
      /அடுத்தவர்களை துரோகிகள் என முத்திரை குத்தியவர்கள். இன்று தமக்கே முத்திரை குத்துவதில் போட்டா போட்டியாக இருப்பது தமிழர்களின் தலைவிதி/. காலத்தின் கட்டாயமோ???

      அன்புடன் அச்சுவேலியான

  34. மாயா says:
    15 years ago

    அனைத்து இயக்கங்களும் , கடத்தல் பேர்வழிகளும், இந்தியாவை பின் தளமாகக் கொண்டே இயங்கின. தவிர , கடந்த காலங்களில் புலத்தில் வீதி வீதியாக கத்திக் குளறி, அந்த நாடுகளில் சட்ட திட்டங்களை மதியாது, தண்டனைகளையும் பெற்று , வெறுக்க வைத்து நடந்தவை கடந்த கால நிகழ்வுகளாக எம்மால் மறக்க அல்லது மறைக்க இயலாதவை. புலத்தில் இருந்து என்ன போராட்டம். போய் அங்கிருந்து போராட வேண்டியதுதானே? 

     அப்படியிருக்கும் போது , அருகே உள்ள மாலை தீவை பின் தளமாக்கிக்கொள்ள முயன்றதில் தவறில்லை. ஆனால் றோவின்  கைக்குள் உமா மகேசுவரன் சிக்கியது  எங்கோ நடந்த தவறுதான். உமாவை நல்லவர் என சொல்ல ஒரு போதும் நான் முயலவில்லை. 
    2006 க்கு பிறகு எந்த ஒரு  ஒரு பெனடோலாகிலும்  (பொருளும்)  வரவில்லை என சு-சை  சொன்னது உண்மையென்றால் , கடைசி யுத்தத்துக்கு உதவ வேணும் என புலத்து மக்களிடம் சுரண்டியவர்களை உண்மையானவர்களென்றா நினைக்கிறீர்கள்?  வணங்கா மண்ணை அனுப்பி , மக்களை பேக்காட்டியதும் உண்மையானவர்களது செயலா? இன்னும் தலைவர் வருவார் , தமிழீழம் பெற்றுத் தருவார் என மக்களை பேயனாக்குவதும் உண்மையானவர்களது செயலா? 

    // பொய்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் அளவே இல்லையா?- ramu//

    // ramuPosted on 09/30/2010 at 10:49 amஉள்ளேயிருந்த சண்டியர்களுக்கும், மக்களுக்கும் புரியாத காரணித்தினால்தான் மாலைதீவு மக்களுக்கு புரிய வைப்பதற்கு புறப்பட்டாரா? பெரியய்யா. பொய்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் அளவே இல்லையா?//

    • ramu says:
      15 years ago

      “றோவின் கைக்குள் உமாமகேஸ்வரன் சிக்கியது எங்கோ ந்டந்த தவறுதான். “அப்படியென்றால் கழக வடிவத்தை மாற்றி சீனாவுடன் சேர்ந்து உமா புரட்சிசெய்ய முயற்சித்தாக கதையளந்ததெல்லாம் சும்மாவா?

  35. தமிழ்வாதம் says:
    15 years ago

    போராட்டத்தில் இறந்து போன ஆத்மாக்களால் தெரிவிக்கப்பட்டவை.

    தி.மு.க நிறத்தில்(சிகப்பும்,கறுப்பும் ) அடித்த துண்டுப்பிரசுரத்தில்,மாவோ,அரபாத் வரிசையில் தன்னை CHAIRMAN ஆக,மத்திய குழுவிற்கு தெரியாமல் வரித்துக் கொண்டு கியூபாவிற்கு காசி,மாவை,……(கூட்டணி உபயம்) சகிதம் உமா பயணம் சவாரி செய்தார்.துண்டுப் பிரசுரம் எழுதிக் கொடுத்தவர் கியூபா பற்றியோ,புரட்சிகர இயக்கம் பற்றிய ஞானமோ இல்லாத ஆங்கிலம் தெரிந்தவர்.

    தங்களின் ஆயதப் பயிற்சிக்கான உதவிகளை,அந்த நேரத்தில் உதவ யாரும் முன்வரவில்லை.ஆனால் “EROS CHAIRMAN ரத்னா” இலண்டனில் சாய்மனைக் கதிரையில் இருந்தபடி, இந்து தத்துவத்தை மாக்சிசத்தில் கடைந்து,’தற்கீகம்’ பண்ணியபடியே PLO வின் ஆயுதப் பயிற்சிக்கான தொடர்பை பெற்று விட்டார். அவர்களிடம் புலிகள் பணம் கொடுத்து விட்டு மூன்று மாதங்கள் மணல் மேடுகளை பார்த்து விட்டு,சங்கர் ராஜி (EROS COMMANDER IN CHIEF ) யுடன் முரண்பட்டு வெளியேறுகிறார்கள்.பின் தலை பிய்த்தபடி இருந்த போது ஒரு நாட்டின் தூதரகத்தில் நேரடி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.அங்கே வைக்கப்பட்டிருந்த கியூபாவின் துண்டுப் பிரசுரமும்,ஈரோசின் ‘பெட்டிசனும்’ தம்மை நிராகரித்தமைக்கான காரணங்களாக தெரிய வருகிறது.

    துண்டுப் பிரசுரத்தில் கீழ் கோடிட்டு இருந்த ஒரு வரியின் சாராம்சம் இதுதான்.
    “எம் இழந்து போன தாயகத்தை மீட்க எங்களின் இறுதி நகங்களும் பற்களும் இருக்கும் வரை போராடுவோம்”

    ஈரோஸ் பெட்டிசனின் சாராம்சம்.

    “விடுதலைப் புலிகள் ஜியோனிசத்தின் தத்துப் பிள்ளைகள்.”

    (பற்குணம் பலிகொடுக்கப்பட்டத்திற்கு அருளரின் ‘லங்காராணி’ கதை அமைத்தது இந்த நயவஞ்சகத்தின் தொடர்தான்.பின்னாளில் ரத்னா PLOTE உமாவிற்கு சலாம் வைப்பார்.)

    அன்றைய கால கட்டத்தில்,தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மாக்சிச போர்வை இல்லாமல் நகர முடியாதவை என யாருக்குத் தெரியாது?

  36. Thesiyam says:
    15 years ago

    தமிழ்வாதம்Posted on 09/30/2010 at 3:05 pmபோராட்டத்தில் இறந்து போன ஆத்மாக்களால் தெரிவிக்கப்பட்டவை.தி.மு.க நிறத்தில்(சிகப்பும்,கறுப்பும் ) அடித்த துண்டுப்பிரசுரத்தில்,மாவோ,அரபாத் வரிசையில் தன்னை CHAIRMAN ஆக,மத்திய குழுவிற்கு தெரியாமல் வரித்துக் கொண்டு கியூபாவிற்கு காசி,மாவை,……(கூட்டணி உபயம்) சகிதம் உமா பயணம் சவாரி செய்தார்.துண்டுப் பிரசுரம் எழுதிக் கொடுத்தவர் கியூபா பற்றியோ,புரட்சிகர இயக்கம் பற்றிய ஞானமோ இல்லாத ஆங்கிலம் தெரிந்தவர்.
    ——————————-
    ஐயா , உங்களுக்கு தெரிந்தாக இருப்பதை சரியா எழுதாட்டி , எங்களுக்கு விளங்காது. யாரைச் சொல்லுறியள் , எவரைச் சொல்லுறியள். விளக்கமா சொல்லுஙஆ;கோ இல்லாட்டி சொல்லாதேங்கோ?

    • நெருஞ்சி says:
      15 years ago

      பரிமேலழகரும், ‘பாலா அண்ணையும்’ தமிழுக்கும், தேசியத்திற்கும் இன்றும் தேவைதான்.

  37. புள்ளிமான் says:
    15 years ago

    ஐயரே,

    உமா மகேஸ்வரனா(முகுந்தன்) பிரபாகரனா வயதில் மூத்தவர்கள்? என் நண்பர் ஒருவர் உமா மகேஸ்வரன் 1944 பங்குனி 2ஆம் திகதி பிறந்தவர் என்றார், அது சரிதானா? அப்படிப் பார்க்கின் பிரபாகரனைவிட முகுந்தன் மூத்தவர் என்றே தென்படுகிறது…

    நான் ஏன் கேக்கிறேன் என்டால், வயசு வித்தியாசம் அறிவு வித்தியாசத்திற்கு வித்திட்டிருக்கலாம் என்டுதான் 😉

  38. எல்லாளன் says:
    15 years ago

    எல்லாத்தையும் பாக்கேக்கை தலையே சுற்றுது சாமியோவ்….இந்த பன்னாடைகளுக்கு துணிவு இருந்த அளவுக்கு பகுத்தறிவு இல்லாமலே போயிட்டுதே எண்டு நினைக்கேக்க மனசு ரொம்ப ரொம்ப வலிக்குது ராசாமாரே…ரொம்ப கஷ்டமாயிருக்கு ….என்னோடை வாழ் நாளில இனிமே ஈழத்தமிழர்களுக்கு மோட்சமே கிடைக்காதா???

    • மாயா says:
      15 years ago

      எல்லாளன்,  ஈழத் தமிழருக்கு ஏன் மோட்சம் கிடைக்காது???

       இலங்கையிலிருந்து  சம்மனசுகள் குழுவொன்று மோட்சத்துக்கு வழி காட்ட புறப்பட்டுள்ளதே? அன்று   உசுப்பேத்திய தமிழ் அரசியல்வாதிகள் இளைஞர்களிடம் ஆயுதத்தை கொடுத்து ஏவி தமது பதவிகளை தக்க வைத்துக் கொண்டு முள்ளிவாய்க்கால்வரை கொண்டு போய் சாவடிக்க வழி காட்டினார்கள்.  இவர்களை நம்பி அன்றைய காசி ” பாடையில் படுத்தூரைச் சுத்தினாலும் , பைந்தமிழில் அழ வேண்டும் ” என்றார்.  ஈழத் தமிழருக்கு கடைசியில்  பாடையே பரிசாகியது. ஏகப்பட்டோருக்கு படு குளியும் , புல்டோசருமே பாடையாகியது. அதே தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும்   பாடையே இல்லாமல் படுகுளிகளில் தள்ளி விட்டு , புலத்தில் உள்ள இளையோரை உசுப்பேத்தி கொண்டு சென்று தள்ள வீசாவோடு வெளிக்கிட்டு உள்ளார்கள். இவர் சொல்வதைக் கேளுங்கள். உண்மை எல்லோருக்கும் விழங்கும். இதுவும் விழங்காவிட்டால் , தமிழருக்கு சுவர்க்கமல்ல நரகமே கிடைக்கும்.

      கேளுங்கள் இவர் வழியை:
      http://www.youtube.com/watch?v=qKConvId1Oo&feature=player_embedded

      //எல்லாளன்Posted on 10/01/2010 at 12:13 amஎல்லாத்தையும் பாக்கேக்கை தலையே சுற்றுது சாமியோவ்….இந்த பன்னாடைகளுக்கு துணிவு இருந்த அளவுக்கு பகுத்தறிவு இல்லாமலே போயிட்டுதே எண்டு நினைக்கேக்க மனசு ரொம்ப ரொம்ப வலிக்குது ராசாமாரே…ரொம்ப கஷ்டமாயிருக்கு ….என்னோடை வாழ் நாளில இனிமே ஈழத்தமிழர்களுக்கு மோட்சமே கிடைக்காதா???//

      • THAMILMARAN says:
        15 years ago

        இரண்டு தமிழர் இருந்தால் நான் கு பொலீஸ்ரேசன் தேவை என வைரமுத்து சொன்னார்.இந்தப் பேச்சுக்கள் எல்லாம் புலுடாக்கள் என்றூ எல்லோருக்கும் தெரியும்.

      • ramu says:
        15 years ago

        கடனட்டை மோசடியும், கந்து வட்டிக்கு காசு கொடுப்பதும் தனிமனித திறமை என்று சுத்த அயோக்கியத்தனம் பேசுகின்ற சமூகத்தில்தான் நாம் வாழுகின்றோம் என்பது உண்மைதான். புலிகளையும், அதன் வியாபார பினாமிகளையும் விமர்சிக்கின்ற அதேவேளை உமாமகேஸ்வரன் மாக்சிசலெனினிச சிந்தனையில் ராகுல் காஸ்ரோவுக்கே வகுப்பெடுக்கக்கூடியவர், தமிழர்களின் அரசியல் பற்றிய அறிவை விரல்நுனியில் வைத்திருந்தவர், சிஙகள தமிழ்,முஸ்லீம்கள்களுடைய விடுதலைக்காக இரவுபகலாக உழைத்தவர், என்று ஏன் சரடு விடுகிறீர்கள். சென்னை மொழியில் ” “கேப்பில கிடாய்வெட்டுறது” என்று சொல்லுவது இதனைத்தானா?

  39. thuyavan says:
    15 years ago

    பொடியப்பு பியசேன கட்சித் தாவல் – ஆரம்பமா? முடிவா? சண் தவராஜா
    September 28, 2010 No Comments
    சண் தவராஜா

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பொடியப்பு பியசேன, 18 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியமைக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கட்சியின் தலைமைப்பீடம் அறிவித்துள்ளது.

    நாடாளுமன்ற ஜனநாயக முறைமை உள்ள ஒரு நாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பு ஒன்றின்போது சுய விருப்பின்பேரில் வாக்களிப்பது சாதாரண விடயம். ஆனால், சிறி லங்காவைப் போன்ற அரைகுறை ஜனநாயகம் நிலவும் நாடுகளில்; கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கட்டுப்பாட்டைமீறி வாக்களிப்பது என்பது துரோகத்தனமாகவே பார்க்கப்படும். அந்த வகையில், பொடியப்பு பியசேன தனக்கு வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளார். அது மட்டுமன்றி, தேர்தல் நடைபெற்று முடிந்து ஆறு மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே இத்தகைய துரோகத்தனம் வெளிப்பட்டிருப்பது கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    மறுபுறம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டமைக்கு அவர் தெரிவித்துள்ள காரணங்கள் நகைப்புக்கு இடமானவையான உள்ளதுடன், அவரது சந்தர்ப்பவாத குணாம்சத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாக விளங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டுமானங்கள் அழிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஈழத் தமிழ் மக்கள் விருப்பமின்றியே பங்கு கொண்டிருந்தனர். முள்ளி வாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த துயரங்களும், முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் அவர்கள் அனுபவித்த அவலங்களும் மனதைவிட்டு அகல்வதற்கு முன்னரேயே நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் மனதாரப் பாராட்டப்பட வேண்டியவர்களே.

    தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் அனைத்தையும் இழந்து நின்றபோது அவர்களிடம் எஞ்சியிருந்த ஒரேயொரு ஆயுதம் அவர்களின் வாக்குப்பலம் மாத்திரமே. அதனைப் பகுத்தறிவுடன் பயன்படுத்தியமையாலேயே கடந்த தேர்தலின்போது 14 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெற முடிந்தது. அதிலும் கணிப்பீடுகளைப் பொய்யாக்கி அம்பாறை மாவட்டத்திலும் கூட ஒரு தமிழ்ப் பிரதிநிதி தெரிவாக முடிந்தது.

    பாண்டிருப்பு முதல் அம்பாறை வரை வாழுகின்ற தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பொடியப்பு பியசேன அவர்களால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாக முடிந்திருந்நதது என்றால், அதற்குக் காரணம் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் அவர் சம்பாதித்து வைத்திருந்த தனிப்பட்ட செல்வாக்கு அல்ல. மாறாக தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஆதரவும், அக் கட்சி வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தைத் தமிழ் மக்கள் உணர்ந்து இருந்தமையுமே.
    அகில இலங்கை மட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வலுவான கட்சியாக விளங்க வேண்டும், அக் கட்சியின் கரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும், ஒரு காலத்தில் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசமாக விளங்கி இன்று சிங்களப் பிரதேசமாக மாறிப் போயுள்ள அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய அம்சங்களின் அடிப்படையிலேயே அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். இதன் மூலமே பொடியப்பு பியசேன நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

    அந்த மாவட்ட மக்கள் அபிவிருத்திக்கும், சலுகைகளுக்குமாக வாக்களிக்க விரும்பியிருந்தால் ஆளுங் கட்சிப் பிரதிநிதி ஒருவருக்கு வாக்களித்து இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

    தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை கிழக்குக்கும் துரோகத்தனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் போன்று தெரிகின்றது.
    முதன்முதலாக, 1978 இல் பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய எம்.சி. கனகரெத்தினம் அரசாங்கத்தின் பக்கம் தாவினார். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற இவர் பின்னர் கொழும்பில் வைத்து தேசியத் தலைவர் பிரபாகரனால் சுடப்பட்டு, காயங்களுக்கு இலக்காகி சிலமாதங்களின் பின்னர் மரணமடைந்தார். (அதேவேளை, அவரது மகனான ரஞ்சன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட போது 1984 இல் மணலாறில் நடைபெற்ற தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.)

    கனகரெத்தினத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செ.இராசதுரை அரசாங்கத் தரப்பிற்குச் சென்றார்.

    சுமார் 25 வருடங்களின் பின்னர், 2004 இல் கருணா அம்மான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு விலகி அரசாங்கத்தின் பக்கம் தாவினார். அவரின் மாபெரும் துரோகம் ஈற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கே இயமனாக அமைந்து இன்றைய அவல நிலைக்குக் காரணமானது.

    இன்று நேற்று என்றல்ல, சரித்திரகாலம் முதலாக தமிழரின் மத்தியிலே துரோகிகளும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஆனால், காலம் அவர்களை எப்போதும் காலடியில் போட்டு மிதித்தே வந்திருக்கின்றது.

    இன்று, ‘கனகரெத்தினத்தின் வாரிசு’ என்றோ, ‘இராசதுரையின் வாரிசு’ என்றோ சொந்த ஊரில் நின்று மார்தட்டிக் கூற எவருமே இல்லை. கருணாவுக்கும், பியசேனவுக்கும், இந்த வரிசையில் இன்னும் வர இருப்போருக்கும் இதுவே நிலை.

    மறுபுறம், இத்தகைய துரோகத்தனத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மாத்திரமன்றி அவர்கள் பிறந்த பிரதேசத்தைச் சேர்ந்த அனைவருமே துரோகிகளாக, தரங் குறைந்தவர்களாகப் பார்க்கப்படக் கூடிய நிலை உள்ளமையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

    சொந்த இனத்ததுக்கே துரோகம் செய்துவிட்டு சிங்களப் பேரினவாதத்தின் காலடிக்குச் சென்றவர்களை தனது தேவை முடிந்நதும் சிங்களம் எவ்வளவு கேவலமாக நடத்தியது, நடத்திக் கொண்டிருக்கின்றது என்பதனை நாம் கண்டிருக்கின்றோம்: கண்டு கொண்டும் இருக்கின்றோம். இன்று சிங்களத்தின் காலடியில் கிடப்பவர்கள் அதனை உணரும் நாள் வெகு தெலைவில் இல்லை.

    தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு, சிங்களப் பேரினவாதத்தின் காலடிக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு பதவிகளும், வெகுமதிகளும் கிட்டக் கூடும். ஆனால், அவர் எதனைச் சம்பாதித்துக் கொண்டாலும் தனக்கும் தனது பரம்பரைக்கும் நற்பெயரையோ, கௌரவத்தையோ சம்பாதித்துக் கொள்ள முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

    மறுபுறம், தனது அணுகுமுறைகள் சிலவற்றை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உள்ளது. ஓர் உன்னத இலட்சியத்தின் அடிப்படையில் செயற்படும் கட்சி, தனது சார்பில் களமிறக்கும் வேட்பாளர்கள் இலட்சியத்தின் மீது பற்றுறுதி கொண்டவர்களாக உள்ளார்களா என்பதை உறுதிப் படுத்திய பின்னரேயே அவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். கொள்கையில் விசுவாசம் கொண்டவர்களைக் கண்டறியும் அதேவேளை புதியவர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.

    மேலும், அன்றைய கனகரெத்தினம் முதல் இன்றைய பியசேன வரையானோர் தாம் கட்சிக்குள் ஓரங்கட்டப் படுவதாகக் கூறி வந்திருக்கின்றனர். ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் வாக்குக் கேட்கும் கட்சியானது, முதலில் தன்னகத்தே ஜனநாயக மரபுகளைப் பேண முன்வரவேண்டும். ஒரு சிலரின் கருத்துக்களுக்கு அங்கீகாரமும் ஒரு சிலரின் கருத்துக்களுக்கு அலட்சியமும் காட்டும் நிலைப்பாடு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும். இதன்மூலமே இலட்சியத்தை வென்றெடுக்க முடிவதுடன் மேலும் உறுப்பினர்கள் வெளியேறுவதையும் தடுக்க முடியும்.

  40. kannan says:
    15 years ago

    உமாவின் இறுதிக்காலம் : கொழும்பு பொல்கன்கொடாவில் விஜயகுமாரான துங்கவின் வீட்டுக்கு பக்கத்துக்கு ஒழுங்கையில் தனது மனைவியுடனும் மெய்க் காப்பாளர் ராவின்னுடனும் வசித்து வந்த உமாமகேஸ்வரன் கொழும்பில் மிகச் சாதாரணமாக வலம் வந்தவர். புலிகளின் முள்ளிக்குள தாக்குதலும் சங்கிலியின் மரணமுமே இவரது தீவிர விசுவாசிகளாக விளங்கியவர்களையும் இவருக்கு எதிராக மாத்தியது
    முள்ளிக்குள தாக்குதலுக்கு பின்னர் கொழும்பு கல்கிசையில் பிளாட்டின் எதிர்காலம் குறித்து ஆலோசனை ஒன்று நடத்தப்பட்டது. அதில் மாணிக்கதாசன்,
    சித்தார்த்தர், மாறன் உட்பட பிளாட்டின் கடைசியில் எஞ்சி னின்ற சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். உமாவை பார்த்து பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டன.
    ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாத நிலையில் அவர் இடையில் எழுந்து வெளியேறி விட்டார். சில உறுப்பினர்கள் நிறைந்த போதையில் நின்று உமாவை விமர்சித்துக் கொண்டு இருந்தனர்.(அவர்கள் முன்னெப்போதும் அப்படி செயல்பட்டவர்கள் அல்ல) அந்தநாள் தான் அவருக்கு இறுதி நாளை குறித்த நாளாக இருந்ததாகவே கருதுகிறேன். இதில் றோவின் பங்களிப்பு இருந்ததை இதில் ஈடுபட்டவர்கள் கூட பின்னரே அறிந்துகொண்டனர். உமாவின் நெருங்கிய சகாவான சக்திவேல் பம்பலப்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டபோது பம்பலப்பிட்டி பிளட் டுக்கு தனது இருப்பிடத்தை உமா மாற்றினார். அவர் கொலை செய்யப்படும் அன்று பம்பலப்பிட்டி கடல்கரையில் ஒருவரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. மாலை 7 .௦௦ மணியளவில் அவர் கடல்கரையை நோக்கி வருகையில் ராவினின் (மெய்பாதுகாவலர்) வேட்டுகளுக்கு பலியானார். அவர் ராவினிடம் இருந்து தப்பினால் அவரை குறிவைக்க வேறு பலரும் கடல்கரை மற்றும் காலி வீதி எங்கும் நின்றதாகவும் அறிந்தேன்.

    • THAMILMARAN says:
      15 years ago

      வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்ததே,

    • ramu says:
      15 years ago

      உமா கொல்லப்படுவதற்கு சிலகாலத்தின் முன்னர் மாணிக்கதாசனை கொல்வதற்கு சிலரை உமா அனுப்பினார் என்றும், அவர்களை ச்ங்கிலியே தடுத்ததாகவும், சங்கிலி கடைசிகாலத்தில் முகுந்தனுக்காக செய்த கொலைகளுக்காக மனம் வருந்தினார் என்றும் சொல்லப்படுபவை உண்மையா? உமாவின் கொலையில் மாணிக்கதாசனுக்கும், சித்தார்தருக்கும் உள்ள தொடர்பு என்ன? சுவிசில் கொலையுண்டவருக்கும் உமா கொலைக்கும் என்ன சம்மந்தம்?

      • kannan says:
        15 years ago

        மாணிக்க தாசனை கொல்ல உமா ஆளை அனுப்பியதாக கூறுவது தவறு .ஆனால் நுவரெலியாவில் இருந்த சங்கிலி தண்டனை நிமித்தமாகவே முள்ளிக்குளம் அனுப்ப பட்டதாக அறிந்தேன். சுவிசில் கொல்ல பட்டவர் ராவின்(உமாவின் மெய்ப்பாதுகாவலர் ) இவர் அச்சுவேலியை சேர்ந்தவர். ஜேர்மன் வந்த மாணிக்கதாசன் அங்கிருந்தே திட்டமிட்டு ராவின் கொலைக்கு ஏற்பாடு செய்ததாகவும் ராவின்னிடம் நண்பர் போல் நீண்டநாள்களாக பழகியே இந்தக்கொலையை புரிந்ததாக அறிந்தேன். மாணிக்க தாசனுக்கு உமா கொலையில் தொடர்பு இல்லை. 100 % சித்தருக்கு இதில் தொடர்பு உண்டு. உமா கொலையின் பின்னர் சென்னை சென்ற சித்தார்த்தர் ஆச்சிராஜன் உட்பட்ட மற்ற அனைவரையும் சந்தித்து உமாவின் கொலைக்கான காரணத்தை அவர்களிடம் இருந்து கேட்டு அறிந்ததுடன் அதை ஒலி பதிவு செய்து மாணிக்க தாசனுக்கும் அனுப்பிவைத்திருந்தார். இச் சந்திப்பில் சாம் முருகேசும் பங்கேற்று இருந்தார்.

        • kannan says:
          15 years ago

          அந்த ஒலி ஆச்சிராஜன் கூறிய சில வார்த்தைகள் இவர் (உமா ) கொள்கை கொள்கை என்கிறார் கொள்ளை கொள்ளை என்பதை தான் எழுத்து பிழைவிட்டு கொள்கை என்கிறார். ஒரு உமாமகேஸ்வரனால் இயக்கத்துக்குள் 100 கணக்கானவர்களை படுகொலை செய்யமுடியும் என்றால் ஏன் நாங்கள் ஆறு பெயர் முடிவெடுத்து ஒரு உமாமகேஸ்வரனை கொல்ல முடியாது?

        • Selva says:
          15 years ago

          உமாவைக்கொலை செய்தது தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை கண்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.உமா கொல்லப்படுவதற்கு இருநாள்கலுக்கு முன்னர் கொழும்பிலிருந்து சென்னை வந்த ஆச்சிராஜன் சைதாப்பேட்டை சுடலையில் பிளாட் முக்கியஸ்தர் ஒருவருடன் இரவிரவாக முக்கிய விடயமாக கலந்துரையாடினார்.மறு நாள் மதியமளவில் ஆச்சி ராஜன் கொழும்புக்கு விமானத்தில் பயணமானார்.பத்திரிகையில் உமா கொல்லபட்டதாக அறிந்த பின்னர் சுடலையில் ஆச்சி ராஜனும் பிளாட்டின் முக்கியஸ்தரும் எதனைப்பற்றி பேசியிருப்பார்கள் என ஊகிக்குடியதாக இருந்தது.சிறிது காலத்திற்கு முன்னர் ஆச்சிராஜன் இறந்துவிடதாக தேசம் நெற் முலம் அறிந்தேன். ஆச்சிராஜன் தனக்கு நெருக்கமானவர்களை வெளிநாடுகளுக்கு அனுபிவைதிருக்கிறார். இதில் பிரபல “லண்டன் பத்திரிகையாளர்களும்” அடங்க்குவர்.

          • ragu says:
            15 years ago

            உமா கொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்ட ஏனையவர்கள் யார் ? பிளாட் மோகனுக்கு இதில் தொடர்பு உண்டா? சிவராமும் இதற்க்கு காரணம் என்று கேள்விப்பட்டன் உண்மையா?

  41. ஓர் மனச்சாட்சி says:
    15 years ago

    என்ன இருந்தாலும் புளொட்டோ புலியோ எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டையல் தானே. புளொட்டில நம்பிப் போனவைய உட்கொலையில போட்டினம். புலியில நம்பி போனவைய குண்டை கட்டி அனுபிசினம்.

    ஒரு காலத்தில இரண்டு இயக்கங்களும் தூள் வியாபாரத்தில தூள் பறந்தினம். பிரான்சில இருக்கேக்க புளொட்டுக்கு பேபி தூள் வியாபார பொறுப்பாளர், புலிக்கு பிள்ளையார் பொறுப்பாளர்.

    இப்ப இங்கு கனடாவில புலியின்ரை வீழ்சிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப புலோட்டிண்டை பாபுஜி ஈறா பலர் போட்டி. மே 18 புலித்தலைவர் மட்டையை போட்டதுதான் இறுதி யுத்தத்தில அகதியானவைக்கு உடுப்பு, கால் இழந்தவைக்கு சக்கர நாற்காலிக்கு பணம் எண்டு புலோட்காரர் சேர்த்தவை. இதில பணம் சேர்தததுக்கு இளையபாரதியிண்டை தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மட்டும் 15 ,000 டொலருக்கு கிட்ட சேர்த்து கொடுத்திருக்கு. இதைவிட வெளியிலையும் பெரும் தொகையா சேர்த்து இருக்கினம் (யாருக்கு எவ்வளவு என்று தெரியும் – கொடுத்தவை எல்லாம் ரசீது வேண்டியிருந்தால் தெரியும்) இப்ப இவை சேர்த்த உடுப்பு அங்கை போய் சேர்ந்ததற்கு என்ன உத்தரவாதம் (கனடாவில பழைய உடுப்பு சேர்த்து ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பும் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது) அப்படி இலங்கைக்கு அனுப்பி இருந்தாலும் அகதிகளுக்கு கொடுக்கப்பட்டதா அல்லது மலையக தெருக்களில் விற்கப்பட்டதா யாருக்காவது தெரியுமா.

    சக்கர நாற்காலிக்கு என்று சேர்த்த பணத்திற்கு சக்கர நாற்காலி வாங்கப்பட்டதா, அனுப்பப்பட்டதா என்றும் தெரியவில்லை. இதற்கு இப்போ இளையபாரதியை கேட்பதா, யாரை கேட்பது என்று கொடுத்தவர் பலர் முழிக்க. சிலர் அழிந்ததொட அழிந்தது எண்டு இருப்போம் எண்டு விட்டிட்டிடு இருக்கினம். கொடுதவைக்கு ஒரு சில உடுப்பு, 50 , 100 டொலர். சேர்த்தவைக்கு கோண்டைனர் கணக்கில உடுப்பு, ஆயிர கணக்கில பணம். புலி அழிஞ்சாலும் இவை விட மாட்டினம். இந்த இளையபாரதி முந்தி சுனாமிக்கும் பணம் சேர்த்து கணக்கு காட்டி தப்பியவர். இப்ப சொல்லுவார், அவையிட்ட நான் கொடுத்து போட்டேன் என்று. ஏமாறுபவன் இருக்குமட்டும் ஏமாற்றுபவனும் இருந்து கொண்டே இருப்பான்.

    – ஓர் மனச்சாட்சி.

    • mani says:
      15 years ago

      ivlavu solrirgal tamilar valvukku oru vali sollukalen

    • yazhavan says:
      13 years ago

      சுனாமியால் அடிபட்டு அழிஞ்ச சனத்தைவிட காசு கொடுத்து அழிஞ்ச சனம் தான் கூடப்பாருங்கோ.புலிகள் நன்றாகத்தான் பிச்சையெடுக்க கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

  42. thuyavan says:
    15 years ago

    இராணுவ ஆய்வு:
    விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முற்றுமுழுதாக அழிப்பதில் வெற்றிகண்ட இலங்கை இராணுவம் அடுத்த வருடம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய மாற்றங்கள்……….?
    [ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 04:21.32 பி.ப | இன்போ தமிழ் ]

    இலங்கையைப் பொறுத்தவரையில் இராணுவ ரீதியாக ஒக்ரோபர் 10 ம் திகதி இரண்டு விடயங்களில் முக்கியமான நாள்.

    முதலாவது இலங்கை இராணுவம் தோற்றுவிக்கப்பட்ட நிகழ்வு.

    இரண்டாவது இந்தியப்படைகள் விடுதலைப் புலிகளின் மீது போர் தொடுத்த நிகழ்வு.
    வடக்கு, கிழக்கில் இந்திய அமைதிப்படை புலிகள் மீது தொடுத்த போர் மூன்று வருடங்களுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது.

    சுமார் 1200 படையினரை இழந்து, சுமார் 6000 படையினர் வரை காயமுற்ற நிலையில் புலிகளை அழிக்கும் நடவடிக்கையை நிறைவு செய்யாமலேயே இந்தியா தனது படைகளை விலக்கிக் கொண்டது. ஆனால் 1949 இல் இதே தினத்தில் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முற்றுமுழுதாக அழிப்பதில் வெற்றி கண்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான படையினரைக் கொண்ட இலங்கை இராணுவம் ஒக்ரோபர் 10 ம் திகதியுடன் 61 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது.

    அதுவல்ல இங்கு நாம் குறிப்பிடும் விவகாரம்..

    ஜனவரியில் நடைமுறைக்கு வரும் புதிய பாதுகாப்புக் கட்டமைப்பு மாற்றங்களே இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

    இலங்கை இராணுவம் அடுத்த வருடம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய மாற்றங்கள் தான் இங்கு முக்கியமானவை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. போருக்குப் பிந்திய கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

    எதிர்காலத்தில் எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சவால்கள் ஏற்பட்டாலும் அதை முளையிலேயே கிள்ளி முறியடிக்கும் நோக்கம் முதலாவது.

    இரண்டாவது காரணம். புலிகளுக்கு எதிரான போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசுக்கு எதிராக அரசியல் நடத்தி வருவது.
    போருக்குப் பிந்திய பாதுகாப்பு வலுவாக்க நோக்கின் மற்றொரு முயற்சியாகவே அடுத்த வருடம் இலங்கை இராணுவத்தின் கட்டமைப்புகள் முற்றாக மறுசீரமைக்கப்படவுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் வழிகாட்டலுக்கு அமையவே இந்தப் புதிய மறுசீரமைப்புத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

    இதன்படி நாட்டின் தென்பகுதியில் நிலை கொள்ளும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் தற்போது விசேட அதிரடிப்படையின் வசம் உள்ள கிழக்குப் பகுதியின் பாதுகாப்பை இராணுவம் தன் வசம் எடுத்துக் கொள்ளவுள்ளது. அதேவேளை தற்போது வடக்கு,கிழக்கை மையப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை பரவலாக்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டிவிசனை நிரந்தரமாக நிலை நிறுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்புச் செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக அம்பாந்தோட்டையில் புதிதாக ஒரு டிவிசன் உருவாகக்கப்படவுள்ளது. இது 12வது டிவிசன் என்று அழைக்கப்படும். அம்பாந்தோட்டை வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்ற வகையிலும் அங்கு துறைமுகம், விமான நிலையம் போன்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாலும் அதன் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இராணுவத்தின் தென்பகுதி படைத் தலைமையகம் அமைக்கப்படும். தற்போது இது கண்டியில் இருந்து செயற்படுகிறது. மறுசீரமைக்கப்படவுள்ள தென்பகுதி படைத்தலைமையகத்தின் கீழ் மாவட்டத்துக்கு ஒன்றாக மொத்தம் மூன்று டிவிசன்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே பனாகொடவில் நிலைகொண்டுள்ள 11 வது டிவிசன் காலிக்கு மாற்றப்படும். புதிதாக உருவாக்கப்படும் 12வது டிவிசன் அம்பாந்தோட்டையிலும், 14வது டிவிசன் மாத்தறையிலும் நிலைகொள்ளவுள்ளன.

    13வது இலக்கம் துரதிஷ்டம் கொண்டது என்ற கருத்து நிலவுவதால், அந்த இலக்கத்தில் புதிய டிவிசன் உருவாக்கப்படமாட்டாது. இதற்கிடையே இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் மற்றொரு அங்கமாக புலிகளுக்கு எதிரான போரின்போது செயலிழந்து போன ஒரு இராணுவ டிவிசனை இராணுவம் மீளமைத்து வருகிறது.

    ஆனையிறவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வந்த 54வது டிவிசனே தற்போது மீளமைக்கப்பட்டு வருகிறது. இந்த டிவிசன் முன்னர் தேர்ச்சிமிக்க படையினரையும்,சிறப்பு அணிகளையும் கொண்டதொன்றாக விளங்கியது. அமெரிக்காவின் “கிறீட்பெரட்’ சிறப்புப் படையினரிடம் இந்த டிவிசனின் பல அணிகள் பயிற்சிகளைப் பெற்றிருந்தன. அதனால் தான் ஆனையிறவுத் தளத்தை ஒரு போதும் புலிகளால் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை அப்போது இருந்தது.

    ஐந்து பிரிகேட்களைக் கொண்டிந்த இந்த டிவிசனின் ஒரு பிரிகேட், 1998 இல் கிளிநொச்சி படைத்தளம் மீதான தாகுதலுடன் செயலிழந்தது.

    மற்றொன்று பரந்தனிலும், இன்னொன்று உமையாள்புரத்திலும் தளம் அமைத்திருந்து செயலிழந்து போயின.

    வெற்றிலைக்கேணியிலும், இயக்கச்சியிலும் எஞ்சியிருந்த இரண்டு பிரிகேட்களும் 2000ம் ஆண்டு புலிகள் நடத்திய ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் போது செயலற்றுப் போயின. ஆனையிறவையும் அதைச் சூழவுள்ள பகுதிகளையும் தக்க வைப்பதற்காக நடந்த சமர்களில் சிதைந்து போன 54 வது டிவிசன் பின்னர் முற்றாகவே கைவிடப்பட்டது. இந்த டிவிசனில் எஞ்சியிருந்த படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த ஏனைய டிவிசன்களுடன் இணைக்கப்பட்டனர். கடந்த பத்து வருடங்களில் இலங்கை இராணுவம் பல புதிய டிவிசன்களை உருவாக்கிய போதும் செயலிழந்து போன 54 வது டிவிசனை புனரமைக்கும் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஆனால் தற்போது மன்னார் மற்றும் மாந்தைப் பகுதிகளைத் தளமாக்க் கொண்டு செயற்படும் வகையில் 54 வது டிவிசன் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரிகேடியர் மைத்ரி டயஸ் தலைமையில் தள்ளாடியில் 54 வது டிவிசன் தலைமையகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் முன்னர் 212 வது மற்றும் 215 வது பிரிகேட்களாக செயற்பட்ட இரண்டு பிரிகேட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு 541 மற்றும் 542 என்று பெயரிடப்பட்டுள்ளன. இது மன்னார் மாவட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது டிவிசனாகும். ஏற்கனவே மடுப்பகுதியில் 61வது டிவிசன் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மற்றொரு டிவிசன் அமைக்கப்பட்டு மன்னாரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இந்தப் புதிய டிவிசன் இன்னமும் அதிகாரபூர்வமாக முறையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவில்லை. ஜனவரி மாதத்தில் இருந்தே இது முறைப்படி செயற்படும். அத்துடன் புதிய பாதுகாப்புத் திட்டத்துக்கமைய மாதுறுயா, யத்தலாவ பயிற்சி முகாம்களில் மேலதிக பயிற்சிகளை படையினருக்கு வழங்கும் வசதிகள் செய்யப்படவுள்ளன.
    போருக்குப் பிந்திய படைக்கட்டுமானங்கள் விடயத்தில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை இந்த படைக் கட்டுமான விரிவாக்கங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். அதேவேளை இலங்கை இராணுவம் வெளிநாட்டுப் படையினருக்குப் பயிற்சிகளை வழங்கும் திட்டம் ஒன்றையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

    அடுத்த வருடம் ஜனவரி 5ம் திகதி இந்தப் பயிற்சிகள்ஆரம்பிக்கப்படவுள்ளன. கொமாண்டோ பயிற்சிப் பாடசாலை,சிறப்பு படைகள் அக்கடமி,குறிபார்த்துச் சுடுதல் பயிற்சிப் பாடசாலை,மாதுறு ஓயா பயிற்சி நிலையம் ஆகியவற்றில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நான்கு வெளிநாட்டு இராணுவக் குழுக்கள் இந்தப் பயிற்சியைப் பெறவுள்ளன.

    இந்தியா
    பாகிஸ்தான்
    அமெரிக்கா
    பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியுள்ளார்.
    விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் பெற்றுள்ள வெற்றியை அடுத்து கொமாண்டோ மற்றும் விசேட பயிற்சித் தந்திரோபாயங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பல நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன. இதற்கமையவே வெளிநாட்டுப் படை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

    அதுமட்டுமன்றி,

    லெபனானில் அமைதி காக்கும் பணிக்கும் இலங்கை இராணுவத்தினர் அனுப்பப்படவுள்ளனர். லெபனான் அரசாங்கம் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதையடுத்தே அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் முதலாவது அணி லெபனான் அனுப்பப்படவுள்ளது. புலிகளுக்கு எதிரான போர் இலங்கை இராணுவத்துக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடங்கள் தான் இந்த நிலையை உருவாக்கியுள்ளது.

    கட்டுரையாளர் சுபத்ரா இன்போதமிழ் குழுமம்

    • yazhavan says:
      13 years ago

      உந்த இராணுவ ஆய்வ 2000ம் ஆண்டுமட்டில ஆராஞ்சிருந்தாலாவது புலிப்பிள்கைள் பலியாகியிருக்காயினம். இலங்கைப் படைத்துறை இராஜபக்ச வின் வருகையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்று இன்னும் உங்களுக்கு தெரியவில்லையா?. ராஜபக்ச இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் சீனாவையும் வைத்து விளையாடும்போதே தெரிந்திருக்கவேண்டும் புலிகளுக்கு குழிபறிக்கின்றார்களெண்டு. நீங்கள் தலைவர் செய்வாரெண்டு பேசாமல் இருந்துவிட்டீர்கள். ஆனால் தலைவருக்கு சயனைட் குப்பியைக்கூ கடிக்க பயம்.

  43. Soorya says:
    15 years ago

    அத்தனை யுக்திகளும் புலிகளினதே. கருணா மற்றும் பல கூடியிருந்து களுத்தறுத்த புண்ணாக்குகள் மூலம் சிங்கள இராணுவம் படித்ததை வைத்து புலிகளை வென்றார்கள். இதை இப்போது தமது கண்டுபிடிப்பென்று உ லகுக்கு பூச்சாண்டி காட்டப்போகிறானுக.

    • JHc says:
      12 years ago

      my friend don’t try to criticize former LTTE members, Do know one think LTTE Head board already know very much what going  to happen after 11.11 attack on US. AS per the plan LTTE try to escape trough the MOU 02 , But the The RAW and Srilankan Government they made Silent  trap trough some dis-para (over sees displace people from Srilanka). These Two party has already some perfect plan to dismiss  the LTTE among the Tamil people but  fortunately LTTE  carried out  some of the succesfull attacks against SLG. according to the situation LLTE able to occupied Tamils mind Closer to Them. After Mou LTTE gave lot room the Spies to interfere the tamil community .This happened by lack knowledge about domestic political view that time in  Srilanka .
      Following reasons how LTTE made mistakes.
      1. Avoided the instructions  Mr.Anoton Bala.S.
      2.They include  unknown New  LTTE members.
      3. discriminate the Eastern LTTE commandos and Eastern and Manner tamil inhabitants.
      4.Killed the Paramilitary Group carders During the MOU.
      5. Financial pursuer for Jaffna People.
      6.Young LTTE Members disappointing about Tamil Dis para Visit in tamils area.

      Parabaharan made first big Mistake.  He trust the Canadian and European LTTE  officials who collecting money For LTTE and LTTE  weapons agent.
      I dont think KARUA  and DUGA  activities is not big  Ham full for LTTE,

      Here i read comments from all the people ,Every one has  Super knowledge think i will copy this comments i will make one book . Iyer  Did Outstanding JOB.

      THAKYOU GENTS
      JHC
      AIC                  

  44. thuyavan says:
    15 years ago

    October 21, 2010 No Comments

    1995 ம்ஆண்டு காலப்பகுதி யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு பெரும்பாலனமக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்து வன்னியில் பேரவலங்களை சந்தித்துக்கொண்டிருன்தனர்.

    முன்னெப்போதும்ஏற்ப்பட்டிராத ஒரு நிகழ்வு ,மக்களின் பெரும்இடப்பெயர்வு

    போராட்டத்தின் பெரும்பின்னடைவு இவையெல்லாம் எமக்குள் ஒரு வெறுமையை ஏற்படுத்தியிருந்தகாலம்.அப்போது மேற்குலக நாடு ஒன்றிடம் இருந்து

    ஆயுதங்களை கீழே வைத்து விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை ஒன்றுக்கு

    முன்வரவேண்டும் என்றகோரிக்கை முன்வைக்கப்படுகிறது அதற்க்கு விடுதலைப்புலிகளும் வழமை போல தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும்

    வரை ஆயுதங்களை கீழே வைக்க முடியாது என பதிலறிக்கை விட்டனர் .

    இச்செய்தியை பார்த்த இடம்பெயர்ந்து வன்னியில் சிறு கொட்டிலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த நண்பரொருவர் அவர் ஒரு தீவிர போராட்ட ஆதரவாளர் ,கல்வியாளர் அவர் கேட்ட சில கேள்விகளிற்கு அன்று பதிலளிக்க முடியாமல் அவருடன் நீண்ட உரையாடலை மேற்கொண்டது இன்று என் நினைவில் வருகின்றது .அவர் கேட்டது இதைத்தான் ”தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவம் நிலை கொண்டுள்ளது அங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சிறு தொகை மக்களே வாழ்கின்றனர் இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கும் ”.

    போராட்டத்தின் பின்னடைவு, அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த விரக்கதி என்பவற்றுடன் அவர் கேட்டவற்றுக்கான பதில் அன்று என்னிடம் இருக்கவில்லை .

    அனால் இன்று போராட்டத்தையே இழந்த நிலையில் ஆயுதங்கள் எவ்வாறு தமிழின இருப்பை பாதுகாத்தன என்பதையும் ஆயுதங்கள் அற்ற நிலையில் தமிழர் தாயகத்தில் நடப்பனவற்றின் ஊடாகஅவருக்கும் அவரை போன்றவர்களுக்குமான சரியான பதில் கிடைத்துக்கொண்டிருக்கின்றது .

    விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களில் தமிழர் தாயகத்தில் நடக்கின்ற நில கபளீகரங்கள்,அத்துமீறிய குடியேற்றங்கள் ,கலாச்சார சீர்கேடுகள் சொல்லில் அடங்காதவை .

    ஆயுதங்கள் இயங்கியவரை எல்லா மாவட்டங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் எந்த சிங்களவரும் அங்கு முதலிட வரவில்லை ,எந்த சிங்களவரும் சுற்றுலா வரவில்லை இலங்கையின் வடகிழக்கையே மறந்திருந்தனர் .

    ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின்பு லட்சக்கணக்கான சிங்களவரின் சுற்றுலா ,சிங்கள முதலீட்டு நிறுவனங்களின் படையெடுப்பு ,யாழ் நகர வீதிகள் எங்கும் சிங்களவரின் தெருவோரக்கடைகள் ,மட்டக்களப்பில் கடற்க்கரை பிரதேசங்கள் எல்லாம் சிங்கள அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்படுகிறது ,ஏனைய தமிழ் பிரதேச கடற்கரைகளில் சிங்களவரின் வாடிகள்,திருமலையை இந்தியாவிற்கு தாரைவர்த்தல் என தொடர்ந்த கூத்துக்களுக்கு மகுடம் வைத்தாற்ப்போல் யாழ் புகையிரத நிலையத்திற்கு வந்திறங்கிய 500 மேற்ப்பட்ட சிங்களவரின் வருகை அமைந்து விட்டது .
    இக்குடியேற்ற நடவடிக்கைகளிற்கு எதிராக தற்போது தமிழர் தலைமைகள் என்று கூறிக்கொள்பவர்களால் வெறும் அறிக்கைகளை விட முடிந்ததே தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை .அரசியல் ஆக்க வேண்டாம் என ஆனந்தசங்கரியாரும் ஆவணங்களை பரிசீலிக்க வேண்டுமென மாவையரும் அறிக்கை விட்டனர் . அமைச்சர் தேவானந்தா அண்மையில் அரியாலையில் நடாந்த ஏர்பூட்டு விழாவில் உரையாற்றியபோது தம்முடைய நிலைப்பாடு பற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தார் , அதாவது கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்கள் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்என்பதே தமிழ்மக்களிற்கு அவரின் அறிவுரையாக

    இருந்தது . அவ்வாறானவரிடம் சிங்களவரின் அத்துமீறல்கள் பற்றி எதுவும் எதிர்பார்க்க முடியாது .

    ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் ஆயுதப்போரட்டதிற்குஎதிராகவும் அதை

    முன்னெடுத்த விடுதலைப்புலிகளுக்கு

    எதிராகவும் கருத்துக்கள் கூறிய உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் பிரமுகர்கள் எல்லாம் இன்று எங்கே போயினரோ தெரியாது .

    இலங்கையில் ஒரு இனத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட மேற்குலக ஜனநாயகவாதிகள் கூட மௌனமாகவே இருக்கின்றனர் .

    சிங்களத்தின் இன அழிப்பிற்கு எதிராக யாருமே எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நன்கு உணர்ந்ததால் தான் விடுதலைப்புலிகளின் தலைமை ஆயுதங்களை கீழே வைப்பதில்லை என்ற தமது முடிவில் உறுதியாக இருந்தனர்.ஆயுதங்கள் அற்ற நிலையில் என்ன நடக்கும் என்று தலைவர் அன்று தீர்க்கதரிசனமாய் கூறியவை இன்று நியத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.

    பண்டாரநாயக்காவிற்கு ஒரு திருச்செல்வமும் சந்திரிக்காவிற்கு கதிர்காமரும் இன்று மகிந்தருக்கு டக்கிளசும் கருணா போன்றவர்களும் காலத்திற்கு காலம் தமிழினஅழிப்பை நியாயப்படுத்தி சிங்களத்திற்கு ஆதரவாக சர்வதேசத்திலும்

    உள்ஊரிலும் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர் .

    தமிழ் மக்களிற் சிலரும் காலம் காலமாக இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் தமது அற்ப சலுகைகளுக்காகவும் அரச உத்தியோகத்திற்க்காகவும் இவர்கள் பின்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

    வடகிழக்கு தமிழ் மக்கள் தங்கள் வீட்டுகொல்லைகளையும் , கிணற்ரடிகளையும் ,கோவில்களையும் சிங்களத்திடம் இருந்து எப்படி

    பாதுகாக்கபோகிறார்கள்?

    தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள்இவ் இனஅழிப்பிற்கு எதிராக எதுவும் செய்யக்கூடிய நிலையில் தற்போது இல்லை,எனினும் தமது கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய வரலாற்றுகடமை தாயகத் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது .அதை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு உணர்வுள்ள தமிழ் அரசியல் வாதிகளிடமும் பொறுப்புள்ள தமிழ் ஊடகங்களிடமும் உள்ளது .

    ஒரு இனத்தின் மொழி ,பண்பாடு,கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட்டால் அந்த

    இனத்தை எவராலும் அழிக்க முடியாது .

    அதனால் தான் சிங்களம் இப்போது தமிழரின் பண்பாடு, கலாச்சாரங்களை அழிக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கிறது .அதற்காகவே சிங்கள இனக்கலப்பு தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது .

    பெடியள் கெதியா வந்திடுவினம் என்ற எதிர்பார்ப்பே தாயகத்தில் நிலவுவதாகக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .அந்த மக்களின் நம்பிக்கைபலிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழரின் விருப்பமும் கூட .

    அ. திருமாறன்

    • murugesu says:
      15 years ago

      தமிழருக்கு கனவு தாருங்கள் நெருப்புத்தராதீர்கள்,இல்ங்கை எரிந்து கொண்டிருக்கத்தான் வேண்டுமா.

    • mamani says:
      15 years ago

      ஓம் ஓம் மகிந்த தனது பிறந்த நாளுக்கு நவ.18 கன பெடியளை விடப்போறாராம். அனேகர் கெதியா வந்திருவினம் யோசிக்காதேங்கோ.

      • yazhavan says:
        13 years ago

        பிரபாரன்கூட செய்யாததை மகிந்த செய்கிறார் எண்டு சொல்லுங்கோ.

    • a voter says:
      14 years ago

      அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறுகின்றன தான். ஆனால் சிங்கள மக்களின் சுற்றுலாவை தவறாக மதிப்பிட வேண்டாம். ஒரு அரச அலுவலகத்தில்நான் சந்தித்த ஒரு சிங்கள பியோன் நான் தமிழன் என்று அறிந்ததும் தான் யாழ்ப்பாணம் போனதாகவும் அங்கே மக்கள் வாழும் நிலை நல்லதல்ல என்றும் இப்போதுதான் தனக்கு உண்மை தெரிவதாகவும் சொன்னார்.

      • விளங்காமுடி says:
        14 years ago

        பியோனுக்கு காசு கொடுத்து,யாழ் அனுப்பியது,யாரெனக் கேட்டுச் சொல்லுங்கள்.

        • ramu says:
          14 years ago

          பியோனுக்கு யாழ் போய்வர காசுகொடுத்தது யார் என்று விசாரிப்பதைக்காட்டிலும் சுருட்டிய பலமில்லியன் டொலர்களைப் பற்றி புலிப்பினாமிகளிடம் கேள்விகேட்பது ந்ல்லதில்லையா?

          • yazhavan says:
            13 years ago

            விளங்காமுடி இப்ப விழங்காமுடி ஆகிவிட்டதுபோல். அதுதான் பதிலைக்காணும்

      • yazhavan says:
        13 years ago

        ஏன் தமிழ் மக்களும் தான் சிங்கள பகுதிகளில் குடியேறுகிறார்கள. வெறும் நிலத்தில்தான் தமிழ்மக்களின் கலாச்சாரம் வளருக்கின்றது என்று கதைவிடவேண்டாம். உங்கே வெளிநாட்டில் எங்கட இளசுகள் ?எப்படி காலாச்சாரத்தைப்பேணுகினம் என்று படம் போட்டு காட்டவோ?. ஏதோ யாழ்ப்பணத்தில் மட்டும் தான் கலாச்சாரம் அழிகிறது என்று அழுகிறீர்கள். கறுப்புப் பெண் என்றால் 5லட்சம் கூடக்கேட்பது தான் தமிழ் கலாச்சாரமெண்டால் அப்படிப்பட்ட கலாச்சாரம் தேவையில்லை. வெளிநாட்டில்இருந்துகொண்டு இந்தியாவில இருக்கிற கள்ளச்சாமிமாருக்கு காசு அனுப்பிறதை விட்டுட்டு படிக்கவளியில்லாத பிள்ளைகளுக்கு படிக்க காசு அனுப்பினால் பேருதவியாக இருக்கும். சும்மா இருந்து ஒப்பாரி வைப்பிதைவிட இப்படி ஏதும் செய்தால் நன்றாகவிருக்கும்.

    • yazhavan says:
      13 years ago

      ஏன் நீர்போய்நின்று பாதுகாக்கலாம் தானே

    • yazhavan says:
      13 years ago

      ஓம் புலிகளுக்கு எதிராக கருத்துக்கள் தானே கூறப்பட்டது. எதிராகயாரும் போராடவில்லையே. சந்திரிகாவினுடைய கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒருபெண்ணை ஒருசிங்கள் ஆண் திருமணம் செய்யும் போது அதை எந்தவொரு சிங்கள மக்களும் தடுக்கவில்லையே. ஏன் நீங்களும்தான் சும்மா இருந்தீர்கள். தீவிர புலி விசுவாசியாக இருந்த ஒருபெண் எப்படி மாறினாள். அவள் சிந்திக்கத்துணிந்துவிட்டாள்.

  45. thuyavan says:
    15 years ago

    http://www.pakirvu.com/?p=4316

  46. xxx says:
    15 years ago

    “பெடியள் கெதியா வந்திடுவினம் என்ற எதிர்பார்ப்பே தாயகத்தில் நிலவுவதாகக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .அந்த மக்களின் நம்பிக்கைபலிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழரின் விருப்பமும் கூட” —அ. திருமாறன்

    அவை நீங்கள் நல்ல நித்திரையிலிருந்த போது வந்த தகவல்களாகத்தான் இருக்கும்.
    சனங்கள் பகல் கனவு காணுவதிலிருந்து மீண்டு விட்டார்கள்.

  47. nesan says:
    14 years ago

    புளொட்டிற்காவும் புலிக்காகவும் மாறிமாறி மாரடிப்பவர்கள் குணத்தை மாற்றுவதாக தெரியவில்லை.இரண்டு பகுதியினருமே தங்களது குழியினை தாங்களே வெட்டியவர்கள்.புரியல்ல?இருபகுதியுமே மனிதகுலத்தின் எதிரிகள்தான்.ஆச்சரியப்படுவதற்கில்லை.வரலாறைபுரிந்தவர்களுக்குப் புரியும்.புளொட்டிற்கும் புலிக்கும் குணம்சம் ஒன்று.தோற்றத்தில்தான் சற்று வித்தியாசம்.

    மற்றும்படி,அய்யர் மூலம் எமக்குத்தெரியாத சில விடயங்களை அரியக்கூடியதாக இருந்தது. அய்யருக்கு நன்றி!

  48. Danson says:
    12 years ago

    In the early years of our struggle, with the limited knowledge of local political and international political dimension, and only working with a handful of activist, I am not sure whether Iyar grasped the true dimension of a freedom struggle. Since he left the homeland, the Tamil struggle has gone through so much transformation and thousands have sacrificed for the just cause (by martyrs as well as by innocent Tamils). As far as the Tamil struggle is concerned, it is a toddler’s talk, not really based on a true experience of a grownup.

  49. Eelan says:
    12 years ago

    Having read the comments by various individuals,it is obvious all the oraganisations have made mistakes knowingly or otherwise during the liberation struggle.
    It is not an abnormal behaviour.
    After all,it proves that they are human.
    Mistakes and blunders have occured in every international liberation struggles.
    None was immune to it.
    Important thing here is to achieve the aim.
    LTTE did achieve the aim to some extent,by liberating most of the Thamileelam teritory,settin up a de-facto state and ruled it for more than five years and prevented the sinhala nazi army stepping into the liberated areas.
    This is a monumental achivement considering the splits in the struugle.
    If the other oraganisation,were honest in their intentions they should atleast refrained from betraying the struggle by colluding with the ENEMY.
    And they were manily responsible for the Mullivaikkaal end,even though 9/11 and IC also played a part in it.
    We are witnessing the outcome of the treachery now, in TNA’s actions and activities.
    As a confirmed Marxist,the leftist movement and so-called leftist were and are just dogmatists.Now they are pandering to the National bourgeios for pittance.
    Karl Marx will be turning in his grave!

  50. Eelan says:
    12 years ago

    The failure of our revolution is not surprising.
    The October Revoluotion, Chinese Revolution,Vietnamese Revolution and the Cuban Revolution have al failed to achive its aim after victorious conclution.The countries are back to squre one,and are following the reactionery policies of the regimes they brougt down in armed struggles.
    Cuban Revolution is the worst of the lot.
    The other revolutions were defeated after the demise of the architects of those revolutions-Lenin,Mao and Ho Chi Min.
    But the father of the Cuban Revolution -Fidel Castro-is alive and kicking while his revolution has been defeated by his successors.
    its really a shame!

  51. zuban says:
    12 years ago

    we are waiting ayarval’s confession

  52. nov says:
    11 years ago

    ninkal unkal patti thatpothaya nilai enna?

  53. வ.ஐ.ச.ஜெயபாலன் says:
    11 years ago

    இங்கு எழுதுகிறவர்கள் ஐயரின் கட்டுரை போன்று போராட்ட அனுபவங்கள் தொடர்பாக  பல்வேறு தரப்பில் இருந்தும் இதுவரை வெளிவந்திருக்கிற புத்தகங்கள் கட்டுரைகள் பற்றிய நூல் பட்டியல் ஒன்றை தயரிப்பதில் பங்களிப்புச் செய்ய முடியுமா?  முகவும் பணிவன்புடன் விண்ணப்பிக்கிறேன்
    visjayapalan@gmail.com

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...