அப்பாவி மக்கள் மீதான அமரிக்க இரும்புத் திரைக்குள் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்தை வெளிக்கொண்டுவந்த மனித உரிமைப் போராளி எட்வார்ட் ஸ்னோவ்டெனை அமரிக்க செனட் சபை சபாநாயகர் துரோகி என குற்றம் சுமத்தியுள்ளார். 29 வயது இளைஞனான எட்வார்ட் ஸ்னோவ்டனின் ஆபத்து நிறைந்த மக்கள் பணி அமரிக்க அதிகாரவர்க்கத்திற்குத் துரோகத்தனமாக வெளிப்படுவது வியப்புக்குரியதல்ல. ஸ்னோவ்டன் வெளிப்படுத்திய தகவல்களை முதலில் நிராகரித்த அமரிக்க அரசு இப்போது தவிர்க்க முடியாமல் ஒத்துக்கொண்டுள்ளனர். மறுபுறத்தில் துரோகிப்பட்டம் வழங்கியுள்ளனர்.
சாத்தான்கள் வேதம் ஓதுவது போன்றதுதான் அமெரிக்க கொள்கை.
பணத்தை சுரண்டுவதற்கும் தாம் உல்லாசமாக இருப்பதற்காகவும் அவர்கள் எதுவும் செய்வார்கள் எல்லா நயவஞ்சக வழிகளையும் பாவிப்பார்கள்
நம்மைப்போன்ற சில இளிச்ச வாயன்கள் ஒபமாவும் அமெரிக்காவும் தமிழர்களைக் காப்பாற்றுவார்கள் என்று இன்னமும் நம்புகின்றார்கள் மற்றைய தமிழர்களும் கண்களை மூடிக்கொண்டு அமெரிக்காவை வணங்கவேண்டுமென்று போதிக்கின்றார்கள்
NSA – National Security Agency is a very important government agency in USA. In any country the citizenship requires responsible behavior too.