உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. விவசாயிகள் போராட்டம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது உட்பட பல பிரச்சனைகளால் பாஜக வெல்வதில் கடினமான சூழல் நிலவுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளை நோக்கி ரெய்ட் உட்பட பல நெருக்கடி நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில்,
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான ராஜீவ் ராய் வீட்டில் இன்று வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர்.
சாமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் நெருங்கிய உதவியாளர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தனது வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தி வருவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜீவ் ராய், இது வருமான வரிசோதனை. நான் மீது எந்த குற்றப்பின்னணி இல்லை. கருப்பு பணமும் இல்லை. நாம் மக்களுக்கு உதவி செய்தேன். அரசுக்கு அது பிடிக்கவில்லை. அதன் விளைவு தான் இது. நீங்கள் எதாவது செய்தால் அவர்கள் வீடியோவாக எடுத்து வழக்குப்பதிவு செய்வார்கள். தேவையில்லாமல் நீங்கள் தான் அந்த வழக்கை சந்திக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கை முடிவடையட்டும் இதில் எந்த பயனும் இல்லை’ என்றார்.
உத்தரபிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவ் வெல்லும் சூழல் உருவாகியிருப்பதாக கணிக்கப்படுகிறது. பல கட்சிகள் அவரோடு இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.