இந்தியாவில் 358 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி “புதிய வகை கொரோனாவை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் இன்றும் மிக முக்கியமானது’ என்றார்
ஓமைக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள ஊரடங்கு இந்தியாவில் சாத்தியமில்லாத நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. மத்தியரபிதேசத்தையடுத்து உத்தரபிரதேச மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக இம்முறை வெற்றி பெறுவது கடுமையான சவால் நிறைந்ததாக இருக்கும் என உளவுத்துறைகள் அறிக்கை அளித்துள்ளன. காரணம் ஒரு பக்கம் காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு பணி செய்கிறது. இன்னொரு பக்கம் அகிலேஷ் யாதவுக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவை விட அகிலேஷ் யாதவின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில் இன்னும் சில மாதங்கள் தேர்தலை தள்ளி வைத்து நடத்தினால் வெற்றி பெறலாம் என நினைக்கிறது பாஜக.
ராமர்கோவில் உட்பட இந்து மதம் இம்முறை பெரிய அளவில் தங்களுக்கு கை கொடுக்காது என பாஜக கருதுகிறது. இன்று உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கொரோனா பரவல் தொடர்பாக அச்சத்தை வெளியிட்டனர்.மேலும்,
ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனாவின் 3-வது அலை ஏற்படலாம்.கிராம பஞ்சாயத்து தேர்தல், மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் அதிகமானோருக்கு கொரோனா பரவியது. அது அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்துகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமன்றது.
அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடைபெறுவது நிற்காவிட்டால் கொரோனா இரண்டாவது அலையை விட மோசமக இருக்கும். ஒமைக்ரான் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு பிரதமர் மோடி தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
இதைத்தான் பாஜகவும் எதிர்பார்க்கிறது. காரணம் உடனடியாக தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது. அதே போன்று காங்கிரஸ் கட்சிக்கும் தயக்கம் உள்ளது. தேர்தலை முழு வீச்சில் எதிர்கொள்ள அகிலேஷ் யாதவ் மட்டுமே தயாராக உள்ளார்.
நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்ததையடுத்து தேர்தல் கமிஷன் உத்தரபிரதேச தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறது. பெரும்பாலும் அம்மாநிலத்தில் தேர்தல் தள்ளி வைக்கப்படவே சாத்தியங்கள் அதிகம் உள்ளது.