இலங்கை இராணுவம் பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வகையிலான பாலியல் வன்முறைகளை புலிகளின் உறுப்பினர்களையும் சந்தேக நபர்களை சித்திரவதை செய்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது என மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை அரச படைகளின் அரசியல் உந்துதலால் உருவான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இவை இன்று வரை தொடர்வதாக அறிக்கை குறிப்பிடுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் 141 பக்க அறிக்கை, “நாங்கள் உங்களுக்குப் பாடம் கற்பிப்போம் : தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் பாலியல் வன்முறை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டிற்கும் 2012 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற 75 பாலியல் வன்முறைச் மற்றும் வன்புணர்வுச் சம்பவங்களைப் பட்டியலிடும் அறிக்கை இச்சம்பவங்கள் இரகசியமாக மற்றும் சட்டரீதியாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் மீதானது எனக் குறிப்பிடுகிறது.
மனித உரிமைக் கண்காணிப்பகத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஆண்களும், பெண்களும் பாலியல் வன்புணர்ச்சிக்கு தொடர்ச்சியாகப் பலநாட்கள், பல நபர்களால் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இராணுவம், பொலிஸ், துணை இராணுவக் குழுக்கள் போன்றனவே இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள்.
சிறையிலிருக்கும் ஆண்களையும் பெண்களையும் வெளியில் தெரியாத எண்ணிக்கையிலான பல பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குனர் பிரட் அடம் தெரிவித்துள்ளார்.
போர்க்கால காடைத்தனங்கள் மட்டுமல்ல இன்றும் தொடரும் இலங்கை அரசபடைகளின் அட்டூழியங்கள் கைதிகளை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறது என்று கூறுகிறார்.
இலங்கை அரச படைகளின் இன்றும் தொடரும் கோரமுகத்தை அம்பலப்படுத்தும் இந்த அறிக்கையின் தமிழ் வடிவம் வார இறுதியில் இனியொருவில் வெளியாகும்.
There is an impasse about the former combatants still in custody. All the Sri Lanka Army bases have a Civil Affairs Officer. We should be aware of it and be able report any misbehaving soldier. There is no national policy on anything in Sri Lanka – Shri Lanka.
பிரபாகரனை படையினர் பிடித்து சென்று கொல்லும் வீடியோ இன்று ஐ.நா வில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்களே …… எமது விடுதலை வியாபாரிகளான தமிழ் ஊடகங்களும் தலைவர்களும் அதை உண்மை என ஏற்றுக் கொள்வார்களா?
So, there is a lot to come out of Sri Lanka – Shri Lanka. That is a welcome news.
இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட மேலும் ஒரு பரபரப்பு காணொளிக் காட்சி ஐ.நா. சபையில் இன்று (27) திரையிடப்படுகிறது.
சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சி 2-வதாக போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான காணொளிக் காட்சிகளை வெளியிட்டது.
அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.
தமிழ்சிஎன்என்
General Sarath Fonseka (December 18,1950) himself had said that war crimes were committed at the end. Just the Mullaitivu District. All 5 districts in the North have Army under a Major General.
I pray almighty for the peace of world.