உமா வரதராஜன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற அறிக்கையில் தனது பேர் சேர்க்கப்பட்டதுக்கு எழுதிய மறுப்புக்கு எனது பதில்
– சுமதி சிவமோகன்
தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள் என்ற 71 பேரால் கையொப்பமிடப்பட்ட அறிக்கை இலங்கையில் உள்ள மக்களிடையே, குறிப்பாக முஸ்லிம்கள், தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
போரிற்குப் பின்பான காலகட்டத்திலே தமிழ் முஸ்லிம் உறவுகள் எப்படியிருக்க வேண்டுமென்ற நோக்கிலே எழுந்த இம் முயற்சியில் தம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு 71 பேரைவிட கூடுதலான பேர் கேட்டுக்கொண்டனர். நாம் அனுப்பிய மடலை காலம் தாமதித்து பார்த்ததில் கையொப்பம் வழங்கமுடியாமல் போனதைக் குறித்து வருந்தியவர்களில் கலாநிதி செல்வி திருச்சந்திரன், வண. சாம் பொன்னையா, கலாநிதி வாசுகி நேசையா ஆகியோர் அடங்குவர்.
இதில் கையொப்பம் அளித்தவரில் ஒருவர் (அறிக்கை வெளியான பின்) அறிக்கையை உருவாக்கிய எங்களில் சிலரிடம் ‘கையொப்பம் அளிக்க பலர் காத்திருக்கின்றனர். நீங்கள் இதற்கு ஒரு வெப்சைய்ட் ஊடாக கையொப்பங்களை சேகரிக்கலாம்.’ என்று கூறினார். ஆனால் அறிக்கை வெளியாகி விட்ட படியால் எமக்கு கையொப்பங்களைச் சேகரிப்பதை விட அறிக்கையில் குறிக்கப்பட்ட விடயம் பற்றிய கலந்துரையாடலே முக்கியமானதாக இருக்கிறது.
இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டு தான் உமா வரதராஜன் தான் இந்த அறிக்கைக்கு கையொப்பம் அளிக்கவில்லை என்று எமது நேர்மையை கேள்வுp கேட்ட விடயத்தை ஆராய வேண்டும். நாம் கையொப்பங்களை சேகரிக்கும் போது பரந்துபட்ட தமிழ் மக்கள் சமூகங்களிடையே கையொப்பங்களைப் பெற எத்தனித்தோம். பல் தரப்பட்டவர்களுடன் எமக்கு தொடர்புகளை ஏற்படுத்துமாறு எமக்குத் தெரிந்தவர்களைக் கேட்டோம். அப்படிக் கேட்டவர்களில் ஒருவர்தான் ஆத்மா. அவர் எனக்கு ஏறத்தாழ 15 பேரின் ஈமெயில் விலாசங்களை சேகரித்துத் தந்தார். அவர்களெல்லர்ருக்கும் நான் அறிக்கையை ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்தேன். அப்படி அனுப்பிவைத்ததில் ஒருவர்தான் உமா வரதராஜன். அவருக்கு நான் 2011 டிசம்பர் 29ம் திகதி இதனை அனுப்பி வைத்தேன். வடக்கு கிழக்கில் ஈமெயில் தொடர்பு சுமுகமாக இல்லாதபடீயாலும், வேறு சிலர் பல நாட்களுக்கு பின்னர் ‘நான் இப்பத்தான் உங்கட ஈமெயில்ஐ பார்த்தேன்’ என்று சொன்னதாலும், நான் ஈமெயில் அனுப்பியபின்னர் ஆத்மாவி;டம் ஈமெயில் கிடைத்ததா என்று அனுப்பிவைக்கப்பட்டவர்களிடம் வினவக் கூறினேன். அவ்வாறு நான் கேட்டுக்கொண்ட வாறே அவர் சிலரிடம் ஈமெயில் கிடைத்ததா என்று வினவினார். ஒரு சிலநாளில் அவர் ‘உமா வரதராஜனுக்கு அவர் வெளிநாட்டுக்கு போகவெளிக்கிடுகின்ற படியால் அவருக்கு உங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் இருக்கின்றதாம். அவர் தாம் இதற்கு கையொப்பம் அளிப்பதாக சொல்லியிருக்கின்றார். அவரின் பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டீருக்கிறார்’; என்று என்னிடம் கூறினார். இப்படி தொலைபேசியில் பெயரைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட இரண்டு பேரில் உமா வரதராஜன் ஒருவர்.
எனக்கு உமா வரதராஜனை நேரில் தெரியாது. ஆனால் அவரது கதைகளை வாசித்துள்ளேன். பேராதனை பல்கலைக்கழகத்திலே ஆங்கில திணைக்கள பாடத்தி;ட்டத்தில் உள்ள சிங்கள-தமி;ழ் இலக்கிய பாடத்தில், அவரின் கதை எலியத்தை நான் விரும்பி கற்பிப்பது உண்டு;. அவர் நுஃமானின் நண்பர் என்றும் எனக்குத் தெரியும். இக் காரணங்களுக்காக எனக்கு அவரில் ஒரு விதமான அபிமானம் உண்டு. வரதராஜனின் கோழைத்தனமான குற்றச்சாட்டு என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. 71 பேரில் உமா வரதராஜனின் பேரை ஓரு காரணமுமன்றி இணைத்துக்; கொள்ள எமக்கு என்ன தேவையிருக்கிறது?
ஒருவிதமான காரணமும் இல்லாமல் தனக்கு இந்த அறிக்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்கிற வரதராஜன் ஏன் இதனைப் பகிரங்கமாகத் தெரிவிக்காமல், ஃபேஸ்புக் போன்ற ப்ரைவட் வலையத்தில் இக் குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கிறார்? அவருக்கு எனது ஈமெயில் விலாசம் தெரியும். ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்று அவர் கருதியுpருந்தால் என்னை அல்லது அவரது நெருங்கிய நண்பன் ஆத்மாவைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதுவே நேர்மையானதும் நாகரீகமானதுமாயிருந்திருக்கும். அப்படி அணுகாமல், உதிரித்தனமான மாதிரி நடந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க நாங்கள் அணுகமுடியாத ஃபேஸ்புக்ல் இக்குற்றச்சாட்டை போட்டிருக்கிறார்? இது மிக சந்தேகத்துக்குரியதாகவே எனக்குப் படுகிறது
தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேலை செய்கிற எமக்கு இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. தனிநபர்களின் கோழைத்தனங்களுக்கும் ஈகோ வார்ப்புகளுக்கும் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்க வேண்டியுள்ளதை யோசித்து கவலை கொள்கிறேன். இப்படிப்பட்டவர்கள் தான் தமிழ் எழுத்தாளர்கள் என்று யோசிக்க வருத்தமாக இருக்கிறது.








இந்த எனது பதிலின் முக்கியமான மிகுதித் துண்டை காணவில்லை? ஆத்மாவின் விளக்கம் என்பது. அதற்கு என்ன நடந்தது?
பெளசர் அனுப்பியிருந்த முகநூல் இணைப்பில் இவ்வளவு தான் காணப்பட்டது. மிகுதியை அனுப்பினால் பதிவிடலாம்.
உமா வரதராஜன் எவ்வாறு தனது இந்த அறிக்கைக்கான சம்மதத்தை எமக்கு அளித்தார் என்பதற்கான ஆத்மாவின் விவரணம் கீழே உள்ளது.
உமா வரதராஜனின் ‘பச்சைப் பொய்’ -என். ஆத்மா-
உரையாடல் 1:
என். ஆத்மா: ஹெலோஇ நான் ஆத்மா கதைக்கிறன்.. நீங்க பிஸியா..
உமா வரதராஜன்: இல்ல பரவாயில்லஇ சொல்லுங்க ஆத்மா..
ஆத்மா: உங்களுக்கு ஒரு டொகுயுமென்ட் ஒண்டு மெயில் பண்ணனும்இ உங்க ஈமெயில் எட்ரஸ ஒருக்கா சொல்லுங்க.. நான் ஊர்ல நிக்கிறன்இ எனக்கு இன்ரநெற் பார்க்கிற வசதி இல்லாமரிக்கு..
உமா:ரஅயஎயசயவாயசயதயn@பஅயடை.
உழஅ
ஆத்மா: ஒகே தெங்ஸ்.. என்ன விசயமெண்டா… அரசியல் இனப்பிரச்சினை சம்பந்தமாவும்இ வடக்கு முஸ்லிம்கள்ர வெளியேற்றம் சம்பந்தமாவும் ஓரு குறூப் ஆட்கள் ஒரு டொகுயுமென்ட் ஒண்டு தயாரிச்சிருக்காங்க.. அத வெளியிடப்போறாங்க.. அதில ஒரு தொகை ஆட்கள் சைன் பண்ணியிருக்காங்க.. எனக்குத் தெரிஞ்ச தமிழ் ரைட்டர்ஸ் மற்றது இந்த இஸ்சூ தெரிஞ்ச ஆட்கள் கொஞ்சப்பேர் இதில சைன் பண்ணினா நல்லமெண்டு சில கெண்டக்ட்ஸ் தரமுடியுமா எண்டு சுமதி கேட்டிருக்காங்க.. நான் உங்க மெயில் எட்ரஸயும் குடுக்கிறேன்.. நீங்க பார்த்துட்டு ரிப்ளை பண்ணினா சரி.. உங்களுக்கு ஒகேயெண்டா சைன் பண்ணலாம்.. சுமதிதான் உங்களுக்கு மெயில் பண்ணுவாங்க..
உமா: ஒகே ஆத்மா.. நான் பார்த்துட்டு சொல்றேன்..
ஆத்மா: ஒகே தெங்ஸ்இ வைக்கிறன்.
உரையாடல் 2:
ஆத்மா: ஹெலோ வரதன்இ கதைக்கலாமா..
உமா: ஆத்மா நான் இந்த தமிழ்நாடு புக்ஃபெயாருக்கு போற வேலைகள்ல கொஞ்சம் பிஸியா இருக்கிறதால மெயில் பார்க்க கிடைக்காம இருக்கு.. நான் எப்படியும் பார்த்துட்டு உங்களுக்கு சொல்வேன்..
ஆத்மா: ஒகேஇ ஒகே.. இன்னும் ஒரு நாள் ரெண்டு நாள்ல சொன்னா போதும்.. நீங்க பார்த்து சொல்லுங்களன்..
உரையாடல் 3:
ஆத்மா: ஹெலோ வரதன் எங்க நிக்கிறீங்க..
உமா: ஓம் ஆத்மாஇ நான் கொழும்புக்கு வந்து கொண்டிருக்கிறன்.. பார்க்கக் கிடைக்கல.. கொழும்புக்கு வந்து எங்க சரி பார்த்துட்டு சொல்றேன்..
ஆத்மா: ஒகேஇ ஒகே.. நீங்க வந்திட்டு எனக்கொரு கோல் தாங்க.. ஒண்டுமில்ல.. அந்த டொகுயுமெண்ட் ஓகனய்ஸர்ஸ் அத வெளியிடப் போறாங்க போல இருக்கு.. ரிப்ளை கேட்டுக்கிட்டு இருக்காங்க.. ஒன்றிரண்டு பேர் இன்னும் ரெஸ்பொன்ஸ் இல்லைண்டு சொன்னாங்க.. அதால தான்இ நான்.. மற்றது பார்த்துட்டு ரிப்ளை சொல்லிட்டா முடிஞ்சு..
உமா: ஒகே ஆத்மாஇ நான் பார்த்துட்டு சொல்றன்..
ஆத்மா: ஒகே.
உரையாடல் 4:
ஆத்மா: ஹெலோ
உமா: ஹெலோ ஆத்மா..
ஆத்மா: பார்த்திங்களா.. என்ன மாதிரி..
உமா: இன்றைக்கி நைற் இங்க எங்க சரி பார்த்திட்டு சொல்றன்..
ஆத்மா: உங்களுக்கு இந்த ட்ரிப் பிஸியில இது க~;டம் போல இருக்கு.. அப்ப விடுவமா இத? இதுக்குள்ள எங்க பார்க்கிற நீங்க மினக்கெட்டு.. விடுவம்..
உமா: இல்லஇ பார்க்கலாம் எனக்கு எப்படியும்.. இன்றைக்கு நைற்..
ஆத்மா: வேணுமெண்டா நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம்.. உங்களுக்கு இப்ப கொஞ்சம் ஒகேயெண்டா நான் முழு அறிக்கையையும் வாசிக்கிறன்.. நீங்க கேட்டுட்டு சொல்லுங்க.. உங்களுக்குப் பரவாயில்லையெண்டா.. நீங்க கஃபே அது இதெண்டு மினக்கெடத் தேவையில்ல..
உமா: ஆ.. சரி.. வாசிங்க
ஆத்மா: (நான் முழு அறிக்கையையும் தலைப்புட்பட முதலிலிருந்து வாசிக்கிறேன்.. ஒரு விடயத்தை இன்னொருவர் வாசிக்க செவிமடுத்துக் கொண்டிருக்குமொருவருக்கு அதிலுள்ள தெளிவற்ற கருத்துக்களைஇ சிக்கலான வார்த்தைப் பிரயோகங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் உள்வாங்கியபடிஇ இடையிடையே நிறுத்தி நிறுத்தி வாசித்தவற்றின் சாராம்சத்தையும் மீள எடுத்துரைத்தபடி வாசித்து முடிக்கிறேன்.)
உமா: இதில சமூகத்துக்குப் பிரச்சினையா ஒண்டுமில்ல. சரி இப்ப எப்பிடி நான் சைன் பண்றது..
ஆத்மா: இதில இதுவரைக்கும் 45 பேர் சைன் பண்ணியிருக்காங்க.. நீங்க தான் முதலாவது தமிழ் ரைட்டரா சைன் பண்ணப் போரிங்க.
உமா: ஓம்.. இப்ப நான் என்ன மாதிரி.. எப்பிடி உங்களுக்கு சைன் பண்ணித் தாறது அல்லது எழுதித் தாறதா?
ஆத்மா: நீங்க இப்ப எங்க இன்ரநெற் தேடி இதெல்லாம் செய்யிறது.. நீங்க ஒகேயெண்டா நான் சொன்னா அவங்க உங்கட பெயரையும் போடுவாங்க..
உமா: ஒகே.. அப்ப சொல்லி விடுங்க.. அப்ப ஒகே..
ஆத்மா: தெங்ஸ் அப்ப.. மற்றது நான் ஸ்டூடியோ புக் பண்ணி வைக்கிறேன்.. நீங்க இந்தியாவிலரிந்து வெளிக்கிட முதல் எனக்கு சொல்லுங்க.. வரக்குள்ள ‘அழியாத கோலங்கள்’ ரெக்கோடிங்க செய்வம்..
உமா: ஒகே ஆத்மா.. நான் அங்க இருந்து வர ஒரு கிழமைக்கு முதல் கோல் பண்ணுவன்..
ஆத்மா: ஒகே.
உரையாடல்கள் நிறைவு.
எனது குறிப்பு:
டிசம்பர் 2011 இன் இறுதிநாட்களில் கலாநிதி சுமதி சிவமோகன் ஒரு நாள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தாங்கள் இலங்கையின் அரசியல் இனப் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு அறிக்கை தயாரித்திருப்பதாகவும் அதில் இதுவரை 45 பேர் கையெழுத்திட்டிருப்பதாகவும் எனக்குத் தெரிந்த இது தொடர்பில் பிரக்ஞையுள்ள தமிழ் எழுத்தாளர்கள்இ சமூக ஆர்வலர்களின் கையொப்பங்களையும் பெற்றால் நல்லது எனவும் அவ்வாறு செய்யாமல் விடும் போது சிலர் பின்னர் இதைத் தங்களிடமும் காண்பித்திருந்தால் தாங்களும் சைன் பண்ணியிருப்போம் எனத் தெரிவிப்பார்களெனவும் அத்துடன் கையொப்பமிடுவது இடாதது ஒருபுறமிருக்க பொதுவில் இதை அனைவரையும் அறியச் செய்வது அவசியமெனவும் அதனால் அவ்வாறானவர்களின் தொடர்புகள் சிலவற்றை எடுத்துத் தரமுடியுமா எனக் கேட்டார். இதனடிப்படையில் நான் என்னிடமிருந்த அல்லது இலகுவில் எனக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாயிருந்த சிலரது ஈமெயில் முகவரிகளை அவருக்குக் கொடுத்து “நீங்கள் மெயில் பண்ணுங்கள்.. நான் வேண்டுமென்றால் இப்படி ஒன்று அனுப்பப்பட்டுள்ளதுஇ உங்களுக்கு விருப்பமெண்டால் சைன் பண்ணுங்கள் அல்லது ரெஸ்பொன்ஸ் செய்யுங்கள்இ குறைந்தது கிடைத்தது என்றாவது.. ஆனால் இதில் முஸ்லிம் இஸ்ஸுஸ் ஃபோக்கஸ் பண்ணப்படுவதால் இதை நான் கெம்பெய்ன் பண்ணுவது போன்ற ஒரு சங்கடமிருக்கிறது என்றாலும் இவர்களுடன் உங்களுக்குத் தொடர்பில்லை என்பதற்காக இதை நான் செய்கிறேன்” என்று சொன்னேன். இந்த அடிப்படையில் நான் கொடுத்த ஈமெயில் முகவரிகளுக்கு சுமதி குறிப்பிட்ட அறிக்கையை அனுப்பியிருந்தார். நான் கொடுத்த ஈமெயில் முகவரிக்குரியவர்களில் சிலருடன் மாத்திரம் தொடர்பு கொண்டு இதைப் பார்த்து ரெஸ்பொன்ஸ் பண்ணும்படி கேட்டுக் கொண்டேன். குறிப்பாக நான் அடிக்கடி தொடர்பு கொள்ளும் உமா வரதராஜன்இ வாசுகி சிவகுமார்இ மேமன்கவி(டொமினிக் ஜீவாவுக்காக) இலகுவில் ஈமெயில் செக் பண்ணும் வசதியற்ற தெளிவத்தை ஜோசப்இ திசேராஇ மணிசேகரன்இ திருக்கோவில் கவியுவன்இ த. மலர்ச்செல்வன் போன்றோருடன் கதைத்தேன்.
அறிக்கை அனுப்பப்பட்டு நான்கைந்து நாட்கள் கழிந்தும் எந்தப் பதிலும் அளிக்காதவர்கள் பற்றியும் இதை விரைவில் வெளியிட வேண்டியிருப்பதன் அவசரம்இ அவசியம் குறித்தும் சுமதி என்னிடம் ஓரிரு முறை தொடர்பு கொண்டு கேட்டார். இவர்களிடம் மீண்டும் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரிப்பதில் சங்கடம் கொண்ட நான் ‘அவர்கள் எனக்காக இதில் சைன் பண்ணி விடக்கூடாதேஇ அத்துடன் நான் திரும்பக் கேட்பது அவர்களுக்கு ஒரு அழுத்தமாக அமைந்து விடுமோ’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டும் சுமதியிடம் கூறிக்கொண்டும் வேறு வழியில்லாமல் மிக நெருக்கமான உமா வரதராஜன்இ மேமன்கவிஇ திசேராஇ மணிசேகரன் ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இவர்களில் எனக்கு அதிக நெருக்கமான உமா வரதராஜனையே எந்தச் சங்கடமுமில்லாமல் பலமுறை அழைத்தேன். இறுதியாக அவர் தன் பெயரையும் கையொப்பமிட்டவர்களின் பட்டியலில் சேர்க்கும்படி சொன்னார். திருக்கோவில் கவியுவன் அவராகவே எனக்கு ஃபோன் பண்ணி தான் நேரடியாக சுமதிக்கு ரிப்ளை பண்ணியிருப்பதாகச் சொன்னார். தெளிவத்தை ஜோசப் தொலைபேசி மூலமாக அவராகவே தொடர்பு கொண்டு தனக்கு இந்த அறிக்கையில் இருமுறை கையெழுத்திட சம்மதம் என்று தெரிவித்தார். திசேராவைத் தொடர்பு கொண்ட போதும் பின் தங்கிய மலையகக் கிராமமான மராயாவில் அவர் இருப்பதால் இன்ரநெற் வசதிகளற்ற நிலையில் அவரால் இதைப் பார்க்க முடியாதென்பதாலும் தொலைபேசியில் நான் அவருக்குப் படித்துக் காண்பிப்பது செலவு மிகுந்ததென்பதாலும் நான் அதிகம் முயற்சிக்கவில்லை. எனினும் எனது நெருக்கமான நண்பனும் எனது பக்கத்து ஊரைச் சேர்ந்தவருமான திசேரா ‘அதில் பிரச்சினையாக ஒன்றுமில்லைஇ உன் பெயரையும் போடச் சொல்கிறேன்’ என நான் கூறியிருந்தால் அதை எந்த மறுப்புமில்லாமல் படிக்காமலேயே ஏற்றுக் கொண்டிருப்பாரெனினும் நான் அவ்வாறு செய்யவில்லை. இந்த வரிசையில் எம். மயூரன் என்ற நண்பரைத் தொடர்பு கொண்ட போது அவரது பதில் இனி எவரிடமும் இது தொடர்பில் நான் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு என்னை இட்டுச் சென்றது. அவரிடம் நான் சொன்ன பதில் ‘ நீங்கள் இந்த அறிக்கையில் கையொப்பமிட வேண்டுமென்ற எந்த நிர்ப்பந்தமுமில்லை.. குறைந்த பட்சம் நீங்கள் இந்த மெயிலைப் பெற்றீர்கள் என்பதையாவது இதை அனுப்பியவர்களுக்குத் தெரிவியுங்கள்.. உங்கள் முகவரியை நான் அவர்களுக்குக் கொடுத்ததனால் அவர்கள் தாங்கள் இதை வெளியிடுவதில் தாமதமாகிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறர்கள்.. இது என்னுடைய அறிக்கையோ இதை உருவாக்குவதில் என்னுடைய பங்களிப்போ எதுவுமில்லை.. எனக்காக ஒப்பமிட வேண்டியதுமில்லை’ என்பதாகவிருந்தது. இந்த ரீதியிலேயே நான் அனைவரிடமும் கதைத்திருந்தேன்.
ழூழூழூ
அறிக்கையானது வெளியாகி ஊடகங்களில் பிரபலமடைந்த ஒரு வாரத்தின் பின் உமா வரதராஜனின் மறுப்பறிக்கையை இணையத்தில் ஒரு நண்பர் கூறிய தகவலின் பேரில் பார்த்த போது மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். நான் குறிப்பிடும் இந்த ‘அதிர்ச்சி’இ ‘ஆச்சரியம்’ போன்ற சொற்களுக்கான அர்த்தத்தையும் அதன் பாதிப்பையும் எனக்கும் உமா வரதராஜனுக்குமான உறவின் நெருக்கத்தை அறிந்தவர்களால் மாத்திரமே புரிந்து கொள்ளக்கூடியதாயிருக்கும்.
அவருடைய மறுப்பறிக்கைகள் பின்வரும் முக்கிய விடயங்களுக்கு அழுத்தம் தருகின்றன.
அ. இந்த அறிக்கையை அவர் இப்போது தான் கேள்விப்படுகிறார்
ஆ. அதில் அவரது பெயரைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
அறிக்கையின் தலைப்பிலோ அதன் உள்ளடக்கத்திலோ எங்கும் இடம் பெறாத ‘புத்திசீவி’ என்ற சொல்லை தானே வலிந்தெடுத்து நக்கல் பண்ண முயற்சிக்கிறார். (ஊடகங்கள் இந்த அறிக்கையை உருவாக்கியவர்கள்இ கையொப்பமிட்டவர்களை ‘சமூக ஆர்வலர்கள்’இ ‘புத்திஜீவிகள்’ என்றவாறெல்லாம் பலவிதங்களில் விபரித்திருந்தன)
ஒரு முக்கிய அரசியல் புள்ளியைப்போல தன் ‘கடுமையான கண்டனத்தையும் ஆட்சேபனையையும்’ தெரிவிப்பதன் மூலம் மன உளைச்சலுற்றிருக்கும் இந்த நிலையிலும் எனக்கு நகைச்சுவையுணர்வை ஏற்படுத்துகிறார்.
ழூழூழூ
திரு. உமா வரதராஜனை 1990களிலிருந்து எனக்குத் தெரியும். கல்முனை அன்பு ஸ்ரோர்ஸில் ‘சுபமங்களா’ சஞ்சிகை வாங்கப் போகத் தொடங்கிய காலத்திலிருந்து அவரது ‘சிங்கர்’ கடைக்கு நான் போய் வருவது வழக்கம். நான் மட்டக்களப்பில் செயற்பட்ட காலத்திலும் சரிநிகருடன் தொடர்பு கொண்டிருந்த காலப்பகுதியிலும் தொடர்ந்த பழக்கம் பின்னர் இலங்கைத் தொலைக்காட்சி நிலையத்தில் இணைந்து கொண்ட பிறகு இன்னும் நெருக்கமடைந்தது. ‘பிரவாகம்’ சஞ்சிகை நிகழ்ச்சியின் பிரதியில் எனக்குஇ நிச்சயமற்ற தகவல்கள் சிலவற்றைச் சரிபார்க்கும் நண்பர்களில் ஒருவராகவும் நான் இயக்கிய முதலாவது குறுந்திரைப்படமான ‘இறக்கை’க்கு மிகப் பெரியளவில் ஒத்தாசையாகவும் அவர் இருந்தார். 2007இ 2008 காலத்தில் வீரகேசரி வார வெளியீட்டில் நான் தயாரித்துக் கொண்டிருந்த நவீன சினமாப் பக்கங்களில் அவர் தமிழ்த்திரையுலக ஆளுமைகள் பற்றிய பத்தியொன்றை சில வாரங்கள் எழுதினார். வாரத்தில் ஒரு முறையாவது நாங்கள் தொலைபேசியில் உரையாடுவோம். இலக்கியம் மாத்திரமன்றி தொலைக்காட்சிஇ திரைப்படம்இ இசைஇ விமர்சனம்இ இதழியல்இ பதிப்பு என எனக்கும் அவருக்கும் ஏறத்தாழ இருந்த ஒரே மாதிரியான ஈடுபாடுகள் இதற்குக் காரணமாயிருந்தன. நான் கல்முனையில் கல்வி கற்றதும் சோலைக்கிளிஇ எச்.எம். பாறூக்இ நற்பிட்டிமுனை பளீல்இ எம்.கே.ஏம். மன்சூர்இ அறநிலாஇ சண்முகம் சிவலிங்கம்இ எம்.ஐ.எம். ரஊப்இ வீ. ஆனந்தன் எனவிருந்த நண்பர்களின் தொடர்பு காரணமாகவும் நாங்கள் பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விடயங்களிருந்தன. கல்முனைக்குப் போனபோதெல்லாம் நான் அவரது கடையில் அல்லது அவரது இல்லத்தில் அவரைச் சந்திப்பது வழக்கம். அந்த உறவு அவரது குடும்பத்துடனான உறவாக வளர்ச்சியடைந்தது. ஒரு சகோதர உரிமை அவர்களுக்கு என் மீதும் எனக்கு அந்த வீட்டின் மீதும் இன்று வரை இருக்கிறது.
கடந்த ஆண்டு முதலாக நான் தயாரிக்கும் ‘அழியாத கோலங்கள்’ என்ற கலைத்துவமான தமிழ்ச்சினமாப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பிரதியாளராகவும் அவர் இருக்கிறார். வாராந்தம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் ஒளிப்பதிவுக்காக நானும் அவரும் மாதமொரு முறையாவது கொழும்பில் நேரில் சந்திப்பதுண்டு. அவர் திரும்பிச் செல்லும் வழியில் எனது ஊரைக் கடந்து அவர் செல்வதனால் என்னையும் தன் காரில் ஏற்றிச்சென்று வீட்டில் இறக்கி விட்டுச் சென்றிருக்கிறார். அது ஒரு 8 மணி நேர நீண்ட பயணம். எனது வீட்டுக்கு நிகழ்ச்சிக்கான பிரதிஇ பாடல்களின் வீடியோத் தொகுப்புக்களைத் தருவதற்காக அவ்வப்போது வந்து செல்வார். நான் என் மனைவிஇ பிள்ளைகளுடன் அவர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.
அவர் தமிழரென்றோ நான் முஸ்லிமென்றோ வேறெந்த வித்தியாசங்களையோ இன்று வரை நான் இந்த உறவில் நட்பில் உணர்ந்ததில்லை.
ழூழூழூ
உமா வரதராஜனின் ‘பச்சைப் பொய்’இ மனிதர்கள் மீதான எனது நம்பிக்கை குறித்த அத்திபாரத்தையே ஒட்டு மொத்த ஆட்டம் காண வைத்துள்ளது. எனது ஏனைய எல்லா நண்பர்களையும் அவர்கள் மீதான எனது விசுவாசத்தையும் இது மெது மெதுவாய் சந்தேகத்திற்கிடமாய்ச் செய்து விடுமோ என்று கொலை நடுங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு கடைசிச் சொட்டு மரியாதையையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி மேலெழுகிறது. நண்பர்களை ரகசிய ஒலிப்பதிவுக் கருவியுடன் சந்திக்க வேண்டிய ஒரு யுகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என யோசிக்கிறேன்.
உமா வரதராஜன் எத்தகைய அழுத்தங்களின் பேரில் இத்தகைய தவறை இழைக்க முன்வந்திருக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அறிக்கையில் அவரது பெயர் இடம்பெற்றே ஆகவேண்டுமென்று எனக்கோ அறிக்கைக்கு உரியவர்களுக்கோ எந்த அவசியத்தேவையும் இருக்கவில்லை. உமா வரதராஜனுக்கும் இதற்கு ஒப்புதல் அளித்தே தீர வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் எத்தரப்பிலிருந்தும் எந்த அடிப்படையிலிருந்தும் வழங்கப்படவில்லை. அறிக்கை வெளியான பிறகு அது தனக்கு அசௌகரியமானதென உணர்ந்த போது தன் ஒப்புதலை வாபஸ் பெற்றுக் கொள்கிறேனெனக்கூறி இந்தச் சிக்கலிலிருந்து மிக எளிதாகலும் நாகரிகமாகவும் அவர் தன்னை விடுவித்துக் கொண்டிருந்திருக்க முடியும். அவரே நையாண்டி பண்ணும் தமிழ்ச்சினமாவின் மாமூல்
அறிக்கை பற்றிப் பேசிய ரங்கன் ஏன் இதைத் தெரிவிக்கவில்லை?
அறிக்கை அவசரமாக வெளியிட்டிருக்கிறீர்கள்;அதன் மர்மமென்ன?
அறிக்கையைத் தயாரித்து,71 கையெழுத்து பெறுவது தெரியாத,ஈமெயில்,ஃபேஸ்புக்,வெப்சைய்ட் அறிவற்றவர்கள் இத்தகைய விளம்பரப் போராட்டங்களில் ஏன்தான் ஈடுபடுகிறார்கள்?
வெளிநாடு போகின்றவருக்கு ஈமெயில் வாசிப்பது,பதிலளிப்பது என்பது மூத்திரம் பெய்யப் போவதை விட இலகுவானது என்பதை மறந்து காரணம் சொல்கிறார்.
இவர்கள் “தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேலை செய்கிற” விறுத்தம்,இதுதான்.
Facebook is a private site, unless you are my friend or I enable some information for public viewing, no one can read it.. (unless the one is a hacker ofcourse)
நேரடியாக ஒப்புதல் பெறாமல், மூன்றாம் நபர் கூறியதைக் கேட்டு ஒருவரின் பெயரை அறிக்கைகளில் சேர்ப்பது சரியான விடயமா? அவர் கையொப்பம் இடாமலேயே இதனை எப்படி ‘கையொப்பம் இட்ட அறிக்கை’ என்று அழைக்கிறார்கள். ஒரு 71 பேரை தங்கள் அறிக்கைக்கு ஆதரவாகத் திரட்டுவதில் ஏன் இந்தக் குழப்பம்.
சகோதரி சிவ மோகன்.. எப்போதாவது நீங்கள் சிந்தித்தீர்களோ தெரியாது, ஆனால் இனிமேல் நிட்சயம் சிந்திப்பீர்கள், வியப்படைவீர்கள் ! ஒரு அறிக்கையைத் தயாரித்து, அதற்கு ஒப்பம் வேண்டி , ஒன்று பட்டு வெளியிடவே இவ்வளவு அல்லோலகப்பட வேண்டி இருக்கு, எல்லாத்திசைகளிலும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் இருக்கு, பத்திரிகைக்கு, வானொலிக்கு, தொலைக்காட்சிக்கு மறுதலித்து அறிக்கை விட வேண்டி இருக்கு. ஓம் என்றவர் இல்லை என்று போட்டாரே என்று நொந்து நூலாக இளைக்கவேண்டி இருக்கு, ஆனால் தலைவர் திரு. பிரபாகரன் அவேர்கள் ,ஆயிரக்கணக்கான போராளிகள்; அதுவும் வேறு வேறு பிரதேசங்கள், சாதிய அடையாளங்கள், மதங்களிலிருந்து வந்தவர்கள் எல்லாரையும் சமாளித்து மட்டுமில்லாமல், எதிரிகள் , துரோகிகள்; சர்வதேச அரசியல்களை எல்லாம் சமாளித்து ஒருவருடமோ அல்லது ரெண்டு வருடமோ அல்ல 35 வருடங்கள் போராட்டம்நடத்தி இருக்கிறாரே என்று. இதுதானே ஆரம்பம் உங்களுக்கு, இனிப் போகப் போக” எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே ” என்றுநோகப் போகிறீர்கள். முஸ்லிம்கள் துரத்தப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ தூக்கத்தால் எழுந்த்வர்கள் போல் இன்று மட்டும் என்ன உங்கள் 70 பேருக்கும் அப்படி ஒரு அக்கறை? சரி அப்படிதான் என்றாலும் , வடகிழக்கில் பாதுகாப்பு வலையங்களைநீக்குவதற்கும், மீன்பிடித்தடையைநீக்குவதற்கும்நீங்கள் எல்லாரும் ஏன் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஒப்பமவிடவில்லை? முதலில் நீங்கள் சார்ந்த சொந்த இனத்தின் பிரச்சனையை தீர்த்துவிட்டு, அதன் பிறகு மற்றைய சமூகத்தின் பிரச்சனைகள கவனம்கொள்ளுங்கள் . சொந்தவீட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க வழி சொல்லவில்லை, பக்கத்துவீட்டுக்காரனின் பிரச்சனையில் தலையிட்டால் இப்படிதான் அவமானப்படவேண்டி வரும்.
//முதலில் நீங்கள் சார்ந்த சொந்த இனத்தின் பிரச்சனையை தீர்த்துவிட்டுஇ அதன் பிறகு மற்றைய சமூகத்தின் பிரச்சனைகள கவனம்கொள்ளுங்கள் . சொந்தவீட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க வழி சொல்லவில்லைஇ பக்கத்துவீட்டுக்காரனின் பிரச்சனையில் தலையிட்டால் இப்படிதான் அவமானப்படவேண்டி வரும். //
ஓகோ.. இதைத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்காகப்பேசும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வைகோ சீமான் நெடுமாறன் போன்றவர்களிற்கும் விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற சிங்களத் தலைவர்களிற்கும் சொல்லுவீர்களோ?
யாழ் முஸ்லீம்களின் பிரச்சனை நிச்சயமாக தீா்க்கப்படவேண்டிய ஒன்று அதில் யாருக்கும் மறுகருத்து இருக்கமுடியாது ஆனால் இங்கே தமிழன் குறிப்பிடுவது என்னவென்றால் இவ்வழவு காலமும் எத்தனையோ பிரச்சனைகள் நடந்தேறிபோது இந்த புத்தியீவிகள் ஏன் அறிக்கைவிடமுனையவில்லை என்பதே. இதற்கு ஏ வோரா் கூறும் நியாயம் நகைப்பிற்குரியது.சீமானிற்கோ விக்கிரமபாகுவிற்கு சொந்தப்பிரச்சனை என்று எதுவும் கிடையாது ஆனால் இலங்கைத்தமிழனுக்கு உண்டல்லவா அதை முதலில் தீா்ப்பதற்கு முயற்சிக்காதவா்கள் எப்படி மற்றவா்களின் ????
ஏழைகளின் பிள்ளைகள் ஆயுதம் ஏந்த வடகடல்நோக்கி சென்றவேளை அகதிகளின் போர்வையில் மேற்கை நோக்கி படையெடுத்த கூட்டம் இப்போது விலாசம் தேடப்புறப்படுகின்றார்கள் அவ்வளவுதான் இவா்களால் தமிழருக்கு எந்த இலாபமும் ஏற்படப்போவதில்லை.
சிங்கள மக்களிற்குப் பிரச்சினைகள் இல்லை தமிழ் நாட்டுத்தமிழரிற்குப் பிரச்சினைகள் இல்லை எனக்கு மட்டுமே பிரச்சினைகள் உண்டு என்று நம்பும் உங்களை என்னவென்று சொல்ல.
இன்னுதொரு விடயம்: தமிழ் மக்களின் பிரச்சினகள் தீர்க்கப்படும் வரை முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்ற “தமிழன்” தயாரில்லை. அவரது ஏனைய எதிர்வினைகளைப் படித்து இதனைத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக இப்படியான அறிக்கைகளை ஒருவர் மட்டுமே தயாரித்து விநியோகிப்பதில்லை. தெரிந்தவர் தெரிந்தவரிற்குத் தெரிந்தவர் என்று தொடர்புகள் வளரும்.
உமா வரதராயனின் மறுப்பு எனப் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்ட பகுதியில் நானும் எனது கருத்தைப் பதிவு செய்திருந்தேன். இதில் தவறான முறையில்க் கையெழுத்துப் பாவிக்கப் பட்டிருந்தால் நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக இப்படியான விளம்பரங்களைச் செய்து பிரச்சாரப் பீரங்கிகளாக, ஏன் செயற்பட வேண்டும் என்று…. விடை கிடைக்கவில்லை, ஆனாலும் இரண்டாம் நாள் அந்தப் பதிவு அகற்றப் பட்டிருந்தது. அதனையிட்டு நானும் சில சந்தேகங்கள் கொண்டேன்.
புத்திசீவிகளே! இலங்கைக்கு வர வேணும். அங்க வேலை செய்ய வேணும். விமானநிலயத்தில் காட்டி கொடுக்கிறார்களாம். ஒன்றில் அங்க வராமல் இங்க லண்டனில் இருந்து ஏயர்போட்டில் காட்டி கொடுதவர்களுக்கு போர்குற்ற வழக்கு போடவேணும். இல்லைநீங்கள் உதவி செய்தால் அங்க வந்து முஸ்லிம்களுக்கு வேலை செய்யலாம். உதவி செய்வீர்களா?
ஒருவரின் வாய்மூல ஒப்புதலை கொண்டு அவரது பெயரை சேர்ப்பது நல்லதில்லை. ஆற அமர வாசிக்கவும் சிந்திக்கவும் இடம் கொடுக்கவில்லை. அத்தோடு இந்த உரையாடல்கள் எழுத்தாளரை அவசரப்படுத்தி இருக்கின்றதை காணலாம். முதலில் யோசிக்காமல் சொல்லி விட்டு அறிக்கை வெளியான பின் மறுப்பு தெரிவிக்கும் பின்வாங்கும் உரிமை இருப்பது நல்லதே.
ஆத்மாவின் கூற்று உண்மையாயின் உமா வரதராஜன் “நான் அவசரத்தில் அல்லது ஆத்மா என்கிற எனது நண்பரைப் புண்படுத்த மனதில்லாததினால் எனது ஒப்புதலைச் சொல்லி விட்டேன். இதனை நான் மீளப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தால் அவர் மீது எனக்குள்ள அபிமானம் அதிகரித்திருக்கும்.
ஆத்மாவின் விவரணத்தைப் பார்க்கையில், ஒரு அறிக்கையை தயாரித்து விட்டு அதற்கு கையொப்பம் வைக்க ஆள் தேடி அலைந்திருக்கிறார்கள்.
இந்த அறிக்கை, கையொப்பம் இட்ட 71 புத்திசீவிகளாலும் அலசி ஆராய்ந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டு திருத்தங்கள் செய்தபின் வெளியிட்டிருக்க வேண்டும். இதற்கான தகவல் தொழிநுட்பம் வசதி இன்று உள்ளது.
“எரிகிற வீட்டில பிடுங்குறது ஆதாயம்.”
இதில் உமா வரதராசன் கொஞ்சம் கூட அள்ளி விட்டார்.
அவரைத் தள்ளி,பிடுங்கி எடுக்க பெரிய வேலை நடக்குது.
அறிக்கை வெளியிடப் போய் உமா-ஆத்மா உறவு, தமிழ் முஸ்லீம் உறவாக பிரிந்து போய்க் கிடக்கிறது.
ஓட்ட வைக்க முயலாதீர்கள்;அதனதன் வழியில் விட்டு விடுங்கள்.
சுமதி சிவமோகன்
இந்த அறிக்கை தொடர்பாக கலந்துரையாடல்களை நடாத்திவிட்டுக் கையோப்பங்களைக் கேட்டீர்களா? பொறுப்பற்ற விதமான அறிக்கைகளைத் தவிர்க்கவும்.
மேல் நாடுகளில் சுகமாக வாழும் இந்த புத்திசீவிகள், முஸ்லிம் தமிழ் சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க மீண்டும் முயற்சிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது வடகிழக்கில் வாழும் ஆதம்லெப்பையும் அவினாசித் தம்பியும் அவர்கள் குழந்தைகளும்தான். சொந்தப் பிள்ளைகளை தமிழே பேசாமல் நல்ல பாடசாலைகளில் படிப்பிக்கும் வெளிநாட்டுப் புத்திசீவிகளுக்கு, சிறிலங்கா அரசியல் தங்கள் தேவைக்கேற்ற பொழுது போக்கு.
கையெழுத்துப் பேொட்ட பலர் (சுமதி சிவ மோகன் உட்பட) இலங்கையில் தான் இருக்கிறார்கள். இதற்கெதிராக எதிர்வினையாற்றும் பலர்தான் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.
கலந்துரையாடல்கள் விவாதங்களை நடத்தி விட்டு அறிக்கைகளை வெளியிடுவது சமூகத்திற்கு மிக நல்லது. இப்போது யோசித்தால் இது ஒருவகை சர்வாதிகாரமாகவும்படுகிறது.( ஐயோ எனக்கு என்ன ஆச்சு. கம்யூட்டரில் குத்திஎறிகிறேன் என கிண்டலடிக்க தீபத்தில் வரப் போகிறார்கள்)
ஐயோ உங்களுக்கு என்ன ஆச்சு. உங்களை சபா நாவலன் ரேஞ்சுக்கெல்லாம் கற்பனை பண்ண ஆரம்பித்து விட்டீர்களே! 🙂
மேலே சொன்ன கருத்து சும்மா பகிடிக்குச் சொன்னது. மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
அறிக்கை எழுதியவர்கள் அந்த அறிக்கையின் கருத்தை யார் மீதாவது திணித்திருந்தால் (உ+ம்: இப்படிக்கு தமிழ் மக்கள்) அது சர்வாதிகாரமாகும். தமது சொந்தப் பெயரில் அறிக்கை விடுவதுமா சர்வாதிகாரம்? உமா வரதராஜனிடம் ஆத்மா அவ்வளவு தூரம் கேட்டிருக்கத் தேவையில்லை போலத்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்களிடையேயான உறவு பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது.
இங்கே குறிப்பிடப்பட்டிருகும் உரையாடல் ரேக்கோர்ட் பண்ணப்பட்டது போல் வரிக்கு வரி சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்றால் நாடகம் போல ஒரு புனைவு மட்டுமே. ரெக்கோர்ட் பண்ணியிருந்தால் பதிவை வெளியிடுங்கள் நம்பலாம் அப்படி உஇல்லையொ இது இன்னொரு சுத்துமாத்து. கதாசிரியர் உமா வரதராஜன்நினைத்தல் இன்னொரு உரையாடலையும் கூட வெளியிடலாம். அறிக்கை விட்டவர்கள் மீதான நம்பகத்தன்மை இப்போ அவுட்!! அதை நிருபிப்பது அவர்களின் கடமை!!!! வாதாபி
ஐயோ எனக்கு மண்டையே வெடிச்சுரும் பொல இருக்கு ரெக்கார்டிங் வருமா வராதா.. வரும் ஆனா வராதா…? கதை வசனம் டைரக்சன் யார்?
ஆத்மா டிசெம்பர் 2011 இறுதி நாட்களில் இந்த புத்திஐPவிகள் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். தீபம் தொலைக் காட்சியில் நிர்மலா ராஐசிங்கத்திடம் ஏன் இந்த அவசர அறிக்கை என்ற கேள்விக்கு நிர்மலாவின் பதில் இவ் அறிக்கை ஆறு மாதங்களுக்கு முன் தயாரிக்கப்ட்டதாகவும் இப்போதுதான் வெளியிட முடிந்ததாகவும் கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது உண்மை. நீங்கள் நிhமலா ராஐசிங்கம் குடும்ப உறுப்பினர்களின் அரச விசுவாச அரசியலுக்குள் சிக்கித் தவிப்பதை உணரமுடிகின்றது. இதைவிட்டு வெளியேறி உண்மையை உரத்துப்பேச வாருங்கள். முடிந்தால் வாதாபி என்ற அன்பர் கேட்டுக் கொண்டபடி உமாவரதராஐனோடு நீங்கள் பேசிய ரெலிபோன் பேச்சின் ஒலிப் பதிவை வெளியிடுங்கள்.