2009- முள்ளிவாய்க்காலில் பெருந்துயருடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் புலிகள் தங்களின் பலத்தை முழுவதுமாக இலங்கையில் இழந்து விட்ட நிலையில் பல் வேறு ஈழத் தமிழ் சக்திகளும் ஈழத்துக்கான பல் வேறு போராட்டங்களை புலத்தில் இருந்து முன்னெடுக்கின்றனர். அல்லது வளார்ந்த நாடுகளின் கவனத்திற்கு இனப்பிரச்சனையைக் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் உருத்திரகுமாரனும் அவரது ஆதர்வாளர்களும் ஐய்ரோப்பிய வலையமைப்பு சேவைக்கான விமானங்களை வாங்கி மக்கள் பயன்படுத்தும் வகையிலான பொதுப் விமானப் போக்குவரத்து ஒன்றை துவங்க இருப்பதாக “திவயின” செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தியோக பூர்வமானதோ அதிகாரபூர்வமானதாகவோ எத்தகவலும் இல்லாத நிலையில் இலங்கை அரசு இது குறித்து கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.