மூன்று தசாப்தகால அரசுக்கெதிரான புலிகளின் யுத்தம் அழிவுகளை மட்டுமே எச்சங்களாக விட்டுச்சென்றிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு கோலோச்சியதற்கான அடையாளங்கள் எல்லாம் அழிவுகளாகவும், சிதைவுகளாகவுமே காணப்படுகின்றது. புலிகள் விடாப்பிடியாக முன்வைத்த ஏகப்பிரதிநிதித்துவ உரிமையிலிருந்து தமிழ் மக்களின் அனைத்து தார்மீக உரிமைகளையும் இனப்படுகொலை ராஜபக்ச அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.
இலங்கையைப் பொறுத்தவரை வடக்கிலும் கிழக்கிலும், அங்கும் இங்குமாகப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியும் ஆயுதக் குழுக்களும் காணப்படுவதை யாரும் மறுக்கமுடியாது. புலிகள் தலைமையின் எஞ்சிய ஒரு பகுதி ராஜபக்ச அரசோடு கைகோர்த்துக்கொண்டுள்ளது. இன்னொரு சிறிய பகுதி காடுகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இலங்கையின் அதி உச்ச ஊடக அடக்குமுறை என்பது, எல்லாத் தகவல்களையும் உருமாற்றிவிடுகின்றது. ஆக, எல்லாமே அனுமானங்கள் மட்டும் தான்.
ராஜபக்ச அரசின் அங்கமாக இணைந்துள்ள விடுதலைப் புலிகள் தம்மை வெளிப்படையாக இனம்காட்ட ஆரம்பித்துள்ளனர். இப்போது அவர்களிடம் மிகவும் உறுதிமிக்க அரசியல் இருக்கின்றது. அதற்கான தந்திரோபாயமும் நடைமுறையையும் கூட முன்வைக்கிறார்கள். போரில் வெற்றியடைந்த மறு நாளே ராஜபக்ச அரசு முன்வைத்த அரசியலையே அவர்கள் இன்று முன்வைக்கிறார்கள். முதலில் தமிழப் பேசும் மக்கள் என்ற அடையாளத்தைத் துடைத்தெறிவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் முழக்கத்தின் கீழ் அவர்கள் ஒன்றிணைந்து கொள்கிறார்கள்.
1. தன்னுரிமைக்கு எதிராக மறுவாழ்வையும் மறுசீரமைப்பையும் முன்வைத்தல்.
2. இந்திய இலங்கை அரச அதிகாரங்களைக் கடந்து நாம் இங்கு எதையும் சாதித்துவிட முடியாது என்ற கருத்தை உருவாக்குதல்.
3. அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் தமிழ் தேசியம் என்ற அடையாளத்தைச் சீர்குலைத்தல்.
கடந்த வருடம் கிளிநொச்சி அரசின் பிடிக்குள் வீழந்த பின்னர், சில சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டிருந்த வேளையில் இருபத்தி நான்கு புலியெதிர்ப்புக் “கனவான்கள்” இலங்கை சென்றிருந்தனர். பின்னதாக ஐம்பாதாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்ட வேளைகளிலெல்லாம் கூட மௌனம் சாதித்த இந்த “மனிதாபிமானிகள்” முன்வைத்த கருத்துக்களும் இப்போது கே.பி குழு முன்வைக்கும் கருத்துக்களும் எந்த முரணும் அற்றவை. சொற்களுக்கிடையே கூட வேற்றுமை காணமுடியாத ஒத்த கருத்துக்கள். இலங்கை அரசும் இந்திய அரசும் முன்வைக்கும் நிகழ்ச்சி நிரலின் காவு கருவிகள் தான் இந்த விஷக் கிருமிகள்.
மனித அவலம் என்பது நாளாந்த வாழ்க்கையாகிவிட்ட ஈழப் பிரதேசத்தை இந்த நிலைக்குத் நகர்த்திவந்த பேரினவாத பாசிச அரசு தனக்கு உருவாகக் கூடிய எல்லா அழுத்தங்களையும் நிர்மூலமாக்க எத்தனை படுகொலைகளை நடத்திமுடித்திருக்கிறது! இப்போது தொலைவிலிருந்து உருவாகக் கூடிய அழுத்தங்களை அழித்துவிடுவதற்காக புலமபெயர் அரசியல் வியாபாரிகளைப் பயன்படுத்துகிறது. கொலைகாரர்களோடு சல்லாபம் செய்துகொண்டிருக்கும் கே.பி போன்ற கடைந்தெடுத்த கிரிமினல்களோடு இணக்கப்பாட்டிற்கு வரச்சொல்கிறார்கள் இந்த புலம்பெயர் வியாபாரிகள்.
பதினைந்தாயிரம் பேர் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துவைக்கப்படு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இன்னும் பலர் காணாமற் போனோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
கூலி அடிமைகளாக ஒரு தொகைத் தமிழர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். முகாம்களில் என்ன நடக்கிறது என்பது இன்றுவரைக்கும் அரச ஆதரவு கைக்கூலிகளைத் தவிர யாரும் சொன்னது கிடையாது. கே.பி போன்றவர்கள் மறுசீரமைப்பையும், மறுவாழ்வையும், அபிவிருத்தையையும் குறித்துப் பேசுவதற்கு முன்பதாக இவர்கள் பற்றிய விபரங்களையாவது வெளியிடத் திரணியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
அரசோடு இணைந்து அபிவிருத்தி செய்வதாகக் கூறும் கே.பியும் அதன் புலம்பெயர் முன்னை நாள் புலி வியாபாரிகளும் மக்களிடம் செல்வதற்கு முன்னால் குறைந்தபட்சம் இந்த மனித அவலத்தைப் பற்றிப் பேசக் கற்றுக்கொள்ளட்டும்.
இதுவரை இலங்கை அரசிற்கு வழங்கப்பட்ட பணம் ஒரு புறம் தமிழர்களை அழிக்கவும் மறுபுறம் ராஜபக்ச குடும்பத்தை வளப்படுத்தவும் தான் பயன்பட்டிருக்கிறது.
புலிகளிடம் போராடுவதற்கான உரிமையைக் கோரியவர்கள் என்ற ஒரு பகுதியினரையும் புலிகளை அழிப்பதற்காக அரசுடன் கைகோர்த்துக்கொண்ட இன்னொரு பகுதியினரையும் வெறுமனே புலியெதிர்ப்பாளர்கள் என்ற அரசியல் வரைமுறைக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால் புலிகளாயிருந்தாலும், புலியெதிர்ப்பாளர்களாயிருந்தாலும் இன்று இலங்கை இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடங்கிப் போகின்ற அனைவருக்குமே ஒரே அரசியல் தான். அது எதிரியின் அரசியல்.
விழுந்த தமிழன் எழுந்து விடக்கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறது இலங்கை அரசு அவர்களது கச்சிதமான விளயாட்டில் தமிழரது மன வளமும்,மன உரமும் சிதைப்பதும் கலாச்சார அடையாளங்கள வேரோடு பிடுங்குவதும் என இலங்கை அரசு திட்டமிட்டு செயலாற்றூகிறது.தமிழர் ஒன்றாக அணீதிரளாது தடுப்பதும் தமிழர் மண்ண பறீப்பதும் இலங்கை அரசின் நோக்கம்.சபா.நாவலன் நல்ல சிந்தனையை தொட்டுள்ளார் இது வரவேற்கத்தக்கது.
(1) முதலில் தமிழப் பேசும் மக்கள் என்ற அடையாளத்தைத் துடைத்தெறிவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் முழக்கத்தின் கீழ் அவர்கள் ஒன்றிணைந்து கொள்கிறார்கள்.
(2) இந்திய இலங்கை அரச அதிகாரங்களைக் கடந்து நாம் இங்கு எதையும் சாதித்துவிட முடியாது என்ற கருத்தை உருவாக்குதல்.
(3) புலமபெயர் அரசியல் வியாபாரிகளைப் பயன்படுத்துகிறது, கொலைகாரர்களோடு சல்லாபம் செய்துகொண்டிருக்கும் கே.பி போன்ற கடைந்தெடுத்த கிரிமினல்களோடு இணக்கப்பாட்டிற்கு வரச்சொல்கிறார்கள் இந்த புலம்பெயர் வியாபாரிகள்.இதில்,இந்த “அரசியல் வியாபாரிகள்”,”வே.பிரபாகரன் சரணடையவில்லை மார்பில் விழுப்புண் பட்டுதான் களத்தில் வீரமரணம் அடைந்தார்” என்று நிறுவுவதில் உறுதியாகவும்,தீர்மானமாகவும் உள்ளனர்!.இந்த “சட்டிலைட் யுகத்தில்” நடந்த உண்மை என்ன?.ஏன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டும்!.”சரணடைந்தார்” என்றால்,யார்மூலமாக சரணடைந்தார் என்ற கேள்வி எழும்!.பலருடைய முகமூடிகள் கிழியும்.இதன் அடிப்ப்டையிலேயே இந்த மூவரும்(இந்திய – இலங்கை- புலி வியாபாரிகள்),ஒன்றிணைகின்றனர்!.இதன் நோக்கம “தமிழர் இனப்படுகொலை(தங்கள் சுய இலாபத்திற்கு- வியாபாரிகளுக்கு) என்பதால்”,இதை வெளிக் கொணரும் கடமைப்பாடு,தமிழ் மக்களுக்கு உள்ள்து!.இந்தியாவும்,இலங்கையும் எதிரிகளை அழித்தேன் என்கிறார்கள்,ஆனால் புலிவியாபாரிகளுக்கும் “தமிழர்கள் எதிரிகளா??”!.
நல்ல கேள்விகள்தான் ஆனால் விடைதான் என்ன?பிரபாகரனும் எனையோரும் தமக்காக வந்த கப்பல் என ஒரு கப்பலில் ஏற்றப்பட்டதாகவும் அந்தக் கப்பலில் விசக் காற்றூ ஊடாகக கொல்லப்பட்டதாகவும் ஒரு வதந்தி உலவுகிறது.ஏனெனில் சரணடைந்ததிற்கான ஆதாரமாக எதை உங்களால் குறீப்பிட முடியும்.எல்லாமே அனுமானங்கள்தான்.
புலம்பெயர் சூழலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேற்கு நாடுகளும் ஐ.நாவும் பற்றிய பிரமைகளை வளர்த்தல் — குறிப்பாக, இப்போது காணப்படும் இலங்கை அரசாங்க எதிர்ப்புத் தோற்றத்தின் நோக்கங்களை விளங்கிக் கொள்ள மறுத்தல்.
வெளீயில இருக்கிற வடுவாக்கள் பெரிய விம்பத்தைக் கொடுகிறாரகள்.மக்கள் எல்லாம் விதி வ்ழியே நடப்பதாய் நினைக்கிறார்கள்,நீங்கள் என்னதான் நடக்கும் என்றூ நினைக்கிறீர்கள்?
சரியான கணிப்பு.
எமக்காக யாரும் போராடப் போவதில்லை. நாம் தான் போராட வேண்டும்.
மேற்கு நாடுகள் குரல் கொடுப்பமது தமது நலனுக்காகவே.
உலக முற்போக்கு சக்திகளுடன் எமது போராட்டம் இணைக்கப்படாதவரை வெற்றி இல்லை.
KP and LTTE has never been a entity which did any thing constructive to tamils, in that context KPS presen avatar is not surprising, he as in the past will contribute disastrously to tamils , i mean
not only Sri lankan tamils but to, tamils every where
வாழ்த்துக்கள் நாவலன் .
இந்தியாவும்,இலங்கையும் எதிரிகளை அழித்தேன் என்கிறார்கள்,ஆனால் புலிவியாபாரிகளுக்கும் “தமிழர்கள் எதிரிகளா??”!.–JAMES FRIEDRICH
புலம்பெயர் சூழலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேற்கு நாடுகளும் ஐ.நாவும் பற்றிய பிரமைகளை வளர்த்தல் — குறிப்பாக, இப்போது காணப்படும் இலங்கை அரசாங்க எதிர்ப்புத் தோற்றத்தின் நோக்கங்களை விளங்கிக் கொள்ள மறுத்தல். -Shiva
சரியான கணிப்பு .
ஐ .நா என்பது அமெரிக்காவின் எடுபிடி.அமெரிக்காவின் பேராசை பிடித்த கோர முகத்தை மறைக்கும் பல முகங்களில் அதுவும் ஒன்று.
தமிழருக்கும் மேலாக வர்க்கம் என்று ஒன்று உண்டு என்பதை தமிழர்களாகிய நாம் இனிமேலும் உணரவில்லை என்றால் எங்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
வர்க்கம் என்ற சொல் பிடிபட மாட்டேன் என் கிறது, யாழ்ப்பாணத்தில் பெரிய முதலாளீ வர்க்கம் ஒன்றூ இருந்தததாக அறீயேன் அடுத்து எல்லோருமே ஒரு துண்டுக்காணீக்காவது சொந்தக்காரர்கள்.நீங்கள் குழப்புகிறீர்கள் யோகன்.
“எல்லோருமே ஒரு துண்டுக்காணீக்காவது சொந்தக்காரர்கள்.நீங்கள் குழப்புகிறீர்கள்”
யார் இந்த எல்லாரும். விளிம்பு நிலை மக்களில் அதிக வீதத்தினர் எதுவுமேயற்று அன்றாட வேலை செய்பவர்களாகவே இருந்தார்கள். முதலாளி என்றால் சிறிய பெரிய அனைவருக்கும் பொருந்தும. அனைவரும் ஒரே குணம் கொண்டவர்கள் தான்.
நான் எனும் உளவியல் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் முதல் ஊர்காவற்றூற ஆஸ்பத்திரியில் டாக்டராக கடமையாற்றீயவர் வரை விளீம்பு நிலைச் சமூகம் என தங்களால் குறீப்பிடப்படுபவர்களே.சின்னமடு எனும் திருத்தலம் அவர்களது பங்காகவே இருக்கிறது.
இது ஒரு நல்ல கட்டுரை. ஆனால் ஒரு முக்கிய விடயத்தை பலரும் உணர மறுக்கிறார்கள்.
“மூன்று தசாப்தகால அரசுக்கெதிரான புலிகளின் யுத்தம் அழிவுகளை மட்டுமே எச்சங்களாக விட்டுச்சென்றிருக்கிறது. ”
உண்மை. ஆனால் இந்த முதல் பந்தி புலி ஆதரவாளர்களை இந்த கட்டுரைக்கு எதிராக திருப்புகிறது.
தமிழரின் வரலாறில் விவாதஙள், கருத்துருவக்கம் என்பன ஒரு பாரிய குறைபாடகவெ உள்ளது.
முதலில் நமது நோக்கத்தில் நாம் தெளிவாக இருக்க வென்டும்.
லெனின் போரட்ட காலத்தில் கூட அவர் மக்கலின் அடிப்படை பிரச்சனைகள் மூலம் தான் அவர்ளை ஒன்ட்று படுத்தினார். லெனினின் உயர்வான கருத்துக்கள் சதரண குடிமகனுக்கு ஒப்பிக்கப் பட வில்லை. We should know who is our target audience. We should unite people who all have common issues. we never understand this in our history of struggle…
in this way we cannot educate the “puli” supporters even for generations to come…. criticise and educate are 2 different things. and above all, we all should learn how to Unite people TO Discuss… NOT Discuss to Unite. A big issue.