இலங்கை உலகம் முழுவதற்குமான கடலடித் தொலைபேசி மற்றும் இன்டர்னெட் தொடர்புகளுக்கான ஆசியாவின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. ‘SEA ME WE’ என்ற திட்டத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியன இணைந்து நடத்தி வருகின்றன. எதிர்காலத்திற்கான கடலடி தொலைத்தொடர்பு இணைப்பின் ஆசியா-மத்தியகிழக்கு-ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சந்தியாக இலங்கை உருவாகியுள்ளது.
பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான இத் திட்டத்தை சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனமே முகாமைத்துவம் செய்கிறது. சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பிலும் நிர்வாகத்திலும் இயங்கும் இத் திட்டடம் இந்து சமுத்திரத்தை இராணுவ மயப்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியே.
மலேசியாவின் பல்தேசிய வியாபாரியான அனந்த கிருஷ்ணன் மற்றும் ராஜபக்ச குடும்பம் தலைமையேற்றுள்ள இத் திட்டம் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் மீது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
நிலைமை இவ்வாறிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் புலம்பெயர் இணையங்களில் வெளியாகியுள்ள அறிக்கையில், ஏகாதிபத்திய நாடுகள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை இனகொலையாளிகளை மிரட்டி தமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளும் உலக நாடுகளின் அதிகார வர்க்கங்கள் கூடுகட்டியிருக்கும் இலங்கை ஒட்டுமொத்தமாகச் சூறையாடப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பமும் லைக்காவும் இணைந்து நடத்திய ஊழல் ஊடாக சிறீ லங்கா ரெலிகொமில் புகுந்குகொண்ட ராஜபக்ச குடும்பத்தின் தலைகள் இத் திட்டத்தைத் தலமைதாங்குகின்றன.
இதன் முழு விபரம் அடங்கிய தகவல்களும் அதன் பின்புலத்திலுள்ள அரசியலும் எதிர்வரும் வாரங்களில் இனியொருவில் வெளிவரும்.
ஒரிரு இலத்திரனியல் புத்தகப்பூச்சித் தன்மையை ஏமாற்றி வளைத்தெடுத்து தான்தோன்றித் தனமாக உலகத் தமிழர் ஊடக மையம் என்றும் எதிர்காலத்தை எழுத வேண்டிய மையம் என்றும் பிழைக்கும் ஊடகமொன்றில் 2003 அளவில் பதிவு ஒன்று இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது. ஆங்கிலத்திலான அப்பதிவு கீழே இணக்கப்படுகிறது.
இப்பதிவு 2003 ஆம் ஆண்டு பகல் கனவு ஏமாற்று வித்தையாக பயன்படுத்தப்படுவதன் பின் நானறிந்த வரை இப்பொழுது இனியொரு வெளிக்கொணரும் விடயங்கள் மட்டுந் தான் ஸ்ரீலங்காவின் மைய முக்கியத்துவத்தை வெளிப்படையாக ஆராயும் ஒரு முயற்சி.
நற்காரியங்கள் உருவாக வாழ்த்துக்கள்.
பிரித்தானியரால் திட்டமிட்டு பிரிவினைகளை ஏற்படுத்தி வளர்க்கப்பட்ட ஈழத்தமிழ் மந்தைகளில் புத்தகப்பூச்சிகள் ஒரு முக்கிய ஒட்டுண்ணி வார்க்கம். அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்கள் உலகம் பூராக வியாபித்து நவ காலனித்துவமாக மேலும் வன்மையாக காலூண்றிய தருணங்களிலெல்லாம் தெற்காசிய புத்தகப்பூச்சிகள் உலக ஆதிக்க வர்க்கத்தால் பெரிதும் பயன்படுத்தப்படுவது நியதி. புலம் பெயர்க்குவிக்கப்பட்ட ஈழத்தமிழ் சமுதாயம் இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் பல மேதைகளை உருவாக்கி இவ்வாறு உலகச் சீரழிவுகளுக்கு பெரிதும் பயன் படுத்தப்படுகின்றனர்.
தமிழரிடையே செய்தித் தணிக்கைகள், பொய்ப் பிரச்சாரங்கள், ஏமாற்று நாடகங்கள் என ஒரு அத்தியாவசியத் தேவை எனும் அளவிற்கு இடங்கொண்ட தொலைத்தொடர்பு விவகாரங்கள் பற்றிய அறிவு திட்டமிட்டே மழுங்கடிக்கப் படுகிறது. இதில் லைக்கா நிறுவனத்தின் களவும் பங்கும் சிலராவது அறியப்படுவதொன்றாகி விட்டது அண்மைய நிகழ்வு – எனினும் தமிழ் ஆர்வலர்கள் வியாபாரப் போட்டிகளுக்கு விலை போவது, காசு மோகத்தால் எழும் எரிச்சல் போன்ற படுகுழிகளை விலகி, ஒரிரு நிறுவனங்களின் கூத்துக்களுக்கு அப்பால், எவ்வாறு ஈழத்தமிழ்ச் சமுதாயம் தொலைத்தொடர்பு இணைப்புகளின் மையப் புள்ளித் தீவுவாசிகள் என்ற காரணாத்தினால் மேலும் வதைக்கப்படுகின்றனர் என்பதை உணர வேண்டும். திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவமும் அதனால் ஏன் இனவழிப்புக்கு ஆளாக்கப்படுவது என்பன கூட இன்னும் பல தமிழர் அறியா விடையமாகவே இருந்துவருகிறது.
வெறும் தகவல் பரிமாறல்களுக்கு அப்பால் சமூக மற்றும் மக்கள் எழுச்சிக்கு வித்திடும் வகையில் நவீனமயமாகும் தொழில்நுட்பம் சார்ந்த அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கும் அறிவுக்கு வித்திடுவதே சிறந்த முற்போக்கான வழிமுறை.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8127
தற்போதைய நிலமையோ ஒரு தசாப்த இடைவெளியில் ஒட்டுண்ணி வியாபாரங்கள் பல இத்துறைகளில் ஈழத்தமிழரிடையே எழுந்ததது தான் எச்சம்.
“கைக்குவரு முன்னே
நெய்க்குவிலை பேசேல்”
2005 கறுப்பு செப்டம்பர்
—————————-
SEA-ME-WE 4 கடலடி தொலைத் தொடர்பு இணைப்பு பற்றிய திட்டங்கள் 2003 இல் பூர்த்தியாகியது. கடலடி இணைப்புகள் இழுக்கப்பட்டு திட்டம் நிறவுற்றது செப்டம்பர் 2005 இல்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மகிந்த ராஜபக்சவின் நவம்பர் 2005 வெற்றிக்கு சார்பாகச் செயற்பட்டது செப்டம்பர் 2005 இல் இருந்து!
மக்களும் போராட்டமும் சுனாமிப் பேரலையின் அழிவில் தவித்துக்கொண்டிருக்க பில்லியன் டொலர்கள் அளவில் சுனாமி அனர்த்த நிவாரணம் என ஆசைகள் காட்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
ஸ்ரீலங்கா டெலிகொம் கடலடி தொலைத்தொடர்பு இனைப்புக்களின் மையப் புள்ளியாக வேண்டும் என்று இலத்திரனியல் விஞ்ஞானத்தின் அடித்தளங்களில் ஒன்றான ஜப்பானின் NTT நிறுவனம் ஜப்பானின் பலவருடகால முயற்சிகள் கைக்கு எட்டப்போகிறது என மும்முரமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை வளர்த்துக் கொண்டிருந்த காலம்.
இந்தியாவில் 2G ஸ்பெக்ட்ரம் ( தொலைத் தொடர்பு சார்ந்த) பாரிய ஊழல்கள் நிறைவேறிக் கொண்டிருந்த காலம்.
சந்திரிகா குமாரதுங்கவையும் அவளுக்குத் தெரியாமல் அவளின் பிரதமன் மகிந்த ராஜபக்சவையும் சீனாவின் MSS உளவு நிறுவனம், அதன், சிங்கப்பூர் மலேசியா போன்ற தொலைத் தொடர்பு துறைத் தளங்களில் இருந்து இராணுவத் தொழில்நுட்பம் என்ற சாட்டோடு ஸ்ரீலங்காவில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு திடமாக (ஆனால் மறைமுகமாக) காலூண்டியதும் அதே மாதத்தில் தான்.
சீன மக்கள் இராணுவத்தின் தொழில்நுட்பமே சீனாவின் தொலைத் தொடர்பு துறை தொழில்நுட்பமும் என்பது பலராலும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஹூவாவி நிறுவனம் மேற்கத்தைய நாடுகளில் தொலைத் தொடர்பு துறையில் முழு ஆதிக்கம் செலுத்தவிடக் கூடாது என பல பிரயத்தனங்களும் வெளிப்படையாக எடுக்கப்பட்ட காலமது.