உக்ரையின் ரஷ்ய முதலாளித்துவ மேலாதிக்க அரசிற்கும் மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கும் இடையே நடைபெற்ற அருவருப்பான சண்டையில் மேற்கு ஏகாதிபத்தியம் வெற்றியடைந்துள்ளது. இந்தச் சண்டையின் இடையே நூற்றுக்கணக்கானோர் உயிரையும் வாழ்வையும் இழந்துள்ளனர். மேற்கின் பல்தேசிய வியாபார ஊடகங்கள் உக்ரையின் என்ற நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பப் போராடுகிறார்கள் என்று தமது வழமையான பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டன. அதற்காக உண்மைகளை மூடிமறைத்துப் பிரச்சாரம் செய்தன.
எது எவ்வாறாயினும், ரஷ்ய சார்பு ஊழல் அரசிற்கும், பாசிஸ்ட் கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு யுத்ததில் தோற்றுப்போயிருப்பது உக்ரெயின் ஜனநாயகமும் தொழிலாளர்களும்.
இதுவரை உக்ரெயினில் போராட்டம் நடத்திய அமைப்புக்களில் ஹிட்லரை ஏற்றுக்கொள்ளும் நவ நாஸி பயங்கரவாதிகள் முக்கியமானவர்கள். ஐரோப்பாவில் வெளி நாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிராகவும், வெள்ளை நிறமல்லாதோருக்கு எதிராகாவும் வெறித் தனமாக முழக்கங்களை முன்வைத்தவர்கள். இதனுடன் கூடவே கம்யூனிசத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயகத்திற்கு எதிராகவும் வெறித்தனமாகப் போராடினார்கள்.
ஏனைய இன மக்களின் மீது வெறுப்புணர்வையும் வன்முறையையும் உமிழ்ந்த இவர்கள், தாம் ஐரோப்பியர்களாகவிருக்கும் போது ஐரோப்பாவை முஸ்லீம்களும், கறுப்பினத்தவரும் ஏனைய நாட்டுக்காரர்களும் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று முழங்கினார்கள். இவர்களையே ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் ஜனநாயகத்திற்காகப் போராடியவர்கள் என்றார்கள். ஹிட்லர் ஆண்ட ஜெர்மனி உக்ரேயின் நாஸிகளுக்கு உதவியது.
இன்று உலக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவரும் பாட்டாளிவர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தியவருமான தோழர் லெனினின் சிலையை உடைத்த நாஸிகள் அதன் அருகே ஹிட்லரின் நாஸி சின்னத்தைப் பொறித்தனர்.
இந்த புதிய அரசிற்கு உடனடியாக 35 பில்லியன் டோலா்கள் தேவையாம் அதை வென்றவா்களிடம் கேட்கின்றார்களாம் இவா்களின் நிலையோ சொல்லி தெரியவேண்டியதில்லை ஆதலால் உலக நாணய நிதியத்தை அவா்களுக்கு காட்டுகின்றார்கள் அப்படி உலக நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் முடிவு எப்படி இருக்கும் என்றுஅந்த மக்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. முடிவு, மறுபடியும் கிளா்ச்சி,மரணம்,ஏமாற்றம்.
வல்லரசுகளின் நலன்களுக்காக இந்த உலகிலுள்ள நாடுகளும் மக்கள் கூட்டங்களும் பலிக்கடாவாகும் நிலை மறைவதற்கு எந்த சாத்தியங்களும் இல்லை என்றே தெரிகிறது.
ஆபிரிக்க மக்களின் வாழ்வை முன்னெற்ற வேண்டும் அவா்கள் பட்டினியை போக்கவேண்டும் என்று எல்லோரும் வேண்டுகிறார்கள் ஆனால் இன்றய செய்தி ஒன்று கூறுகிறது இந்த வருடம் என்றுமே இல்லாத அழவு ஆயுதங்களை முறையே அமெரிக்கா,ருஸ்ஷியா,சீனா இந்த மூன்று நாடுகளும் எத்தனையோ பில்லியன்களுக்கு விற்றிருக்கின்றார்கள்.
அவர்கள் விற்றிருகிறார்களா இல்ல பல முட்டாள்கள் வாங்கி இருக்காங்களா ?
ஈராக்கில் சதாமின் சிலையை தகர்த்தது மாதிரி… தற்போது இச்டாலினின்… லெனினின்… சிலையை தகர்த்து உள்ளார்கள்…
Protesters have toppled statues of Russian revolutionary leader Vladimir Lenin in various Ukrainian cities…
( Posted on 02/23/2014 at 07:06 – https://inioru.com/?p=39290 )
First the president, now Lenin: Stunning map reveals 100 statues of Soviet leader have been toppled in UkraineDozens of Soviet icons are coming down across the troubled country
To keep track of them, the opposition produced an interactive map
But in the east, pro-Russia brigades have formed to protect them
Read more: http://www.dailymail.co.uk/news/article-2567388/Stunning-map-reveals-100-statues-Lenin-toppled-Ukraine.html
அதுக்கு நாம்ப என்னா பண்ணலாம் ?
தலை கீழாக நிற்கலாம்… கொஞ்சம் கூட இரத்தம் போகும்… (தலைக்கு…)
தங்களுக்கு அது தேவைதான் என்பது சொல்லித்தான் தெரிய வேணுமா எங்களுக்கு?
ஒலிம்பிக்கும் முடிவடைய… இனிப் பனிக்கால பனிகளின்… பணி… மக்களை பகடைக் காய்க்களாக்கி… அழிக்கும் பணி…
யுக்ரெய்னுக்கு 100 கோடி டாலர்கள் கடன் உத்திரவாதம் வழங்குவது பற்றி அமெரிக்கா பரிசீலித்துவருவதாகவும்… யுக்ரெய்னில் ரஷ்யா இராணுவ ரீதியாக தலையிடுவதென்பது மோசமான தவறு என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாகவும்…
யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தின் வெளியே ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் எதுவும் தென்பட்டால் இனி அதனை ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக கருதப்போவதாகவும்… யுக்ரெய்னின் தென்பிராந்தியத்துடைய தலைநகரமான சிம்ஃபெரோபோலில் சட்டமன்றத்தையும் நிர்வாகக் கட்டிடங்களையும் ஆயுததாரிகள் முற்றுகையிட்ட பின்னர் தற்காலிக அதிபராகியுள்ள ஒலெக்ஸாந்தர் துர்ச்சிநோவ்வின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இரவுப் பொழுதில் சுமார் முப்பது பேர் அதிரடியாக வந்து காவலர்களை அடித்துப்போட்டுவிட்டு கட்டிடங்களை முற்றுகையிட்டதாக சாட்சிகள் இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இக்கட்டிடங்களின் மேலே ரஷ்யக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்பகுதிகளை பொலிசார் தற்போது சுற்றிவளைத்துள்ளனர்.
யுக்ரெனுடனான தனது எல்லையை ஒட்டி நிலைகொண்டுள்ள ஒன்றரை லட்சம் படையினரை கடந்த புதனன்று ரஷ்யா அதிக உஷார் நிலையில் வைத்திருந்தது…
இவை குறித்த காணோளி…
http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/02/140227_ukrainevideo.shtml
Criminal Putin will do anything to keep Ukraine !
Avargal lenin silayai thagargalam aanal muthalithuvam oru nall thagarkappadum andru poi vesam kilium.