07.12.2008.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி தலாய் லாமாவை சந்தித்து பேசியதற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கான பிரான்ஸ் தூதரை நேரில் அழைத்து சீன அயல்துறை துணை அமைச்சர் ஹீ யாபுல் கண்டனத்தை தெரிவித்தார்.
சீனாவின் உள்நாட்டு விசயத்தில் அத்துமீறி தலை யிடுவதாக பிரான்சின் செயல் அமைந்துள்ளது என்று சீன அமைச்சர் பிரான்ஸ் தூதரிடம் தெரிவித்தார்.