Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஊடக மாபியா விஜய் தொலைக்காட்சியை லண்டனில் தொடங்கிவைத்த நடிகர் விக்ரம்

இனியொரு... by இனியொரு...
04/22/2014
in இன்றைய செய்திகள்
0 0
20
Home இன்றைய செய்திகள்

starvijaytvஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி.

விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதையும் சுரண்டி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. உணவு,உடை,இருப்பிடம், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளிலிருந்து ஊடகங்கள் வரை அவர்களின் சூறையாடலுக்கு உட்படாத எதையும் காணமுடியாது. இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் பிரதான உரிமையாளர் உலகின் மீடியா மாபியா என வர்ணிக்கப்படும் ரூபெட் மடோக் என்பவர்.

யாரிந்த ரூபெட் மடோக்?

rupertஇவர் தமிழரோ அல்லது இந்தியரோ அல்ல. உலகின் ஊடகத்துறையின் அழுகிய பகுதிகளைக் கையில் வைத்திருக்கும் ஊடகக் கொள்ளைக்காரன். பிரித்தானியாவில் ஆட்சி மாற்றதை ஏற்படுத்துவதற்குக் கூட ரூபெட் மடோக் பங்கு வகிக்கிறார். பெரும்பாலும் பாலியல் கலந்த ஊடகங்களை மக்களின் உணர்வுகளை மாற்றும் வகையில் உட்செலுத்துவதிலும், வன்முறையை மக்கள் மயப்படுத்துவதிலும் இவரது ஊடகங்கள் பெரும் பங்குவகின்றன.

2011 ஆம் ஆண்டு பிரபலமானவர்களின் தொலைபேசியை ஊடறுத்து சட்டவிரோதமாகத் தகவல்களைப் பெற்றுக்கொண்டமைக்காக மடோக் பிரித்தானிய அரசாலும் எப்.பி.ஐ இனாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ‘end the Murdoch mafia’ என்ற தலையங்கத்தில் பிரித்தானியாவில் பல அமைப்புக்கள் மடோக்கிற்கு எதிராகப் போராடங்கள் நடத்தின.

The Times, The Sunday Times and The Sun ஆகிய வலதுசாரி மற்றும் நிறவாதப் நாழிதழ்களை பிரித்தானியாவில் மடோக் நடத்தி வருகிறார்.

முன்னதாக விஜய் தொலைக்காட்சி விஜய் மல்லையாவிற்கு சொந்தமானதாகவிருந்தது. இந்தியாவின் மிகப்பெரும் சாராய வியாபாரியான விஜய் மல்லையா. இவரின் கிங்பிஷர் பியர் இந்தியா பியர் சந்தையில் 50 வீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலையை நடத்தி வருகின்ற விஜய் மல்லையா, வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவில்லை. அவரது விமான நிறுவனமான கிங் பிஷரில் வேலை செய்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் தரவில்லை. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அவனுக்குச் சொந்தமான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வைத்து குத்தாட்டமும், சூதாட்டமும் நடத்தினார்,

கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மேலாகச் சம்பளம் வழங்காமல் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது. கிங் பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கடனாகக் கொடுத்த ரூ 7,500 கோடியையும் ஆட்டையைப் போட்டிருக்கிறார் விஜய் மல்லையா.
2001 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்காவில் வசிக்கும் அவுஸ்திரேலியரான ரூபெட் மடோக் விஜய் இன் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை நடத்தி வருகிறது.

ஜோடி நம்பர் 1, நியா நானா, எயர்ரெல் சுப்பர் சிங்கர், அது இது எது, நீஙகளும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற உணர்ச்சிச் சுரண்டல் நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. தமிழ் நாட்டு மக்களின் வளங்களை மட்டுமல்ல உணர்ச்சியைக்கூடச் சுரண்டி அதனை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் விஜய் தொலைக்காட்சி, தமிழ் நாட்டுக்காரர்களுக்கு எதையும் விட்டுவைக்கவில்லை. கொச்சை ஆங்கிலத்திலும், கொச்சைத் தமிழிலும், இந்த இரண்டு மொழிகளையும் கொலைசெய்யும் நிகழ்ச்சிகளை நடத்தும் விஜய் இப்போது புலம்பெயர் தமிழர்களைச் சுரண்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

vikramஊடக மாபியாவான விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கும் ஒவ்வொரு சல்லிக்காசும் ஈழத்தில் அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அமெரிக்காவில் குடிகொண்டிருக்கும் பல்தேசிய மாபியாவின் வங்கிக் கணக்குகளை நிரப்புகிறது. பின்னர் அது ராஜபக்ச போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும் சேவை செய்யும்.

கலை கலாச்சாரம் என்பது விஜய் தொலைக்காட்சி போன்ற ஊடக மாபியாக்கள் நடத்தும் பாலியல் சுரண்டலோ, வன்முறையோ அல்ல. அது மனிதாபினாமத்தையும் மக்கள் பற்றையும் போதிக்க வேண்டும். சமூக உணர்வைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். ஈழத்துக் கலைஞர்கள் வாய்ப்புகளற்று வறுமையின் பிடியில் வாடும் போது, பல்தேசிய நிறுவனங்களுக்குப் பணத்தை வாரியிறைப்பது அவமானகரமானது, அதுவும் தேசியத்தின் பெயரால் நடைபெறுவது அருவருக்கத் தக்கது.
புலம்பெயர் சமூகதின் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு பணவெறியையும், பாலியல் வக்கிரத்தையும் தமிழ்க் கலாச்சாரம் எனப் போதிக்கப் போகிறார்களா? மனித் நேயமும் சமூகப்பற்றுமுடைய மனிதர்களாக அதற்கான கலாச்சாரத்தை நோக்கி தமது சந்ததியை இட்டுச்செல்லப் போகிறார்களா?

லண்டனில் ஸ்டார் விஜய் நைட் : தேச விரோதிகளின் பண்பாட்டு அழிப்பு : சுதர்சன்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா:இந்து பாசிஸ்டின் பேச்சு

Comments 20

  1. தமிழ் மூடன் says:
    12 years ago

    இனிஒரு தந்த மிகச் சிறந்த பதிவு

    லைக்கா , லிபரா , லங்காஸ்ரீ தமிழ்வின் மைக்ரோசாப்ட் நிறுவனம்  சன் TV விஜய் மல்லையா ரூபெட் மடோக்.. போன்ற  ஆயிரக் கணக்கான  முதலாளிகளின்…. அரசியல் வாதிகளின் …  ஒரே  நோக்கம் …
     பணத்தை எந்த  வழியிலாவது தமக்காக  உழைப்பது …..இலாபத்தை மக்களுடன் பகிரவேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல  …

    “மக்கள் நலனுக்காக தொழில் முயற்சிகள் ஆரம்பிக்க  புத்திசாலிகள்  முயலவேண்டும்….இலாபத்தை உலகின் வறிய மக்களுக்குப் பகிரவேண்டும்”   என்று நான் சில  வருடங்களாக எனக்குத்  தெரிந்தவர்களிடம் சொல்லிக்  கொண்டிருக்கின்றேன்.
      அதற்க்கான சில ஆயத்தங்களையும்  நம்மில்சிலர்    தொடக்கி  விட்டோம்…. 
    10,000 USD மூலதனத்துடன் நாம் சில தொழில் முயச்சிகளை ஆரம்பித்து  இருக்கின்றோம் ….
    இலாபத்தை வறிய மக்களுக்குப் பங்கிடும் நோக்கத்துடன்  ….
    . அவற்றைப்  பற்றி  இங்கு  குறிப்பிடுவது மலிவான வியாபார உத்தி
    என்று சிலர்விமர்சிக்கக் கூடும்   ..
    .இனிஒரு அனுமதித்தால்அவற்றை இங்கு வெளியிடலாம்
     இதை அறிய   ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்  

    http://tamils4tamils.com/Contact-Us.php

    ஆம்  
    இது உலக மக்கள்  நலனுக்காக நாம் உருவாக்கிய தொழில்களில ஒன்று…..

    *****

     இனிஒரு   தணிக்கை செய்து வெளியிடலாம்
      

  2. Sakivara says:
    12 years ago

    ஆஆஆஆ………………..

  3. Subramaniyam Santhan says:
    12 years ago

    லைக்கா நிறுவனமும் கொழும்பு ஹோல் சென்ரரும்!
    லைக்கா மோபைல் நிறுவனம் இப்போது தமிழ்த் தேசியவாதிகளின் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது. அவர்கள் விஜய் நடிக்கும் படத்தை எடுக்கப்போய் இப்போது சர்ச்சையில் மாட்டியிருக்கின்றனர். 
    அவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே உறவாடி தமது வர்த்தகத்தை செம்மையாக நடாத்தி வருபவர்கள்தான். ஆனால் அதனைப் பற்றியெல்லாம் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகளோ இவர்களது இணையத்தளங்களோ கண்டுகொண்டதில்லை. (இதில் இனியொரு தளம் வித்தியாசமானது). காரணம் ஒன்றும் சுழியோடி அறியவேண்டியதில்லை. அவர்கள் வாரி இறைக்கும் பணம் தமக்கு தொடர்ந்து வரவேண்டும் என்று புலிஆதரவாளர்கள் நினைக்கின்றனர். 
    லைக்கா நிறுவனம் ஒரு பல்தேசிய நிறுவனம். அதற்கு வர்த்தகம் ஒன்றுதான் குறி. அதற்காக அவர்கள் எந்தப் பேயுடனும் (தமக்கு ஆதாயம் உண்டு என்றால்) கூட்டுச் சேருவார்கள். இலங்கையில் அவர்கள் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இல்லையெனில் அவர்கள் யாழ்ப்பாணம் வருகின்றபோது மகிந்த ராஜபக்ச வருவதுபோல வந்து இறங்க முடியுமா? 
    மகிந்த ராஜபக்ச ஒரு இடத்திற்கு ஹெலிகப்டரில் செல்கிறார் என்றால் ஒரேமாதிரியான இரண்டு ஹெலிகள் செல்லும். அவர் எதில் இருக்கிறார் என்பது ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளுக்குத்தான் தெரியவரும். ஏனெனில் அவர் செல்கின்ற ஹெலிகப்டரை தாக்குவதற்கு யாராவது முயன்றாலும், எதில் அவர் செல்கிறார் என்பதை அறியமுடியாது. அப்படித் தாக்குவதெனில் இரண்டையும் தாக்கவேண்டும். அவ்வளவு முன்னெச்சரிக்கைகள் மகிந்தரின் பயணத்திற்கு உண்டு. இது அவரது தம்பி கோத்தபாயவுக்குக் கூட கிடைக்காது. அவர் தனி ஒரு ஹெலிகப்படரில்தான் பயணம் செய்வார். ஆனால் லைக்காவின் சுபாஸ்கரன் கொழும்பிலிருந்து யாழப்பாணம் செல்ல மகிந்தரின் பாணியில் இரண்டு ஹெலிகள் அணிவகுத்து சென்றன. அந்தளவிற்கு சுபாஸ்கரனின் உயிருக்கு பாதுகாப்புக் கொடுக்க விரும்புகிறது மகிந்தரின் அரசு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் அவர்களிடையே இருக்கும் உறவை.
    சரி, அந்த உறவைத்தான் விடுவோம். அது அவர்களின் வர்த்தகம் சார்ந்தது. ஆனால், லைக்கா நிறுவனம் கொழும்பில் ஹோல் சென்ரர் என்ற பெயரில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றில் புதிதாக தொழில் செய்கின்றதே அது எப்படியானது அங்கே ஹோல்சென்ரர் என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
    இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலானோர், ஏன் எல்லோரும் என்றே சொல்லலாம். பாவிப்பது லைக்கா மோபைல் போன்களைத்தான். அந்த போன்களுடாக கதைப்பவற்றை கொழும்பிலிருந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதிலும் முக்கியமான புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் லைக்கா மோபைல் உடனான பேச்சுக்கள் இருபத்திநான்கு மணிநேரமும் பதிவுசெய்யப்படுகின்றன. புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களின் தொடர்பாடல் மாத்திரமல்ல, தாயகத்திலுள்ளவர்களின் உரையாடல்களும்தான் லைகாவின் ஹோல் சென்ரர் ஊடாக கண்காணிக்கப்படுகின்றன.
    லைக்கா என்ன செய்தாலும் புலி ஆதரவு சக்திகள் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்களின் பணம் அவர்களுக்குத் தேவை. அதுதான், லைக்கா தனது வர்த்தகத்தை ஓகோ என்று நடாத்துவதற்காக புலி அதரவு இயக்கங்களுக்கும், இணையதத்ளங்களுக்கும் வாரி வழங்குகின்றதே, அந்தப் பணம் ஒன்றுதான் அவர்களின் குறி. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளையும் லைக்கா கண்காணிக்கிறது. சிறிலங்கா அரசின் புலனாய்வாளர்களுக்காக லைக்கா கண்காணிக்கிறது. 
    இப்போது சினிமாக்காரர்கள் முட்டிமோதிக்கொள்கின்றார்கள். பாவம் விஜய். அவரை வீழ்த்த விரும்பும் சக்திகள் இதனை பயன்படுத்திக் கொள்கின்றன. சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத்தடை கொண்டுவரவேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் கொண்டுவந்தபோது அதனை வரவேற்ற தமிழக திரைப்படத்துறை, மறுநாளே தமது படங்களுக்கான சிறிலங்கா உரிமைக்கு விலைபேசியதே. அதுபோலத்தான், லைக்கா யாராக இருந்தாலும் அவர்களிடமிருந்து திரைப்படத்துறையினருக்கு வரவிருக்கின்ற வருமானத்தை அவர்கள் இழக்கப்போவதில்லை. படம் தயாரிக்கப்படும், விஜய் தன்னுடைய சம்பளத்தை வாங்கிவிடுவார். மறுபக்கம் கூச்சல்களும் ஒலிக்கும். 

  4. Rajan says:
    12 years ago

     தணிக்கை செய்யாமல் ‘தமிழ் மூளையின் ‘ ( மூடன்) செய்தியை இனியொரு பதிவிட வேண்டும்.

  5. Sutharsan says:
    12 years ago

    லைக்கா மகிந்தரோடு, லிபாரா விஜய் டிவியோடு….என்னய்யா நடக்குது இங்கே?.
    விளம்பரம் வருது. ஆகவே மௌனியாக இருக்கிறார்கள் தமிழ்தேசிய ஊடகத்தார்.
    அடையாள அரசியலுக்கு ஊடகம் தேவை….அதை நடத்த விளம்பரம் தேவை.
    ஏதோவொரு கும்பலோடு இணைந்தால், விளம்பரப்பணம் கிடைக்கும். 
    இதைத்தான் தேசியத்தை வித்து வியாபாரம் செய்வது என்கிறார்களோ…….

    லிபராவின் விளம்பரத்தைப் போட்டால் மக்கள் உங்களை தேசியவாதிகள் l என்று நம்புவார்கலென்று யார் சொன்னது?.
    10 பவுனில் ஒரு பவுன் மக்களுக்கு போகும் என்பதே வியாபார உத்திதானே…..
    உங்களுக்கென்ன ஊடகம் நடத்த காசு வந்தால் போதும். 
    முதலாளிகள் இரண்டுபட்டால், தமழ் தேசிய வியாபாரிகளுக்கு கொண்டாட்டம். து…..
    காசு…..பணம்…..துட்டு……money ..money .

  6. mannan says:
    12 years ago

    முதலாளித்துவம் தன்னைப்பாதுகாக்க  உலகில் பல  நாடுகளை  தமது
    ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது.   ஏழைகளை  மேலும் ஏழைகளாக்குவதன்  மூலமே  முதலாளித்துவம்  பலம் பெறும்.
    இதற்காக  உலகின்  வளங்களை  சூறையாடுவது  அவர்களின்  குறிக்கோள்.

    தமிழர்களைப் பொறுத்தவரை   மேற்குலகில்   கணிசமான் அளவில் வசிப்பதால்   இலங்கையையோ  அல்லது   தமிழகத்தையோ   சூறையாடுவதிலும் பார்க்க   புலம்பெயர்  நாடுகளில்  சூறையாடுவது
    லாபகரமானது.   

    எண்ணை வளத்திற்கு  பங்குபோட  அரேபிய  நாடுகளில்  இரத்தக்களரி
    ஏற்படுத்தியதைபோல,   தமிழரின்  புலம் பெயர்  வளங்களை  சூறையாட
    தமிழர்களின்  உதவியோடு     இலங்கையில்  தமிழரின்  இரத்தத்தையும்
    உயிர்களையும்   பயன்படுத்தினார்கள்.

    இத்தகைய  சர்வதேச  முதலாளித்துவ  மாபியாக்கழுடன்  கைகோர்த்து
    சில  இங்கைத்தமிழரும்    தமிழகத்தமிழர்கழும்    செயற்படுகின்றார்கள்.
    இவ்ர்களிற்கு   அரேபியாவில்  எண்ணை வளம் போல  ஆசியாவிலும்
    புலம் பெயர்  நாடுகளிலும்  தமிழ் உணர்வு  மூலதனமாகவுள்ளது.

    இவர்களின்  தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள்   கல்வியறிவற்ர, கல்விபயில
    முடியாத  ஓர்  ஏழைத்  தமிழனின்  இரசனைக்கேற்பதாகவே  தயாரிகப்படுகின்றது.  இதன் மூலம்  உலகமெங்கும்   வளராத  சமூகமாக
    தமிழினத்தை  வைத்திருக்கின்றார்கள்.

    இதற்கு  உதாரணம்:     சொத்துக்குவிப்பு  வழக்கில்   சிக்கியுள்ள  ஜெயலலிதாவையும்,   சொத்துக்களை குவித்து  வாழும்  கருணாநிதியையும்  விட்டால்  தமக்கு   தலைமையே  இல்லை என்று
    பயம் கொள்ழும்  தமிழகமே  இதற்கு  உதாரணம்.

    • lala says:
      12 years ago

        ##        இவ்ர்களிற்கு   அரேபியாவில்  எண்ணை வளம் போல  ஆசியாவிலும்
      புலம் பெயர்  நாடுகளிலும்  தமிழ் உணர்வு  மூலதனமாகவுள்ளது.##        

                                                                 

                                                                          ஆரம்பிக்கும்போதே தெரியும் ஆட்டுக்குள்  கொண்டு வந்து மாட்டை  விட்டு விடுவீர்கள் என்று .

      லிபரா  ந டாத்தும்  நி  கழ்க்ச்சிகளில் என்ன  தமிழ் உணர்வு இருந்து விட்டது .
      வேண்டுமானால்  தமீங்கிஷ்  உணர்வு இருக்கலாம் . அதுதான் உங்களுக்கு தமிழுணர்வாக  தெரிந்து விட்டது போலும்.

      • mannan says:
        12 years ago

        தமிழ்  உணர்வென்ன தமிழரின் இர்த்தமே  கல்ந்துள்ளது. எல்லா உண்மைகளையும் எல்லோராலும்  அறிய முடியாது. விளக்கவும் முடியாது.

        • lala says:
          12 years ago

          ஆக மொத்ததில்  தமிழர்களின் இரத்ததிற்கு தமிழர்கள்தான் பொறுப்பு.

          வேறு யாரையும் தமிழர்கள்  குற்றம் சொல்லக்கூடாது .
          அதைத்தானே சொல்ல  வர்றீங்க..

          • mannan says:
            12 years ago

            வேள்விக்கு  ஆட்டை வளர்ப்பவர்கள்  ஆட்டின்
            பாசத்திலோ  அல்லது   கடவுளின் பக்தியிலோ
            வளர்பத்தில்லை.  நல்ல  விலைபோகுமென்பதுதான்
            நோக்கம்.       இதற்காக   கோவிலில்  ஆடு
            வெட்டியவனை     குற்ரம்  சுமத்தலாமா?

            இதேபோல்தான்     தமிழீழவிடுதலைப்போருரையும்
            ஒருசாரார்       வியாபாரமாக்கினார்கள். அதன்
            பயனை   அனுபவிதவர்கள்  தமிழினம்தான்.

            சிங்களவ்ர், இலங்கையரசு, இராணுவம்.
            இராஜ்பக்ச  மீது  குற்ரத்தை சுமத்தி
            தமிழ் வியாபாரிகள்  தமிழரை  ஏமாற்றுகின்றார்கள்.

            இப்போ  வெளிப்ப்டையாக  வியாபாரநோக்கினை
            அரங்கேற்ருகின்றார்கள்.

  7. Alex Eravi says:
    12 years ago

    In Canada a cultural centre TCC organizing a “Star Dance Music Night” with Jodi Number 1 “Samachvhaaram” Dancer Jacqualine on Saturday, April 26th.

    For more info…
    http://www.tamilnaducentre.org

    For this Vijay TV’s “Samachcharam” Star’s show they invites you & your family…

    It’s a money making Real… “Samachvhaaram” show… But they invite your family… hmm…

    • Alex Eravi says:
      12 years ago

      I heard Koliwood & TV female stars when they come to Canada, they are coming in a “Samachchaaram” deal… (not all of them).

      I don’t know what is the meaning of “Samachchaaram”…
      If anyone knows… 
      Pls post it here…

      • lala says:
        12 years ago

        Are you the pimp between them and the clients ??

        • Alex Eravi says:
          12 years ago

          Ohh… thank you friend, now I got it.
          So, you mean these organizers are like pimps… good! good!

          • lala says:
            12 years ago

            If you are there for the service why they need organaizer .
            Please bring a lamp with you which is going to be so helpful for you.

  8. lala says:
    12 years ago

    மன்னன்
    Pஒச்டெட் ஒன் 04/23/2014 அட் 17:08
     ##வேள்விக்கு  ஆட்டை வளர்ப்பவர்கள்  ஆட்டின்
    பாசத்திலோ  அல்லது   கடவுளின் பக்தியிலோ
    வளர்பத்தில்லை.  நல்ல  விலைபோகுமென்பதுதான்
    நோக்கம்.       இதற்காக   கோவிலில்  ஆடு
    வெட்டியவனை     குற்ரம்  சுமத்தலாமா? ##

                                 முதலாளிகளுக்கு   வியாபாரம் , பணம் , கலைநிகழ்ச்சிகள் என்பது போல்  . வர்க்கத்தோழர்களுக்கு  இரத்தம் , கொலை . வெட்டுதல் போலும் .

    இரண்டுக்கும்  இடையில் தமிழர்கள் சிக்கி தவிக்கிறார்கள்

    ஆட்டை வெட்டுபவனும்  ஆட்டின் மீது உள்ள  கோபத்திலோ , துவேசத்திலோ , இன பாகுபாட்டிலோ வெட்டுவதில்லை  கூலிக்குத்தான் வெட்டுகிறான்.
    இலங்கையில் இனவெறிப்படையால்  கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழ்கள் அப்ப்டியா கொல்லப்பட்டார்கள் . 
      அப்படியாயின்நாசிக்கள்   யூதர்கலை படுகொலை செய்ததையும் , ருவாண்டா படுகொலைகளையும் இவ்வாறே நியாயப்படுத்தி விடலாமே.

    • mannan says:
      12 years ago

      யூதர்களை   கொன்று குவித்ததுடன்   மகாம்களிலும் அடைத்து சித்திரைவதை செய்தார்கள்.  நச்சு வாய்வு ஊட்டி கொன்றார்கள்,  கூலியில்லாமல்  வேலை செய்வித்தார்கள்  அதுதான்  இனவெறிப்படை.      தமிழர்களிற்கு
      விடுதலை  பெற்றுத்தருகின்றோம் என்று   தொடங்கிய   போராட்டம்,
      இறுதி    நேரத்தில்    போராடியவ்ர்களை   காக்கும் கேடயமாக  மாறி
      உயிர்  நீத்தார்கள்.  அவர்களை  மீட்ட  இராணுவம்  இனவெறி  இராணுவமா?

      அல்லது     தமிழர்   அழிந்தாலும்  பரவாயில்லை   தலைமையும்
      அமைப்பும்  காக்கப்படவேண்டுமென்ற  தமிழீ விடுதலை  வியாபாரிகள்
      கொலை வெறியர்களா?

      • lala says:
        12 years ago

        உங்களது விதண்டாவதத்துக்கும் , சிங்கள் இனவெறி ராணுபத்துக்கு ஆதரவாகவும்  தெரிவித்த தமிழர்  துவேச கருத்துக்களுக்கு பதிலடியாக தெரிவித்த கருத்துக்கள் வழமைபோல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

        எனவே எனது கருத்துக்களை  தளத்தை படிப்பவர்களுக்கு இல்லை என்று தெரிந்து விட்டது . ஆனாலும்நிறுத்தப்போவதில்லை ஏனெனில் இனிநான் தெரிவிக்கம் கருத்துக்கள் உங்களுக்குத்தான் .

        னீங்கள் தெரிவித்த மேற்படி கருத்துக்களைத்தான்  ராஜபக்ஷவும் , அவரது ஊடக பேச்சாளரும்  பல  தடவைகள் தெரிவித்து விட்டனர் . உணமையில் அது அவர்களது கருத்துக்கள்தான்.நீங்கள் அவர்களிடமிருந்து இன வெறி கருத்தை கடன் வாங்கியிருக்கிறீர்கள் .
        பாவம் வர்க்கத்தோழர்களதுநிலமை . தமது கருத்துக்களை கூட  இன வறியாளர்கலிடமிருந்து   கடன் ஒஎற வேண்டியநிலை .

        ஜேர்மனி  கிட்லர்   இடது சாரிகளை எலிகளைப்போல்நசுக்குவேன் என்று ஏன் சொன்னார் என  இப்போதுதான் புரிகிறது.

        தேசியம் , சுயனிர்ணயம் என பேசிக்கொண்டு (?) ராஜபக்ஷவை வீராவேசமாக உதட்டளவில் திட்டிக்கொண்டு ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் ?
        பேசாமல் ராஜபக்ஷவின்  பேச்சாளராகவே ஆகிவிடலாமே ?

         அப்படித்தான் செய்ய முடியாதே ?
        எசமானர்கள்  உங்களுக்கு தந்த அசைன்ட்மன்ட் அதுவல்லவே .
        தமிழ் ம்க்களிடையே  தெசியம்  அது இது என்று பேசி ஊடுருவி  அவர்கள் ஏதாவது உருப்படியாக செய்தால் குழப்பி  சிதைத்து விடுவதுதான்  அவர்கள் உங்களுக்கு தந்த  அசைன்ட்மன்ட் 

        ஆனால்நீங்கள் என்னதான்நடித்தாலும் உங்களை அறியாமல் சுயரூபம் வெளிப்பட்டு விடுகிறது .

        உங்களில் ஒருவர் எப்போதாவது ஒரு தொலக்காட்சியில் தோன்றி குழப்புவார் , ஆனால் பாவம் அது பெருயளவில் எடுபடுவதில்லை .
        உங்களைப்போன்ற இருட்டு வீரகளுக்கோ  இணைய ட்களத்தை விட்டால் வேறு வழியில்லை . மொத்தமாக ஒரு நான் கு  பேர் இருப்பீர்களா ?

        தளத்தில் எந்த எதிர்ர்புமின்றி எழுதி தள்ளுவது ? யாரவது கேள்வி கேட்டால் , பதிலடி கொடுத்தால் மாற்று கருத்துக்கு சொந்தக்காரர்கள்  அதனை வெளியே விடாது ஒடி ஒளிந்து கொள்வது .

          இணையத்தில் ஒளிந்து  கொண்டு  கருப்போர் புரியும் கோழைகளே  பகிரங்க விவாதத்துக்கு உங்களால் வர முடியுமா ? 
        இங்கே சொல்வதை மக்கள் மன்றத்தின் முன் வந்து சொல்லுங்கள் . மக்கள் உங்களை செருப்பை கழற்றி அடிப்பார்கள்.
        இதுவரை உங்களை வர்க்க தோழர்கள் என தவறுதலாக அழைத்து விட்டேன் .

        உங்களை வர்க்க பொட்டை பசங்க என்றுதான் இனி அழைக்க வேண்டும் .

        • mannan says:
          12 years ago

            //இணையத்தில் ஒளிந்து  கொண்டு  கருப்போர் புரியும் கோழைகளே  பகிரங்க விவாதத்துக்கு உங்களால் வர முடியுமா ? 
          இங்கே சொல்வதை மக்கள் மன்றத்தின் முன் வந்து சொல்லுங்கள் . மக்கள் உங்களை செருப்பை கழற்றி அடிப்பார்கள்//

          சொல்லும் வார்தைகளால்  பிறர் மனதை  புண்படுத்தாத
          மனிதர்கழும் உலகிலுண்டு. செருப்பை கழற்ரி அடிப்போரிற்கும்
          கையில் துப்பாகியிருந்தால்  கொலை செய்வோரிற்கும்
          பயங்கரவாதிகளிற்கும்   வேறுபாடேயில்லை.

  9. ராஜா says:
    12 years ago

    உலக அலவுல இவன். தமிழ் நாட்டுக்குல்ல kd சகோதரர்கள்.
    ஆக எங்க பிணம் விழுந்தாலும் கவலையோ கஷ்ட்டமோ இல்லை. இவணுங்கெள்ளாம் நம்மல எச்சி பணத்த சேக்குரானுங்க.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...