கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஜே புளக்கில் உள்ள 87 தமிழ் அரசியல் கைதிகள் தமது உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரியும், பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரியும் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 17 கைதிகள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்டபட்டனர்.
மேற்படி தாக்குதலையடுத்து மெகசீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், மேற்படி கைதிகள் தமக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகையும் முன்வைத்துள்ளதுடன் மெகசீன் சிறைச்சாலை உட்பட வேறு பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அவர்கள் சார்ந்த பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கைகையும் முன்வைத்துள்ளனர்.
மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மிது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் சிறையில் தமிழ்க் கைதிகளுக்கு நடக்கும் அநியாயம், அக்கிரமமம், அட்டூழியம் தொடர்பாகவும் விரிவான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.