Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எங்களைக் காப்பாற்ற அமரிக்காவும் இந்தியாவும் வருகிறது : அழித்தவர்கள் மீண்டும் களத்தில்

இனியொரு... by இனியொரு...
03/08/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

Vanni_Tamil_Genocideஅந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!
“இதுதான் பிரபாகரன் வீடு!” ”இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!” ”இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!” – இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள்.
ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், ‘காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே?என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது.
கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று.
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது…
”2009 ஜனவரியிலிருந்து ஒரு நாள், ஒரு மணி நேர இடைவெளிகூட இல்லாமல் ஷெல்லடி நடந்தது. ஒரு சின்ன இடைவெளியைக் கொடுத்தால்கூட, புலிகள் சுதாரித்துக் கொள்வார்கள் என்று எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே வந்தது இராணுவம்.
மழையாகப் பொழிந்த ஷெல்களுக்கு நடுவே கிடைத்த சின்னச் சின்ன இடைவெளிகளுக்கு மத்தியில் அங்குலம் அங்குலமாக நாங்கள் நகர்ந்தோம்.
தர்மபுரம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செல்லும் வழியெல்லாம் ஷெல்லடியில் மக்கள் செத்து விழுந்தார்கள். பல தாய்மார்கள் தங்களின் இறந்த குழந்தைகளை அங்கேயே புதைத்துவிட்டுக் கடந்தார்கள். முதிர்ந்தவர்களை அப்படியே கைவிட்டுச் சென்றார்கள்.
கரையா முள்ளிவாய்க்கால், வெள்ளா முள்ளிவாய்க்கால், கப்பல் ரோட், வட்டுவாகலை அண்டிய பிரதேசங்களில் மே மாதம் 11-ம் தேதி தொடங்கி நடந்தது இரத்த அழிவுதான். நாங்கள் நகர்ந்த இடங்களில் இருந்த மரங்களில்கூடச் சிதைந்த உடல்கள் தொங்கின.
விஷக் குண்டுகள் விழுந்த இடத்தில் அது ஆக்சிஜனை இல்லாமல் செய்ய, மூச்சுத் திணறி இறந்தவர்கள் பலர். அந்தக் குண்டு வீசப்பட்ட இடங்களைச் சுற்றிப் பல மைல்களுக்கு அதனுடைய பாதிப்பு பயங்கரமாக இருக்கும். தொண்டை எல்லாம் வறண்டுபோகும்.
காயம் அடைந்து சிகிச்சை கிடைக்காமல், இரத்தமிழந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாகிறோம் என்று தெரிந்தே இறந்தவர்களின் நிலைதான் மிகவும் கொடூரம். இதையெல்லாம் பார்த்த புலிகள் கையறு நிலையில் மக்களை அவர்கள் வழியில் செல்லுமாறு அனுப்பினார்கள்.
ஆனால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்ற மக்களும் கொல்லப்பட்டார்கள். எங்கும் செல்ல முடியா மல் மக்கள் அந்தச் சிறிய பகுதிக்குள் சிக்கி மடிந்தார்கள். மே 15-ம் தேதி எங்களின் முடிவு நெருங்கியிருந்தது.
எங்களைக் காப்பாற்ற இந்தியா வருகிறது, அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத் தளபதி வரப்போகிறார். ஐ.நா-வின் மேற்பார்வையில் புலிகள் சரணடைவார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் என்ற பேச்சு மக்களிடம் பரவி ஒரு நம்பிக்கையாக விரிந்து இருந்தது.
புலிகளுக்கு அந்த வாக்குறுதி இந்தியா சார்பிலும், மேற்குலகத்தின் சார்பிலும் வழங்கப்பட்டிருந்தது.
எழிலன் என்னிடம் வந்து, ‘நீ பிள்ளைகளை அழைச்சுக்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போய் சரண்டர் பண்ணு. நான் வர்றேன் என்றார்.
போர் அநேகமாக முடிவுக்கு வந்திருந்தது. தூரத்தில் ஒலிக்கும் வெடிச் சத்தங்களைத் தவிர, எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. ஆயுதங்கள் யாவும் புலிகளால் அமைதியாக்கப்பட்டன.
நானும் என்னோட மகள்களும் பிற சனங்களும் வட்டுவாகல் வழியாக வெளியேறி 17-ம் தேதி இரவு செல்வபுரம் வந்தோம். அங்கே ஒரு மரத்தடியில் ஏராளமான சனங்கள் அமர்ந்திருந்தனர்.
புலிகளின் பிரதான தளபதிகள் பலர் குடும்பம் குடும்பமாக அவர்களுடன் இருந்தார்கள்.
அரசியல் துறைத் துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடும், தளபதி இளம்பரிதி மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடும், மஜீத் என்ற தளபதி இரண்டு குழந்தைகள் மற்றும் தளபதியோடும், பிரியன் அவருடைய மனைவி குழந்தைகளோடும், மனைவியை ஏற்கெனவே இழந்த ராயா அவரது குழந்தைகளோடும் அமர்ந்திருந்தனர்.
இதுபோல எண்ணற்ற போராளிக் குடும்பங்களைக் கண்டதும் என் கணவர் எழிலனை அழைத்து வரலாம் எனத் திரும்பியபோது, சில பொடியள் வந்து ‘நாங்கள் அழைத்து வருகிறோம் அக்கா என்று சொல்லி அழைத்து வந்தார்கள். மிகவும் சோர்ந்து போய் வந்த எழிலன் என்னோடு எதுவும் பேசவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.
பின்னர், ‘நாங்க தாயகத்துக்காகப் போராட வெளிக்கிட்டு பூஜ்ஜியம்கூட இல்லை. மைனஸில் வந்து நிக்கிறோம் என்றபடி மீண்டும் தலை குனிந்து கொண்டார். சமாதானக் காலத்தில் சரிக்குச் சமமாக இராணுவத்தோடு நின்ற தலைவர்கள் எல்லாம் பிணையக்கைதிகளாகி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.
அந்த இரவை அப்படியே கழித்தோம்!” என்று நிறுத்திக்கொண்டு அந்த நினைவுகளில் மூழ்கியவர் சின்ன இடை வேளைக்குப் பிறகு தொடர்ந்தார்.
புலிகளின் மூத்த தலைவர்களான புதுவை இரத்தினதுரை, பாலகுமார், பேபி எனப்படும் இளங்குமரன், யோகரத்தினம் எனப்படும் யோகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களோடு பிரான்சிஸ் ஜோசப் என்ற அடிகளாரும் அங்கேதான் இருந்தார்.
பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் உண்மையிலேயே ஒரு தியாகியைப் போல வன்னி மக்களுக்காக வாழ்ந்தார். எமது பிள்ளைகளின் கல்வியறிவுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது.
தோல்வியைத் தழுவுகிறோம் என்று தெரிந்தபோது புலிகள் அவரைப் பத்திரமாக படகில் அனுப்பி வைக்க முடிவெடுத்த போதுகூட, மக்களை விட்டு விலகிச் செல்ல மறுத்து, பிடிவாதமாக மக்களோடு நின்றார்.
அந்த இரவில் அவரும் எங்களோடு நின்றார். அவருக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகள் தெரியும் என்பதால், இராணுவத்துடனான தொடர்பாடலுக்கு அவர் பெரிதும் பயன்பட்டார்.
மே 18-ம் தேதி காலை சுமார் 7.30 மணி இருக்கும்போது இராணுவத்தினர் வந்து, ‘நீங்கள் புலிகள் அமைப்பில் ஒரு நாள் உறுப்பினராக இருந்தால்கூட எங்களிடம் வந்து சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு ஐ.நா. மூலம் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
ஜோசப் அடிகளாரும், ‘நாம் சரணடைவோம். ஐ.நா. நம்மை விடுவிக்கும்! என்றார். பேருந்துகளைக் கொண்டுவந்து நிறுத்தி, அதில் போராளிகளை ஏற்றினார்கள். எல்லோரையும் ஏற்றிவிட்டு அருட்தந்தையும் அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டார்.
என் மகளின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நான் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். அன்று சரணடைந்த எந்த ஒரு போராளியையும் அதன் பிறகு யாரும் எங்கும் உயிரோடு பார்க்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்து, நான்கு வருடங்களாகிவிட்டன. போர் முடிந்த பிறகு, 17,500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்து இருப்பதாக முதலில் சொன்னது அரசு.
பின்னர் 15,000 என்றது. இப்படிக் குறைந்து குறைந்து இறுதியில் 11,000 போராளிகளின் பெயர் விவரங்களை வெளியிட்டது அரசு.
அதில் நான் செல்வபுரத்தில் கண்ட எந்தப் போராளிகளின் பெயர்களும் இல்லை. அவர்களின் குடும்பங்களின் விவரமும் இல்லை.
அருட்தந்தையின் பெயரும் இல்லை. என் கணவரின் பெயரும் இல்லை.
அப்படிஎனில் போருக்குப் பின்னர் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது?
இதை நான் யாரிடம் கேட்பேன்?”- தீர்க்கமான குரலில் கேட்கிறார் ஆனந்தி எழிலன்.

நன்றி – ஆனந்த விகடன்

துயர் மிகுந்த இப்பெண்ணின் வரலாற்றின் பின்புலத்தில் இன்றைய அரசியல் நகர்வுகளுக்கான தகவல்களைக் காணலாம். ‘மேற்குலகையும்’, ஐக்கிய நாடுகள் சபையையும், அமரிக்காவையும் இந்தியாவையும் மீட்போராகக்காட்டி புலிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை வழங்கிய அதே குழு போராட்டத்தின் தொடர்ச்சியான அழிவைக் கையகப்படுத்திக்கொண்டது. எஞ்சியிருக்கும் சிறிய நம்பிக்கையையும் அழித்து மக்களை நயவஞ்சகத்தனமாக அழித்த அதே கூட்டம் ஏகாதிபத்தியத்திடம் அழைத்துச்செல்கிறது. அவர்கள் அனைத்தையும் ராஜபக்ச பாசிஸ்ட்டுக்களின் கைகளில் ஒப்படைக்கிறார்கள். இவர்களை கேள்விகேட்டால், புலிக் கொடியையும் பிரபாகரனையும் வைத்து மிரட்டுகிறார்கள்.

தம்மிடமிருந்த சொத்துக்களையும் பணத்தையும் கையாடுவதற்காக கூட்டுச்சேர்ந்து காட்டிக்கொடுடுத்த கும்பல்கள் இன்று தமக்குள்ளேயே மோதிக்கொள்கின்றன. போராட்டம் தோற்றுப்போனதற்கான காரணங்களை விமர்சிக்க மறுக்கும் இவர்கள் அனைவரும் மீண்டும் தோல்விக்கான அத்தனை வழிமுறைகளையும் தெரிந்துகொண்டே கையாள்கிறார்கள். இலங்கையில் தமிழ்ப்பேசும் சிறுபன்மைத் தேசிய இனங்கள் அழித்துத் துவம்சம் செய்யப்படும் வரை இவர்களின் கோரத்தாண்டவம் தொடருமா என்ற கேள்விகள் எழுகின்றன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சாவேசின் மரண ஊர்வலம் கரகாசில் ஆரம்பமானது

சாவேசின் மரண ஊர்வலம் கரகாசில் ஆரம்பமானது

Comments 3

  1. Mahendra says:
    13 years ago

    அடிக்கிற கைதான் அணைக்கும். அமரிக்கா அடித்தது அணைக்கவும் வருகிறது,
    இந்தியாவும் அடித்தது. அடித்த இடத்தையே கடித்தது. கடித்த இடத்தையே குதறியது. குதறிய இடத்தில் ஊறும் உதிரத்தை இன்றும் ருசிக்க வருகிறது.

  2. vasakan says:
    13 years ago

    தமிழ் பேசும் இந்துக்கள் அல்லாதவர்களிட்கு :

    எம்மை கர்த்தரோ, மாதவோ ஒரு நாள் கட்டாயம் காப்பார்கள்.இல்லையெனில் நாம் தொடர்ந்தும் கர்த்தரையோ மாதாவையோ தொழுவோம்.

    .

    .தமிழ் பேசும் இந்துக்களிட்கு:

    தமிழ்க்கடவுள் முருகனையும்,சைவக்கடவுள் சிவனையும் வேண்டி நின்ற கைகள் அதே நேரத்தில் திருப்பதியானையும்,சாய் பாபாவையும்,ஏன் லூட்ஸ் மாதவையும், அல்லலோயவையும் நாம் விடவில்லை ,ஐயப்பனையும் ,அநுமானையும் துணைக்கு பலமாக வைத்து கும்பிட்டோம் .புலம் பெயர்ந்து அம்மா சாமியையும் கட்டி அணைத்தோம்.அதை விட பல சுவாமிகளையும் நாம் விடாமல் இல்லை. எமக்கா இன்னுமொரு சுவாமி ,கடவுள் கிடைக்கமாட்டார்..

    .

    .அதோ வரார் சீனாச் சாமி , அதோ வார்ரர் ஆபிரிகாச்சாமி . ஆரோகரர… ஆரோகரர .

  3. Mahendra says:
    13 years ago

    எந்தக் கடவுளானாலும், அவை பொய்யென உணர்த்தமுடியாது இருந்தவரையில், அந்தக் கடவுள் நம்பிக்கைகள், பயம் போன்றவை மனிதத்தைப் பாதுகாத்து வந்தது, அறிவியல் தேடலானது ஒரு மாற்றுவழித் தேடலின்றி, கடவுள் பொய்யென்று மனிதர்களை உணரவைக்க முயல்வதால் ஏற்பட்டுள்ளது அனர்த்தமே. அந்த அனர்த்தத்தையே இன்று தமிழரும் அனுபவிக்கின்றனர்.  

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...