பொரள்ள ரி20 தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து முன்னெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சட்டத்தரணி உந்துல் பிரேமரட்னவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டு அழைப்பாணை விடுக்குமாறு கோரி பொரள்ள காவல்துறையினர் நிதிமன்றில் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க, தேவையேற்படின் காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என அறிவித்தார்.
இந்த போராட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்த காவல்துறையினர், உந்துல் பிரேமரட்ன சட்டவிரோதமான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துவாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையுறு விளைவித்தாகவும், தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், காவல்துறையினரின் பணிகளுக்கு இடையுறு விளைவிக்கப்பட்டதாகவும், குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஆர்ப்பாட்டத்தின் போது பெறப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட, ஒழுங்கமைக்கப்படாத காட்சிகளை ஊடக நிறுவனங்களிடம் பெற்றுத் தருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் ஊடகநிறுவனங்களுக்கு குறித்த காணொளிகளை பெற்றுத் தருமாறு உத்தரவிட்டார்.