Friday, March 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எகிப்தில் இராணுவச் சதிப் புரட்சி – அமரிக்காவின் அரசியல் சதி

இனியொரு... by இனியொரு...
02/12/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

பதினெட்டு நாட்களாக நடந்த மகத்தான எகிப்திய மக்கள் எழுச்சி எகிப்திய இராணுவ சதிப் புரட்சியால் திசை மாற்றப்பட்டுள்ளது. “ஹுஸ்னி முபாரக் அதிகாரத்திலிருந்து விலகிக்கொள்வதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி எகிப்தியப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது.

இதுவரை அதிகாரத்திலிருந்த ஹுஸ்னி முபாரக்கின் அதே இராணுவம் மறுபடி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் அரசியல் ஆய்வாளரான டியா ரஷ்வான்(Diaa Rashwan).
முன்னதாக ஈரானிய பாராளுமன்றப் பேச்சாளர் அலி லரிஜானி அமரிக்கா தனது அதிகாரத்தை மீளமைப்புச் செய்வதற்காக எகிப்தில் இராணுவ சதி ஒன்றை ஏற்படுத்துவதற்குத் திட்டமிடுகிறது என்று தெரிவித்திருந்தார்.

தவிர கடந்த வியாளனன்று எகிப்திய எதிர்க்கட்சியான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி இராணுவச் சதியொன்று திட்டமிடப்படுவதாக எச்சரித்திருந்தது.

ஜனநாயகத்தைக் கோரி நிகழ்ந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மீண்டும் அதே அதிகாரத்தின் பிடியில் சிதைக்கப்பட்டுள்ளது.

18 நாட்கள் நடந்த போராட்டம் உச்சமடைந்த 7வது நாளிலிருந்தே இராணுவச் சதிக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

எகிப்தியப் பொலீஸ் படைகள் மக்கள் மீதான தாக்குதலை நடத்த இராணுவம் மக்களை அமைதிப்படுத்துவது போலவும் மக்கள் எழுச்சியின் பக்கம் சார்ந்திருப்பது போலவும் திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இதுவரை மத்திய கிழக்கில் அமரிக்காவின் அடிமையாகத் தொழிற்பட்ட ஹுஸ்னி முபாரக்கின் அரசியல் குறித்து பி.பி.சி, சி,என்.என் போன்ற ஊடகங்கள் பெருமை பேசிக்கொண்ட அதே வேளை முபாரக்கின் வெளியேற்றம் அரபுலகில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன.
பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹக் அவசர அவசரமாக் வழங்கிய செவ்வியில் எகிப்தில் நம்பிக்கையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்திற்குத் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் ஜனநாயகத்தை மறுசீரமைக்க பிரித்தானியா இராணுவத்துடன் ஒத்துழைக்கும் என்றும் அறிவிக்கிறார்.

அதிகாரத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்திருக்கும் முன்னை நாள் எகிப்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஹுசைன் தந்தாவி அனைத்து ஊடகங்களிலும் கதாநாயகன் போலச் சித்தரிக்கபடுகிறார்.

ஒரு நாட்டின் அதிகாரம், அரசியலற்ற இராணுவத்தின் கறைபடிந்த கரங்களில் விழுந்துள்ள நிலையில் அமரிக்க அதிபர் ஒபாமா ஹுஸ்னி முபாரக்கின் ராஜினாமா மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதாக தெரிவித்திருக்கிறார். தவிர, எகிப்திய மக்கள் விரும்பியவாறு உண்மையான ஜனநாயகத்தை நிறுவுமாறு “இராணுவத்திற்கு” அழைப்பு விடுத்திருக்கிறார்.

துனிசியப் எழுச்சியைவிட அதிக அளவிலான எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட எகிப்தியப் போராட்டம் மத்திய கிழக்கு வழங்களைச் சுரண்டும் அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை துயர்கொள்ளச் செய்திருந்தது. மக்கள் எழுச்சி உறுதியான தல்மையின் வழி நடத்தலில் நிகழ்ந்திராவிட்டாலும் ஹுஸ்னி முபாரக்கின் நண்பர்களான அமரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போக்கை ஆரம்ப நாளிலிருந்தெ கொண்டிருந்தது.

உலக ஜனநாயகத்தின் காவலனாகத் தன்னை வெளிப்படுத்தும் அமரிக்க அரசு ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதப் போக்கைக் கொண்டிருந்த அடிப்படை வாதக் கட்சியை ஆதரித்தது வந்தது. மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்திருந்த அக்கட்சி போராட்டத்தின் தலைமையை வழி நடத்தவியாலாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதன் பின்னதான அமரிக்க அரசின் அடுத்த நகர்வு தான் இராணுவச் சதிப்ப் புரட்சி என நம்பபப்படுகிறது.

மக்களின் தியாகங்களின் மீதும், அர்பணங்களின் மீதும் மக்களைச் சுரண்டும் ஆட்சியை அமரிக்க மீண்டும் நிறுவிக்கொண்டுள்ளது.
முபாரக்கை வெளியேற்றிய வெற்றியை அனுபவித்துக்கொண்டிருக்கும் எகிப்தியர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை விரைவில் முன்னெடுப்பார்கள். அமரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புரட்சியைக் காலம் தாழ்த்தலாம் நிறுத்த முடியாது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தெருவிற்கு விரட்டப்படும் இடம்பெயர்ந்த மக்கள்!

Comments 4

  1. spysan says:
    15 years ago

    இப்படியான பெரிய இடத்து தகவல்கள் எல்லாம் இனியொருவுக்கு ஆங்கிலச் செய்திகளுக்கு முத்லே கிடைக்கிறது. நீங்கள் அமரிக்க உளவாளிகளா? நீங்கள் இந்திய ரா உடனும் தொடர்பாமே ?

    • theni says:
      15 years ago

      எகிப்திய அரசியலை பற்றி கருத்துகூற முற்படாததிலிருந்தே தெரிகின்றது. இது இலங்கை உளவுத்துறையின் நிகழ்ச்சிநிரலிலிருந்து தம் எஜமானரை திருப்திப்படுத்த வருகின்ற பின்னூட்டம் என்று. எத்தனை பேர் இப்படி கெளம்பியிருக்கிங்க?

  2. P.V.Sri Rangan says:
    15 years ago

    “அடடா புரட்சி அடை மழைடா,
    அது அரபுப் புரட்சி
    அடை மழைடா!”

    எகிப்த்திய,துனேசியப் போராட்டங்களும் தொடரப் போகும் அரபு உலக”எழிச்சிகளும்”புதிய வகைமாதிரியான ஆயுதம்.இது,அணுக்குண்டைவிட அதிக சக்தியானது.இந்த ஆயுதம் இப்போதும்,மேற்குலக ஆதிகத்தாலேயேதாம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன் பாட்டுக்கு வந்திருக்கிறது.

    இந்தப் பயன்பாடும் அவர்களது நலன்களைக் காப்பதற்காகவே பயன்படுகிறது.எகிப்த்திய அதிபர்,எங்கேயும் ஓடித் “தப்பி”விடவும் இல்லை.எகிப்த்திலேயே சிறிய குட்டித் தேசமாக-அரசாக நிலவும் எகிப்திய உல்லாச-டிப்பிளோமற்றிக் நகரமான [ Diplomatic City _ Trade] சாமல் சைக்கில் [ Scharm El-Scheich ]மிகப் பாதுகாப்பாக முபராக் இருக்கிறார்.எகித்தியர்களோ,அல்லது எந்த அரபியர்களோ அங்கு செல்வதற்கு தகுந்த விசாவிருந்தாலும் முடியாத காரியம்.ஆனால்,நாம் விடுமுறைக்குப் போய்வரலாம்.இத்தகைய எகிப்த்தில் மக்கள் ஆரவாரம் முபராக்கைச் சுற்றிய எதிர்ப்பில் அவரது இராஜினாமா “மக்கள்”புரட்சியென வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் அதிபர்கள்,தலைவர்கள் தாம் பிழையானவர்கள்.நிலவும் அமைப்பு அல்ல என்பதையும் சொல்லியபடி, ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்தப்படுகின்றன.

    மக்களையும்,அவர்களது நலனையும் முடக்கியவர்கள்,வறுமையை-வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஆளும் அதிபர்கள்-கட்சிகளே செய்வதாகக் கருத்தியற் பரப்பைச் செய்தபடி,அதே அமைப்பைக் காப்பதென்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது.

    மேற்குலகத்திடம் இருக்கும் இதுவரைகாலக் கொடும்-வன்மையான ஆயுதம் என்பதெது ? “கருதியலே” என்பதுதாம் எனது பதில்!

    முபாராக் போனால் இன்னொரு எல்பாரடேய் வரலாம்.ஆனால்,அமைப்புச் சிதைந்தால் அதில் மக்கள் அதிகாரம் வந்துவிடும். இதை முன்கூட்டியே தீர்மானித்த அமெரிக்க-மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அரேபியச் சர்வதிகாரிகளை ஊட்டி வளர்த்தபடி நிலவும்அமைப்புக்கெதிரான மக்களது எதிர்ப்பை ஆளும் தலைமைக்கெதிராக வளர்த்தெடுத்தது.அதையே, இப்போது அறுவடைசெய்து, புதிய தரகர்களை நிலவும் அமைக்குள் புகுத்தி மக்களை மீளக் கட்டிப்போடும் புதிய வியூகங்களை நாம் சந்திக்கிறோம்.

    அரபுலகப் போராட்டங்கள்,அவர்களது வளர்ச்சியடையாத சமூக நிலையை ஒட்டியே மேற்குலகத்தாற் தகவமைக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தப் போராட்டமானது மக்களை ஏய்த்துப் பலியாக்கிப் புரட்சியெனப் பேசுவதில் முதன்மையானவர்கள் இன்றைய வெள்ளையினப் பிசாசு(வெள்ளையின ஏகாதிபத்திய அரசுகள்,அதன் ஆளும் வர்க்கம்)க் கூட்டமே.

    பெரும்பாலும் இச் செய்தியே பரவலாகச் சரியானதாகவிருக்கும்.ஆனால்,அரபுலகத்துப் போராட்டங்கள் மக்களது தன்னெழிச்சியானதென ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன்.

    ஏலவே,”இப்போராட்டமானது ஐரோப்பிய-அமெரிக்கப் புதிய வியூகமெனவும்,கடந்த நூற்றாண்டுள் கணிசமாகக் கிடைக்கப் பெற்ற எண்ணை வருமானங்கள் அனைத்தும் அந்தத்தேசத்து மாபியாத் தலைமைகள்மூலம் வெளிநாட்டு(மேற்கு-அமெரிக்க)வங்கிகளில் பல ரில்லியன்கள் குவிந்திருப்பதும்,அதுவே பெற்றோ டொலரெனப் பரவலாகப் பேசப்படுவதும் ஒரு கொள்ளைக்கானது” எனக் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்!

    இதுவரையான எண்ணையை முழுமையாகக் கொள்ளையடிப்பதாக இந்த ஆட்சி மாற்றங்கள் காட்டி நிற்கிறது.

    புதிய தலைமைகள் யாவும், நிலவும் அமைப்பை அங்ஙனமே இயங்க அநுமதித்துப் புதிய மேற்குலக எடுபிடிகள் இத்தேசங்களது ஆட்சிகளுக்கு வருகிறார்கள். இதுவொரு பழையபாணியுள் புதிய பரிசோதனை.

    இவ்வளவு பெரிய தொகையாக மக்களைப் பயன்படுத்தி(இதற்கு முதல் நிலவும் ஆட்சியின் மூலம் மக்களுக்குத் தீராத ஒடுக்குமுறை வழங்கி-சமூகப் பதட்டைத்தையும்,கொந்தளிப்பையும் உருவாக்கியபடி புதிய பினாமிகளை உருவாக்குதல்) சதிப் புரட்சிகளை நடாத்தும் புதிய வியூகம் இது!

    அரபுத் தேச மக்களது வாழ்வுப் போராட்டம் இப்படி உபயோகமாவது மேற்குலகத்தின் அடுத்த வடிவிலான ஆயுதம்.இந்த ஆயுதம் மிக வலிமையானதெனக் கடந்த 80 களின் மத்தியில் கிழக்கு ஐரோப்பாவில் உணர்ந்த ஏகாதிபத்தியம் அதே, பாணியில் அரபு உலகத்துள் இதை மிகவும் தந்திரமாகச்(மண்ணுக்கேற்ற தந்திரம்) செய்து முடிகிறது.

    இப்போராட்டம் ஈரன்வரை பாயும்.

    அரேபிய மக்களது வளங்களைக் கொள்ளையடித்துச் சேர்க்கப்பட்ட அரேபிய மாப்பியாக்களது வெளிநாட்டு வைப்புகள்,சொத்துகள் பகற்கொள்ளையாக மேற்குலக அரசுகள்-நிறுவனங்கள் எடுத்துவிடும்.ஒரு கல்லில் பல மாங்காய்கள் பறிக்கப்படும்போது, இதைப் புரட்சியெனவும்,மக்கள்போராட்டமெனவும் மேற்குலக ஏகாதிபத்திய ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதில் எவருடைய நலன்கள் அறுவடையாகிறதென்பதை அனைவரும் உணரவில்லையா?

    எல்லாவற்றையும் சிவப்புக்கு எதிராகவே செய்து முடிக்கும் ஏகாதிபத்தியம்,முதலாளியம் இருக்கும்வரை,நாமும் எல்லாவற்றையுமே அதிலிருந்து பிரித்தெடுத்து விளங்குவது கேனைத்தனமானது.எனவே,ஏகாதிபத்தியம் எப்படிப் புகுந்து விழையாடுகிறதென்பதைப்புரிந்தால்” புரட்சிகர முகமூடியும் ஏலவே இருக்கும் ஜனநாயக முகமூடியுடன் சிறந்த ஆயுதமாச்சு!” என்பதைத்தவிர அரபு உலகப் போராட்டங்களுக்கு வேறென்ன சிறப்பு இருக்க முடியும்?

    ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல்: “இன்றைய தினமானது மகிழ்சியின் தினமாகும்,எகிப்த்திய மக்கள் தம்மை விடுவித்த தினமானது எமக்கு மகிழ்சியான தினம்” என்கிறார்.இப்படி அவர் கூறிக்கொண்டிருக்கும்போது அவரது இராணுவம் அவ்கானில்,கொங்கோவில் குண்டுகள் போட்டு மக்களை வேட்டையாடுவதை எந்தவூடகமும் சொல்லவுமில்லை-மக்களும் அதை எண்ணவும் இல்லை!

    பிறகென்ன ,எல்லாம்”இன்ஷா அல்லா” என்பதைத் தவிர எதுதாம் சொல் முடியும் எம்மால்?

    எல்லாவற்றையுமே இழந்தவிட்ட தொழிலாள வர்க்கம் இனி இழப்பதற்கு என்னதாம் இருக்கு?

    புரட்சி,
    புரட்சிகரக் கட்சி,
    மக்கள் எழிச்சி,
    தொழிற்சங்கம்,
    மக்கள் குரல்

    எல்லாமே அவர்களுக்கானதாக மாற்றப்பட்டு, அவர்களே நமக்குள் போராட்டங்களை முன்னெடுக்கும்போது எவனோவொருவன் தெருவில் குந்தியிருந்து-முகப் புத்தகத்தில் எழுதி,உறவாடிப் புரட்சியை அவிட்டு விட்டானாம். ஆதலால், ” எந்தப் புடுங்கியும் இனிப் புரட்சிக்கு தேவையில்லை-ஒருவன்,நினைத்தால் புரட்சி வெடிக்கும்!” என்ற அறிவுப்பரப்பு தமிழர்களிடம் வந்துவிட்டதாலும் இனித் தமிழருக்கு அழிவேயில்லை!-வாழ்க, தமிழர்கள்தம் பெரும் “அறிவு”ப் பரப்பு!

    ப.வி.ஸ்ரீரங்கன்
    ஜேர்மனி
    12.02.2011

    • ponniah says:
      15 years ago

      try to build up a new tamil political party. we dont want old leaders and old parties.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...