எகிப்தின் ஜனாதிபதி முகம்மது முர்சி அடிப்படை உரிமைகளை மறுக்கும் ஒரு ஜனநாயக விரோத அரசிலமைப்பைச் செயற்படுத்த முயல்கையில் வெள்ளியன்று கெய்ரோவிலும் மற்ற எகிப்திய நகரங்களிலும் வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்தெழுந்தன.
எகிப்தின் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஜனவரி 2011 இன் ஆர்ப்பாட்டங்கள் வெடித்த தஹ்ரிர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். எதிர்ப்புக்கள் அலெக்சாந்திரியா, தொழிற்துறை நகரம் மஹல்லா இன்னும் பல நகரங்களில் நடைபெற்றன.
கெய்ரோவில் ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கூடாரம் அமைத்து போராட முற்பட்ட வேளையில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. போலிசாரின் தாக்குதலில் 18 ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகாயமடைந்தனர்.








