ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள போதிலும் இதுவரை அவர் குறித்த எவ்விதத் தகவல்களும் கண்டறியப்படவில்லை. காணாமல் போய் ஒருமாதம் கடந்துள்ள நிலையில் ஹெக்நேலியகொடவைத் தேடுவதற்காக ஹோமாகம தலைமையகக் காவல்துறை பரிசோதகர் இருவர் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை அமைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவரது கடத்தல் விவகாரத்தில் ஜாதிக ஹெல உறுமய என்ற இனவாதக் கட்சியைச் சார்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக இற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக பல சக ஊடகவியளார்களும் எதிர்க்கட்சியினரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.