Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

“உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா)

இனியொரு... by இனியொரு...
11/30/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

prabhakaranபிரபாகரன் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற விட்டுக்கொடுப்பற்ற தற்கொடையாளன். நீதியும் தேவையும் கருதிய இனவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்திய விடுதலை அமைப்பொன்றின் வெல்லப்பட முடியாத தலைவன். அவன் இப்போராட்டத்தில் கைக் கொண்ட வழிமுறைகள் சரியானதுக்காக பிழையானதாக இருந்ததாக கவலைப்படுதல் எம்மில் பலரிடம் இருந்தது. இவனின் போரியல் உத்தி இவனின் ராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி என்பன ஆரிய மேலாதிக்க சிந்தனா வாதிகளுக்கு கிலேசத்தை உண்டாக்கின.

விடுதலைப் புலிகளை போரில் வெல்ல முடியவில்லை என்றபோது இந்திய இலங்கை புலனாய்வு மையமும் கொள்கைவகுப்பு பிரிவும் நேர்கோட்டில் சிந்தித்தன. அவர்களின் அல்லக்கைகளும் அந்த நேர்கோட்டில் எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு திரிந்தன. அந்த அல்லக்கைகளும், கும்பலில் கோவிந்தாவாக இந்திய இலக்கை பணத்துக்காக குடுத்த காசுக்கும் கூடுதலாக நல்லா கூவின. We want tamil eelam, Our leader piraapakaran, எங்கள் தலைவன் சூரிய தேவன் எனக் கூவியபோது, விடுதலை புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் இவங்களின் குள்ளநரி கூவலினை பிரித்தறியமுடியவில்லை அல்லது பிரித்து அறிய முதல் அனைத்தும் முடிந்து விட்டது அல்லது வஞ்சக புகழ்ச்சி செய்யும் சூழ்ச்சியாளர்கள் யாரென இனங்காண முடியவில்லை அல்லது புலிகளின் தலைமை வஞ்சகரின் வஞ்சக புகழ்ச்சியில் வீழ்ந்து கிடந்தது..

அதற்கிடையில் இந்திய இலங்கை புலனாய்வு மையங்கள் புலிகளின் பல்வேறு துறைகளுக்குள்ளும் ஊடுருவிவிட்டன. இதுவே பின்னாளில் புலிகளுக்குள் பல் வேறு மட்டங்களிலும் பல்வேறு துறைகளில் நிகழ்ந்த குழப்பங்களுக்கும் காரணமாகும்.

tamilselvan
தமிழ்ச்செல்வன்

ஒரு சிறிய உதாரணம் புலிகளின் வாகனப் பொறுப்பாளர் குட்டி , அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வன் ,மற்றும் பாப்பா போன்றவர்களின் உறவினர்கள் பலர் EPDP அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்தனர், இந்த உறவினர்கள் மூலமாக இலங்கை இந்திய புலனாய்வு மையங்கள் EPDP இன் துணையுடன் ஊடுருவ முயன்றன, இம்முயற்சி 1995 களில் சுவிஸ் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்த மேற்ச் சொன்ன புலிகளின் தலைவர்களின் உறவினர்கள் மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. இச்சம்பவம் பின்னாளில் தினமுரசு பத்திரிகையில் (1995ல்) அற்புதனால் சூட்சுமமாக சொல்லப் பட்டது.

குட்டி என்ற புலிகளின் வாகனப் பொறுப்பாளர் பற்றிப் பார்ப்போம். கிழக்கு போராளிகள் மனமுறிவுக்கும் பிரதேசவாதம் அதன் மூலம் தலை தூக்கவும் குட்டியின் நடவடிக்கைகள் பெருமளவில் உதவின. வன்னி முறியடிப்புச் சமர் மற்றும் ஓயாத அலைகள் ஜெயந்தன் படையணி உட்பட்ட கிழக்கு படையணிகள் குட்டியிடம் இருந்து ஒழுங்கான வழங்கல்களை பெறவில்லை (உணவு போன்ற பொருட்கள்) மற்றும் போராளிகள் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றும் பொருட்களை சேகரிக்கும் பணி வாகனத்துறையிடம் கொடுக்கப் பட்டபோது போராளிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கூட போராளிகளின் எதிர்ப்பை மீறியும் வலோத் காரமாக பறித்துச் செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஜெயந்தன் படையணி குட்டியின் வாகன அணியை பின் தொடர்ந்து புதுக் குடியிருப்பில் வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்ததது.

போலி தலைமைத்துவ விசுவாசம் மூலமாக தம்மை இயக்கத்துக்குள் தகவமைத்துக் கொண்ட குட்டி போன்ற இவர்களால் இயக்கம் பலத்த பாதிப்புகளை சந்திக்கப் போகின்றனர், என்பதை புலிகள் தலைமை உணராமல் விட்டது ஆச்சிரியமே.

2002 இல் வந்த சமாதானம் குட்டி போன்றோருக்கு இயக்கத்துக்குள் இலங்கை அரசுக்கு ஊடுருவலை மேற் கொள்ள வசதி ஏற்படுத்தும் தருணம் நன்றாகவே அமைந்தது, 2005 இல் குட்டி கொழும்பில் கடத்தப்பட்டதாக செய்தி வருகிறது. ஆனால் குட்டி கடத்தல் நாடகத்தை தானே நிகழ்த்தினார். கோடிக்கணக்கான புலிகளின் பணத்தோடு கடத்தல் நாடகமாடிய குட்டி கொழும்பில் இலங்கை அரச புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து இருந்து 2009 புலிகள் அழியும் வரை தனது காட்டி கொடுப்புகளை செய்து கொண்டிருந்தார்.

தனக்கு நெருக்கமான பல போராளிகள் மூலமாக மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடர்பு கொண்டு இலங்கை அரசுக்கு தகவல்களை வழங்கினார். புலிகள் எதிர் சமர் , ஊடுருவல் சமர் என்பவற்றைச் செய்யும் முயற்சிகள் எல்லாம் குட்டியும் குட்டியை போன்ற இன்னும் சந்தர்ப்பவாத தொங்கு தசைகளின் ஊடுருவல் தகவல் மூலம் இலங்கை அரசுப் படைகள் பெற்று கொண்டன.

ஆனால் எம்மில் பலர் பிரதேசவாத உணர்வோடு அனைத்தையும் கருணா மட்டுமே காட்டிக் கொடுத்ததாக பேசுகின்றனர். இதை இலங்கை அரசும் நன்றாகவே விரும்புகிறது. கருணாவே காட்டி கொடுப்பாளன் என அழுத்திச் சொல்வதன் மூலம் கிழக்கையும் வடக்கையும் இனம் சார்ந்து ஒடுக்கு முறைக்கு எதிராக ஓன்று சேர்ந்து போராடுவதை தடுக்கும் உத்தி பின்னப்படுகிறது.

ஆக இப்படிப் பட்ட சுத்து மாத்துகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் உரித்தான குட்டி இப்போ எங்கே????? …………

2009 இல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருக்கும் புலிகளை அங்குள்ள புலம் பெயர் தமிழர்களை அழிக்கும் அல்லது கட்டுப் படுத்தும் புதிய திட்டத்தோடு பிரான்ஸ் இல் இருந்து புலிகளின் பிரமுகராக வலம் வருகிறார் குட்டி. இம்முறை பிரான்ஸ் இன் மாவீரர் தினக் கொண்டாட்டத்தில் யாரும் இவரை கண்டீர்களா?

france_ltteமேல் சொன்ன விடயங்கள் தவறு என புலிகளின் (??…) பிரதி நிதிகள் மறுப்பார்களா? ஆக குட்டி போன்ற சிலருக்கு பிரபாகரன் இருப்பதாக கூறவேண்டும். ஏனெனில் இன்னுமொரு புரட்சிகர தலைமை தோன்றாமல் இருக்கச் செய்ய வேண்டிய அனைத்தையும் இந்திய இலங்கை புலனாய்வு மையங்கள் செய்யும், அப்படிச் செய்ய குட்டி போன்றோரின் பங்களிப்பு தேவைப்படும். அத்துடன் இன்னுமோர் தலைவன் வந்தால் தங்களது தலைக்கு குறிவைக்கப்படும். ஆக இவர்களுக்கு எல்லாம் பிரபாகரன் என்ற பெயர் வேண்டும்.

பிச்சை புண்ணை காட்டி பிச்சை எடுப்பது போல மாவீரர்களையும் பிரபாகரனையும் காட்டி பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் மாவீரர்களை மாசு படுத்தாதீர்கள்.
இந்த வெட்கங் கெட்ட பிச்சைகாரர்களுக்கு பிச்சை போடுவதை எந்த சுய சிந்தனை உள்ள எந்த தமிழர்களும் செய்ய மாட்டார்கள் இனிமேல் செய்யவும் கூடாது.

பிரபாகரன் சூரியத்தேவன் என்பதுவும் அவன் உயிர் வாழ்கிறான் அவன் வந்த பின் மீண்டும் ஆயுத போர் தொடங்கும் என்பதும், பிரபாகரனை திட்டித் தீர்க்கும், அபகீர்த்தியை உண்டாக்கும் பிரச்சாரங்களும் பலதடவைகளில் ஒரு இடத்தில் இருந்து வருகிறது. உண்மையை விசுவாசிப்போர் மக்கள் நலன் உள்ளோர் தெளிவுள்ளோராக இருந்து பொது சிந்தனை ஊடாக சமூகப் போலிகளை இனங்காண வேண்டும், மக்களுக்கு இனங் காட்டவும் வேண்டும்.
புரட்சிகர மக்கள் கூட்டத்திற்கு பிரபாகரன் மாவீரன். பூ(ஞ்)ச்சாண்டிகளுக்கு பிரபாகரன் வாழும் சூரியத் தேவன். இதுதான் இன்றைய நிலை.

(கருத்துக்களும் விபரங்களும் முழுமையாகக் கட்டுரையாளரைச் சார்ந்ததே…இனியொரு… பொறுப்பல்ல)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தேஞ்ச செருப்பின காட்டுபுள்ள..! : கவிஞர்  பொத்துவில் அஸ்மின்

தேஞ்ச செருப்பின காட்டுபுள்ள..! : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

Comments 9

  1. niyayam says:
    11 years ago

    1990 களிலே குட்டி என்பவருக்கு பல பெண் தொடர்புகள் இருந்ததாகவும் கதைக்கப்பட்து.   ஒற்றைக் கையால் வாகனம் ஓட்டக்கூடியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

  2. mannan says:
    11 years ago

    இதில் கூறப்பட்டுள்ள மாற்று இயக்கங்களின் பங்கு என்பது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம். அதுமட்டுமல்ல இலங்கை இந்திய 
    உழவுத்துறையினர் இவர்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பது
    அதனை விட முக்கியம்.  போர் முடிந்தவுடன்  பெரும்தொகைப்பணத்திற்கும்  ஓர்  நிறுவனத்திற்கும்  பொறுப்பான ஒருவரில் சந்தேகம் கொண்டு அவ்ரின்நெருங்கிய  நண்பரிடம் அவர்
    புலியின் ஆதர்வாளரல்லவா என கேட்டேன். இல்லை அவர் மாற்று இயக்கக்
    காரர் என கூறினார். அவர்  கூறியது இப்போ  100 வீதம்  நிசமாகவுள்ளது.

  3. தயா says:
    11 years ago

    விடுதலைப்புலிகள் அமைப்பு என்பதும் அதில் வளர்கப்பட்ட ஊழல் என்பதற்கும் கொண்ட ஆதரங்கள் தவறு என கூறமுடியாது விட்டாலும் . ஒரு வரலாற்றுப போரை தந்தை செல்வா  விடுதலைப்புலிகள் அமைப்பிடம் கையளித்தார். அதற்கான  செயல்பாடுகள் தன்னிறைவு கண்டுள்ள போது அதனை மக்கள் நாம் வரலாற்று ரீதியாக நம்பிக்கை கொண்டுள்ளோமே தவிர   இலங்கையைப் போல்தான் இந்தியா  உட்பட்ட  சர்வதேசமும் நடந்து கொண்ட போது    விடுதலைப்புலிகள் அமைப்பை பலர் மற்றைய அமைப்புக்களுடன் ஒப்பிட முடியாது .

    ஊழலில் வெற்றி பெற முடியுமானால் அவர்களுக்கும் இன்று சந்தற்பம் வழங்கப்பட்டுள்ளதே தவிர  யாரையும் நம்பி ஈழத்தின் விடுதலைப் போராட்டம்.  இல்லை. 

     அதாவது   மகாவம்சத்தை உருவாக்கிய சிங்கள தேசம் சிங்கக் கொடி ஏற்றிய போதும் தமிழர்களை வெற்றிகொள்ள முடியவில்லை .  என்பது மட்டுமல்ல முள்ளிவாய்கால்வரை தமது  இனவாதத்தொடருக்கு  சந்தற்பம் கிடைத்ததே தவிர  ஈழ  வரலாற்றினை  வெல்வதற்கு உலகத்தில் யாரும் இதுவரை அல்ல இனியும் பிறக்க முடியாது.

    அதனால் தான் இத்தனை ஊழல்களில் இருந்தும் ஈழத்தின் விடுதலை வரலாற்றினை தமிழர்கள் தடங்கல்களாக கொள்ளாத அளவிற்கு  வளர்த்து வருகின்றார்கள்   . அதனால் தமிழர்களாக தமிழர்கள் வாழ வேண்டியது வரலாற்றுக்கடமை என்பதனை  தமிழர்கள் பின்பற்ற வேண்டும்.

  4. Micheal says:
    11 years ago

    எஸ்.ஜீ.ராகவன் என்ன சொல்ல வருகிறார்?இன்னொரு ரெளடியை விட்டு மிகுதித் தமிழரையும் அழிக்க சொல்லுகிறாரா?

  5. Cannan Rameshan says:
    11 years ago

    மாவீரர் தினம் மட்டுமல்ல புலம்பெயர் தமிழ் அரசியலில் ஒவ்வொரு அங்கத்திலும் இலங்கை மற்றும் உலக நாடுகளில் புலனாய்வுத் துறைகள் உள்ளிட்டுள்ளன. மீண்டும் புலிகளை மீட்சி பெறச் செய்து அதனை வெறும் ஒரு அடையாளமாக்கி இனிமேல் ஒரு போராட்டத்தை வளரவிடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கம். இதற்காகவே பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டுகிறார்கள். அந்த மாயைக்குள் மக்களைக் கட்டிவைத்து அதற்கு மேல் போராட்டம் வளர்ச்சி பெறாமல் தடுப்பதே இப் பிரகிருதிகளின் நோக்கம். அந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். இனிமேல் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்கு இவர்கள் எல்லோரும் இணைந்து போராட்டத்தைப் பின் தள்ளிவிட்டார்கள். பத்து வருடத்திற்குள் வடக்குக் கிழக்கை சிங்கள மயப்படுத்தி விடுவார்கள். அப்போதும் இனியொரு போன்று முன்னோக்குடன் சிந்திப்பவரகள் துரோகிகள்… அந்த நிலைக்குத் துணை போனவர்கள் தியாகிகள்….

  6. S.G.Ragavan says:
    11 years ago

    தமிழ் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான இனஅழிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அது நிறுத்தப் படவில்லை வேறு ரூபங்களில் தொடர்கிறது. பிரபாகரன் ரௌடியா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். வெளித் தெரியாதா கீழ்த்தரமான அரசியலை ஜி ஜி பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோர் செய்துள்ளனர். அந்தவகையில் பிரபாகரனின் பாத்திரம் மக்களால் தீர்மானிக்கப்படட்டும்.
    இன்றைய தேவை இலங்கை இந்திய கூட்டிணைவோடு நிகழ்ந்து கொண்டிருக்கும் கூட்டு இன அழிப்பினை ஒரு விவேகமுள்ள தலைமையின் கீழ் இணைந்து தடுக்க முற்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். பிரபாகரன் வந்து தான் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறும் ஒற்றர்களை இனங்காட்டுதலே எனது விமர்சனத்தின் நோக்கம்.
    பிரபாகரனை காட்டி காட்டியே அடக்கு முறைக்கு எதிராக போராடும் எமது தமிழ் பேசும் சிறுபான்மை சமுகத்தின் திறனை தமது ஒற்றர்கள் மூலம் அழிக்க இந்திய இலங்கை கூட்டு புலனாய்வு மையங்கள் முற்படுகிறார்கள்.
    தற்போது வடக்கு கிழக்கில் நிகழ்த்தப் படும் தீவிர சிங்கள கொலனிகளின் உருவாக்கம் தமிழர் களின் வாழ்விடங் களுக்கிடையில் செய்யப் படும் உத்தி இந்திய மையங்களால் இலங்கைக்கு பயிற்றுவிக்கப் பட்ட விடயமாகும் (குடியேற்றம் இலங்கைக்கு புதியதல்ல ). வட இந்தியாவில் தலித்துக்கள் மலை வாழ் இந்தியர்களுக்கு இடையில் ஹிந்தி , அல்லது குயராத்தி பேசுவோரை அரச ஆதரவுடன் குடியேற்றும் நிகழ்வு நீண்டகாலமாக நிகழ்ந்து வருகிறது. அது இந்தியாவில் ஹிந்தி மயமாக்கத்துக்கு வட இந்தியாவில் பாரிய வெற்றியை தந்து கொண்டிருக்கிறது. இந்த உத்தியில் உள்ள நெளிவு சுழிவுகள் இந்தியாவால் இலங்கைக்கு போதிக்கப் படுகின்றன. இந்தியாவில் அவர்கள் சிவில் அரச உத்தியோகத்தர்கள், படையினர் அவர்களின் குடும்பங்கள் என்பவற்றை நாசூக்காக பழங்குடி, மற்றும் தலித் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இன்றும் நிகழ்த்திக் கொண்டிருகின்றனர். வடக்கில் இன்று இருக்கும் படையினரின் குடும்பங்களுக்கு நடக்கும் காணிச் சுவீகரிக்கும் செயலும் இந்திய சீன அரசுடன் படைகளுக்கு கட்டிக் கொடுக்கப்படும் குடிமனைகளும் முடிவுறும் காலப் பகுதியில் வடக்கில் இரண்டாவது சிறுபான்மையாக தமிழர்களும் மூன்றாவது சிறுபான்மையாக கிழக்கிலும் தமிழர்கள் மாறுவார்கள்.
    இந்த ஆபத்து நிலையை நீக்க வேண்டுமானால். பிரபாகரன் வருவார் மீண்டும் போராடுவார் என்ற ஆபத்தான, அபத்தமான இந்திய இலங்கை ஒற்றர்களின் பிரச் சாரத்தில் மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது, மக்கள் தாம் சுயமாக சித்தித்து மக்கள் தலைமை ஒன்றின் கீழ் போராட முன் வரேண்டும் என்பதே எனது கட்டுரையின் நோக்கம்.
    (மண்டரின் மொழி பேசும் சீன மக்களை சீனா முழுவதும் குடியேற்றிய அறிவு சீனர்களுக்கும் உண்டு)
    (Micheal உங்களுக்கான பதிலும் மேலே உண்டு.)

  7. Sithu says:
    11 years ago

    எம்.ஜீ.ஆர், ரஜனி, விஜை போல பிரபாகரனை புலம்பெயர் நாடுகளில் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள். எம்.ஜீ.ஆர் விசில்களுக்கு தத்துவ விளக்கம் கொடுத்த நாக்கமுக்கா புத்திசீவிகளைப் போலவே புலம்பெயர் கோமாளிப் புத்திசீவிகள் பலரும் உள்ளார்கள். அவர்களின் முகப்புத்தக நிலைத் தகவல்களைப் போய் பாருங்கள் தெரியும் அம்மணமாக நின்று  அவர்கள் அடிக்கும் விசில்களை. இனியொருவில் பலர் விடும் தவறு என்னவென்றால் இவர்கள் எல்லாரையும் வியாபாரிகள் ஆக்குவது தான். சில முட்டாள்களும், கூட்டம் சேர்க்க விரும்புபவர்களும், சிலரை திருப்திப்படுத்த விரும்புகிறவர்களும் இவர்களில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரையும் ஒரு சில வியாபாரிகள் பாவித்து கொள்கிறார்கள். வியாபாரிகளை உளவு நிறுவனங்கள் பாவித்து கொள்கிறார்கள். அவ்வளவு தான்.

  8. தயா says:
    11 years ago

    மக்களின் நம்பிக்கை யாதெனில்   எமது வரலாற்று உண்மைகளை  அறிந்து கொண்டு  அதன்வழிகளில்  எதிர்காலத்தை வளர்பதே அன்றி சிங்கக் கொடியின் கீழ் தமிழ் ஈழத்தை தேடுவதல்ல  .

    ஈழமும்  வரலாறுகளும் உண்மை ஆனால்  யதார்தங்களும் சரியாக வழிநடதப்படும் என்பதே ஆகும்.   பல்லாயிரம் வருடகால வரலாறுகளை இன்று வாழும் நாம்  யதார்தத் தோடு மட்டும் சிந்தித்து செயல் ஆற்ற முடியாது  

    அதனால் வரலாற்றின் வழிகளில் நம்பிக்கை கொண்டு அடுத்தவர்களை விமர்சிப்பதிலோ நம்பிக்கை கொள்வதிலோ எம்து கடமைகளை நிறை வேற்ற முடியாது .  எது உண்மையோ அதனைப்பின்பற்ற வேண்டியதே கடமை ஆகும். 

    இந்தக் கருத்திற்கு காரணம் தமிழ் ஈழவிடுதயைை தமிழர்களினது  உண்மைத்தன்மைகளோடு மட்டும்தான் நிறை வேற்ற முடியும்  அதனால் தமிழர்கள் தமிழர்களாக தம்மை இனம்காணப்படும் போது எமக்கு எதிரி இல்லை உலகத்தில் . 

  9. praveen says:
    11 years ago

    இக்கட்டுரையின் 75வீதத்துக்கும் அதிகமான பகுதி பிரபாகரனை பற்றியல்லாது குட்டி என்ற ஒருவர் பற்றிய கட்டுரையாகவே அமைந்துள்ளது.இங்கு குட்டி என்பவர் பற்றிய தகவல் முழுவதும் கட்டுரையாளரின் அறியாத்தனத்தையும் அதிகபிரசங்கித்தனத்தையும் வெளிக்காட்டுகிறது.

    புலிகள் அமைப்பில் இரண்டு குட்டிகள் இருந்தனர்.முதலாமவர் செற் குட்டி இவர் புலிகள் அமைப்பின் மிக இரகசியமான பிரபாகரனின் தகவல் தொடர்பு சாதன பொறுப்பாளர்.

    இக்கட்டுரையின் 75வீதத்துக்கும் அதிகமான பகுதி பிரபாகரனை பற்றியல்லாது குட்டி என்ற ஒருவர் பற்றிய கட்டுரையாகவே அமைந்துள்ளது.இங்கு குட்டி என்பவர் பற்றிய தகவல் முழுவதும் கட்டுரையாளரின் அறியாத்தனத்தையும் அதிகபிரசங்கித்தனத்தையும் வெளிக்காட்டுகிறது.

    புலிகள் அமைப்பில் இரண்டு குட்டிகள் இருந்தனர்.முதலாமவர் செற் குட்டி இவர் புலிகள் அமைப்பின் மிக இரகசியமான பிரபாகரனின் தகவல் தொடர்பு சாதன பொறுப்பாளர்.

    இரண்டாமவர் இந்தியா முதலாவது முகாமில் பயிற்சி பெற்ற குட்டி.இவர் வன்னி புதுக்குடியிருப்பை சேர்ந்தவர்.புலிகளில் நீண்டகாலமாக வணிகபிரிவில் கடமை புரிந்தவர்.93இல் மாத்தையா விவகாரத்தில் சந்தேகத்தில் புலிகளால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.

    பின்னரும் வணிகப்பிரிவில் புலிகளின் போக்குவரத்துதுறை பாண்டியன் வாணிபம் முதலான பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்டவர்;இந்திய இராணுவ காலத்தில் நிதிசேகரிப்பில் ஈடுப்பட்டதில் பிரபல்யமானவர் இதனால் வியாபாரிகளூக்கு கலக்சன் குட்டி என்றால் நன்கு தெரியும்.

    இவரும் 2009 இல் சரணடைந்த புலிகளீல் அடங்குகிறார்கள்.ஆனந்திசசிதரனின் வாக்குமூலத்தில் உள்ளது கவனிக்கவும்.

    இங்கு கட்டுரையாளர் குட்டி என்ற புலிகளின் அனைத்துலக கட்டமைப்பில் டென்மார்க் நாட்டிலிருந்து தற்போது செயற்படும் குட்டியை கேள்விசெவியனாக யாரோ சொன்னதுகளை வைத்து மாவீரர் தின பொழிப்பு எழுதியுள்ளார்.

    இந்த குட்டி முன்னர் பரிதி பிரான்சில் கைதான பின்னர் இடைக்காலத்தில் பிரான்சுக்கும் பொறுப்பாக இருந்தவர்.கேபியின் மருமகன் என்றும் சொல்லப்படுகிறது;இவர் புலிகளின் இயக்க அங்கத்தவர் அல்ல வெளி நாட்டு செயற்பாட்டாளர் மட்டுமே.

    இங்கு தவறான தகவல்களை கொண்டு பிரதேசவாதம்,கருணா பிரிந்ததுவரை சிண்டு முடிந்து பிரபாகர காச்சலில் தலைப்பு போட்டுள்ளார்.

    கட்டுரையாளர்களின் கருந்தாக இருந்தாலும் இனியொரு தகவல்களை சரிபார்த்து பிரசுரிப்பது நல்லது.கருத்துக்கள் வாசகர்களை திசை திருப்பவல்லது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...