உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாசு தயாரித்த கைத்தொழிற்சாலையில், பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது.மோதிலால், ராம் நாராயண் என்ற இரண்டு பேருக்கு சொந்தமான வீடுகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நேற்று காலையில் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது. இதில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்தன. இதில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதாம் தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சலையில் 30 தொழிலாளர்கள் பலியெடுக்கப்பட்டனர்.
பட்டாசு தொழிற்சாலைகளின் படுகொலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாத இந்திய அரசு கூடங்குளத்தில் மிகப்பெரும் பட்டாசு ஆலையை நட்டுவைத்திருக்கிறது.