Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழ மக்களுக்கான அடுத்த கொலைக்களம்- தயாரிப்போர் – த.தே.கூட்டமைப்பினர், கருணாநிதி, இந்தியா : சமரன்.

இனியொரு... by இனியொரு...
07/20/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
23
Home பிரதான பதிவுகள் | Principle posts

பல மாதங்களாக அவர்கள் சென்னையில் தங்கியிருந்தார்கள்.2006 செப்டம்பரில் ஈழத்தில் நிலமைகள் மோசமாகத் துவங்கிய போது சென்னையில் பல நாட்களாக கருணாநிதியைச் சந்தித்து ஈழ நிலமைகள் தொடர்பாகப் பேச முயர்சித்தனர். இந்த முயர்ச்சி 2006

ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது. கருணாநிதியை மட்டுமல்ல ஜெயலலிதாம் ராமதாஸ், விஜயகாந்த் என்று தமிழக கூத்தாடிகள் எல்லோரையுமே சந்திக்க நேரம் கேட்டு கடிதங்களைக் கொடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். இப்படியான கடிதம் அனுப்பட்ட போதும் ஜெயலலிதா, சி.பி.எம், விஜயகாந்த் போன்றோர் எந்த ஒரு பதிலையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கவில்லை. சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் மூலமாக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் மீண்டும் கருணாநிதிக்கு நான்கு கடிதங்கள் எழுதப்பட்ட போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. இது போக சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமரரைச் மன்மோகன்சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை.

தானும் சந்திக்க வில்லை பிரதமரையும் சந்திக்க விடவில்லை கருணாநிதி.

முதலில் டில்லியில் சந்திப்பு வேண்டி தொடர்பு கொண்ட போது நீங்கள் முதலில் மாநில முதல்வர் கருணாநிதியை சந்தியுங்கள் பின்னர் டில்லிக்கு வாருங்கள் என்று பிரதமர் அலுவலகம் கூட்டமைப்பிற்கு உத்தரவு போட்டது. ஆனால் கருணாநிதியோ கடைசி வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவே இல்லை. கருணாநிதியை சந்திக்க முடியாமல் அவமானப்பட்டு தோல்வியடைந்த கூட்டமைப்பினர் டில்லி போன போது அதிக பட்சம் அவர்கள் பார்க்க முடிந்தது. எம்.கே. நாராயணனையும், சிவசங்கரமேனனையும் மட்டுமே கடைசி வரை அவர்களை மன்மோகன் சந்திக்கவே இல்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருணாநிதியே சந்திக்கவில்லை மாநில முதல்வரே சந்திக்காதவர்களை பிரதமரும் சந்திக்கத் தேவையில்லை என்று அறிக்கை அனுப்ப பிரதமரும் சந்திக்கவில்லை. ஆனால் சந்திப்பதற்கு முன்னரே மிகக் கீழ்த்தரமாக இறங்கி இந்த அறிக்கையை டில்லியில் வைத்து வெளியிட்டனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் “இலங்கை

விவகாரத்தில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் நலனைக் கருதி இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒரு துயரமான சம்பவம். அதை மன்னிக்க முடியாது. அந்த சம்பவத்திற்காக இலங்கை தமிழ் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.இருப்பினும் இந்தியா இந்த துயரத்தை மறந்து விட்டு, மன்னித்து விட்டு தமிழர்கள் நலன் கருதி இலங்கை விவகாரத்தில தலையிட வேண்டும் என்றனர்“ இவ்வளவு கெஞ்சியும் எதிர்பார்த்த அளவுக்கு எந்த சந்திப்புகளும் நடைபெறாத நிலையில் சலித்துப் போன கூட்டமைப்பினர் இலங்கைக்குத் திரும்பினர்.இருக்கும் போது உதவாமல் அவர்கள் இலங்கைக்குச் சென்ற பிறகு கருணாநிதி ஆதரவாளரான சு,ப.வீரபாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? “நானும் ராமதாசும் கலைஞரைச் சந்திக்க ஆவனச் செய்யும் முயர்ச்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் இலங்கை சென்று விட்டார்கள்” என்றார். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தத் தந்திரம். பின்னர் மீண்டும் போர் மூண்ட போது தமிழக மக்கள் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது கூட இதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாவைச் சந்தித்து போர் நிறுத்தம் கேட்க முயன்றனர். ஆனால் கடைசி வரை சந்திக்க முடியவில்லை. மிக மோசமான வரலாற்றில் கண்ணீரும் துயரமுமான அந்த 2009 ஆண்டு ஒரு வழியாக ஒரு இலட்சம் மக்கள் படுகொலையில் முடிந்து போனது. ” ராஜீவ் கொலை மன்னிக்க முடியாத குற்றம் அதை மன்னித்து மறந்து விட்டு இந்தியா உதவ வேண்டும்” என்று யாரிடம் சம்பந்தன் கெஞ்சினாரோ அவர்களே இக்கொலைகளின் நாயகர்கள். அன்றைக்கு சென்னையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த கருணாநிதி சந்திக்க மறுத்தாரோ அவரே இந்தியாவின் கொலைகளுக்கு துணை போன சூத்திரதாரி. யார் யார் எல்லாம் உங்களை கடைசி நேரத்தில் கழுத்தறுத்து கை கழுவினார்களோ அவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறீர்கள்.

இந்தியாவும் கருணாவும் சேர்ந்து தயாரிக்கும் சுருக்குக் கயிறு

அன்றைக்கு ஈழ மக்களுக்கும் இலங்கை தமிழ் எம்பிக்களுக்கும் உதவி வேண்டி கருணாநிதியைச் சந்திக்க வேண்டிய தேவை இருந்தது அப்போது சந்திக்க மறுத்தவர் கருணாநிதி. இப்போதோ ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையில் தான் செய்த துரோகங்களை மறைக்கவும் தன்னை தமிழர்களின் தலைவன் என்று காட்டிக் கொள்ளவும் இலங்கை எம்பிக்களின் சந்திப்பு கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது. ஒரு துரோகியின் முகத்தை சாத்வீகமாகக் காட்ட உங்களின் கைகள் இன்று கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் கொடுக்கிறீர்கள். ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்து விட்ட அழ்விலிருந்து மக்கள் மீளாத போது இன்னொரு அழிவுக்கான அறிகுரியாக இதை நாம் காண வேண்டும். போரை நிறுத்த மாட்டோம், மக்களை அழிவைத் தடுக்க மாட்டோம். எல்லாம் செய்து முடித்து விட்டு நாங்கள் இடித்ததைக் மீண்டும் கட்டிக் கொடுப்போம். அதுதான் ஈழ மக்களுக்கு இந்தியா செய்யும் உதவி என்றால் இதைச் செய்ய இந்தியா எதற்கு தன்னார்வக்குழுக்களே போதுமே! மாறாக அரசியல் தீர்வுக்காக இந்தியா முயர்ச்சிக்கும் என்பதெல்லாம் இன்னொரு முறை ஈழ மக்களையும் புலத்து மக்களையும் முட்டாளாக்கும் முயர்ச்சிதான். அய்யா தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அஞ்சிக் கெஞ்சி அண்டி கால்களை நக்கிப் பெற வேண்டியதல்ல ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு. கால்களை நக்குவதும் கெஞ்சுவதும் இன்னமும் எம் மக்களை அழிவுக்கே இட்டுச் செல்லும். மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைத்து அவர்களை விவசாயம் செய்ய விட்டாலே போதும் சில ஆண்டுகளில் அவர்கள் தங்களை மீளமைத்துக் கொள்வார்கள். இனியும் இந்தியாவை நம்பி நீங்கள் இருந்தால் நீங்கள் சென்னையிலேயே உங்கள் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே இருங்கள். ஈழ மக்களை இனியும் உங்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று ஏமாற்ற வேண்டாம். ஏனென்றால் இனி கருணாநிதியின் ஈழ ஆர்வம் என்பது அவரது குடும்ப முதலாளிகள் சந்தை வாய்ப்புகளுக்காகவே அன்றி ஒரு போதும் ஈழத் தமிழர்களுக்கானதாக அது இருக்காது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புதிய கூட்டு : அபாய ஒலி

Comments 23

  1. மன்னன் says:
    16 years ago

    சில புலி ஆதர்வாளர்களும் பல ஈழத் தமிழர்களும் இன்னமும் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஈழத்தில் கொலை வரலாறு இந்த முப்பதாண்டுகளோடு முடிந்து போகட்டும். இனியும் இந்த நாய்களுக்கு வால் பிடித்து அரசியல் செய்ய வேண்டாம். நமக்கு கால்களோ, கைகளோ இப்போது இல்லை. ஆனாலும் நமது அரசியலை நாமே தீர்மானிப்போம். ஆனால் இந்தகருணாவையோ சோனியாவையோ நம்புவது மீதமிருக்கும் மக்களையும் அழித்து விடும்.

  2. anpan says:
    16 years ago

    இன்னும் இந்த நாயை நம்புகிறீர்கள். சம்பந்தரே உம்மைத்தானே போன வருடம் அவமானப்படுத்தினார் கருணாநிதி. மானங்கெட்டவர்களே யாருக்காக இவரிடம் கையேந்துகிறீர்கள். மிச்சமிருக்கும் மக்களையும் அழிக்கவா?

  3. xxx says:
    16 years ago

    சம்பந்தராலோ கூட்டமைப்புத் தலைவர்களாலோ என்ன செய்ய முடியும்?
    தேர்தல் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள்? புலிகள் இல்லை. ராஜபக்ச கொடார்.
    தெரிவு இந்திய எசமானுக்கும் அமெரிக்க எசமானுக்கும் நடுவில்.
    அமெரிக்கப் பாம்பு இப்போது வேறு படம் காட்டுகிறது. ராஜபக்சவைப் பகைக்க மன வலிமை கூட இல்லை. போக, இலங்கை அரசியலில் இந்தியப் பணம் நன்றாகப் புகுந்து விளையாடுகிறது.
    இப்போது நடக்கிற நாடகச் சுவடி புதியதல்ல. முந்திய சுவடிகளை எழுதினோரே இதையும் எழுதியுள்ளார்கள்.
    இரக்கப் பட வேண்டிய பிறவிகளைப் பார்த்துக் கோபப் படுகிறீர்கள்.
    இவர்களைத் தெரிவு செய்து அனுப்பிய 18% பேருக்கே ஏன் போட்டார்கள் என்று தெரியாது. தமிழர் ஒற்றுமை என்ற பேரில் 55 வருடமாக ஏமாற்றப் பட்டு வருகிறோமென்றால்,நம்மிலும் பிழை இல்லையா?

  4. THAMILMARAN says:
    16 years ago

    சம்பந்தர் அய்யாதான் சரியான ஆள் என்றூ ஊரில் பேசுகிறார்கள் இங்கே இருப்போரோ அதைப் பிழை என் கிறார்கள்.என்ன செய்யலாம் என்னதான் தீர்வு உங்களூக்கு தெரிந்ததை உங்களூடன் வைத்திருக்காது அதை ஆக்க பூர்வமாக்க செயல்வ்டிவம் கொடுங்களேன்.

    • xxx says:
      16 years ago

      ஏந்த ஊரிலை?
      அது தான் கோடிக்கணகிலை சிலவழிச்சும் 18% சனம் வோட்டுப் போட்டுக் கூட்டமைப்பை அங்கை அனுப்பினது போலை.
      சம்பந்தர் அய்யாவைப் பற்றித் திருக்கிணாமலையிலை விசாரியுங்கோ சொல்லுவினை சரியான **** எண்டு.

    • suagathy says:
      16 years ago

      welll said

  5. Puthiyavan says:
    16 years ago

    ஐயா
    இனி யாரைச் சொல்லி என்ன? தலைவரைப் பற்றி மிக மோசமாக பேசியவர் தான் இந்த சம்பந்தர் தாத்தா. மேற்குலகை நம்பி இராணுவ தளபதி சரத்திற்கு வோட்டு போட கேட்கும் போதே இவர்களது உண்மை முகம் தொpந்திருக்க வேண:டும். இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்களின் எண்ணிக்கை வெறும் 20 விழுக்காடு என்பதையும் நாம் மறக்கலாகாது. இன்று தமிழர்கள் அனைவாpனதும் பிரதிநிதிகள் என பினாத்திக்கொணடு அனைவரையும் எமாற்றும் முயற்சியே தவிர வேறல்ல. புலம் பெயர் தமிழர் தான் இனி ஏதாவது செய்யலாமே தவிர இனி எதுவுமே நடக்காது என்பதை மட்டும் நிட்சயமாக நம்பலாம்.

  6. ckumar says:
    16 years ago

    புலிகள் செய்த தவறுக்கு நீங்கள் கருணாநிதியையும் சம்பந்தரையும் குற்றம் சொல்கின்றீர்கள். தங்களை பாதுகாக்க இவ்வளவு காலமும் தமிழ் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த புலிகள், கருணாநிதியை பகிரங்கமாகத் தூற்றி MGR மீதான விசுவாசத்தைக் காட்டிய புலிகள், தமிழ்தேசியக் கூட்டமைப்பை சுதந்திரமாக இயங்க விடாமல் தமது பேச்சாளர்கள் போன்று வைத்திருந்த புலிகள், த.தே.கூட்டமைப்பை முதலில் கருணாந்தியை சந்திக்க விடாமல் வை.கோபாலசாமி, திருமாவளவன், இராமதாசு, நெடுமாறன் போன்ற செல்லாக்காசுகளை சந்திக்க வைத்த புலிகள் செய்த முட்டாள்தனமான வேலையால் தான் கருணாநிதியால் சம்பந்தர் போன்றவர்களை சந்திக்க முடியவில்லை. மற்றும் இவ்வளவு அழிவு நடக்கப் போகின்றதென்று தெரிந்தும் நீங்கள் ஒருவரும் மக்களை வெளியேற விடும்படி ஏன் புலிகளிடம் கோரிக்கை வைக்கவில்லை. மக்களின் மரணத்திற்கு காரணம் உங்களைப் போன்றவர்கள் தான்.இப்போது நீங்கள் செய்த தவறை வேறு யார்மீதாவது சுமத்துவதற்காக சம்பந்தரையும் கருணாநிதியையும் இழுக்கின்றீர்கள். மக்களும் புலிகளின் கீழ்மட்ட போராளிகளும் இறந்ததில் உங்களுக்கு எள்ளளவும் கவலை இல்லை. பிரபாகரனும் புலிகளின் இரண்டாம்மட்டத் தலைகளும் அழிந்தது தான் உங்ளுக்கு பெரிய கவலை.தமது கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய மக்களை புலிகள் சுடும்போது நீங்கள் என்ன போதையிலா இருந்தீர்கள்.

    • suagathy says:
      16 years ago

      MR CKUMAR
      very reasonable contribution…I like your comment..
      .Mr.R. Sampanthar is a very pragmatic leader..His task is like walking on the knifes edge..
      praba paths has alienated us from the rest of the world and led us to mullivakkal….i do not understand how can there be some people who still talks of glorious past. We have to start from zero.
      We Tamil need leaders like Sampanthar , mano kanesan, They are not angels
      The Duty of the left is to guide Sampanthar and Mano.. We have to critically accompany them

      • நக்கீரன் says:
        16 years ago

        உண்மையை இந்தப் புலன் பெயர்ந்தவர்களுக்குச் சொல்ல உங்களைப் போல் ஒருவராவது வேண்டும். என்ன எத்தனைதரம் சொன்னாலும் எதுவுமே ஏறதா மண்டையர். எம்மினத்தின் ….?

  7. Garammasala says:
    16 years ago

    சம்பந்தன் புலிகளின் ஒவ்வொருநடவத்கையையும் 2000 முதல் 2009 வரை முற்றாக நிபந்தனை இன்றி அங்கீகரித்தவர்.

    கருணாநிதி புலிகளை ஆதரித்திருக்க வேண்டுமா இல்லையா என்பதல்ல தமிழக மக்களினதும் இலங்கைத் தமிழரதும் கவலை.
    தமிழ் மக்கள் மீதுநடந்த இன ஒழிப்புப் போருக்கு அவர் வஞ்சகமாகக் காட்டிய ஆதரவு தான் இங்கு பிரச்சனைக்குரியது.

    புலிகளை விமர்சிப்பது ஒரு விடயம். புலிகளைக் காட்டித் தமிழ் மக்களுக்குக் கேடு செய்தோரை நியாயப் படுத்துவது இன்னொரு விடயம்.

    இலங்கை வாழ் தமிழர் தமது விடிவுக்கு ஒரு வழி தேட வேண்டும். அது தமிழரசுப் பாரம்பரிய வழியாகவோ புலிகளின் வழியாகவோ இருக்க முடியாது.

    அந்நியக் குறுக்கீடு எங்கிருந்து வருவதையும் முழுநாடும் எதிர்க்க வேண்டும்.

  8. ckumar says:
    16 years ago

    திரு கரம்மசலா அவர்களே புலிகள் ஒரு கொலைக்கலாச்சாரமற்ற, எந்த விஷயத்தையும் பேசி த்தீர்க்கக்கூடிய குழுவாக இருந்து திரு சம்பந்தன் அவர்கள் புலிகளின் ஒவ்வொரு நடவத்கையையும் 2000 முதல் 2009 வரை முற்றாக நிபந்தனை இன்றி அங்கீகரித்திருந்தால் அது முழுத்தவறு. ஆனால் அவர் புலிகளின் ஒவ்வொரு நடவத்கையையும் நிபந்தனை இன்றி அங்கீகரித்தபடியால் தான் அவர் இன்று உயிருடன் இருக்கின்றார். அதற்காக திரு சம்பந்தர் ஒரு கனவான் என்று நான் கூறவரவில்லை. திரு சம்பந்தர் தனது உயிரையும் பதவியையும் காப்பாற்ற புலிகளுடன் பழகியது மிகதவறு. அதனாலேயே இன்று உலகத்தில் சம்பந்தரின் பேச்சை எவரும் நம்ப மறுக்கின்றார்கள். அதன் காரணமாக கருணாநிதியும் சம்பந்தருடன் பேச விரும்பாமலிருக்கலாம். மற்றது தமிழ்தேசியக்கூட்டமைப்பும் புலிகள் போன்றே தாம் தான் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனக்கூறுகின்றார்கள். அதன் மூலம் அவர்களும் உலகத்தின் வெறுப்பை சம்பாதிக்கப் போகின்றார்கள்.
    இலங்கையில் நடந்தது இன ஒழிப்புப் போராக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஏன் கிழக்குமாகணத் தமிழர்களையும் யாழ்ப்பாணத் தமிழர்களையும் வன்னியில் செய்தது போல பாரிய அளவில் கொலை செய்யவில்லை. வன்னியில் நடந்தது புலியொழிப்புபோர். அதிலிருந்து தப்புவதற்காக புலிகள் தமிழர்களை பணயக்கைதிகளாக வைத்து சிங்கள இராணுவத்திற்கு பலி கொடுத்தார்கள். இந்நிலையில் கருணாநிதியால் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற முடியவில்லை. ஏன் , புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச்சென்ற தமிழ் மக்களை சுட்டுக் கொன்றபோது உங்களைப்போன்ற புலிகளின் நான்காவது படைப்பிரிவான தெருப்படையால்கூட அந்த மக்களை காப்பாற்ற முடியவில்லையே. புலிகள் இருக்கும்வரை எந்த சக்தியாலும் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த காரியத்தையும் செய்யமுடியாது என்பது கடந்த கால வரலாறு.தமிழ் மக்களை பணயக்கைதியாக வைத்திருந்து சிங்கள இராணுத்திற்கு பலி கொடுத்துவிட்டு தாங்கள் மட்டும் வெள்ளைக்கொடியுடன் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து மண்டையைப் போட்டது புலிகளின் வரலாறு. நான் எவரின் மரணத்திலும் இன்பம் காணவிரும்பவில்லை. ஆனால் நடந்ததை தெரிவிக்க வேண்டியது தார்மீகக் கடமை.

    • Garammasala says:
      16 years ago

      ஒரு சிறு திருத்தம்:
      சம்பந்தன் தான் உயிரோடிருக்கப் புலிகளுக்கு ஓமோம் போடவில்லை. MP பதவியில் இருக்கத்தான் அதைச் செய்தார்.
      தாம் என்றுமே ஈழம் கேட்கவில்லை என்று அறிவித்த நேர்மையாளரல்லவா!

      என் நிலைப்பாட்டைப் பற்றிய வக்கிரமானா ஊகங்களுக்குப் பதில் கூறுவது அவற்றைக் கவுரவிப்பதாகும்.

  9. ckumar says:
    16 years ago

    “இலங்கை வாழ் தமிழர் தமது விடிவுக்கு ஒரு வழி தேட வேண்டும். அது தமிழரசுப் பாரம்பரிய வழியாகவோ புலிகளின் வழியாகவோ இருக்க முடியாது”
    உங்களின் மேலே உள்ள கூற்றை நான் 100% ஏற்றுக் கொள்கின்றேன். எவராயிருந்தாலும் மேலே நீங்கள் கூறியவர்களின் வழி தவிர்ந்த மூன்றாவது வழியின் மூலம் இலங்கை, இந்திய அரசாங்கங்களை அணுகுவதன் மூலம் தான் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

  10. naan says:
    16 years ago

    ஏன் அடிபட்டுக்கொள்ளுகிறீர்கள் , கருணாநிதி,+மன்மோகன்+ சோனியா+ சம்பந்தர் திட்டம் செயல்ப்பாடு எல்லாம் எந்தளவு முன்னோக்கி நடைமுறைக்கு வருகுதென்பதை பார்க்கத்தானே போகிறோம் , கருணாநித்தி 1958 லிருந்து ஈழத்தமிழருக்காக பேசிக்கொண்டேயிருப்பதாக ஜெயலலிதாவுக்கு பதில் கூறுகிறாரே, தவிர ஒரு துரும்பையாவது தூக்கிப்போட்ட வரலாறு எங்காவது உண்டா, எல்லாம் தமிழ் நாடு எலெக்ஷனுக்கு போடும் வேடம் ,சரி கருணாநிதி அரசியல்த்தீர்வுக்கு ஒத்துழைத்திருந்தால் எவன் அவரை விமர்சிக்கப்போகிறான், அன்பானவர்களே ஈழம் எரிஞ்சிது நாசமாப்போகட்டும் , முத்துக்குமார் தீயில் எரிந்து செத்த போது இடுப்புவலியென்று ஓடிஒளிந்தவர்தானே கருணானிதி,
    1ஒட்டுமொத்த ராசினமா என்றார்,
    • ஓட்டு மொத்த எம்.பிக்கள் இராஜினாமா!

    • இந்த ஆட்சி இனியும் தேவை தானா!

    • இந்த உயிர் தேவையா!

    • அனைத்துக்கட்சிகளின் கூட்டு தீர்மானம்!

    • மனிதச் சங்கிலி;!

    • அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லி பயணம், பிரதமர் சோனியா சந்திப்பு!

    • உண்ணாவிரதமிருப்பேன்!

    • யுத்தநிறுத்தம் செய்யப்படும்!

    • சோனியாவும் மன்மோகனும் ஒப்புக்கொண்டனர்!

    • பிரணாப் முகர்ஜி இலங்கை பயணம்!

    • இறையாண்மை தடைபோடுகிறது!

    • அது வேறு நாட்டு உள்விவகாரம்
    கடிசியாக 1/2 நாள் உண்ணாவிரதமென்று ஏமாற்றினார் ,
    இதுக்குப்பிறகும் கண்ட்றாவியை நம்பச்சொல்லுகிறீர்களா????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

  11. vinothan says:
    16 years ago

    ச்குமர், தமிழ் மக்களை புலிகள் பணயக்கைதிகளாகா வைத்திருந்தார் என்று சொல்லி இருக்கின்றீர், சரி உம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன், ஆனால் தமிழர்கள் மீது யுத்தம் செய்வதற்க்கு சிங்கள் காடை வெறிநாயாகிய மகிந்தனுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது, அல்லது தமிழ் மக்கள் காடையன் மகிந்தனிடம் விண்ணப்பம் கொடுத்தார்களா எங்களை புலிகளிடம் இருந்துகாப்பாற்றும்படி, இந்தகாடையனுக்கு துணிவு இருந்தால் சர்வதேச கண்காணிப்பாளர்களைவைத்து கருத்து கணிப்பு வைத்துபார்க்கலாம், சிங்களவனின் ஆட்சிக்குள் இருக்கபோகின்றீரா, அல்லது தமிழன் தமிழனை ஆட்சி செயபோகின்றீர என்று அப்பொளுது தெரியும் மலசல் கூடத்தில் பாவிக்கும் பொருளுக்கு கொடுக்கும் மரியாதை இந்தகாடையனுக்கோ அல்லது இந்தைனத்துக்கோ கொடுக்கமாட்டார்கள், யாழ்ப்பாணத்தில் உள்ளமக்களையோ கிழக்கு மாகணத்திலோ முள்ளிவாய்க்காலில் செய்த்து போன்ற கொலை செய்யவில்லையென்று சொல்லும்பொளுது எப்படியான வக்கிரபுத்தி இருக்கின்றது, உனது குடும்பத்தில் இருந்து எவராவது முள்ளிவாய்க்காலில் சிங்கள் காடையனின் தாக்குதலில் இற்ந்திருந்தால் இப்படியான வார்த்தைகள் வந்திருக்கமுடியாது, தமிழினத்துக்கு விடுதலை கிடைக்கவேனுமென்றால் சோற்றுபார்சல் எட்டப்பர்களை முற்றாக அழித்தொழிக்க வேன்டும்.

    • kuruvi says:
      16 years ago

      நச்சுப்பாம்புகள் அப்படித்தான் விஷத்தை கக்கும் படுகொலைகளில் வீதாசாரம் கண்டுபிடித்த இரண்டாவது ஆள் சிகுமார்) ,முதலாவது கருணாநிதி ,

      • THAMILMARAN says:
        16 years ago

        மோட்டுச் சிங்களவன், மோட்டுச்சிங்களவன் என்றூ பேசிப் பேசியே தமிழனுக்கு மோட்டுவலையும் இல்லாமல் பண்ணீய பெருங்காரியத்தில் தேசப் பிதா,தேச ஆன்மாக்களூக்கும் பங்கு இருக்கிறது.தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனம் அவற்ற மனைவி,பிள்ளயளக்கூட காப்பாற்றவில்லை எனும் போது எங்கு போய் நாம் நம் தலயை முட்டிக் கொள்வது.மதிவதனிக்கள் பலரைக் சிங்களம் கொன்றபோது நம்மால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.உணர்ச்சி வசப்பட்டு நம்மால் முடிந்ததுதான் என்ன?

      • xxx says:
        16 years ago

        இதில் சம்பந்தன் கருணாநிதி வகயறாக்களின் பங்கைப் பற்றிப் பேச மட்டும் உணர்ச்சி வசப்பட்டு உருகுகிற தமிழ்மாறனுக்கு இயலவில்லை.

      • ckumar says:
        16 years ago

        அன்புள்ள குருவிக்கு
        நச்சுப்பாம்புகள் அப்படித்தான் விஷத்தை கக்கும் படுகொலைகளில் வீதாசாரம் கண்டுபிடித்த இரண்டாவது ஆள் சிகுமார்) ,முதலாவது கருணாநிதி ,
        நீங்கள் மிருகத்திலிருந்து (புலி) பறவைக்கு (குருவி) இப்போது தான் மாறியிருக்கின்றீர்கள். வெகு சீக்கிரமே மனிதனாக மாறிவிடுவீர்கள். அதுவரை நீங்கள் என்னை பற்றி செய்யும் விமர்சனத்தையிட்டு நான் கோபிக்கப் போவதில்லை. உங்கள் நிலையை நினைத்து கவலைப்படுகின்றேன். நீங்கள் பிரபாகரன் போன்று நரிக்குணம் படைத்த கருணாநிதிக்கு முதலிடம் கொடுத்தற்கு நன்றி.

    • ckumar says:
      16 years ago

      இலங்கை வரலாற்றில் சிங்கள இராணுவமுகாமில் தங்கி அவர்களின் சோற்றுப்பார்சல்களை சாப்பிட்டு வளர்ந்த எட்டப்பர்கள் என்றால் புலிகள் தான் (இந்தியன் ஆமிக்காலத்தில்). புலிகள் தமது குடும்பத்தினரையே (தமிழ்மக்கள்)கொல்லும் போது உங்களுக்கு அது வக்கிரபுத்தியாகத் தெரியவில்லையா? நீங்கள் எதிரி (சிங்கள அரசாங்கம்) செய்ததை மட்டுமே காண்கின்றீர்கள். நான் இரண்டையுமே கண்டிக்கின்றேன். ஆனால் நீங்களோ பகற்குருடர்களாக இருக்கின்றீர்கள்.

    • ckumar says:
      16 years ago

      தமிழினத்துக்கு விடுதலை கிடைக்கவேனுமென்றால் சோற்றுபார்சல் எட்டப்பர்களை முற்றாக அழித்தொழிக்க வேன்டும்.

      கடைசியில் புலிகளே அழிந்து விட்டார்கள். நீங்கள் எம்மாத்திரம் (சருகுபுலிகள்)

  12. ckumar says:
    16 years ago

    அன்புள்ள வினோதனுக்கு
    “ச்குமர், தமிழ் மக்களை புலிகள் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர் என்று சொல்லி இருக்கின்றீர், சரி உம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்”
    மேற்கூறிய உங்கள் கருத்திலிருந்தே நீங்கள் புலிகளின் 90% தவறை புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பது புரிகின்றது. மிகுதி 10% வீத தவறை வெகுவிரைவில் புரிந்து கொள்வீர்கள்.
    வினோதன் நீங்கள் ஒரு விசயத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். முன்னொரு காலத்தில் மேற்கத்திய நாடுகள் பல ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை தமது அடிமைகளாக வைத்திருந்தார்கள்.அவர்கள் அந்த நாடுகளில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி அந்த நாடுகளை அடிமைப்படுத்தவில்லை. அவர்களுக்கு தமது அரசியல், பொருளாதார நலன் தான் முக்கியமாக இருந்தது.,
    நீங்கள் முதலில் எதிரிக்கும் உங்கள் குடும்ப உறுப்பினருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
    அடுத்தது நான் எந்த இடத்திலும் சிங்கள இராணுவம் செய்ததை சரி என்று கூறவில்லை. மகிந்த நல்லவர் என்று கூறவில்லை. பிரபாகரன் தான் தனது மாவீரர் உரையில் “நடைமுறைச் சாத்தியத்தை உணர்ந்த யதார்த்த அரசியல்வாதி மகிஜந்த ராஜபக்ஸ ” என்று குறிப்பிட்டார். ஆகவே நீங்கள் எந்த விசயத்தையும் ஆராய்ந்துவிட்டு விமர்சனம் செய்வது நல்லது. நான் என்றும் சிங்கள அரசாங்கம் செய்த அநியாயத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
    கலந்துரையாடல், விவாதம், கருத்துமோதல் என்பவை உண்மையை வெளிக்கொணரும் சாதனங்கள் என்ற வகையில் நான் அவற்றை மனப்பூர்வமாக ஆதரிக்கின்|றேன்.
    தொடருங்கஃள் உங்கள் ஆரோக்கியமான விவாத்தை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...