புளொட் இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினராக இணைந்து குறுகிய காலத்துள் உமா மகேஸ்வரனின் கொலைப்படையின் மூளையாக மாறிய சிவராமின் அரசியல் வரலாறு கறைபடிந்தது. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிளவின் பின்புலத்தில் செயற்பட்ட சிவராமின் இறுதிக் கால வரலாறு வரைக்கும் அவர் அதிகாரத்தைச் சார்ந்தே செயற்பட்டிருப்பது புலனாகும். சிவராம் ஊடகத் துறைக்கு முன்னுதாரணமல்ல.வரலாற்றை மறைத்து, தேசியம் என்ற பெயரில் அயோக்கியர்கள் நடத்தும் தர்ப்பாரில் சிவராம் போன்றவர்களை எதிர்கால சந்ததிக்கு முன்னோடிகளாகச் சுட்டிகாட்டப்படுகின்றனர். இதுவரைக்கும் ஊழிக்காலத்தின் கர்த்தாக்களாகவிருந்த நயவஞ்சகர்கள் புதிய சந்ததியைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள் போலும். இவர்களின் ஒருவேளைச் சோற்றிலும் ‘தேசிய இரத்தம் கலந்திருப்பதை சிவராமைப் புனிதனாக்குவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்
தராக்கி சிவராமின் ஆங்கிலக் கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிட்டவர் சபாலிங்கம். அந்த்க் காலப்பகுதியில் தராக்கி சிவராமிற்கு ஒரு அரசியல் இருந்து. அது புலியெதிர்ப்பு அரசியல். புலியெதிர்ப்பு மட்டும் மக்கள் சார்ந்த அரசியலாக முடியாது என்று சிவராமோடு வாதிட்டவர்களுக்கு சிவராம் சொன்ன பதில்: ;முதலில் புலிகள் அழிக்கப்பட்டாலே மக்கள் விடுதலையடைவார்கள்’. புளட் இயக்கதின் கோரமான உட்கொலைகளின் பங்காளியான சிவராமிற்கு தேசிய அரசியல் ஞானம் வந்து 180 பாகையில் திசை திரும்புவதற்கு முன்னர் சபாலிங்கம் வெளியிட்ட பிரபலமானது. சபாலிங்கம் புலிகளால் பிரன்சில் சுட்டுக்கொலை செய்யப்போது கனடாவிலிருந்து வெளியான தாயகம் பத்திரிகையில் சிவராம் எழுதிய கட்டுரை:-
(சபாலிங்கம் நினைவுதினம் இன்று 01.05.09)
ஈழ வரலாற்றிக்கான ஏக உரிமை சபாலிங்கத்தின் மரணம்!!
ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை இதுதான் அவரது இருப்பின் மையமே.
1991 இல் நான் ஐலண்ட ;ஞாயிற்றுப்பதிப்புக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை அழகாக வெளியிட்டிருந்தார் அதிலிருந்து ஈழ இயக்கங்களின் ஆரம்பம் வளர்ச்சி பற்றி நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டதுமான நூல் ஒன்றை எழுதும்படி பல தடவைகள் என்னை வற்புறுத்தியிருந்தார். தமிழ் அரசியல் ஈழப் போர் போன்றவற்றில் ஏற்பட்ட வாராந்த தடங்கலினல் அந்த வேண்டுகோளுக்கு உடன்பட முடியவில்லை. பின்னர் அவர் தானாகவே அதைச் செய்ய முன்வந்ததாக கேள்விப்பட்டேன். ஈழ இயக்கத்தின் ஆரம்ப வரலாற்றின் பயங்கரமான பகுதிகள் பற்றிய அவரது விசாரணைகளே அவரது உயிருக்கு உலையாய் அமைந்ததை அறியக் கூடியதாக உள்ளது.தமிழ் அரசியல் தங்கள் ஏகபோக சொத்து என்று கருதும் புலிகளுக்கு தமிழ் இயக்க வரலாறும் அவர்களுக்கே உரியது. பிரபாகரன் காலத்தை சேர்ந்த ஒருவர் முதன் முதலாக பேனாவைத் தூக்கினார் என்றால் அது சபாலிங்கம் தான். இப்போது அவர் இறந்து விட்டார்.
லண்டனில் செல்வாக்கு மிக்க குழு ஒன்று இந்தக் கொலைக்கு புலிகளே காரணம் என்று ஐரோப்பிய அரசுகளிடம் புலிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருப்பதாக அறிகிறேன். இதற்கு காரணம் ஐரோப்பா, இந்தியா, இலங்கை,வட அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர்கள், அறிவுஐவிகள், சமூக சேவையாளர், பத்திரிகையாளர் போன்றோருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களில் சபாலிங்கம் ஒருவர். அவர்களின் பார்வையில் சபாலிங்கம் ஒரு நேர்மையான மனிதர் தனது செயற்பாடுகளுக்காக தன்னை கடனில் அமிழ்த்திக் கொண்டவர்.
பிரான்சில் உள்ள அவரது சகபாடிகள் அவரது மரணத்திற்கு காரணமாக பின்வருவதைக் கூறுகின்றனர். ”தாயகத்திற்கு” எழுதிய கட்டுரை ஒன்றில் ஈழ இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் பிரபாகரன் சம்பந்தப்பட்ட இரண்டு விடயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார். ஒன்று குட்டிமணி,தங்கத்துரை கைது. மற்றது நீர்வேலி வங்கிக் கொள்ளை.
இந்த விடயங்கள் பற்றி தற்போது கூறப்படுகின்ற விடயங்களை கேள்விக்குள்ளாக்கி தான் விரைவில் உண்மையை வெளிக் கொணர்வதாகக் கூறியிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் மேற்படி இரு சம்பவங்களிலும் பிரபாகரன் துரோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
குட்டிமணி தமிழ் நாடு செல்ல படகுக்கு காத்து நின்ற போது கைது செய்யப்பட்டார்.அவர் தப்பிச் செல்வது பற்றிய விபரங்களை யாரோ தகவல் கொடுத்ததாக பரவலாக நம்பபட்டது. குட்டிமணி மீது கோபம் கொண்ட படகுகாரரால் தகவல் கொடுத்ததாக ஒரு தகவல். மற்றது குட்டிமணியைத் தொலைத்துக்கட்ட பிரபாகரனே செய்தி கொடுத்ததாக தகவல்.டெலோ இயக்கம் இதையே வலியுறுத்தி வந்தது. ஆனால் 86இல் படகுக்காரன் இரக்கமின்றி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். யாரும் இது பற்றி சரியாக கூறமுடியாது. அத்துடன் குட்டிமணியும் வெலிக்கடையில் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தார்.
நீர்வேலி வங்கிக் கொள்ளைபற்றி சபாலிங்கம் எழுப்பிய கேள்வியும் அதன் விளக்கமும் ஆச்சரியமானவை. 79 இல் புலிகள் இயக்கம் பிரிந்த போது பிரபாகரன் எந்த வளங்களும் இன்றி நண்பர்களுடன் குட்டிமணி,தங்கதுரை தலைமயிலான டெலோவில் சேர்ந்து அவர்களுக்காக கொஞ்ச காலம் வேலை செய்தார். அந்த நேரத்தில் அவர் நீர்வேலி வங்கிக் கொள்ளையில் பங்கு கொண்டார். டெலா இயக்கம் தொடங்கிய ஒபரோய்தேவனும் இதில் பங்கு கொண்டார். தாயகத்தில் வெளிவந்த கட்டுரையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அனைவரும் இறந்து விட்டார்கள் என்பதை சபாலிங்கம் சுட்டிகாட்டினார். ஓன்றில் அரச படைகளாலோ,அல்லது புலிகளாலோ அவர்கள் கொல்லப்பட்டனர். ஏனவே இதில் சம்பந்தபட்டவர்கள் அனைவரும் இந்த உலகில் இருந்து அழிக்கப்படுவதில் பிரபாகரனுக்கு பயன் இருந்தது என்பதை சபாலிங்கம் கருத்துக் கூற முயன்றிருக்கிறார்.
நீர்வேலி வங்கி கொள்ளை பிரபாகரனின் வாழ்வில் ஒரு கறையாகும். புலிகளின் இயக்க விதிப்படி வேறியக்கங்களில் சேர்பவர்களுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. தனது சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் பலரை அந்தக்காரணத்துக்காகவே பிரபாகரன் கொன்றிருக்கிறார். இங்கே சபாலிங்கம் அவ்வாறான விடயங்களுக்கு சான்று சேர்த்து புத்தகம் எழுத முயல்வதைக் காண்கிறோம்.
அதற்கு முன்னர் தாயகம் பற்றி…… இரண்டு யுத்தகாலங்களிலும் வெளிவந்த கடுமையான புலிகள் இயக்க எதிர்ப்பு வெளியீடு இதுவாகும் தாயகம் புலிகள் மீது விமர்சனங்கள் ஏற்படுத்திய தரத்துடன் ஒப்பிடுகையில் இராணுவத்தின் ”உளவியால் நடவடிக்கை ” சூரர்கள் பாலர் பாடசாலைப் பிள்ளைகள் போன்றே தோன்றுவர். இரண்டு வருடங்கள் பத்திரிகையாக வெளிவந்த பின்னர் 92 இல் புலிகள் தாயகம் விற்கும் கடைகளை மிரட்டி போட்டிப் பத்திரிகையான செந்தாமரைக்கு சார்பாக அதன் விற்பணையை குலைத்த போது அது சஞ்சிகையாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்போது ரொறன்ரோவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான Nஐhர்ஐ; குருஷ்சேவினால் வெளியிடப்படுகிறது. புலிகளை கடுமையாக விமசிக்கும் குருஷ்சேவ் போன்றவர்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்போது ஏன் சபாலிங்கத்தை கொல்வதற்கு யாரும் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆவர்வமுள்ள புலிகள் பற்றிய விமர்சகர்கள் போலன்றி ஈழ இயக்கத்தின் ஆரம்பமுன்னோடிகளில் தற்போது எஞ்சியிருப்பவர்களில் ஒருவரான சபாலிங்கத்தால் இந்த விடயங்கள் கூறப்படுவது அவரைக் கொன்றவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கவேண்டும். இந்த ஈழ இயக்கத்திலிருந்துதான் பிரபாகரன் என்ற சிறுவன் ஒரு கெரில்லாவாக உருவாக்கப்பட்டான்.
71 இல் Nஐ.வி.பி ஒடுக்கப்பட்டபின்னர் தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்த சத்தியசீலனுக்கு சபாலிங்கம் சகபாடியாவர். இந்த அமைப்பு சுதந்திர கட்சி காலத்தில் தரப்படுத்தலை எதிர்த்து தொடங்கப்பட்டதாகும். இந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தியது.
1972 இல் பிரபாகரன் சத்தியசீலனின் இரகசிய அமைப்பில் சேர்ந்து கொண்டார். கட்டுபெத்தையில் மாணவராக இருந்த சபாலிங்கம், சத்தயசீலன், பூபதி மற்றும் பலர் மார்ச் 73 இல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இயக்கம் இந்த நிலையில் சிதைக்கப்பட்ட போதிலும் பிரபாகரன் தப்பித்துக் கொண்டார். அநுராதபுரம் புதிய சிறையில் சபாலிங்கம் சிறைவைக்கப்பட்டிருந்த போது. பிரபாகரனுடன் புதிய தமிழ் புலிகள் அமைப்பை ஆரம்பித்த செட்டி தனபாலசிங்கம், கண்ணாடி பத்தன், ரத்தினகுமார் ஆகியோர் சிறையுடைத்து தப்பிச் சென்றனர். இதன் பின்னர் சபாலிங்கமும் மற்றவர்களும் போகம்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஓருநாள் இரண்டாம் மாடியிலிருந்து தவறிவிழுந்தார். இந்த விபத்தில் இவரது இடக்கை நிரந்தரமாக பாதிக்கப்பட்டது.
75 மாசி மாதம் விடுவிக்கப்பட்ட சபாலிங்கம் பரந்தன் உப்பளத்தில் வேலை செய்தார். வரதராஐப்பெருமாள் முக்கியமானவராக இருந்த ஈழவிடுதலை இயக்கத்தில் இருந்த இன்னோரு உறுப்பினர் புஷ்பராஐh இருவரும் பெருமாள் போல ஈ.பி.ஆர்.எல்.எப்ஃல் சேர்ந்து கொண்டார். சபாலிங்கத்தின் சமீபத்திய வேலையில் புஷ்பராஐh நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததால் அவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்தவர் என்று பலர் அவசரப்பட்டு கூறினர்கள்.
ஓருநாள் இரவு அவர் உப்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது கதவையாரோ தட்டினர் அது சத்தியசீலனின் குழுவில் இருந்த சிறுவன். அவர் அங்கே அடைக்கலம் தேடினார். தனது வதிவிடத்தில் பல வாரங்கள் பாதுகாப்பான சூழ்நிலை வரும்சரை சபாலிங்கம் மறைத்து வைத்திருந்தார்.
புலிகள் தான் இந்தக்கொலையைச் செய்தார்கள் என்றால் எழுபதுகளில் தொடங்கிய ஈழ இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்து தற்போது மேற்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது தரும்செய்தி இதுதான் வரலாற்று வெற்றிவீரன் பிரபாகரன் சொல்வதன்படி தான் எழுதப்படும். சத்தியசீலன், இணுவிலில் வைத்து பிரபாகரன் கைது செய்யப்படு வதிலிருந்து காப்பற்றிய சோட் பாலா இருவரும் ஜேர்மனியில் வாழ்கிறார்கள். ஐயர் என்ற யாழ்பாண பிராமணர் புலிகளின் ஆரம்பகால பொருளாளராக இருந்து தற்போது ஐரோப்பாவில் வாழ்கிறார். 85 ல் பிரபாகரனுடன் மோதல் ஏற்படும்வரை பிரபாகரனுக்கு சமமாக இருந்த ராகவண் தற்போது லண்டனில் வசிக்கிறார். ஆனால் எல்லோரும் இன்றுவரை மௌனமாக இருக்கிறார்கள் இவர்கள் அனைவரையும் சந்திக்க சபாலிங்கம் திட்டமிட்டிருந்தார் அதன் மூலம் இன்னோரு வரலாற்றைச் சொல்ல அவர் முயனறார்.
ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை இதுதான் அவரது இருப்பின் மையமே.
–தாயகம் இதழில் (20.05.94) சிவராம் தராக்கி அவர்கள் எழுதிய கட்டுரை
குறிப்பு: இங்கு ஐயர் என சிவராம் குறிப்பிடுவது இனியொருவில் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற தொடரை எழுதிய கணேசன்(ஐயர்) அவர்களையே.)
பிரபாகரனை விமர்சிக்கும் உமது எழுத்தில் என்ன நியாயம் இருக்கிறது? நீர் இதுவரை ஈழவிடுதலைக்கு ஆற்றிய கடமை என்ன? நீர் செய்த தியாகம் என்ன?பிரபாகரன் வழிநடத்திய போராட்டத்தில் நீர் என்ன குறை கண்டீர்? உம்மால் மக்கள் முன் அதை விளக்க முடியுமா? பிரபாகரனை பின்பற்றி போராடிய, போராடும் முழு தமிழினத்தையும் மடையர்கள் எனக்கருதும் உமது அறிவை என்னவென்று சொல்ல?
இன்று பிரபாகரனின் மொழி மௌணம். உம் போன்றவர்கள் என் இப்போது அரசியல் செய்து மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்க முடியாது? போராடுபவர்களை நியாயம் இன்றி வசை பாடுவதைவிட உம் போன்றவர்களால் ஏதாவது சாதிக்கமுடியுமா? பிரபாகரனை பின்பற்றிய 50, 60 ஆயிரம் போராளிகளில் ஒரு சாதாரண பதினெட்டு வயது போராளி சாதித்ததை உம்மால் சாதிக்கமுடியுமா? உம்மை போன்றவர்கள் எம்மத்தியில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் தொடர்ந்தும் இருப்பார்கள்…இது ஒருவித மன நோயாகவே கருதுகிறேன்…
கோகுலன் அவர்களே இன்னும் என்ன நடக்க வேண்டும்? நெடியவனையே உங்கள் “நண்பர்கள்” தேடத் தொடங்கி விட்டார்கள்.
போராடுபவர்களை நியாயம் இன்றி வசை பாடுவதைவிட உம் போன்றவர்களால் ஏதாவது சாதிக்கமுடியுமா?
போராடியவர்கள் எந்த ஒரு இடைவெளியும் இன்றி போராட்டத்தை அழிக்கும் வரை நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எல்லாவற்றையும் அழித்தவர்களை விட்டு விட்டு கருத்துரைப்பவர்களை சீண்டுகிறீர்கள்.
பிரபாகரனை பின்பற்றிய 50, 60 ஆயிரம் போராளிகளில் ஒரு சாதாரண பதினெட்டு வயது போராளி சாதித்ததை உம்மால் சாதிக்கமுடியுமா?
போராடி மடிந்த அடிமட்ட போராளிகளை கொச்சைப்படுத்தவில்லை. மாறாக அவர்களின் தியாகத்தினால் என்ன பயன் அடைந்துள்ளோம்?
நெடியவன் 40, 50 ஆயிரம் போராளிகளில் ஒருவரே! அவர் ஒரு கடந்த கால போராளி மட்டுமே. அவரைதேடுவதட்கும் உங்களது விமர்சனத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
போராடியவர்கள் எந்த ஒரு இடைவெளியும் இன்றி போராட்டத்தை அழிக்கும் வரை நீங்கள் எங்கே இருந்தீர்கள்? போராட்டத்தை அழித்தது யார்? போராடியவர்கள் எவ்வாறு அழிக்க முடியும். இதே தாங்கள் எதோ குழப்பத்தில் உளறுவதைக் காட்டுகிறது.
மாறாக அவர்களின் தியாகத்தினால் என்ன பயன் அடைந்துள்ளோம்? போராட்டம் என்பது வெல்லும் வரை போராடுவதுதான். நாம் வென்றிருக்கிறோம் ஒருவகையில். முழு உலகமுமே எம்முன் தோற்றிருக்கிறது ஒருவகையில். ஏனெனில் எமது போராட்டத்தை அளிக்க முடியாது பேசி வெல்ல முடியாது எதிரிகள் இனப்படுகொலை புரிந்தே ஆயுதபோராட்டத்தை இடை நிறுத்த முடிந்துள்ளது. இதை 20 நாடுகள் உள்ளிட்ட உலகின் பலம் பொருந்திய நாடுகள் செய்தன. நியாயத்திலும் தர்மத்திலும் வீரத்திலும் தியாகத்திலும் உன்னதம் படைத்தது எமது போராளிகள் கடைசி வரை அடிபணியாது போராடி வென்றுள்ளார்கள். தற்போது சொல்லுங்கள் உலகின் எந்த ஒரு சக்திகளினதும் மிரட்டலுக்கும் பணியாது போராடிய எமது வீரர்களா அல்லது ஒரு சிறிய இனத்துடன் நேர்மையாக, நியாயமாக பேசி வெல்லமுடியாது கபடமாக பேடித்தனமாக மக்களை கொன்று பேரழிவுகளை ஏற்படுத்திய எதிரியும் அவனது நண்பனுமா வென்றார்கள்? இந்த உண்மை புரிந்தால் போராட்டம் தொடரும், ஆயுதப்போராட்டமே இனித் தேவையிராது இதுவே எமது ஆயுதம்…இவ்வுண்மையை முன்வைத்து எல்லோரும் போராடினாலே போதும் வெற்றி எமக்கே கிட்டும்….
நண்பர் கோகுலன், இக்கட்டுரையை எழுதியதே இன்று புலம்பெயர் புலிகளால் ‘ஊடகத் துறையின் தெய்வம்’ என்று புகழப்படும் பிரபாகரனால் மாமனிதர் பட்டம் சூட்டப்பட்ட தராக்கி சிவராம்! இதிலிருந்து உங்கள் முட்டாள் தனம் தெரிகிறது. துதிபாடிக்கொண்டே போராட்டத்தை யாரும் அழிக்கலாம். இலங்கையில் ஆயுதப் போராட்டம் இல்லாமல் எதையும் வெற்றிபெற முடியாது. சமூகதின் ஒவ்வொரு மனிதனும் கடக்கும் ஒவ்வொரு அங்குலமும் திரும்பிப்பார்த்து விமர்சனத்துக்கு உட்படுத்தி செழுமைப்படுத்தப்பட வேண்டியது. மனிதர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். அது அவர்களது இயல்பு. நேற்றுப் பேப்பரில் எழுதியதை மனிதன் செழுமைப்படுத்த எண்ணிய போது மட்டுமே கணணியில் எழுதுகிறோம். மனிதசமூகத்தின் ஒவ்வொரு நகர்விலும் இந்த விமர்சனம் உண்டு. நீங்கள் மட்டும் மதவாதிகளைப் போன்று எதையும் விமர்சனம் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள். இது தான் போராட்டத்தின் மிகப்பெரிய பின்னடவு. கற்றுக்கொள்ளவும் உண்மையை உணரவும் முன்னோக்கி நகரவும் பின்னிக்கும் போது மனித சமூகம் பிந்தங்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.
நித்திரை கொள்பவனை எழுப்பலாம். நித்திரை கொள்பவனைப்போல் நடிப்பவனை எழுப்பமுடியாது. சிவராம் உண்மையில் விளித்து தனது கருத்துகளை மாற்றி இருக்கலாம். ஆனால் இங்கு பதில் எழுதியவர் எனது கேள்விகளுக்கும் எனது கருத்துகளுக்கும் பதிலளிப்பதை தவிர்த்து வேறு விடயங்களை பேசுகிறார். இதுவே அவரது “நித்திரை கொள்வது போல் நடிக்கும்” தன்மையை காட்டுகிறது. எனது கருத்தின் முற்று முழுதான உண்மையை மறுக்க முடியாமையையும் அது காட்டுகிறது. இதற்கு மேல் இங்கு எழுதி எனது நேரத்தை நான் வீணடிக்க தேவையில்லை என நினைக்கிறேன்.
பிரபாகரன் வழிநடத்திய போராட்டத்தில் நீர் என்ன குறை கண்டீர்? உம்மால் மக்கள் முன் அதை விளக்க முடியுமா… க்கும்நல்ல கேள்வி தான் , ஆனல் அதற்கான பதில் போரட்டம் எபப்டி முடிந்தது என்பதிலெயெ இருகின்ற்து, ஒரு மொக்கனை தலைவராக ஏற்ற்தால் தான் அத்தனை பேரை ப்லி கொடுத்து கடைசியில் ஒன்ரும் கிடைகமல் போனது,
சபாலிங்கம் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள், ‘வெள்ளை யானை ‘ அவரைச் சென்று பார்த்ததாம். பிரான்சில் வசிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.