Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – கவிதா (நோர்வே)

இனியொரு... by இனியொரு...
02/09/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
11
Home பிரதான பதிவுகள் | Principle posts

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – கவிதா (நோர்வே) – பகிர்வு 11

யாப்புக்குள் அடங்கக் கூறுவது மரபுக் கவிதை. யாப்பின் திணிப்பறுத்து செய்திக்கு முதன்மை தருவது புதுக்கவிதை. சொற்சுருக்கம், உணர்ச்சிகளின் வேகம், வழக்கிலுள்ள சொல்லாட்சி, என்பன புதுக்கவிதையின் குறியீடுகள். புதுக்கவிதை இன்று தனக்கான ஒரு இடத்தை நிலைப்படுத்திக்கொண்டு பலராலும் விரும்பப்படும் இலக்கிய வடிவமாக இன்று வளர்ந்திருக்கின்றது. சமுதாயச் சீர்கேடுகளை உணர்த்தவும் உடனுக்குடன் பதிவு செய்யவும் இலக்கண யாப்பு தடையாக இருக்கின்றது. கருத்திற்கு முதன்மையளிப்பதே புதுக்கவிதையின் முதன்மை நோக்காகும். போரின் ரணங்களும் அதன் பரிமாணங்களும், விடுதலை வேட்கையும் கலந்த கவிதைகளை கொண்ட நெருப்புப் பூக்கள் என்ற ஒரு கவிதைத்தொகுதி நேற்று என் கைசேர்த்தது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது கவிதை. போர்ச்சூழலில் இருந்து புறப்பட்ட ஈழத்தமிழர்களின் கவிதைகள் ஏராளம். நெருப்புப் பூக்கள் என்ற இக்கவிதை நூல் தனக்காகப் பேசியதைவிட போரையும் ஒரு சமூகத்து வலியையும் பேசியிருக்கிறது. தனது நாட்களையும், தனது உணர்வுகளையும் வெளிப்படையாவே பேசியிருக்கிறார் கவிஞர் கல்லடி றொபட். நேரடியான மொழியில் வாழ்வின் கனத்த தருணங்களை கவிதையாக்கியிருக்கும் கவிஞரின் வரிகளில் பல நேரங்களில் பிரச்சாரத் தொனியும் கலந்து வருகிறது.

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் கவிதையாக இப்படிப் பேசுகிறது. இவ்வரிகளில் இருக்கும் தேடல் ஒரு தனிமனிதனின் தேடலாகவோ புலம்பல்கலாகவோ இருக்க முடியாது. இது ஒரு சமூகத்தின் கதறலாக மனப்;பாறைகளில் மோதி விழுகிறது.

என் தாய் அணிந்த புடவை
தங்கை அணிந்த தாவணி
தமக்கை அணிந்த சட்டை
தந்தையின் வேஷ்டி
அண்ணனின் சாரம்

இதில் ஏதாவது
கிடைத்தால் போதும்
நான்
என் தேடலை
நிறுத்திக் கொள்வேன்

சம்பவங்களின் சில பொறியிலிருந்து கவிதை உருவாவது போல. நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்கள் என்பது மனித வாழ்வையே மாற்றிவிடக்கூடிய வல்லமை கொண்டது. ஈழத்தமிழ்ப் போராடத்தில் எழுந்த இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொண்ட இளைஞர்களின் வாழ்வை சொல்லும் வலி சுமந்த வரிகள் மார்ப்பை அழுத்துகிறது. சுயமரியாதை உள்ள எந்தப் படைப்பாளியும் பொறுத்துக்கொள்ள முடியாத அவமதிப்புகளின் விளைவுகள் இந்த வரிகள்.

பாலருந்திய
தாயின் மார்பில்
அந்னியன் மிதிப்பது கண்டும்
அண்ணன் கோபப்படவில்லை
அம்மாவை அணைத்தபடி
நான் வீடு சென்றேன்

அண்ணன் வீடு வரவில்லை
காற்றின் அசைவுக்கே
குரைக்கும்
என் வீட்டு நாய்
கிணற்றுக் கட்டில்
இருந்து விட்டு
எழுந்து செல்லும்
உருவம் கண்டு
குரைக்காமல்
வாலாட்டுகிறது

போரின் ரணங்கள் நிரந்தர பிரிவுகளையும் வடுக்களையும் ஏற்படுத்திவிடும். வெறுமையான போர்ச்சூழலில் இளம்பிராயங்களில் மனதில் பதிந்துவிடும் வடுக்கள் ஆழமானவை. வாழ்க்கையின் அனுபவங்கள் சோகம் இழைத்த கவிதை வார்த்தைகளோடு கரைந்து வரும் வார்ப்படம் போல ஒரு குட்டிப்பூனையின் கதை சொல்கிறார் கவிஞர். நான் இரசித்த கவிதைகளில் இந்தப்பூனைக் கதையே இந்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துவிட என்னைத் தூண்டியது.

அன்பாய் ஆசையாய்
அழகிய பூனைக்குட்டி
வளர்த்தேன்

வீதிவழியே போன
பூனைக்குட்டியை
தெருநாய்கள்
கடித்து குதறிவிட்டன

பூனை சீறவில்லை
அதனால் சீறமுடியவில்லை
பூனைக்குட்டி
காணாமல் போய்விட்டது

என் பூனைக்குட்டியைக்
கண்டு வந்த ஒருவன்
என்னிடம் சொன்னான்
என் பூனை இப்போது
சீறுகிறதாம்

தனக்கும் தன் சமூகத்திற்கும் நேரும் அவலங்களை தன் பக்கச்சிந்தனையில் இருந்து கொண்டு எழுதிய பல கவிதைகளை இத்தொகுதியில் காணக்கூடியதாக இருக்கிறது. அன்பைவிட பெரிய சொல் பூமியில் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க முடியாது என்பதை ஆதாரிக்க முடியாத ஒரு இளைஞனின் உணர்வு வேகத்தை மட்டுமே இந்த வரிகளின் காண்கிறேன். பீறிடும் இரத்தத்தை ரசித்துக்கொண்டு நிற்கும் மனநிலையை எமது போராட்டமும் இயக்க வாழ்வும் எமது சந்ததியினருக்கு திணித்திருக்கிறது என்பதை எதை சொல்லிச் சமாதானமடைய முயன்றாலும் இது குரூரசகாப்தத்தை விட்டுச்சென்ற போர்க்காலம் என்றே குறிப்பிட வேண்டும். வன்முறையை தமக்குள் குடியேற்றிய இளைஞர்களுள் ஒருவராக கல்லடி றொபட் தன் கவிதையிலும் வன்முறையை குடியேற்றி இருப்பதை பல கவிதைகள் பேசுகின்றன.

எனக்கு
என் முன்னோர் மீது
கோபமில்லை

மண்டை வெடித்து
இரத்தம் வழிந்தபோதும்
ஆகிம்சை கோசமே
எழுப்பினார்கள்

என்னால்
அப்படி முடியாது
எதிரியின் இரத்தம்
பீறிதும் போதினில்
எங்காளமிட்டு சிரிப்பேன்

எந்த இடத்தில் எந்த நிலையில் இருந்தாலும் உயிர் கொல்லும் ஆயுதங்கள் என்பவை அச்சத்திற்குரியவையே. ஆயுதத்தின் இதயம் இரும்பால் ஆனது அதற்கு அண்ணன் தங்கை தெரியாது. வெடிக்கவும் உயிர் பறிக்கவும் மட்டுமே பழக்கப்பட்ட ஆயுதங்களை கண்டு அஞ்சும் மனிதர்களைப் பார்த்து பரிதாப்படும் கவிஞரின் இந்தக்கவிதையைப் பற்றிச் சொல்வதைவிட ஏன் என்ற கேள்வியோடு அமர்ந்திருந்து சிந்திப்பதே சிறந்தது.

என்
அண்ணன் அக்கா
தம்பி தங்கைமீது
எனக்கு
கோபம் கோபமாய் வருகின்றது
என் கையிலிருக்கும்
துப்பாக்கி கண்டும்
அஞ்சி நடுங்குகிறார்கள்
இவர்கள்

அனைத்துத் தரப்பு மக்களிலும் சீழ்பிடித்த கொடுங்காயங்களைப் போர்ச்சூழல் ஏற்படுத்திவிடும். போர் என்ற சூழல் உருவாகியபோதே சமூக ஒழுங்கு, கட்டுமாணம் எல்லாம் சிதறிவிடுகிறது. துப்பாக்கிச் சத்தங்கள், உயிரின் வலி, அகதி வாழ்வு, இழப்புகள், இறப்புகள் என்பவை மட்டுமல்ல மனித மனங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அனர்த்தங்கள் தினசரி நிகழ்வுகளாக மாற்றம் பெறுகிறது. இத்தகைய மாற்றங்கள் என்பது அந்நியர்களால் மட்டுமல்லாது எம் சகோதர இயக்கங்களாலும் கொண்டுவரப்பட்டது என்பதை எற்றுகொள்ள முடியாத மனதின் வார்த்தைகள் இப்படி வந்துடைகின்றன. எப்படித்தான் விளங்கிக்கொள்ள முடிந்தாலும் இனவெறியின் வாசம் இந்தக்கவிதையில் தடவப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

எவருடைய விரல்நுனியும்
மேனியில் படுவதை
விரும்பாத நான்

சோதனைச் சாவடியில்
காவிபடிந்த பற்களுடைய
ஆயுதம் தரித்த
அந்நியன
சோதனையென்ற பேரில்
மேனியை தடவுகின்றபோது
பற்களை
இறுகக் கடித்தபடி
உடல் வியர்க்க
அருவருப்புணர்வுடன்
நிலையாய் நிற்கின்றேன்

கலைஞன் என்பவன் பலதரப்பில் இருந்து விசாலமான பார்வையுடன் நியாhயங்களை விசாரணை செய்ய வேண்டியவன். கவிஞர் கல்லடி றொபட் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றாலும் போர்சூழலின் பக்கவிளைவாக பெருகியிருக்கும் இலக்கியங்கள் வெறும் உணர்ச்சிமிக்க கணங்களின் உளறல்கள் ஆகிவிடாது பக்கசார்பற்ற நிலையை நிதானத்துடன் ஆராயும் படைப்புகள் வெளிவரவேண்டும்.
வெறும் அறிக்கைகளாலும், கூக்குரல்களாலும் மண்டிக்கிடக்கும் தேக்கங்களை உடைத்து விடமுடியாது. விசாலமான பிரபஞ்சதின் முலைமுடுக்கெங்கும் பயணப்படும்; வேகமும் உடைப்பும் கவிதை இலக்கியங்களில் நிகழவேண்டும்.

இளைஞர்களே
யுவதிகளே
ஈழத்துப் போர்களத்துக்கு
வாருங்னளென்று
உங்களை அழைக்கமுடியுமா?
வந்துசேர வேண்டியது
உங்கள் கடமை

சுடலைகள் சோடிக்கப்படுகின்றன
சுதந்திர கீதம் ஒலிக்கப் போகிறது

வன்முறையை கையில் எடுத்த ஒரு ஆயுதப்போராளியின் மனதையும், அனுபவத்தையும் அதற்கேயான பிரச்சாரத்தொனியையும் இப்போர்காலகவிதைகள் கொண்டு வந்திருக்கின்றன. வன்முறை குணங்களையும் வன்முறை மனநிலைகளையும் கலைந்துவிட்டால் பிரச்சாரத் தொனிக்கவிதைகள் மறைந்து காலத்தினாற் சிறந்த பதிவுகளை நாம் பகிர முடியும். இப்படியெல்லாம் பிரச்சாரமாகவும், வன்முறை தூண்டும் விதமும் எழுதலாமா என்ற குற்றச்சாட்டு அல்ல இது. படைப்பாளிகளுக்கு கட்டுப்பாடு எதையும் விதிப்பது பொருத்தமானதல்ல.

கவிதை என்பது அர்த்தங்கள் புதையுண்டுகிடக்கும் கல்லறையல்ல. மாறாக வெளியெங்கும் தூரப் பரவும் விதைகள் என்பதை உணருதலும் அவசியமே. வாசகன் படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாசகனுக்குள்ளாக எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் விதைக்கும்; கவிதைகள் நோய்களைப்போல் பரவி கல்லறைகளில் முடிந்துவிடாக்கூடாது. ஒவ்வொரு கவிதையும பிரபஞ்சம்மெங்கும் பூக்கச்செய்தல் வேண்டும் என்ற எனது அவாவின் தூண்டுதலில் எழுதப்பட்ட பகிர்வே இது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வெள்ளைக்கொடி விவகார வழக்கு..

Comments 11

  1. THAMILMARAN says:
    15 years ago

    எத்தனை நாட் களூக்குத்தான் விம்மிக் கொண்டே இருப்பது, விழுந்த மரங்களீல் அரும்பும் விழுதுகள மரமாக்கும் உரம் நம்மிடம் வரவேண்டும்.விழுந்தோம் என அப்படியே கிடந்தால் நாம் எழுந்து நட க்க முடியுமா. இப்போது நமக்குத் தேவை நம்பிக்கைகள் புலம்பல்கள் அல்ல.எல்லாவற்றயும் கடந்து, எல்லாவற்றயும் மறந்தால் மட்டுமே நம்மால் மாற்றங்கள நம் மண்ணீல் படைக்க முடியும் இல்லை என்றால் நேற்றூப் போல் இன்றீல்லை எனும் நினைவுகளே நம்மைக் கொன்றூ விடும்.சகிக்க, மனிதனை மதிக்க அன்பு செய்யக் கற்றூக் கொள்வோம் மாற்றத்தை நாமே படைக்கலாம்.

    • Ravi says:
      15 years ago

      சரியாக எழுதியுள்ளீரகள்.

    • Suppu says:
      15 years ago

      சொல்ல வேண்டியதைச் சொன்னீர்கள். எமது நாட்டில் போராட்டம் வெறும் புலம்பலாகவே இருந்தது. எத்தனை எழுச்சிப்பாடல்கள் உள்ளன? எங்கு எடுத்தாலும் புலம்பல். பக்திவாதம். தன் தலைமையை துணிந்து கேட்க முடியாத ஒரு போராளி எதிரியை எப்படி எதிர்த்துத் துணிந்த நிற்பான். இன்றுவரை நடந்த போராட்டங்கள் எல்லாம் மக்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்தனவே அன்றி வளர்த்ததில்லை. போராட்டம் இழுத்து வரப்பட்டதே தவிர எடுத்து வரப்படவில்லை. போராட்டமானது வலிந்த இழுத்துவரப்பாடாவிட்டால் புலிகள் பிள்ளைபிடிகாரர்களாக இருந்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. துரையப்பாவைத் துரோகியாக்கி அவரைக் கொண்ட பிரபாகரனை வீரனாக்கி பின் அவனையே விடுதலையாக்கி அவன் அழிந்ததும் விடுதலை அழிந்தது. புலம்பல் தொடர்கிறது. அன்றைய இலக்கியங்களில் இருந்த இன்றைய இலக்கியங்கள் வரை பிச்சைபோடு என்றே பாடியது பிச்சை எடுக்க விரும்பும் பாடகர்கள் கூட்டம். நான் எமது மக்களின் துணையுடன் தான் போராடுகிறேன் என்றவர்கள் அமெரிக்கா வரும் இந்தியாவரும் என்று உயிர்பிச்சை எழுத்தார்கள். எங்கே வீரம்? ஊரான் பிள்ளைக்கு சயனைட்டு உனக்கு மட்டும் சரணடைவா. சித்திவதைப்பட்டாலும் பறுவாயில்லை இன்னும கொஞ்ச நாட்களுக்கு வாழலாம் என்ற நப்பாசை தானே சரணடையப்பண்ணி கொத்து வாங்கச் செய்தது. குண்ட கட்டி அனுப்பிய குழந்தைகளை எண்ணிப்பார்த்திருந்தான் சரணடைவு பற்றி யோசிக்க முடிந்திருக்குமா? ஒருவலுவற்ற போராடும் சக்தி அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கி சென்றது புலிகள் எனும் சினிமாக்குழு. இதுதான் தமிழர்களின் போராட்டமாக மிஞ்சியுள்ளது.

  2. chandran.raja says:
    15 years ago

    வைத்தை பயிரே வாடுகிறது. வதங்குகிறது. மிகுதியாய் வந்தவை கூடா வாழ்வை ஓட்டுவதற்கு கைகொடுக்கவில்லை. தற்கொலையை நாடுகிறான் ஏழை விவசாயி. அது அப்படியா..? என்று நகரத்துசென்று தொழில்சாலையில் வேலை செய்தால் அவன் கொடுக்கும் சம்பளம் வீட்டுவாடகை வாங்கிய கடனுக்கு வட்டியென்று போக வாழ்வுக்கு இந்த பூமி எமக்கு அனுமதிதரவில்லையென்ன குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளுகிறான் திருப்பூர் தொழிலாளி. மாதம் தற்கொலைகளில் புள்ளிவிபரம் 40-50 ஆக எகிறிவருகிறது. திருப்பூர் தொழிலாளிகளின் நிலை. இந்தநிலையில் பிரபஞ்சத்தில் பூ பூக்கவேண்டுமாம். கற்பனையில் கவிதை இயற்றுகிற கவிஞர்களுக்கு சாப்பாட்டில் பாதியை குறைத்தாக வேண்டும்.இல்லை அறவே நிறுத்து நாளைக்கு ஒரு முறையென ஒழுங்கு படுத்தினால் போதுமானது.

    • சகி says:
      15 years ago

      பாரதி முதற்கொண்டு இன்றும் பல கவிஞர்கள் பட்டினியில்தான் கிடக்கிறார்கள். உயிர்கொல்லும் ஆயுதங்கள் யாரையும் அழிக்கக்கூடியவை. எந்த ஆயுதத்தை கையில் எடுத்தாலும் அவர்களுடைய நம்பிக்கை தனது சமூகத்தின் உலகில் சந்தோசங்களை மலரச்செய்வது தானே? கவிஞர்களுக்கு மட்டும் அது இருக்க்கூடாதா? நாம் எமது அறிவையும், ஆற்றலையும், செயற்திறனையும் வளர்க்க வேண்டும். அதன் மூலமே எமது முன்னேற்றங்கள் நிகழமுடியும்.

    • THAMILMARAN says:
      15 years ago

      வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பரம்பரை அல்லவா நாங்கள்? என்ன சீயாக்காய் கொம்யூனிசமோ தெரியாது உலக்த்துப் பிரச்சனைக் கெல்லாம் குரல் கொடுக்கிறீர்கள் ஆனால் தமிழனுக்கு ஒன்றூ என்றால் தள்ளீ நிற்கிறீர்களே ஏன்?

      • chandran.raja says:
        15 years ago

        நான் பயிர் வளர்த்து வதங்கியவனை விவசாயிப் பற்றி கதைக்க திண்ணையில் இருந்து பாடிய கற்பனை கவிஞனை கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள். தமிழன்மாறன் இதுதான் ஐயா தமிழன். தமிழனுக்கு உங்களை விட வேறு உதாரணங்களை தேடிப் போகவேண்டிய அவசியமில்லை. இவன் தனக்குவரும் போது மட்டும் தான் சமநீதி கதைப்பான். விவசாயி தொழிலாளியை இந்த உலகத்தின் ஆக்கசக்தியாக கருதியதில்லை. இதை எப்பொழுது தமிழன் புரியமுற் படுகிறானோ அப்பொழுது தான் அவனை மூடிய மாயத்திரை இழுத்துவிடப்படும். அதுவரைக்கும் இப்படியே சீயாக்காய் அரப்பு தேசிகாய்காய் என்று தனக்கு தானே மண்ணளிப்போட்டு முழுகிக் கொண்டிருக்க வேண்டியது தான். என்ன மூஞ்சியை வைத்து சமூகத்திற்கு கருத்துச் சொல்ல வருகிறீர்களோ? தெரியவில்லை. “ஏழுதரம் அளவெடு ஒருதரம் வெட்டு” என்றான் ஒரு அறிஞன். எழுதும் போது ஒருதரம் தன்னும் அளவெடுக்க கூடாத பரிசுத்தமாக தமிழா!.

        • theni says:
          15 years ago

          எழுதும்போது ஒருதரம் தன்னும் தன்னை அளவெடுக்கமுடியாத தமிழா! நூற்றில் ஒரு வார்த்தை ச.ரா. உங்களையும் சேர்த்துத்தான் சொல்லுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்கின்றேன்.

        • Ravi says:
          15 years ago

          நன்றாகத்தானே எழுதியிருக்காறார் விமர்சகர். விமர்சகருடைய எழுத்துடன் ஒத்துப்போக முடிகிறதே. நீங்கள் யாரைத் திட்டுகிறீர்கள். சமீபத்தில் காத்திரமாக எழுத விமர்சிககக்கூடிய ஈழத்துக் கவிஞர் கவிதா நோர்வே அவர்களுக்கு நன்றிகள்.

  3. சகி says:
    15 years ago

    புலிகள் வரலாற்றில் சுயவிமர்சனம் என்ற அத்தியாயமே கிடையாது. அது ஒன்றைச் செய்திருந்தாலே எத்தனையோ இழப்புகளை நாம் தவிர்த்திருக்கலாம். புலம் பெயர்தமிழர்களை பணத்திற்காகவும், ஈழத்தமிழ்களை உணர்வு மட்டும் ஊட்டிய பழிக்கிடாய்களாகவும் வைத்திருந்த புலிகள் அரசியல் ரீதியாக போராளிகளுக்கு எந்த விதக் கற்பிதலும் செய்யததும் ஒரு காரணம். முக்கிய காரணம் தமக்கு அடுத்த தலைமுறையொன்றை உருவாக்கத் தவறியது. இந்த 30 வருட போராட்டத்தில் இதில் ஒன்றை செய்திருந்தாலே மாற்றகள் பல வந்திருக்கும். விமர்சகர் கவிதா நோர்வேயின் பதிவு சிறந்த பதிவு. துணிந்து முன் வைத்த கருத்துக்களுக்குப் பாராட்டுகள்.

  4. Suppu says:
    15 years ago

    நாம் இன்று போராட்டம் பற்றிக் பேசுகிறோம். இலங்கையின் நடந்தது விடுதலைப்போராட்டமா? தயவு செய்து சிநதிததுப்பாருங்கள். சிங்களவர்களை எதிரியாகக் காட்டி வாக்கு வேட்டை நடத்திய முதலில் தமிழ் அரசியல்வாதிகள் பின் அது புலிகள் வரை தொடர்நதது. இறுதியின் சிங்களவரனா மகிந்தவை அரசசபை ஏற்றியத புலிகள் தானே. தமிழர்களை தொடக்கி வைத்த துவேச அரசியலை சிங்களமும் பாவித்து. சிங்களத்தை எதிரியாகக் காட்டிய அத்தனை வென்ற தமிழ் அரசியல் கட்சிகள அனைத்தும் சிங்களத்துடன் கைகோத்து நிற்க வில்லைை என்று கூறுங்கள் பார்க்கலாம். இதைக் கூடக் கெட்கத்திராணியற்ற ஒரு சமூகத்தைத் தான் இந்த தமிழ் அரசியல் உருவாக்கியது. ஏதோ புலிகள் புலிகள் என்று மாய்கின்றன: புலிகளுக்கும் ஒரு மாவியா அமைக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்? தெருவில் எமது மக்களையே இயக்கம் இயக்கம் என்று சுட்டுத்தள்ளிபோது கூட தமிழ்மக்களால் தம்தமிழ் இயக்கங்களுக்கு எதிராகக் கிளர்ந்த எழு முடியவில்லை. இவர்களா போராட வக்குள்ளவர்கள்? இலங்கையில் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் என்பது எம் ஜி ஆரின வழித்தோன்றல்களில் சினிமாதான். தயவு செய்து இதைப்போராட்டம் என்றோ புரட்சி என்றோ கூறி சினிமாவைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...