பீகார் மானிலத்தில் கடந்தவாரம் 22 பள்ளிக் குழந்தைகளுக்கு நஞ்சு கலந்த உணவை வழங்கி இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைக் கொன்றுபோட்டது. சமூகத்தில் அடி நிலையிலுள்ள வறிய மக்களுக்களும் இந்தியாவை இன்னும் இறுகத் தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ள தொழிலார்களும் கொசுக்கள் போலக் கொல்லப்படுவது இந்தியாவில் ஒட்டப்பட்ட ‘ஜனநாயகத்தின்’ கோர முகம்.
பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் தர்மசாதி கந்தமான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த செவ்வாய்க் கிழமை விஷம் கலந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் 16 பேர் சாப்ராவிலும், 4 பேர் பாட்னா அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்த செய்தி ஆங்காங்கே ஊடகங்களை ஆக்கிரமித்து மறைந்துவிட்டது.
அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தவளை உணவு வழங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தின் மொரடாபாத்தில் உள்ள திலாரி என்னும் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளியில் வழக்கம் போல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது சிறுமி ஒருவர் வாங்கிய உணவில், தவளை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன சிறுமி, இத்தகவலை தனது பெற்றோர் மற்றும் ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர்கள் பொலிசில் புகார் தெரிவிக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் தவளை இறந்து கிடந்ததை உறுதி செய்தனர்.
இந்தியாவில் 12 கோடிக் குழந்தைகளுக்கு ‘சத்துணவு’ என்ற பெயரில் வழங்கப்படும் இந்த உணவுத் திட்டம் உயிர்க்கொல்லித் திட்டமாக மாறிவருகிறது.
வால் மார்ட் உட்பட பல்தேசிய நிறுவனங்களுக்கு இந்தியாவை விற்றுப் பிழைப்பு நடத்துவதில் அதிகாரவர்க்கம் படு பிஸியாக உள்ள நிலையில் குழந்தைகள் கொசுக்கள் போலக் கொல்லப்படுவதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டர்கள்.
இது தான் இந்தியாவும் இந்திய அரச இயந்திரமும் அரசியல் வாதிகளும். மனிதாபிமானமே அற்ற பணவெறி கொண்ட ஊழல் மிகுந்த பசாசுகள் தான் இந்தியா எங்கும் அவர்களைக் கண்டிதால் கதையை திருப்பி இந்திய மக்களை அவமதிக்க கூடாது தமிழ் நாட்டு மக்களை அவமதிக்க கூடாது என நாம் சப்பைக் கட்டுக் கட்டக் கூடாது.