உதிரிகளை நம்பி நிற்கும் காங்கிரஸ் : குதிரை பேரத்தை துவக்கியது

புதுடில்லி, ஜூலை 13-

அணுசக்தி உடன் பாட்டை செயல்படுத்த வேண் டுமென்று அமெரிக்க புஷ் நிர் வாகத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக காங்கி ரஸ் தலைமை உதிரிக் கட்சிக ளின் ஆதரவைப் பெற குதிரை பேரத்தில் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 22-ம்தேதி மக்கள வையில் நம்பிக்கை வாக்கெ டுப்பை சந்திக்க உள்ள மன் மோகன் சிங் அரசு, சமாஜ் வாதி கட்சியின் ஆதரவுடன், இதர சில உதிரிக் கட்சிகளின் ஆதரவையும் நம்பியுள்ளது.

மக்களவையில் பெரும் பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், ஐக் கிய முற்போக்கு கூட்டணி கட் சிகளின் பலம் 221 மட்டுமே. இக்கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ள காங்கிர சுக்கு 153 உறுப்பினர்கள் உள் ளனர். ஆர்ஜேடி – 24, திமுக – 16, என்சிபி -11 என மொத்தம் 221 உறுப்பினர்கள் உள்ளனர். இக்கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இடம் பெற் றிருந்தாலும், இன்னும் அக் கட்சி தனது நிலைப் பாட்டை தெளிவாக வெளியிடவில்லை. இக்கட்சிக்கு 5 எம்.பி.க்கள் உள்ளனர்.

சமாஜ்வாதி கட்சிக்கு 39 உறுப்பினர்கள் உள்ளனர். எனினும் அரசுக்கு ஆதரவாக 37 உறுப்பினர்களே வாக்களிப் பார்கள் எனத் தெரிகிறது.

இரண்டு உறுப்பினர்கள் கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி தனது முடிவை திங்க ளன்று அறிவிப்பதாக தெரி வித்துள்ளது. இதேபோல இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தேவகவுடா தலை மையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்க வில்லை. எனினும் இக்கட்சி யைச் சேர்ந்த கேரள நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.பி. வீரேந்திரகுமார், அணுசக்தி உடன்பாட்டை தீவிரமாக எதிர்ப்பதாகவும், அரசுக்கு எதி ராகவே வாக்களிக்கப் போவ தாகவும் அறிவித்துள்ளார்.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ராஷ்டிரிய லோக் தளம் இன்னும் முடிவை அறி விக்கவில்லை.

எனவே தற்போதைய நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக 258 உறுப்பினர்களின் (221+ 37) வாக்குகளே உள்ளன.

அரசுக்கு எதிராக 263 உறுப்பினர்களின் வாக்குகள் ஏற்கெனவே தயாராக உள்ளன. பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 169 எம்.பி.க் களும் அரசுக்கு எதிராக வாக் களிக்கப் போவதாக ஏற்கெ னவே அறிவித்துள்ளனர். (பாஜக – 130, சிவசேனை – 12, பிஜூ ஜனதா தளம் – 11, ஐக்கிய ஜனதா தளம் -8, அகாலி தளம் – 8)

இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் எண் ணிக்கை 59. (சிபிஎம் – 43, சிபிஐ – 10, பார்வர்டு பிளாக் -3, ஆர்எஸ்பி -3)

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 17 உறுப்பினர்கள் உள்ளனர். அணுசக்தி உடன்பாட்டை எதிர்க்கும் அணியில் தெலுங்கு தேசம் கட்சியும் உறுதியாக உள்ளது. இக்கட் சிக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர்.

3 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. எனினும் தனித்தெலுங்கா னாவை காங்கிரஸ் ஆதரிக்காத தால் அரசுக்கு எதிராக வாக்க ளிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

காங்கிரஸ் தலைமை குதிரை பேரத்தில் ஈடுபட் டுள்ளது என சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் குற்றம் சாட்டியுள்ளார் என்ப தும் குறிப்பிடத்தக்கது.