மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பாவில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்று இலங்கையில் உள்ள புதிய ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர் தெரிவித்துள்ளார். ஈரான் தொடர்ந்தும் இலங்கைத் தேயிலையை வாங்குமென்றும் அத்துடன் இலங்கை உடனான தனது நட்புறவை எதிர்காலத்தில் மேலும் ஈரான் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர், இதனைத் தெரிவித்தார்.







