Monday, May 12, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உன்னைப் போல் ஒருவன் – இந்துப் பாசிசத்தின் இன்னொரு பிரதி : ஆழியூரான்

இனியொரு... by இனியொரு...
09/21/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
69
Home பிரதான பதிவுகள் | Principle posts

kamal7ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.

இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.
இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும்,ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ… குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.

தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,
பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’ என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக கடத்தி கொல்ல வேண்டிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது

. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத்… இதுல யுகங்கள் தோறுமா?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மகிந்த - சரத் மோதல் வலுக்கிறது

Comments 69

  1. sahul says:
    16 years ago

    சங்பரிவாரின் புதிய முகம் நடிகன் கமல்

    • K.Ragavan.Chennai.47. says:
      15 years ago

      Today Terrorism is a Major threat and all the films are projecting this with a Particular community is very sad and Painful.Even if few are there ,media and films should not project or Magnify.Society is made of People and good things only should be Projected.Religon and sentiments should not be Exploited for the sake of Individual’s Benefit.
      K.Ragavan.

  2. Indian says:
    16 years ago

    There is no religion for Terrorists, No religion in this world teaches you terrorism… then why the hell you are talking about religion here? Even there is a dialog in this movie, “Innum ethanai kaalathukku Indhu Muslim Vilayattu Vilayada poreenga?”. Moreove, the common man kills only the terrorists, not the innocent people(whatever religion). Please do not spit poison in the name of Review.

  3. தண்டோரா says:
    16 years ago

    /தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். //

    ஒரு பத்திரிக்கையாளன் தவறான தகவல் தரக்கூடாது.முதுகுளத்தூர் கலவரம் பற்றி உங்களுக்கு தெரியாதா?அப்போது நீங்கள் பிறந்திருக்க வாய்ப்பில்லை

  4. aleel says:
    16 years ago

    விளம்பரம் தேடிக்கொள்வதற்காக எழுதும் முதலாவது விமர்சனம் இது. படம் பார்த்தேன் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு முஸ்லீமான எனக்கே வரவில்லை.

    • azad, chennai says:
      16 years ago

      அலீல் நீங்க மீண்டும் படம் பாருங்க. படிமம் அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு இந்துத்துவா படம் தான் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளது.

      • Sharmila says:
        16 years ago

        Dear Mr.Aleel,

        you must be a name muslim.lot of people are there. they dont know till they fall in to trouble.gujarat people are also like that before the riot.
        please watch the movie again.

  5. லக்கிலுக் says:
    16 years ago

    விமர்சன நேர்மை அப்பட்டமாக பளிச்சிடுகிறது. இந்த ரீதியான விமர்சனங்கள் அச்சு ஊடகங்களில் வெளிவரும் நாளே தமிழனுக்கு பொன்நாள்!

  6. jay says:
    16 years ago

    தனது படைப்பை விமர்சிப்போரை கமலுக்கு எப்போதும் பிடிக்காது. அனைவரும் தன்னை ஒரு உச்சபட்ச அறிவுஜீவி என்று கருதவேண்டும் என்பது அவருடைய எண்ணம். அவருடைய படைப்புகளை விசிலடிச்சான் குங்சுகள் பார்த்து பிரம்மித்து, ஆரவாரம் செய்தால் போதும். முஸ்லீம், இந்து, தீவிரவாதிகள், சமூக பிரச்சனைகள் – இது பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. விஜய், அஜித், தனுஷ் போல தன் படமும் வசூலை கொட்ட வேண்டும், அதற்கு மேற்சொன்னவற்றை பயன்படுத்தியிருக்கிரார்.

  7. karunan says:
    16 years ago

    உங்களுக்கு எதற்கெடுத்தாலும் பாசிசம், இந்து, கத்தரிக்கா..
    கமல் சினிமாத் தொழில் செய்கிறார்
    அவ்வளவுதான்.
    நீங்கள் எல்லாம் பார்ப்பனப் பத்திரிகையில் வேலை செய்வதில்லையா என்ன?

  8. Vadivelu fan says:
    16 years ago

    ஆகா, கிளம்பீடாய்ங்கய்யா… கிளம்பீடாய்ங்க

  9. Deepa says:
    16 years ago

    sabaash! thuNichalaaga niRaiya vishayangalaip pittup pittu vaithirukkiReergal. Kamal muRpoakkup poarvaiyil ithu maathiri kaariyangaL seigiRaaro enRu romba naaLaagave enakkum santhaeham irunthathu. inRu theLivaagi vittathu. ethu eppadi irunthaalum Best bakery vishayathai nagaichuvai aakkiyathu nichayam kandikkap padaveendiya onRu.
    //ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது// 100/100. aamaam athu veRum comedy padamaagavo cartoon padamaakavo illaatha vaRai!

  10. வே. இளஞ்செழியன் says:
    16 years ago

    நல்ல விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு முட்டாள் தனமான படம் “உன்னைப் போலொருவன்”. ஆங்கிலத்தில் சொன்னால், “simple-minded” திரைப்படம் என்று அதனைக் கூறலாம்.

    தீவரவாதத்திற்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்கிறார் கமல். சில தீவிரவாதிகளை — அதுவும் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தீவிரவாதிகளை — கொன்றுவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடுமா என்ன? போதாததற்கு, தீவீரவாதிகளைப் பிடித்தவுடனேயே கொன்றுவிட வேண்டும் என்றும் கமல் நமக்கு அறிவுரை கூறுகின்றார்! இத்தகைய அறியாமையைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

    அப்பாவி மக்கள் பலரை ஒரு நாடு கொன்று குவித்தால் அது போர். அதையே தனி நபர்களோ, இறையாண்மை இல்லா குழுக்களோ, அமைப்புகளோ செய்தால் அது தீவிரவாதம்.

    9/11 படுகொலையை தீவிரவாதத்தின் உச்சம் என்று கொள்ளும் நாம், அதன் பெயரில் அமெரிக்காவால் தொடர்ந்து கொன்று குவிக்கப்படும் பல்லாயிரக்கனக்கான அப்பாவி ஈராக்கியர்களின், அப்கானிஸ்தானியர்களின் அவதியைக் கண்டும் காணாதிருக்கின்றோம். ஏனென்றால் 9/11 தீவிரவாதம்; ஈராக்/அப்கான் போர் நியாயப் போர். 9/11ல் கொல்லப்பட்டோர் அப்பாவிகள்; ஈராக்/அப்கானில் கொல்லப்படுவோர் ‘தவிர்க்க இயலா சேதம்’ (collateral damage). ‘உன்னைப் போலொருவன்’ இத்தகைய வேறுபாடுகளை மருந்துக்கும் அலசவில்லை. தீவிரவாதத்திற்கான காரணிகளையும் மேலோட்டாமாகவே பார்க்கின்றது.

    அதோடு, தீவிரவாதிகள் அனைவருமே உயிருக்கு பயந்த கோழைகள் என்ற போலிச் சிந்தனையைப் படம் கற்பிக்கின்றது. தீவிரவாதிகளை அவ்வப்பொழுது நாம் கொன்றுவிட்டால் அச்சம் ஏற்பட்டு தீவிரவாதத்தை அவர்கள் கைவிட்டுவிடுவார்கள் போலும்! (தற்கொலைப் போராளிகளைப் பற்றி அறிந்திராத கமலின் ‘கோமன் மேன்’ எந்த உலகத்தில் தனது நேரத்தை கழிக்கின்றார் என்று தெரியவில்லை.)

    அதே வேளையில், தீவிரவாதிகளை இவ்வாறு கொல்வதால் ஏற்படும் தீமையைப் ‘உன்னைப் போலொருவன்’ தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.

    ஒன்று: தீவிரவாதிகள் கொடுக்கும் தகவல் இதர தீவிரவாதிகளைப் பிடிக்க உதவலாம் அல்லது அடுத்த தீவிரவாதச் செயலைத் தடுக்க உதவலாம்.

    இரண்டு: பிடிபட்ட தீவிரவாதிகளைக் கூண்டிலேற்றி தண்டனை வாங்கித்தர தீவிரவாதிகள் உயிருடன் இருப்பது அவசியம் — பிணம் சாட்சியம் சொல்லாதல்லவா?

    மூன்று: தீவிரவாதம் ஆநீதியையும் தீர்க்க முடியா மனக்குறையையும் மையமாகக் கொண்ட ஒரு வித நோய்; அந்நோய் பரவுவதைத் தடுக்க வேண்டுமெனில் மேற்குறிப்பிட்ட இரண்டையும் வேரோடு அழிக்க வகைசெய்தல் வேண்டும். அநீதிக்கு பதில் கமல் கூறுவது போல் அநீதியல்ல; நீதி! இவ்வுண்மையை அமெரிக்கா இன்று உணர்கிறது. ‘குவாந்தானாமோ பே’ மூகாமில் (Camp X-ray) அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளை அடித்துத் துன்புறுத்திக் கொன்றதற்காக இன்று அந்நாடு வருந்துகின்றது.

    ஆக … ‘உன்னைப் போலொருவன்’ பல நல்ல, மெச்சத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் — ‘கந்தசாமி’ போன்ற நேரக் கேடு அல்ல இப்படம் — அதன் மையக் கருத்து சிறு பிள்ளைத் தனமாகவும் அறிவார்ந்த சமூகத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது வருத்தத்தை அளிக்கின்றது…

  11. Guru says:
    16 years ago

    எப்பிடி இப்பிடி………..

    அவர்கள்……காசுக்காக கலவரமும் செய்யும் கூட்டம், இவர்க
    ள் தங்கள் சொந்தங்களையே கூட்டி குடுக்கும் கூட்டம்

  12. Pingback: pligg.com
  13. அஹோரி says:
    16 years ago

    புல்லரிக்குதுப்பா … இந்த விமர்சனத்த படிச்சி.
    படத்த பத்தி கமெண்ட் பண்ணாம , கமல் என்ன சாதி என்ன மதம்னு விமர்சனம் பண்ணி இருக்கீங்க.

    இன்னும் பார்பீனியத்த கண்டிச்சி கிட்டு இருங்க. ஒருத்தன் இதே சொல்லியே ஆயிரம் தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டான்.

  14. yukan says:
    16 years ago

    ஐயா

    ஆழியூரான் உங்களுக்கு எந்த ஊராயிருந்தா நமக்கென்ன?
    ஆனா பரபரப்பாக்கிறதுக்கு மட்டும் தாம் பார்ப்பன பாசிசம் பத்தி பேசுறீங்க ணு மட்டும் தெரியுது. திரையுலகத்தில கமல் மட்டும் தான் பார்பனீயத்திற்கு எதிரானவர். எல்லா பார்ப்பனீய சாதியினரும் அவருக்கு எதிர். நீங்களும் எதிர். ஆக,நீங்க தான் பார்ப்பனீய பாசிஸ்ட்

  15. தீப்பெட்டி says:
    16 years ago

    //தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார்.//

    தவறான தகவல்..

    சில கொடுமையான சாதிக்கலவரங்களுக்குப் பின்னும் சாதிக்கலவரத்தில் பங்கெடுத்த ஒரு சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை எடுத்து தமிழ் சமூக சாதிகளை உசுப்பேற்றும் வேலையில் இறங்கினார்..

  16. su says:
    16 years ago

    கமல் தன்னைப் பார்ப்பனராகக் காட்டிக்கொண்டிருந்தால் எவ்வளவோ சாதித்திருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் மீறி , சமூகத்தின் வரம்புகளை உடைத்தெறிந்து செயலளவில் தன்னை முற்போக்காளனாக நிலைநாட்டியவர்.

  17. manickam says:
    16 years ago

    Good PR effort !!
    But not on the cost of Kamal and his hardwork !!
    Atleast he is the only actor who keeps remembering Karam Chand which India has forgotten already…

  18. mukilvannan says:
    16 years ago

    when politics takes the fun out of comedy thats kamal film.he is not a error he is disease.very good artical we all need to read and know about it.

  19. muthukumar says:
    16 years ago

    இதில் கமலும் ஒரு முஸ்லிம் என்பதை நினைவு படுத்துகிறேன்

    இத கதை கமலுடையது இல்லை அதுவும் தெரியவில்லை உங்களுக்கு

    /**‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. **/

    ஆரிஃப் சுலபத்தில் கோபப்படுபவன் என்பதால் அவ்வாறு மோகன்லால் கேரக்டர் கூறுகிறது

    /**தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள்.**/

    http://images.google.co.in/images?q=terrorist+images&oe=utf-8&rls=org.mozilla:en-US:official&client=firefox-a&um=1&ie=UTF-8&ei=YUq6SpqpIpfs6AOMwdWdAg&sa=X&oi=image_result_group&ct=title&resnum=1

    http://www.apfn.org/apfn/22-most-wanted-terrorist.jpg

    ஆசிரியர்கள் நினைக்கவில்லை ,நினைக்கவைக்கிறார்கள். எந்த பக்கம் அதிகமோ அதை தான் உலகம் எடுத்துகொள்ளும்

    முழுதாக இதை படிக்க மனமில்லை. இது போல விமர்சனம் எழுத நடு நிலை தேவை அது உங்களிடம் இல்ல அதனால் இனிமேல் எழுதாதிர்கள். please

  20. முனுசாமி says:
    16 years ago

    சாதிக்க முடிந்தவன் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்து வெளியிடுகிறான்… இந்த மாதிரி … இப்படி உக்கார்நது விமர்சனம் எழுதுதுங்க… அதை இவ்வளவு நேரம் படித்து டைம் வேஸ்ட்….

  21. முனுசாமி says:
    16 years ago

    வெப்சைட்டில விமர்சனம் எழுதுறவன்லாம் பத்திரிகையாளனா… அப்போ பத்திரிகையில் எழுதுறவன்லாம்… யாரு… ஆயிரம் ரூபாய்க்கு டொமைன் வாங்கிட்டு 500 ரூபாய்க்கு வெப்சைட்டை டிசைன் பண்ணிட்டு… அதுலா எதையாவது எழுதி… இவனுங்க பண்ணுற அட்டூளியம் தாங்காது… முதல்ல படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்கப்பா… மத்த இணையளத்துல வர்றத பார்த்து ரீ ரைட் பண்ணாதீங்க… சரியா…

  22. முனுசாமி says:
    16 years ago

    ஒரு சினிமாவுக்கு சரியாக விமர்சனம் செய்யத் தெரியாத… இணையதளம் என்று சொல்வதற்கே அருகதையற்ற … இந்த இணையதளத்தை… இன்று முதல் இந்த இணையதளத்தை நிராகரிப்போம்… நண்பர்களே…

  23. தமிழவன் says:
    16 years ago

    இதையெல்லாம் படித்தாலோ, பார்த்தாலோ குறைநிறைகளை சுட்டிக்காட்டுகிற விமர்சனம்போலோ, அல்லது சமூக அக்கறையின்பால் கொண்ட தேடல்களோ அல்ல,  நேரடியாக சில குறியீடுகளின் ஈட்டி முனைகொண்டு அருவருக்கத்தக்க மோதலில் இறங்கி விளம்பரம் தேடித்தரும் வியாபார நோக்கம்தான் என்பதில் அய்யமேதுமில்லை.

  24. sinnavan says:
    16 years ago

    //அருவருக்கத்தக்க மோதலில் இறங்கி விளம்பரம் தேடித்தரும் வியாபார நோக்கம்தான் என்பதில் அய்யமேதுமில்லை.//
    இனியொரு போன்ற இலாப நோக்கற்ற இணையங்கள் எப்படி வியாபாரம் செய்யலாம் என்று விலாவாரியாகச் சொல்லித் தந்தால் பலருக்கு உதவியாக இருக்குமே தமிழவன்!

  25. தமிழவன் says:
    16 years ago

    //இனியொரு போன்ற இலாப நோக்கற்ற இணையங்கள் எப்படி வியாபாரம் செய்யலாம் என்று விலாவாரியாகச் சொல்லித் தந்தால் பலருக்கு உதவியாக இருக்குமே தமிழவன்!//
    மெனது கருத்து எதைச்சுட்டுகிறது என்பதை அறிய மறந்த தோழர் சின்னவனுக்கு விளம்பரம் தேடித்தரும் நோக்கம் என்பது இணையத்தை அல்ல! குறிப்பிட்ட திரைப்படத்திற்கும், கருத்தியல் கர்ம வீரர்கள் சிலருக்கும், உதவிடுதலின் அடிப்படையில்…..
    கருத்துக்களையும், விமர்சனங்களையும் வரவேற்போம் ஆக்கப்பூர்வ்மாக…..

  26. ksk says:
    16 years ago

    ithe english padem enral parpirgel oru tamilen english baniyil padem eduthal ungelukku pidikathu enne….tamil nadil sinimathne mukiyem……eelathil makal madivethu ungelukku egge kedke pogirethu…..niceyemage solgiren kangress kadcikku tuneipogireven ellorum trogigel…….vijay nayum apedithan…..kamal evelevo mel

  27. tamilachi says:
    16 years ago

    ayya, thangal padhivil irukkum sila vedhanaiyana unmaigalai marukkavillai…aanal thangal padhivu, “unnai pol oruvan” enum padam pattriyadhu allamal, “kamalhassan” endra oru thani nabarai vimarsippadhaga ulladhu..Naan indha padathai innum paarkavillai..”A Wednesday” endra hindi padathin thaluvale ippadam enbhai thaangal ariveergal..Idhil “Nasaruddin Shah” enum oru muslim manidhar seidha vedathai kamal seydhullar…kamal-in “paarpanan” budhi pattri vimarsitheergal..Hindi-il Oru muslim(Nasaruddin Shah) terrorists galai kolkigar. Tamil-lil oru hindu brahmin(Kamal) terrorists galai kolkirar.. Idhu dhaan ungalin prachanai. Thaangalum mattra madhavaadha katchigal pol( hindu vo/ muslim o), innoru madhai thavaraga vimarsikkireergal..adutha madhathavanai sagodharanai baavikkamal edhiriyai unargireergal.. Thangalin padivu padam pattriyadha illamal kamal ennum manidharai vimarsikkum bloggil idungal..Paavam indha padam pala cinema kalaingarlai vaala vaikiradhu…avargalin vayitril adikaadheergal..

  28. shankaree says:
    16 years ago

    Hindu fascism…. Appothu ilankaiyil avathi padum Tamil makkalil 80% Hindukkale.. Avargalum fascistsgala? Your comments lack any substance. It seems to be a rant against a particular person, a particular religion and a particular jathi, instead of being a critique of the movie. Ippadi pethati londu than oruvan than peranin peranin peran varaikum sotthu serthachu.. Athai kettu mayangiya muttal makkal innum keezh nilamaiyilae thangi vittarkal. Another thing..
    those involved in terrorist activities happen to be misguided muslims who use Islam as their main ideology. Athai sittarithal ungalluku kastamaga ullathu. Unmaiyai marukka mudiyathu. Those who attacked Mumbai last year were muslim youths. When I watched a Channel 4 Despatches programme, Indian intelligence had intercepted their communication with their base in Pakistan. I actually felt sorry for them. They were Pakistani youths who had been completely brainwashed. Ithanaikkum,Hoteleil ulla opulenceai parthu vai pilanthargal. Poverty and lack of knowledge made them the tools of more savy people. Ullagam migavum visalamanathu. Satru ungal kurugia kannotalirunthu veli pattu neraga parungal.. Perhaps, then your ignorance might be lifted and there will be one less fool.

  29. Shivam says:
    16 years ago

    இப்ப தமிழ் சினிமா படம் எடுக்கிற தயாரிப்பாளர்களை ஒப்பிட்டால், கமல் எவ்வளவோந்தேவலாம். கமல் போல கூட தமிழ்ல சினிமா படம் எடுக்கலண்ணா தெலுங்கு பட உலகம் போல ஆயிருக்கும்ப்பா…

  30. எவனோ ஒருவன் says:
    16 years ago

    தீவிரவாதியா மூணு முஸ்லிம காட்டினா அது குத்தம்.. அவங்கள பிடிக்கற மாதிரி ஒரு நேர்மையான போலீஸா முஸ்லிம காட்டின அது உண்மைய மறைக்கறது.. அந்த தீவிரவாதிகளை கொலை பண்ணினது ஒரு முஸ்லிமா காட்டினா.. ஆ.. அவனும் தீவிரவாதி.. அதான் முஸ்லிமா காட்டறான்.. இதே ஒரு இந்து பண்ணினா மாதிரி எவனோ ஒருவன்ல காட்டினா அது இந்துத்துவ வாதம்.. பார்ப்பினிய ஆதிக்கம். குருதிபுனல்ல ஒரு இந்து நேர்மை தவறி நடக்கிறான்.. முஸ்லிம் தீவிரவாதிய எதிர்த்து நேர்மையா சாகறான்.. அதுவும் தப்பு..

    என்ன தாண்டா வேணும் உங்களுக்கு எல்லாம்?

  31. kavitha says:
    16 years ago

    “தேவர் இனதுக்கு தேசியகீதம் எழ்த ஆயிரம் மெம்பெர்ச் இருகங.No need for kamal/ilaiya raja

  32. grantme says:
    16 years ago

    Hey whats ur problem???????

    There is nothing in that film 2wards the caste, religion………

    R u mad.!!!!!!!!!!!!

  33. கவிமதி says:
    16 years ago

    //விளம்பரம் தேடிக்கொள்வதற்காக எழுதும் முதலாவது விமர்சனம் இது. படம் பார்த்தேன் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு முஸ்லீமான எனக்கே வரவில்லை.// aleel
    நீங்கள் முஸ்லீம் இனத்திற்கே எதிராக சிந்திக்கிறீர்கள்.
    அல்லது நடுநிலைமை என்கிற போலித்தன்மையின் வெளிப்பாடு
    இது கமல் என்கிற போதை அடிமைகளின் எண்ணம்
    உங்களைப்போல் இங்கே நிறைய பேர்.

  34. ஜமாலன் says:
    16 years ago

    இந்தியில் வெளிவந்த ‘வெட்னெஸ்டே’ என்கிற படத்தை பார்த்தபோதே இதனை கமலும் , பிரகாஷ்ராஜ் அல்லது நாசர் பண்ணலாம் என்று ஒரு எண்ணம் ஓடியது. வழக்கமான தமிழ் மசாலாக்களில் இதனை எப்படி புரிந்து எடுப்பார்கள் என்கிற எண்ணமும் வந்தது. தமிழில் கமல் நடிப்பதாகப் படித்தபோதே யோசிக்க வைத்த ஒன்றுதான். காரணம் அடிப்படையில் இப்படத்தின் கதைக்கரு மிகவும் பிற்போக்குத்தனமானது என்பதுடன் மதவாத சக்திகளுக்கு சாதகமானதாக மாறக்கூடியதும்கூட. ஆனால் இந்தியில் மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது இப்படம். தமிழில் இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் இவ்விமர்சனம் பற்றிக் கருத்து சொல்வதற்கில்லை. என்றாலும் இந்திப்படத்தின் இறுதிக்காட்சியில் காவல் அதிகாரியாக நடித்த ‘அனுபம் கர்’ கூறுவதுபோல வரும் வசனத்தில் “இந்த செயலைச் செய்தவர் எந்த மதம் என்று நான் சொல்லப் போவதில்லை“ என்று முடிவை நம்மிடம் விட்டுவிடுவார். ஆனால் கமல் தாடி வைத்து தன்னை முஸ்லிம்போல சித்தரிப்பது ஏன்? என்ற கேள்வி அப்பட டிரையலரைப் பார்த்தபோது ஏற்பட்டது. ஒருவேளை இதனை ஒரு முஸ்லிம் செய்வதாகக் காட்டுவதன்மூலம் முஸ்லீம் தேசபக்தியாக இப்படத்தை கமல் வாசிக்க முயன்றிருக்கலாம். ‘தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்றார் சர்ச்சில். அதை நாம் திருத்தி “தேசபக்தி என்பது பாசிஸ்டுகளின் கடைசிப் புகலிடம்“ என்று வாசிக்க வேண்டும் தற்பொழுது என்பதை நினைவில் கொள்வது நல்லது. தீவிரவாதத்தை ஒழிக்க இதுபொன்ற ‘ஜேம்ஸ்பாண்ட்’ நடவடிக்கைககள் மத்தியதர வர்க்க உளவியலுக்கும் குற்ற உணர்ச்சிக்கும் தீனிப்போடுமே தவிர உண்மையான காரணங்களையோ வேரையோ காட்டப்போவதில்லை. இப்படம் குறித்து நேர்மறையான மற்ற விமர்சனங்கள் என்ன என்பதை இங்கு வரிந்து கட்டுபவர்கள் எழுதினால் புரிந்துகொள்ள ஏதுவாகும்.

  35. humanbeing says:
    16 years ago

    I am not a muslim & I am not a Hindhu, I am first Human being & then only I am indian & Tamilan and etc., think , First upall we must understand one thing the terriosim is main problem for our mother country even there is muslim or hindus or dalits or passisit or any other political parties wat ever so on , but the terrosim must be oblished from our nation. The encounter is the only problem solution for the terriosim . Because the death only give the remedial to the terriosim. Any one terroist catch by the police or militray or any other secuirty forces must be killed immediately , no enquireis or no arrests or etc things. If you tell about me a passiist or any other form , I am not bother about it.

  36. VERI PIDITTHAVAN says:
    16 years ago

    ITHU PONDRA UNNMAYAI VELIPPADUTTHIYA    UNMAY      
     TAMILANUKKU NANDRI  

  37. prabu says:
    16 years ago

    தீவிரவாதியா மூணு முஸ்லிம காட்டினா அது குத்தம்.. அவங்கள பிடிக்கற மாதிரி ஒரு நேர்மையான போலீஸா முஸ்லிம காட்டின அது உண்மைய மறைக்கறது.. அந்த தீவிரவாதிகளை கொலை பண்ணினது ஒரு முஸ்லிமா காட்டினா.. ஆ.. அவனும் தீவிரவாதி.. அதான் முஸ்லிமா காட்டறான்.. இதே ஒரு இந்து பண்ணினா மாதிரி எவனோ ஒருவன்ல காட்டினா அது இந்துத்துவ வாதம்.. பார்ப்பினிய ஆதிக்கம். குருதிபுனல்ல ஒரு இந்து நேர்மை தவறி நடக்கிறான்.. முஸ்லிம் தீவிரவாதிய எதிர்த்து நேர்மையா சாகறான்.. அதுவும் தப்பு..

    என்ன தாண்டா வேணும் உங்களுக்கு எல்லாம்?

  38. prabu says:
    16 years ago

    தீவிரவாதியா மூணு முஸ்லிம காட்டினா அது குத்தம்.. அவங்கள பிடிக்கற மாதிரி ஒரு நேர்மையான போலீஸா முஸ்லிம காட்டின அது உண்மைய மறைக்கறது.. அந்த தீவிரவாதிகளை கொலை பண்ணினது ஒரு முஸ்லிமா காட்டினா.. ஆ.. அவனும் தீவிரவாதி.. அதான் முஸ்லிமா காட்டறான்.. இதே ஒரு இந்து பண்ணினா மாதிரி எவனோ ஒருவன்ல காட்டினா அது இந்துத்துவ வாதம்.. பார்ப்பினிய ஆதிக்கம். குருதிபுனல்ல ஒரு இந்து நேர்மை தவறி நடக்கிறான்.. முஸ்லிம் தீவிரவாதிய எதிர்த்து நேர்மையா சாகறான்.. அதுவும் தப்பு..

    என்ன தாண்டா வேணும் உங்களுக்கு எல்லாம்?

  39. பீட்டர் says:
    16 years ago

    இந்த நடிகர் ஓர் அபூர்வப் பேர்வழி! ‘ தசாவதாரம் ‘ போன்று ஒரு பயனற்ற படம்!
    பீட்டர்
    மலேசியா

  40. Saraladevi.M says:
    16 years ago

    தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு குடும்பத்தை இழந்து உறவுகளை பிரிந்தவனின் உணர்வுகளை உணரும் ஒரு சராசரிமனிதனின் கோபத்தை வெளியிடும் தைரியம் இருப்பதால் கமல் நம்மில் உயர்ந்து சாமானியனாக தெரிகிறார் அவரைப்போல் மனதில் தோன்றும் வலியை வாய்விட்டு சொல்லாமல் உள்ளுக்குள்ளே புழுங்கி கொள்ளும் கோலைகளான நாம் விமர்சிக்ககூடாது தீ என்றால் சுடாது தொட்டால்தான் சுடும் என்பார்கள் ஆனால் விமர்சனங்கள் வாழவும் வைக்கும் உயிரை சாகவும் வைக்கும் வலிமை வாய்ந்தது எனவே முடிந்தவரை வாழ வையுங்கள் நீங்களும் வாழுங்கள் ஊருக்காக இல்லாமல் உங்களுக்காக

  41. vetri says:
    16 years ago

    சரியான விமர்சனம்.கமலின் முகதிரையை கிழிக்கும் விமர்சனம்.தேவர் மகனில் தனது
    வருங்கால மனைவியை தன் தந்தையிடம் அறிமுகப்படுதும்போது அவர் ஆந்திராவில் 
    தமது சாதிக்கு சமமான சாதியை சேர்ந்தவர் என சொல்வதிலிருந்தே கமல் எவ்வாரு சாதியதை தூக்கி பிடிப்பவர் என தெரிகிறது.

  42. Saniyan says:
    16 years ago

    \\ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது//

    Appo vera eppadidhan neenga idha paakureenga thozharae…? … enna dhan problem ungalukellam…? neenga ezhudhiirukuradhu, mozhiyin vaayilaga… vaarthayin surulgalin vaayilaaga… ungalai nilai niruthikolla ninaikum arippu… aamam arippu dhan… aana neengalae ungala romba sorinjukiteenganaa ratham varum.. punnagidum… epadiyo ponga… unga arippu… unga ratham… onnum solrathukku illa…

  43. Saralakarthi says:
    16 years ago

    பட்டினிபோரட்டம் நடத்த கமலஹாசன் ஒன்னும் மகாத்மா இல்லை,
    அவர் பார்ப்பான் அதனால்தான் அவர்பெயரை ராமானுஜர் என்று குறிபிட்டார்,
    என்றார் ஒரு நண்பர், ஜாதிஎன்பது ஒரு மனிதனுக்கு பசியாற்றும் உணவு மாதிரி,
    உயிர் காக்கும் மருந்தில்லை,

  44. MUKILVANNAN says:
    16 years ago

    I AM THE GREAT FAN OF KAMAL SINCE MY CHILD HOOD,HE IS GREAT ACTOR AND GENIOUS .HE IS ROBERT DE NIRO KIND.BUT LATLEY HE BECAME BRAMIN ON HIS CHARECTORS AND INSULT ME SAYING KUPPAN AND SUPPAN CAN NOT CHANGE THE WORLD.ONLY RAMANUJAN.

    WE WANT KAMAL THINK DIFFERENT WAY NOT LIKE UNNAIPOL ORUVAN.

  45. கோமளன் says:
    16 years ago

    இது ஒரு நகல். அசல் இந்தியில்.

    நகல் எடுப்பவருக்கு வேலை மிகவும் கம்மி. அப்படியே எல்லாம் அசலில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஜெராக்ஸ் வேலை தான். அண்ணன் இந்தப் படத்தின் அசலை சொல்லிவிட்டு கொஞ்சம் மாற்றங்கள் செய்து எடுத்திருக்கிறார். நிறைய படத்தில் அண்ணன் சொல்லாமல் அப்பப்போது நகலடித்திருக்கிறார்..

    அசலில் உள்ள தப்புகளை, அதன் விமசனங்களில் படித்து நகலை, அசலை விட சரியாக எடுத்திருக்கலாம். அண்ணன் இதில் பெரிய ஆள்.

    அதுவும் இப்படி ஏதாவது பிரச்சினைகள் உள்ள படமாக பண்ணி ஏதோ பெரிய சமுதாயப் பார்வை உள்ளவர் போல காட்டுறதுல அண்ணன் மட்டுமில்லை, இங்க இருக்கிற சிலர் பண்ணும் பாவ்லா விஷயம் இது.

    பெரிய நடிகர்களின் படங்களுக்கு , இம்மாதிரியான நகல் வேலைகளுக்கும் சேர்த்து ஜல்லியடிப்பதற்கு நம் தமிழ் நாட்டில் வார்த்தை ஆயுதங்களோடு பெரிய கூட்டம் இருப்பதால், தமிழ் சினிமாவுக்கு சரியான விமரிசனங்கள் எங்கேயும் இல்லை.

    சினிமாவை விட்டுட்டு நடிகனை தலையில சுமக்கிற ரசிகர் கூட்டம்.

    ஒரு நல்ல அசலான திரைப்படத்தை இவர் எடுத்துக் காட்டட்டும். பிறகு இவரைத் தூக்கித் தலையில் வைத்துக் கொள்ளலாம்.

  46. Anti-Indians says:
    16 years ago

    those who oppose this article must understand how Brahminism works out. without knowing about Hindutva politics, don’t speak like fools and don’t befool others. that country you live is a place, where you cannot even write a book supporting a Muslem[like Jinna]. an untouchable is not suppose to hear the texts of Manu and other Vedas. those who are not affended by such potrayals are not at all Muslems above all not human beings. you can say that it an adaptation, but what you select to xerox is the most impotant facter of your political idiology.will that “cross belt wala”[Kamal] take a flim discribing the brutalities of Hinduthva forces in Orisa and gujarath??? no one in India will dare, since media is entirely operated by Kamal’s faithful colleagues[cross belt walas].

  47. meha says:
    16 years ago

    லக்கிலுக்:
    Posted on 09/22/2009 at 5:23 am
    விமர்சன நேர்மை அப்பட்டமாக பளிச்சிடுகிறது. இந்த ரீதியான விமர்சனங்கள் அச்சு ஊடகங்களில் வெளிவரும் நாளே தமிழனுக்கு பொன்நாள்!

    எவன் எல்லாம் விமர்சனநேர்மை பத்தி பேசறதுன்னே வெவஸ்த இல்லாம போச்சுடா…

  48. komalan says:
    16 years ago

    >எவன் எல்லாம் விமர்சனநேர்மை பத்தி பேசறதுன்னே வெவஸ்த இல்லாம போச்சுடா<

    ஐயோ மன்னிச்சுக்குங்க அண்ணெ

    உங்கள விட்டா விமரிசனக்க்கலைய தெர்ஞவங்க நம்ப ஊர்ல யாரும் இல்லயே

    ஐயா சொல்லுஙக

    இப்படி விமரிசன சொந்தக்கரங்களா எத்தன பேரு கிளம்பீரிக்கீங்க ?

    சினிமா விமர்சனம்னா என்னன்னு தெரியுமா அண்ணாத்தே ?

    இனியொருவில் எழுதப்படிருப்பது முக்கியமா ன செய்தி- இதை பலர் அறியச் செய்ததற்கு ஆழியூரானுக்கு நன்றி

    விமர்சன உரிமையளரே ! முதலில் எப்படி விமர்சனம் செய்வது பற்றி கொள்ளுவது உங்களுக்கு நல்லது.

    வலைப்பதிவுகளில் உங்களை மாதிரி ஜல்லியடிப்பவர்களுக்கும் நல்லது.

  49. Yuvaraj.N says:
    16 years ago

    ” உன்னை போல் ஒருவன் ” படத்தில் உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் ஒரு உள்ளகுமுரலை தான் அவர் திரைப்படமாக எடுத்து மக்களுக்கு காட்டி இருக்கிறார். தீவிரவாதிகள் தண்டிக்க பட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டு இருகிறதே தவிர மத வாதிகள் தண்டிக்க பட வேண்டும் என்று சொல்லவில்லை,
    தீவிரவாதத்தை போதிக்கவும் சொல்லவில்லை, ஒரு படைப்பாளி மக்களுக்கு சொல்ல வந்த கருத்தை உங்கள் தவறான விமர்சனங்களால் தீவிரவாதத்துக்கு வித்திட்டு விடாதிர்கள்.
    நீங்களும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுங்கள். குறை கண்டுபிடிப்பது மிகவும் எளிதான ஒரு விஷயம் அதை விட்டுவிட்டு உங்கள் படைப்பின் மூலம் சாதனை படையிங்கள்.

  50. ஊர்சுற்றி says:
    16 years ago

    நல்ல விமர்சனம். 

    அப்புறம், நானும் ரவுடிதான்! 
    ஆட்டையில நானும் சேர்ந்துகிட்டேன். 🙂

  51. tamilan says:
    16 years ago

    very good vimarchanam………..nalla irunthathu…..please sontinue your writing …good work. god will give best fruit for your work.thank very much.

  52. INDIAN-MUSLIM says:
    16 years ago

    நல்ல விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு முட்டாள் தனமான படம் “உன்னைப் போலொருவன்”. ஆங்கிலத்தில் சொன்னால், “சிம்ப்லெ-மின்டெட்” திரைப்படம் என்று அதனைக் கூறலாம்.

    தீவரவாதத்திற்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்கிறார் கமல். சில தீவிரவாதிகளை — அதுவும் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தீவிரவாதிகளை — கொன்றுவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடுமா என்ன? போதாததற்கு, தீவீரவாதிகளைப் பிடித்தவுடனேயே கொன்றுவிட வேண்டும் என்றும் கமல் நமக்கு அறிவுரை கூறுகின்றார்! இத்தகைய அறியாமையைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

    அப்பாவி மக்கள் பலரை ஒரு நாடு கொன்று குவித்தால் அது போர். அதையே தனி நபர்களோ, இறையாண்மை இல்லா குழுக்களோ, அமைப்புகளோ செய்தால் அது தீவிரவாதம்.

    9/11 படுகொலையை தீவிரவாதத்தின் உச்சம் என்று கொள்ளும் நாம், அதன் பெயரில் அமெரிக்காவால் தொடர்ந்து கொன்று குவிக்கப்படும் பல்லாயிரக்கனக்கான அப்பாவி ஈராக்கியர்களின், அப்கானிஸ்தானியர்களின் அவதியைக் கண்டும் காணாதிருக்கின்றோம். ஏனென்றால் 9/11 தீவிரவாதம்; ஈராக்/அப்கான் போர் நியாயப் போர். 9/11ல் கொல்லப்பட்டோர் அப்பாவிகள்; ஈராக்/அப்கானில் கொல்லப்படுவோர் ‘தவிர்க்க இயலா சேதம்’ (சொல்லடெரல் டமகெ). ‘உன்னைப் போலொருவன்’ இத்தகைய வேறுபாடுகளை மருந்துக்கும் அலசவில்லை. தீவிரவாதத்திற்கான காரணிகளையும் மேலோட்டாமாகவே பார்க்கின்றது.

    அதோடு, தீவிரவாதிகள் அனைவருமே உயிருக்கு பயந்த கோழைகள் என்ற போலிச் சிந்தனையைப் படம் கற்பிக்கின்றது. தீவிரவாதிகளை அவ்வப்பொழுது நாம் கொன்றுவிட்டால் அச்சம் ஏற்பட்டு தீவிரவாதத்தை அவர்கள் கைவிட்டுவிடுவார்கள் போலும்! (தற்கொலைப் போராளிகளைப் பற்றி அறிந்திராத கமலின் ‘கோமன் மேன்’ எந்த உலகத்தில் தனது நேரத்தை கழிக்கின்றார் என்று தெரியவில்லை.)

    அதே வேளையில், தீவிரவாதிகளை இவ்வாறு கொல்வதால் ஏற்படும் தீமையைப் ‘உன்னைப் போலொருவன்’ தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.

    ஒன்று: தீவிரவாதிகள் கொடுக்கும் தகவல் இதர தீவிரவாதிகளைப் பிடிக்க உதவலாம் அல்லது அடுத்த தீவிரவாதச் செயலைத் தடுக்க உதவலாம்.

    இரண்டு: பிடிபட்ட தீவிரவாதிகளைக் கூண்டிலேற்றி தண்டனை வாங்கித்தர தீவிரவாதிகள் உயிருடன் இருப்பது அவசியம் — பிணம் சாட்சியம் சொல்லாதல்லவா?

    மூன்று: தீவிரவாதம் ஆநீதியையும் தீர்க்க முடியா மனக்குறையையும் மையமாகக் கொண்ட ஒரு வித நோய்; அந்நோய் பரவுவதைத் தடுக்க வேண்டுமெனில் மேற்குறிப்பிட்ட இரண்டையும் வேரோடு அழிக்க வகைசெய்தல் வேண்டும். அநீதிக்கு பதில் கமல் கூறுவது போல் அநீதியல்ல; நீதி! இவ்வுண்மையை அமெரிக்கா இன்று உணர்கிறது. ‘குவாந்தானாமோ பே’ மூகாமில் (Cஅம்ப் X-ரய்) அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளை அடித்துத் துன்புறுத்திக் கொன்றதற்காக இன்று அந்நாடு வருந்துகின்றது.

    ஆக … ‘உன்னைப் போலொருவன்’ பல நல்ல, மெச்சத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் — ‘கந்தசாமி’ போன்ற நேரக் கேடு அல்ல இப்படம் — அதன் மையக் கருத்து சிறு பிள்ளைத் தனமாகவும் அறிவார்ந்த சமூகத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது வருத்தத்தை அளிக்கின்றது…

  53. seenimohan says:
    16 years ago

    ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது

    . ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத்… இதுல யுகங்கள் தோறுமா?

    குரைந்த பட்ஷம் விமர்சனத்த விமர்சிப்பவர்கல் இதயாவது புரிந்து எழுதுஙகள். மிகச்சிறப்பாக எழுதப்பட்ட விமர்சனத்த புரிந்து கொள்ளாமல் ஏதெதொ பிதட்ருகிரார்கல்

  54. seenimohan says:
    16 years ago

    முஸ்லிம்னா ரென்டு மூனுநாலுன்னு கனக்கில்லாம பொன்டான்டி வச்சிருப்பான்னு பொதுப்புத்தியில் பதிவான அதே விஷயம் கமல் புத்தியிலும். அப்புரம் என்ன முர்ப்போக்கு சாயம்.

  55. velumani says:
    16 years ago

    எழுதும் முதலாவது விமர்சனம் இது. படம் பார்த்தேன் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு முஸ்லீமான எனக்கே வரவில்லை.—–

    ‘உன்னைப் போலொருவன்’ பல நல்ல, மெச்சத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் — ‘கந்தசாமி’ போன்ற நேரக் கேடு அல்ல இப்படம் ——

    உன்னை போல் ஒருவன் ” படத்தில் உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் ஒரு உள்ளகுமுரலை தான் அவர் திரைப்படமாக எடுத்து மக்களுக்கு காட்டி இருக்கிறார். தீவிரவாதிகள் தண்டிக்க பட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டு இருகிறதே தவிர மத வாதிகள் தண்டிக்க பட வேண்டும் —–என்று சொல்லவில்லை,
    படத்தின் சிலநல்ல அம்சங்கலை பட்டியலிடத் தேவையே இல்லாமல் ம்
    —-ஏலே சொன்ன எடுத்துக் காட்டுகலே பொதும்.

    சினிமாவ சினிமாவ பருங்க மக்கா…..இல்லநேங்க எல்லாம் மக்கா?

    பயங்கர வாதமே கோடாது …இதுதான் படம் சொல்லுது. ஒலப்பாதேங்க…..

  56. velumani says:
    16 years ago

    ஆயிரம் குண்டு வெடிப்புநடந்தால் அதில் 999 -ல், முச்லிம் சம்பந்தப்பட்டு இருப்பது எப்படி? வெரும் வக்கலத்து வேலைக்காகாது! இப்படி பாக்.கில்நடந்தால்…..?

  57. unmai vilambi says:
    16 years ago

    மோடியை குறை சொல்லும் யோக்கியர்கள் கோத்ராவில் 55 பேரை உயிருடன் கொளுத்தியதைநியாயப்படுத்த என்ன காரணம் சொல்வீர்கள்      
    உங்களைப் போன்ற விஷ விமர்சகர்களை கழுவேற்றினாலும் தகும்

  58. அஜீவன் says:
    16 years ago

    சினிமா கலை தெரியாதவர்கள் , சினிமா விமர்சனம் எழுதுவதின் விபரீதம் புரிகிறது. எம்ஜீஆர், ரஜனி வரிசையிலான படங்களைப் பார்த்தே பழகி விட்ட எம்மவர் அப்பழுக்கற்ற கதாநாகயகனாக , முக்கிய கதாபாத்திரம் இருக்க வேண்டும் எனும் மன வியாதி விமர்சனத்தில் பளிச்சிடுகிறது. குருடனாக ´ ராஜபார்வை´யில் வந்த கமல் போல அல்லது ´பதினாறு வயதினிலே´ சப்பாணியாக வந்த கமல் போல அல்லது மூன்றாம் பிறை கமலாக, விமர்சகர் பார்க்க நேராததில் மகிழ்வாக இருக்கிறது. கதைக்கான கதாபாத்திரம்தான் கமலே தவிர , கமலினுடைய உண்மை வடிவம் அதுவல்ல . சினிமாவுக்குள் , தெய்வங்களை பார்க்க முயல வேண்டாம். அதற்கு கோயில்களுக்கு சென்று வாருங்கள். விமர்சனம் தேவைதான், ஆனால் இப்படியான விமர்சனங்கள் தேவையே இல்லை.

  59. vetty says:
    16 years ago

    “சினிமா கலை தெரியாதவர்கள் இ சினிமா விமர்சனம் எழுதுவதின் விபரீதம் புரிகிறது. ”

    ஆனால் விமரிசனக் கலை தெரியாதவன் விமரிசனம் படிப்பதன் விபரீதமும் புரிகிறது.

    முதலில் ‘ யு றநனநெளனயல’ பார்க்கவேண்டும்.
    பிறகு 4 விமரிசனம் படிக்கவேண்டும். பிறகு… லாம்.

  60. Ganesan says:
    16 years ago

    Hey! This is a creative endevour by the artist to express his opinion in the form of cinema. The artist is bound by artistic freedom to express his thoughts. One should not read too much. One should see to enjoy the message. kamal has the right to express his views as an artist. His has succeeded in this movie by creating a contravercy, so you and all commentators are talking and thinking about this movie. This itself is the motive to let the cinema goer to discuss the subject matter, as a journalist would do to write about a contraversial subject.

  61. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore District says:
    16 years ago

    கமலின் உண்மையான முகத்தை இப் படத்தில் காண்முடிகிற்து.

  62. azad, says:
    16 years ago

    படத்தில் கமல் புத்திசாலித்தனமாக தனது பாசிசத்தை தூவியுள்ளார். படிமம். குறியீட்டை பயன்படுத்தி முஸ்லீம்கள் உட்பட அனைவரையும் ஏமாற்றியுள்ளார். “மக்கள் உரிமை” என்ற தமுமுக வின் வார இதழில் சப்பைக் கட்டியுள்ளார்.

  63. சங்கி மங்கி says:
    15 years ago

    ஸ்ஸ்ஸ்…….ஸப்பா….

    இப்பவே கண்ணக்கட்டுதே…..

    ரூம் போட்டு யோசிப்பாய்ஙளோ?

    பில்டிங் ஸ்ராங் ராஜா… பட்… நீங்க போட்ட பேஸ்மண்ட் வீக்கு….

    வேலைவத்தியில்லாட்டி வேற ஜோலி பாக்கிறது… இதெல்லாம் முக்கியமா கண்ணு… ஆ?

  64. Sethu Murugan says:
    15 years ago

    நான் சமிபத்தில் படித்த விஷயத்தை இங்கு உஙகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன். இந்த செய்தி ஒரு தமிழ் நாளிதலில் வெளியான தகவல்.

    கடந்த வருடம் நடை பெற்ற மும்பை தாக்குதலில் உயிருடன் பிடி பட்டு தற்போது காவலில் இருக்கும் திவிரவாதிக்கு இது வரை செலவிட பட்டுள்ள தொகை 32 கோடி ருபாய். அவனுக்கு என விஷேசமாக தயாரிக்க பட்டுள்ள சிறை அறை மற்றும் பல. அவனுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமணையில் விஷேச அறை. இதில் கோடுமையான விஷயம், இது வரை அந்த மருத்துவமணையில் உள்ள அறை உபயோகப்படுத்தவே இல்லை.

    இது பற்றி உஙகள் கருததுக்களை பரிமாறிக்கோள்ளவும்.

    சேது முருகன்,
    சென்னை.

  65. balakrishnan says:
    15 years ago

    இப்ப தான் இந்த வெப்சைட்டுக்குள் நுழைய நோ்ந்தது. யப்பா…. எத்தனை வாா்த்தைகள், விமா்சனங்கள், சொற்போா்கள். இது ஒரு ரீமேக் படம். சராசாி மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் வன்முறையால் அதை கட்டுப்படுத்த ஏதோ அவனாலான முயற்சிகளை மேற்கொள்கிறான். இதைத் தொிந்து கொண்டும் காவல் துறை அதிகாாி அவனை கைது செய்யாமல் விட்டுச் செல்கிறாா். அவ்வளவு தான்! இதில் கமலை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு முகாந்திரமே கிடையாது.
    என்ன செய்வது? சில போின் mindset அப்படி!

  66. siva says:
    14 years ago

    இன்னும் எத்தனை நாளூக்கு ஆரியர் திராவிடர் விளாயாட்டு விலையாடுவீங்க?
    குறை சொல்ல வேன்டும் என்பதர்காகவே படம் பார்க்க கூடாது. உங்கள் விமர்சனதில் கருத்து தினிப்புதான் உள்ளது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...