எதிர்வரும் வியாளனன்று 12.05.2014 நடைபெறும் ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் பாசிசக் கட்சியும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைப்பவர்களுமான பெருமளவிலான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக்கட்சி (UKIP) வாக்குக்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியா முழுவதும் திடீர் எழுச்சி பெற்றுள்ள UKIP பிரித்தானியாவை அபிவிருத்து செய்தல், வெள்ளையின கிறீஸ்தவப் பெறுமானங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை தமது கொள்கைகளாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்கிறது.
இதே போன்று பிரான்சிலும் பாசிச நிறவெறிக்கட்சியான தேசிய முன்னணியும்(FN) திடீர் எழுச்சி பெற்றுள்ளது. இந்த இரு பாசிசக் கட்சிகளும் பல மில்லியன்களை முதலிட்டுப் பிரசாரம் மேற்கொள்கின்றன.
இனிவரும் காலங்களில் வெள்ளையினத்தவர்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் மீது படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படலாம்.
தெற்காசியாவில் இலங்கை, மியான்மார் போன்ற நாடுகளில் பாசிஸ்டுக்களின் ஆட்சி ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டது. உள்நாடுகளில் ஏற்படும் விசேட சூழ் நிலைகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பாசிஸ்டுக்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்கள். இவர்களின் உருவாக்கத்திற்கு பல்தேசிய கோப்ரட் நிறுவனங்களின் பணம் தாராளமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மதவெறி கொண்ட மிருகம் போன்று உலா வந்த பிரதமரான நரேந்திர மோடி என்ற பாசிஸ்ட் பிரதமராக்கப்பட்டுள்ளார். இன்று உலகம் முழுவதும் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பல்தேசிய கோப்ரட் நிறுவனங்கள் தமது உச்சபட்சக் கொள்ளையை நடத்துவதற்கு இவ்வாறான பாசிஸ்டுக்களின் பிரசன்னம் தேவைப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டில் முதல்தடவையாகப் பலமடைந்து வரும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை முளையிலேயே சிதைப்பதற்கும் இப் பாசிஸ்டுக்களும், அவர்களின் மத மற்றும் தேசிய வெறியும் அதிராகவர்க்கத்திற்குத் தேவைப்பாடுகிறது.
புதிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்;வரவேற்போம்! : ப.வி.ஶ்ரீரங்கன்
ஒங்களையெல்லாம் செருப்பால அடிச்சி வெரட்டுனுமடா………எங்க தேசத் தலைவரைப் பற்றி எங்ககிட்டேயே குறைகூறுகிறாயா….?????????????
அதானே! எல்லா பாஸிஸ்டுகளையும் பட்டியலிட்டு விட்டு உங்க தேசிய தலைவர் ராஜபக்ஷவை விட்டு விட்டால் பொத்துக்கொண்டு வராதா என்ன ?
In my view… there is nothing wrong in UKIP a& FN’s policy…
When LTTE wipe out Muslims from North, we Tamil HUMANS closed our eyes… mouths… eyers…
Since 1977… since Mangairkarasi Amirthalingam’s… Kasiananthan’s speech… we Tamils elect our Tamil leaders….
Britain is there country…
France is there country…
There Homeland…