தேமுதிகவிலிருந்து இதுவரை 4 எம்.எல்.ஏ.க்கள் விலகி உள்ள நிலையில் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தில் விஜயகாந்திடம் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது விஜயகாந்துக்கும், நிருபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து, தனியார் தொலைக்காட்சி நிருபர் பாலுவை எம்.எல்.ஏ. ஒருவர் கீழே தள்ளி விட்டார். நிருபர்களை நாய்கள் என்று திட்டியிருக்கிறார். இதுதொடர்பாக நிருபர் பாலு விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது புகாரை ஏற்று சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட வில்லை.