பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்ச்சி இன்று டெல்லியில் ஆரம்பமானது. இளவரசர் சார்ள்ஸ், பிரதீபா பட்டேல், கல்மாடி, மன்மோகன் சிங் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சுரேஷ் கல்மாடி குறித்துப் பேசும் வேளையில் பார்வையாளர்கள் கூக்குரல் எழுப்பினர். விளையாட்டு அமைப்புக்குழுவின் தலைவரான கல்மாடி பல மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதான ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்.
தெகல்கா உட்பட பல நிறுவனங்கள் இவரது ஊழலை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ள நிலையில், கல்மாடி இது குறித்து இதுவரை எந்தக் குறிப்பான பதிலும் வழங்கவில்லை.
இறுதியில் பிரதீபா படேல் விழாவை ஆரம்பித்து வைத்தார். சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ள மறுத்திருந்தமை தெரிந்ததே.
காங்கிரஸ் கட்சி அனுசரணையோடு நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றான கொமன்வெல்த் ஊழல் நிதி தலித்துக்களுக்கான நிதியிலிருந்து பெறப்பட்டது என்பது இன்னொரு குறிக்கத்தக்க விடயம்.
இந்தியா என்றதும் எழும்ப வேண்டிய கரகோசம் டெல்லி என்ற போதெல்லாம் கூரையை பிய்த்தது இவர்களால் கல்மாடியின் கோல்மால் வேலைகள கவன த்தில் எடுக்கமுடியுமா?எங்கும் அரசியல்,எதிலும் அரசியலால் வந்த விருந்தனரை வரவேற்க மறந்து நிற்கும் அரசியல்வாதி,மக்கள ஏமாற்றூம் வகையிலேயே மேடையில் நின்றூ பேசுகிறான்.கிரிக்கெட் எனும் கிறூக்குப் பிடித்து தன் பாரம்பரிய விளயாட்டுக்களான கப்டி,கொக்கி, என எல்லாவற்றயும் இழந்துள்ள இந்தியன் விளயாட்டில் விருப்பம் உள்ளவனா?இந்தியனுக்கு கொமன்வெல்த் கேம்ஸ் அவசியம் தேவையா?இந்திய ஈகோ தான் இந்த விளயாட்டில் விளயாட்டா?