வன்னியிலிருந்து வீமன் அனுப்பியுள்ள கட்டுரை இனியொருவின் கருத்துக்களல்ல. விவாத நோக்கில் மட்டும் கட்டுரை முழுமையாக, மாற்றங்களின்றிப் பதியப்படுகிறது.
இன்றைய அரசியல் சூழலில் ஈழத் தமிழர் ஒவ்வொருவரும் ஓர் அணியில் நின்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரப் போராட்டத்துக்கு முகம் கொடுத்து வந்த தமிழ் இனம் இரண்டு விதமாகப் போராடி வந்துள்ளது. 1957 முதல் 1977 வரை ஜனநாயக அகிம்சை வழியில் தொடர்ந்த போராட்டம் 1977 களின் பிற்பாடு சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது ஆயுத ரீதியான அடக்கு முறைகளை கையாண்ட போது தமிழ் மக்களும் தங்கள் உயிரைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தினார்கள்.
இது உலகறிந்த வரலாற்று உண்மை. ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதே தவிர இதற்கு வேறேதும் காரணங்கள் இருந்ததாக இல்லை. இந்த ஆயுதப் போராட்டம் தொடங்கிய போதுதான் அண்டைய நாடுகள் தமது பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பச் செய்தன. போராடவேண்டிய கட்டாயத்துள் தள்ளப்பட்ட இனம் உதவி நாடிச் சென்றபோது ஆயுதக் குழுக்களை இரண்டு முகாம்களாக பிரித்து (வலது இடது என) அனைத்து உதவிகளையும் செய்வதுபோல் செய்து முரண்பாடுகளை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்த அவர்களை வளர்த்து இறுதியில் அவர்களைப் பயங்கரவாதிகளாக்கி அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை மட்டுமல்லாது தமிழ் மக்களையும் சேர்த்து அழிக்கும் வேலையை அனைத்துலக நாடுகளும் செய்துள்ளன.
தமிழ் மக்களின் போராட்டம் உண்மையான போராட்டம். அவர்களை யாரும் கொச்சைப்படுத்தி விடமுடியாது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் விபரிக்க முடியாதவை.
உயிரிழப்பு என்பது தமிழ் மக்களுக்கு பொதுவான ஒன்றாயிற்று. இலங்கை அரச படைகள் சுடும் போதும் சாகவேண்டும் தமிழ் இயக்கங்கள் சுடும்போதும் சாகவேண்டும் அண்டை நாட்டுப் படை சுடும்போதும் சாகவேண்டும்
இது மாத்திரமா? சொல்லமுடியாதளவுக்கு சிறைகளும் சித்திரவதைகளும் பாலியல்பலாத்காரக்; கொடுமைகளும் நடந்தன. மேலும் கைகால்களை இழந்து கண்குருடாகி உறவுகளை இழந்து இனிமேல் இழப்பதற்க்கு எதுவும் இல்லாத நிலையில் மக்கள் முள்வேலி முகாமுக்குள் இருக்கும்போதுதான் எல்லோரும் எங்களைப் பாவித்து பயன்படுத்தி அகதிகளாக்கி நிற்கதியான அநாதைகளாக ஆக்கிவிட்டார்கள் என்று உணர்ந்தார்கள்.
இந்த வரலாற்றை மேலே சுருக்கமாகப் பார்த்துள்ளேன.; இன்று உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு; ஓர் சர்வதேச தமிழ் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் நமது நியாயமான ஜனநாயகத் தீர்வை எம்மக்களுக்கு வழங்க அவர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யும்படி உலக நாடுகளையும் அதன் மக்களையும் வலியுறுத்த வேண்டும். தொடர்ச்சியாக நாம் ஒருமித்த குரலில் ஒரே கருத்தோடு போராட வேண்டும்.
இதை விடுத்து இலங்கை அதிபருக்கு அல்லது இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டும் போதும் என்று நினைப்பது நமது பிரச்சனைக்குத் தீர்வாகுமா? மாறாக இனவாதம் மேலும் கூர்ப்படையும் நிலைதான் உருவாகும். இனவாதத்திற்கு தூபம் போடுவதற்கு பலர் முயற்சிக்கின்றனர். இவற்றை நாம் சரியான அரசியல் முன்னெடுப்புக்கு பயன்படுத்த வேண்டும். இல்லை தண்டிப்பதுதான் நம்முடைய இலக்கு என்றால் அதில் இலங்கை அதிபர் இராணுவத்தினர் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்திற்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.
அந்நியப் படையெடுப்பு செய்தவர்கள் கடைசி முடிவுவரை துணைநின்றவர்கள் அனைவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியமா? யாருக்கு யார் தண்டனை கொடுப்பது? இது இத்தருணத்தில் செய்யவேண்டியதல்ல. எம்மிடம் அதற்கு களமும் இல்லை. பலமும் இல்லை.
தற்போது நாம் செய்யவேண்டியது எஞ்சியிருக்கும் நம் மக்களுக்கு மறுவாழ்வழிப்பதுடன் உலக நாடுகளிலும் ஜநா மன்றத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஈழப் பிரச்சனையை ஒருமித்த குரலில் தொடர்ச்சியாக ஒலிக்கச் செய்வதனமூலம் எமது மக்களின் ஜனநாயக அரசியல் பலத்தை உலக அரங்கில் உறிதிப் படுத்த முடியும். அப்போதுதான் எமக்காக பேச்சளவ்pல் அனுதாபமும் ஆதரவும் தருகின்ற நாடுகளும் மக்களும் மேலும் மேலும் எங்களுக்காக நடைமுறையில் பலம் சேர்ப்பார்கள். இவைதான் எமது மக்களை ஒரு தூய்மையான அரசியல் தீர்வை நோக்கி இட்டுச் செல்லும். அதுமட்டுமல்ல எமது போராட்டத்தை அழிக்க நினைத்தவர்கள் எமது எதிரிக்கு துணைபோனவர்கள் அனைவருக்கும் கொடுக்கின்ற தண்டனையாகவும் மாறும்.
ஒற்றுமைதான் எமக்குப் பலம் நாம் ஒற்றுமையாவதற்கு என்ன உயிர்த்தியாகமோ செய்யவேண்டும்? இத்தருணத்தில்தான் புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் நம் மக்களுக்கு தன்னலமின்றி விஞ்ஞான பூர்வமான அரசியல் வழிகாட்டல்களை இடையூறு இல்லாமல் தொடர்ச்சியாக செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒருவித மாயைக்குள் இருந்தும் அந்தஸ்த்து கௌரவம் போன்றவற்றிலிருந்தும் விடுபட்டு எம்மேல் சுமத்தப்பட்டிருக்கும் வரலாற்றுக் கடமையை செய்ய மக்கள் முன்வருவார்கள்.
இதுதான் எமது போராட்டத்தில் அளப்பெரும் உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் எந்த அடிப்படை வாழ்வாதாரமுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் அளப்பெரும் பணியென எண்ணிப்பார்ப்போமாக.
தற்போதைய சூழ்நிலையில் உலகநாடுகளினதும் அதன் கூட்டமைப்பான ஜநாசபையினதும் முடிவுகள் பற்றிய கேள்விகளும் கருத்துக்களும் ஆய்வுக்குரியவையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
ஜநா முடிவின்படி ஜனாதிபதி போர்க்குற்றவாளி என்றால் போர் செய்தது சரிதான் ஆனால் போரில் மீறல்கள் நடந்ததற்காக மட்டுமே தண்டனை என்று பொருள்.
போருக்கு முற்பட்ட காலத்தில் பண்டாரநாயக்கா தொடங்கி ராஜபக்சே வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றமும் நடக்கவில்லையா? இவர்களுக்குமட்டும் தண்டனை கொடுத்தால் தமிழ் மக்கள் தங்கள் கண்களை துடைத்துக்கொண்டு வாழவேண்டியதுதானோ? இது ஒருபுறமிருக்க தமிழ்மக்கள் சம்பந்தமாக ஜநாவோ அல்லது உலக நாடுகளோ எந்தத் தீர்வையும் இதுவரை முன்வைக்கவில்லை. அது உள்நாட்டு பிரச்சனை போலும்.
போர் செய்யும்போது இப்படி செய்யவேண்டும் என்பதுதான் இவர்கள் பிரச்சனை. தமிழ் மக்களின் பிரச்சனையை தமிழ் மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்பதுதான் மறைமுகமாகத் தெரிகிறது. அது போன்றுதான் இலங்கைப் பிரச்சனை அது உள்நாட்டுப் பிரச்சனை அவற்றை இலங்கை அரசே முடிவு செய்யுமென கடைசியில் முடிவுக்கும் வருவார்கள்.
எனவே தமிழ்பேசும் மக்களாகிய நாம் நமது ஒருமித்த குரலை ஒலிக்கச்செய்வதின் மூலமாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன் வைத்து தொடர்ந்து சென்றால் நிட்சயம் உலகம் எம்மை மதிக்கும். எம்மக்களின் துயர் துடைக்க ஜனநாயக வழியில் ஓர் அரசியல் தீர்வை நோக்கி முன்னேற முடியுமென அனைவரும் எண்ணுவோமாக. ‘விடியலை நோக்கி ஒலிக்கட்டும் மக்கள் குரல்’ விடியல் எம் மக்களுக்காகவே என்ற ஜதார்த்தத்தை நடைமுறையில் செய்து காட்ட அனைவரும் அணிதிரள்வீர்.
நீதிக்கு தண்டனை கொடுத்தவர்கள் அநீதியைப் பற்றிப் பேசுகிறார்கள். தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஒருநாள் எரிமலையாக வெடித்துச் சிதறும். அப்போது உண்மையும் தர்மமும் வெல்லுமென்பது நிட்சயம்.
நாட்டின் அனைத்து மக்களையும் வழிநடத்தக் கூடிய முற்போக்கான அரசியலை தேர்ந்தெடுக்காமல் போனதன் விளைவே இன்று நாம் மீண்டும் எம்மை தயார் படுத்திக்கொண்டு எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடுவதற்கு காரணம். ஓற்றுமை இல்லாமல் எமக்குள்ளே அடிபட்டு பிரிவினையை உருவாக்கி இன்று எமக்கு இவ்வளவு மோசமான அடி விழுந்ததும் எம்மால் உலக அரசியலுக்கோ அல்லது எமது நாட்டு அரசுக்கோ அழுத்தம் கொடுக்கக்கூடிய அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்றால் இதற்குக் காரணமும் எமது அரசியல் தோல்விதான். இது நம் எல்லோருக்கும் தெரிந்ததும்தான்.
முற்போக்கான கட்சிஅரசியல் இல்லாத எந்தச் சமூகமும் முன்னோக்கிச் செல்லமுடியாது என்பதற்கு நல்ல உதாரணம் நாம்தான். அரசியல் இல்லாமல் போராடமுடியாது என்பதற்கும் நல்ல உதாரணம் நாம்தான்.
ஏதோ ஒரு வழியில் உலகம் ஓர் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாலும் அதை முகங்கொடுக்கவோ அல்லது ஆட்சிசெய்ய முன்வரவோ வேண்டுமாயின் அதற்;கு முக்கியம் முற்போக்கான அரசியல் கூட்டு தலைமைதான் என்பதை உணர்ந்து ஈழத்தமிழ்பேசும் மக்களின் எதிர்கால வாழ்வை கருத்திற் கொண்டு ஓரணியில் சென்று ஒரேகுரலில் உலகிற்கு உரக்கச் சொல்வோம்.








கட்டுரையின் பல பகுதிகள் அடிப்படை முரண்பாடுகளைக் கொண்டவையாக அமைகின்றன. முதலில் ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டும் அரசியலாகாது என்பதில் எனக்கும் உடன்பாடுண்டு. ஆயினும் இனப்படுகொலையின் சூத்திதாரிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்வது ஆபத்தான உதாரணம். இனிமேல் யாரும் படுகொலைகளைப் புரிந்துவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என நம்பிக்கையை வழங்கும். பல சர்வாதிகாரப் பாசிஸ்டுக்களுக்கு இது வாய்ப்பளிக்கும். தவிர, பேரினவாதம் அதிகரிக்கும் என மிரட்டி ராஜபக்ச தண்டிக்கக்ப்படக் கூடாது என்பதும் உரிமைப் போராட்டம் நடத்தக்கூடாது எனக் கோருவதும் அபத்தமான சரணடைவு வாதம். இனவாதத்தை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டம் முன்ன்வைக்கப்பட வேண்டும் என்பதே பிரதானமானது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகளுடனான உறவு, அவர்கள் ஒடுக்கப்படும் போது இணைந்து குரல்கொடுத்தல், பொதுவான அரச எதிர்ப்பு வேலைத்திட்டம் என்பன அடிப்படையாக அமையலாம்.
வெற்று முழக்கங்களுக்காகத் தமிழர்களை ஒன்றிணையக் கோருவது அழிவின் ஆரம்பம். ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் அனைவரையும் வர்க்க ஐக்கிய முன்னணியாக இணைத்துக்கொள்வது என்பது பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் ஆரம்பமாகும்.
தவிர, உலக நாடுகள் ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு உதவுதல் என்பது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காகவே அமைய முடியும். அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதன் ஆரம்பம் அதிகாரங்களுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனான இணைவு என்பதே.
உலகில் எந்த இனமும் பட்டிராதவற்றைத் தமிழினம் பட்டு நிற்கிறது.போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் ஈழ விடுதலையும் இன்றியமையாதவை தவிர்க்கவோ மறுக்கவோ முடியாதவை.போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ஈழவிடுதலை சாத்தியமா?சாத்தியமில்லை.திரும்பவும் சிங்களப் பேரினவாதத்தின் கீழ் இருப்பது இன்னும் தமிழினப்படுகொலைகள் பல நடக்க கோருவதாகத்தான் அமையும்.உலகின் மிகத்தொன்மையான தேசியினமான தமிழினத்தை சிங்களத்து அடிமையாக இருக்கச்சொல்லி எந்த இயம் கூறகிறது.உலகில் தமிழித்துக்கு இறையாண்மை உள்ள ஒருஅரசை நிறுவ உரிமை இல்லையென்றால் வேறு எந்த இனத்துக்கும் அந்தஉரிமை இல்லை.தேசிய இன முரண்பாடுகளை சரியாக உள்வாங்கி வேலைத்திட்டங்களை அமைக்காது போனதால்தான் சோவியத்தின் உடைப்பு ஏற்பட ஓருகாரணமாக அமைந்தது.சிங்களமுற்போக்குச்சக்திகள் வலுவனதாக வளரஇயலாது.இராசபக்சேவின் வெற்றி சிங்களபேரினவாத உள்ளத்தின் வெளிப்பாடு.தண்டனை விடுதலை இதைத்தவிர ஒருமித்த குரலில் எதை ஒலித்தாலும் பயனில்லை.
மூலதனம் இல்லாமல் அரசியலில் முன்னுக்கு வந்த ராஜபக்ச அமெரிக்காவில் கார் கரெஜ் வைத்திருந்த தம்பி கோத்தாவையும் அழைத்து வந்து இப்ப பெரிய பிரைவேற் லிமிடெட் ஆக்கி விட்டார்.அவருக்கு வலது புறம் சில்வாக்களூம்,பெரேராக்களூம்,இடது புறம் கருணா,டக்ளஸ் என்றூ ஒரு கூட்டமே அலைகிறது.இன்நிலையில் நாம் பழைய பல்லவிகளயே பாடிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா?
சொல்லப்பட முறையைத் தவிர கட்டுரையில் எதோ ஒரு நியாயம் இருப்பதாகவே படுகிறது. சீமான் கம்பனி போல உணர்ச்சி வசப்படாமல் நிலத்தில் இருந்து எழுதப்பட்டதை புரிந்த்து கொள்ள வேணும்.
இலக்கு:
1.தமிழரிட்க்கும் சம உரிமை.
2.. அடிப்படை மனித உரிமைகள் பேணப்படல்.
மூலோபாயம்:
தமிழின உணர்வாளர்கள், மனித உரிமைக்காக போராடுவோர், தமிழ் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரையும் இணைத்து எமது இலக்குகளிட்கு எதிரான சக்திகள், அதிகாரங்களிட்கு அழுத்தத்தை கொடுத்தல். ————
உடனடி தந்திரோபாயம்: :UNSG நிபுணர் குழு அறிக்கையை முதன்மை எதிரி சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக ஆயுதமாக பாவித்தல்.——————————————————————
உடனடி தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகள்: 1..முதன்மை எதிரி சிங்கள பேரினவாத அரசு மட்டுமே, சிங்கள பொது மக்கள் அல்ல என்பதை தமிழ் சிங்கள உணரவாளர்கட்கு புரிய வைத்தல் . —————————————————————————————————————————————————————— 2..UNSG நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்ட தமிழர் தரப்பு தவறுகளை எமக்கே எதிரான ஆயுதமாக(BACKFIRE) நாமோ அல்லது எதிரிகளோ பாவிக்க முற்படுவதை தடுத்தல் அல்லது( null and void) மலினப்படுதல் .
உடனடி தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகளை தகர்க்க கூடிய வேலைத்திட்டங்கள் உடனடியாக முன்னெடுத்தல் அவசியம்
//அறிக்கையில் கூறப்பட்ட தமிழர் தரப்பு தவறுகளை எமக்கே எதிரான ஆயுதமாக(BஆCKFஈறே) நாமோ அல்லது எதிரிகளோ பாவிக்க முற்படுவதை தடுத்தல் அல்லது(நுல்ல் அன்ட் வொஇட்) மலினப்படுதல் .
// இதில்சம்பந்தப்பட்டவர்கள் குற்ரம் சுமத்தப்படவேண்டியவர்கள் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்ருபவர்க்ள் இலங்கையிலும் இந்தியாவிலும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள். தொடர்ந்தும்
தமிழர்களிற்கு எதிரான் சதிகளை நிறைவேற்ருவார்கள்.-துரை
கனிமொழி மீது அபாண்டமாய் குற்றம் செலுத்தி உள்ள வடக்கத்தியானின் விசாரண பற்றீயும் எழுதுங்கள் துரை.அவ நம்ம கலைஞ்ரின் மகள் தவறூ செய்வாரா?நாள மலருது உதயசூரியன் நமது ஆட்சிதான் இனி.
கனிமொழியென்ன இன்னும் யார் யார் மாட்டுப்படப் போகின்றார்களென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திராவிடம்,தமிழ், தமிழீழம் இவர்களின் கூட்டுத்தயாரிப்பு வெளியிடப்படும்நாளிற்காக
காத்த்கிருப்போம்.-துரை
காளீ வந்தாயிற்றூ இன் என்ன செய்வது?நம்பவே முடியல்ல துரை, நம்ம தமிழ் மக்களா? இப்படிப் பண்ணீட்டாங்களே துரை.உங்களூக்கென்ன மகிந்தா மடியில போயி உட் காந்துவிக்கீங்க நம்மால முடியாது துரை.fபேக் சிமைலுடன் கோமாளீ மாதிரி நடிப்பது.
தமிழ்மாறன், தமிழீழக் கோசம் போட்டு தமிழரையே படுகொலை செய்தவர்கள் தான் மகிந்தாவின் காலில் போய் விழுந்துள்ளார்கள். இதனை அறியாதவர்களிற்கும், அறியமுடியாதவ்ர்களிற்குமாக நான் மன்ம்வருந்துகின்றேன்.மகிந்தா என்றாலென்ன கருணாநிதியென்றாலென்ன, ஜெயா என்றாலென்ன பககத்தில்நின்று படம் பிடிக்கவும் காலில்விழுந்து தம்து சுயநலங்களை பூர்த்தி செய்யவும் ஈழம் கேட்ட தமிழர்களிற்கு யாரும் சொல்லியா கொடுக்க வேண்டும்.-துரை
தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகள். 3: குழு வாதத்தை கையாளுதல்:——————————————————–
எம்மிடையே உள்ள மிகப் பெரிய தடை, கவனமாக கையாளப் படவேண்டியது.—————————————— எம் இலக்கு, மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் போன்றவற்றில் நாம் தெளிவாக இருப்போமானால் , வெவ்வேறு காரணங்களிட்காகவும்,தெரிந்தோ தெரியாமலோ எம் தவறிட்கும்,முதன்மை எதிரிக்கும் ஆதரவுக் கருத்துக் கொண்டோரையும் எம் கருத்துக்கள் மூலம் அவர்களின் குழப்பத்தை போக்கி அவர்களை எம் இலக்கு நோக்கி மட்டும் சிந்திக்கத் தூண்டலாம்.
துரைஅப்ப நீர் இலங்கை அல்லது இந்தியாவில்தான் உள்ளீரா?சதியை நீர் நிறைவேற்றுகிறார்?ஆனால் ஒன்றும் நடக்காது
30 வருடமாக தமிழரிற்கு சதி செய்து அழித்தொழித்து விட்டு இன்னமும் அவ்ன் துரோகி இவன் துரோகி
சதிகாரன் என்று கத்துகின்றீர்களே. உங்களைப்போல
தமிழர்தான் அவசியம் நாட்டுக்குத் தேவை.-துரை
நீர் சதி செய்தும் செய்யாமலும் கொத்து குண்டு போட்டும் அழித்தீரா?பின்ன உம்ம மாதிரி ஆளா தேவை?அறிவுப்பூர்வமாகவும் சித்தாந்தம் சார்ந்தும் விவாதம் நடக்கும் இத்தளத்தில் ஒன்றையே திரும்பத் திரும்பஉளறுகிறீர் ?எழுத்துக்கணக்கா ?வார்த்தைக்கணக்கா?பத்திக்கணக்கா?