Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழ விடுலைப் போராட்டம் – “மறைக்கப்பட்டவைகளின்” உயிர்ப்பு : அசோக் யோகன்

இனியொரு... by இனியொரு...
02/26/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
7
Home பிரதான பதிவுகள் | Principle posts

இவ்வாறான தொடர் ஒன்றை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை நான் எப்பொழுதும் கொண்டிருக்கவில்லை. என் நண்பர்களும், தோழர்களும் எங்களது போராட்ட வரலாற்றின் பக்கங்களின் குறிப்புக்களை எழுதவேண்டுமென்று பல முறை கேட்டுக்கொண்டபோதும் நான் இதைப்பற்றிய எந்தவித அக்கறையும் அற்றவனாகவே இருந்துவந்துள்ளேன். இவ்வாறானதொரு வரலாற்றுத் குறிப்புக்களை எழுதுவதற்கான வல்லமையும் ஆற்றலும் தேடலும் என்னிடம் இல்லையென்பது எனக்கு தெரியும். இது பற்றி , என்னைக் கே ட்டுக்கொண்ட தோழர்களிடமும் நண்பர்களிடமும் கூறியும் வந்துள்ளேன். என்னைவிட ஆற்றலும் தேடலும் கொண்ட என் தோழர்களை இவ் வரலாற்றை எழுதும்படி ஊக்கப்டுத்தி னேன். தோழர்கள் எவரும் முன்வரவில்லை. வாழ்க்கை நெருக்கடி களுக்குள் அவர்கள் சிறைப்பட்டிருந்தனர். அத்தோடு, என்னைப்பற்றியும் எம் தோழர்கள் பற்றியும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின்பால் கடந்த காலங்களிலும் நிகழ் காலங்களிலும் எழுதுகின்றவற்றை பற்றி நான் பொருட்படுத்தாமை கொண்டேயிருந்தேன். அவற்றை புறக்கணிக்கவும் செய்தேன் .

எம்மை அறிந்த எம்மக்களும், தோழர்களும், நண்பர்களும் எம் போராட்ட வாழ்வு பற்றியும், எவ்வாறானதொரு வாழ்வை எம் மக்களுக்காக தேர்வு கொண்டோம் என்பது பற்றியும் நன்கு தெரிந்தே இருந்தனர் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் . எனவே புலம்பெயர்ந்த சூழலில் ‘யாழ்ப்பாண மையவாத அதிகார மேட்டுமை தனங்களின் ‘ வெளிப்பாடாய் “வரலாறு” என்ற பெயரில் இவர்கள் எழுதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் எங்களை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்பதையும் உணர்ந்துள்ளோம். அதே நேரம் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாய் நயவஞ்சகமாக, தந்திரமாக கட்டமைக்கப்படும் ” புனைவுக் கதைகளுக்கு” எமது எதிர்வினை ஆற்றலின் மூலம் உண்மை நிகழ்வுகளை வெளிப்படுத்தாவிடின் இப் பொய்யர்களின் “கதை கட்டல்கள் ” சரித்திர சான்றுகளாகி எதிர்காலத்தில் நம்பகத் தன்மையைப் பெற்றுவிடும் என்ற அபாயத்தையும் நாம் நன்குணாந்துள்ளோம்.

ஈழ விடுலைப் போராட்ட வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய சக்திகளின் போராட்ட வரலாற்று சான்றுகளும், அடையாளங்களும், ஆவணங்களும் மறைக்கப்பட்டு எவ்வாறு இவர்களால் திரிவுபடுத்தப்படுகின்றன, எவ்வாறு தங்களுக்குரிய அடையாளங்களாக உருமாற்றப்படுகின்றன என்பதற்கு இவர்கள் எழுதுகின்ற இந்த “வரலாறுகள்” சாட்சியம் பகிர்கின்றன. இவற்றை மெளனம் கொண்டு பார்ப்பதன் மூலம் உண்மையான வரலாற்றிற்கும், எம் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த, இழந்த எம் தோழர்களுக்கும் நாம் செய்யும் வரலாற்றுத் துரோகமாக இது அமைவதோடு, இவர்கள் செய்யும் வரலாற்று மோசடிகளுக்கும் நாம் துணைபோகின்றவர்களாகவும் ஆகிவிடுகின்றோம்.

எமது போராட்ட வரலாற்றில் எம் ஒவ்வொருவரிடமும் வரலாற்றின் பதிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. எமது வாழ்வின் சோகம், வாழ்க்கை போராட்டம் இவற்றின் காரணமாக இவைகளை பதிவுகளாக்க முனைப்பின்றி பின் நின்றுவிடுகின்றோம். எமது போராட்ட வரலாற்றில் சிறிய செய்திகள் கூட எமது சமூகத்தின் உண்மையான வரலாற்றை வெளிப்படுத்துவதற்கு பெரும சான்றாக அமைந்துவிடும்.

அரசியல் போராட்ட மற்றும் இனவரையியலிலும் சிறிய சிறிய தரவுகளும் கூட உண்மைக்குப் புறம்பாக அமையும்போது அது வரலாற்றின் ஆய்வின் திசைவழியையே மாற்றிவிடும் அபாயம் நிகழ்ந்துவிடுகின்றது. இதனை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் அவசியமாகின்றது.

இத் தொடர் குறிப்புக்களை எழுதுவதன் ஊடாக எமது போராட்ட வரலாற்றுக்கு, என்னால் பெரிதாக வரலாற்றுச் சான்றுகளாய் எதையும் அளித்துவிடமுடியாதென்பதை உணர்கின்ற அதே வேளை, நான் எழுதுகின்ற இக் குறிப்புக்கள், எமது போராட்ட வரலாற்றைத் திரிவுபடுத்தும் மோசடித் தனங்களில் இருந்து, உண்மை சார்ந்த புதிய திசைவழியை நோக்கிய வரலாற்றை நகர்த்த உதவ முடியுமென்று நம்புகின்றேன்.

என் எழுத்துக்கள் எமது இயக்க அரசியலின் தோல்வி கண்டு விரக்தியுற்று ஒதுங்கி இலங்கையில் வாழும் என் நண்பர்களுக்கும், என் தோழர்களுக்கும் எவ்வாறன பாதிப்புக்களை கொடுக்கும் என்ற பயமும் பதட்டமும் என்னிடம் உள்ளது. ஒரு காலகட்டத்தில் என் மீதான தனிப்பட்ட நம்பிக்கைகளின்பாலும், நான் சார்ந்த அமைப்பின் கொள்கைகளோடும் நம்பிக்கை கொண்டு சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையோடு என்னோடு இணைந்து தங்கள் வாழ்வை தொலைத்த தோழர்கள் அநேகம். இவ்வாறான தோழர்களுக்கு பெரும் நம்பிக்கைகளை விதைத்தவன் என்ற வகையிலும், அவர்களின் இன்றைய வாழ்வின் துயரங்களுக்கு, சோகங்களுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமானவன் என்ற வகையிலும் இத் தொடர் ஊடாக மன்னிப்புக்கோரி நிற்கின்றேன். இத் தொடர் மூலம் மீண்டும் அவர்களை நெருக்கடிக்குள் துயரத்திற்குள் தள்ளிவிடுவேனோ என்றும் அஞ்சுகின்றேன். எனவே என் குறிப்புக்களில் இலங்கையில் வாழும் நண்பர்களின் தோழர்களின் பெயர்களை தவிர்க்க நினைக்கின்றேன். அவர்கள் விரும்பும் பட்சத்தில் பெயர்களை பயன்படுத்துவேன்.

நான் எழுதப்போகும் இக் குறிப்புக்கள் என் நேர்மையின்பால் உண்மை நிலைகளோடு எழுதப்படுகின்றனவாகவே நான் உணர்கின்றேன். இதில் எவ்வித ஒழிவு மறைவுகளோ, திட்டமிடல்களோ இல்லையென்பதை உளப் பூர்வமாக தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன். இக் குறிப்புக்களில் தவறான செய்திகள் ,கருத்துக்கள் அமையின் அவற்றின் மீதான ஆரோக்கியமான விமர்சன கருத்தாடல்களை எதிர்நோக்கி நிற்கின்றேன். இதன் மூலம் ஆதார பூர்வமான உண்மை சார்ந்த விமர்சன உரையாடல் ஒன்றை எதிர்கொள்ளவும் விரும்புகின்றேன்.

இக் குறிப்புக்களை, பிரான்சிலிருந்து வெளிவந்த ‘ஓசை’ என்ற இதழில் 1993 கடைசி காலங்களில் நான் எழுதி வந்த “துடைப்பானின் குறிப்புக்களிலிருந்து” ஒரு சிறு பத்தியை நினைவில இருத்தி முடிக்கின்றேன். மீண்டும் உரையாடலை தொடர்வோம்.

…முரண்பாடுகள் அற்ற காலம் இனிமையானது. சக இயக்க நண்பர்களின் தோழமையும் அன்பும். இன்று அம்மாவின் நினைவுகளோடு இவர்களும்…

இத் தோழமைகளினால் என் வீடும் அடிக்கடி பொலீஸ் தொந்தரவுக்குள்ளாயிற்று.

என் கிராமம் வித்தியாசகரமானது.

உறவினர்களின் முணு முணுப்பும் வேண்டா வெறுப்பும். புன் சிரிப்போடு அம்மா.

அது ஓர் போராட்டம் மிகுந்த இனிய காலம். ‘இறைவனின்’ மரணம். அம்மாவின் கண்களில்…… நான் மெளனமாய்.

முதன் முதலாய் அம்மா….. அதன் பின் அம்மா மெளனியாய். வீட்டில் இருத்தல் என்பது கடினமாய் முழுமையாய் நான்…

.1983 கடைசிப் பகுதி. அம்மாவின் பார்வையில் நான்.

மெலிந்து சோர்ந்து நரைகண் முதுமையாய் . அம்மாவா அது ! என் நினைவும் வாழ்தல் பற்றிய பயமும் அம்மாவை கவ்விற்று.

வரட்டுச் சிந்தனைகளோடு அதன் ஆதிக்கங்களோடு நான். எனினும் அம்மாவின் நினைவுகள் அடிக்கடி.

கனமாய் கடிவாளம்.

பத்துவருடங்கள் இலையுதிர் காலமாய் … 1993 பாரீஸ் ‘பாலைவனத்தில்.’ தனிமையில் நான்.

எனினும் அம்மாவின் இதமான நினைப்புக்கள் என் நெஞ்சில்.
சென்றவாரம் செய்தி. என் நினைவுகளோடு அம்மா. இறுதிவரை வரட்டுத்தனமாய் நான் தொடர்புகள் அற்று.

“போராட்டம் மனிதர்களை நிறையவே பழிவாங்கிவிட்டது. என்னைப்போல் வரட்டுத்தன மனிதர்களையும் உற்பத்தியாக்கி” .

(அம்மாவின் செய்தி கேட்டு ஆகஸ்ட் 23 .1993. இரவு 9.30 )

நான், இனிவரும் காலங்களில் எழுத முனையும் இக் குறிப்புக்கள் அம்மாவுக்கும், எம் இயக்கத்தால் கொலை செய்யப்பட்ட ‘இறைவன்’ என்ற இறைகுமாரனுக்கும்…

நன்றி.
தோழமையோடு
யோகன் கண்ணமுத்து (அசோக்)
ashokyogan@hotmail.com
00 33 1 43 63 17 69

 
அசோக் எழுதும் தொடர் பதிவின் மேல்வந்தது முற்குறிப்பு..
எதிர்வரும் வாரத்தில் தொடர் ஆரம்பமாகும்..

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐ.நாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திப் பயனில்லை

Comments 7

  1. Vincent says:
    14 years ago

    வணக்கம்.
    இந்த முனைப்பு வரவேற்பதற்குரியது.
    பலரைப்போல நானும் எமது முன்னோர்களின் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

  2. ajeevan says:
    14 years ago

    நல்ல முயற்சி அசோக். தெரிந்த உண்மைகளை எழுதுங்கள்.  பொய்களே உண்மைகளாகி விட்ட நிலையில் உண்மைகள் மெளனமாவது அழிவுகளுக்கே வழி கோலும். அசோக்கின் எழுத்துக்களில் நடந்தவை வந்தாலே பெரிய விடயம். அதை செய்யுங்கள்.  வாழ்த்துக்களுடன்  அஜீவன்

  3. நெருஞ்சி says:
    14 years ago

    “யாழ்ப்பாண மையவாத அதிகார மேட்டுமை தனங்கள்” என்கிற மேதாவிலாச பாங்கொலியுடன்,உண்மை சொல்ல வருகிற வேகம்,கீரைக்கடைக்கு எதிர்க்கடை போடத்தான் என்பது தெட்டத்தெளிவாகிறது.
    அசோக்! சாம்ராஜ்யம் உங்களதே.

    • karaddy says:
      14 years ago

      தமக்கு மட்டுமே கற்க , எழுத , பேச உரிமை உள்ளதென்ற நினைப்பில் வாழ்பவர்கள் , மற்றவர்கள் காதில் உருக்கிய ஈயத்தையும்  , எழுதும் கைகளின் கட்டை விரலையும் காவு  கேட்பார்கள் 

  4. manoharan says:
    14 years ago

    உண்மையும் ,இயக்கமும் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கமுடியும் ,கடந்த காலத்தில் உண்மையை
    தேடிப்போவது முட்டாள்தனம் .அன்றைய மனப்பதிவுகளுக்கு இன்று நாம் கொடுக்கும் விளக்கம் தான் மறைக்கப்பட்டவைகளின் உயிர்ப்பாக இருக்கும்.மேலும் நேர்மை என்பது சார்ப்புநிலை கொண்டது . உங்கள் தொடரின் பார்வைகள் அவர் அவர் புரிதல்மூலம் வாசிக்கப்படும் .தொடரட்டும் . நன்றி

  5. வரதன் ( கஸ்ட்ரோ) says:
    14 years ago

    எம் போராட்ட தோழர்கள் அநேகம் . உங்கள் தொடரின் பார்வைகள் வரலாற்றின் பதிவுகள் .பெரிய விடயம். அதை செய்யுங்கள். நட்புடன் வ்ரதன்

  6. கருணாகரன் says:
    14 years ago

     பொறுப்பான ஒரு பதிவாளனின் எண்ணங்கள். இந்த உணர்வே உங்களை இன்னும் உரிய சிறப்படையாளங்களோடு வழிப்படுததுகிறது. அபாயவெளியை நோக்கி மற்றவர்களைத் தள்ளிவிட முனையும் வக்கிரப்போக்கினர்களுக்கு மத்தியில் நீங்கள் மாற்றாளராகவே தொடர்ந்தும் இருக்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றிகள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...