Friday, March 20, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழ எழுச்சியை ஒடுக்க அரசு சதியா?சீமான் கேள்வி.

இனியொரு... by இனியொரு...
06/14/2010
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

சென்னை: தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சீமான்.
இதுகுறித்து சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிரான துண்டுப் பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும், ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன.ஆனால் இந்த தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.இதனை தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமை.
முதலாவதாக ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக் கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கு நிற்கிறது. அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டு தான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளத் தனமானவையாகவே தோன்றுகின்றன. இப்படி இருக்கையில் சம்பவ இடத்தில் கிடந்த துண்டுப் பிரசுரத்தின் அடிப்படையில் விசாரணையைக் கொண்டு செல்வதாக போலீசார் கூறும் போது விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்கிற அச்சம் எழுகிறது. அதே போல மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்தில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை.புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.
சம்பவ நடந்த இடத்தில் கிடந்ததாக இவர்களால் சொல்லப்படும் துண்டுக் காகிதத்தை வைத்து இவர்களாகவே முடிவைச் சொலவது எவ்வாறு சரியாகும்? விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல் துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

அதே போல முந்தைய சேலம் வண்டியின் டிரைவர் பயங்கர வெடிச் சத்தம் கேட்டவுடன் நிலைய அதிகாரி ருத்ரபாண்டிக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் பேரணிக்கு முந்தைய ரயில் நிலையமான முண்டியம்பாக்கம் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினார் என்றும் அதன் பின்பு திருச்சி வண்டியின் டிரைவர் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது நம்ப முடியவில்லை. ஏனென்றால் வெடிச் சத்தம் கேட்டவுடன் ரயிலை நிறுத்துவார்களே தவிர இயக்க மாட்டார்கள். இது போன்று பல சந்தேகங்கள் எழுகின்றன. சித்தணி தண்டவாளத் தகர்ப்பில் உண்மை நிலையை அரசு விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராக போராடுகிறவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு முன்கூட்டியே திட்டமிட்டு விசாரணையை முன்னெடுப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விஷயமாக உள்ளது.போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிறவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.ஈழத் தமிழ மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்ட போது தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்டு நாமெல்லாம் போராடினோம். தன்மானத் தமிழனும் வீரத்தியாகியுமான முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீர வேங்கைகள் தங்களின் இன்னுயிரை ஈந்தனர். பிரபாகரனின் உண்மையான தம்பியான முத்துக்குமார் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற பாடம் அதுதான். தன்னுயிரைக் கொடுத்து, தன்னை வதைத்து, தன்னை எரித்து பேரினவாதிகளை எதிர்ப்பதுதான் பிரபாகரன் தம்பிகளின் போராட்ட மரபே தவிற அடுத்தவர் உயிர்களைப் பறிப்பதல்ல.பேரெழுச்சியோடு முத்துக்குமாரின் ஊர்வலத்தில் திரண்டு கண்ணீரோடு முத்துக்குமாரை வழியனுப்பிய தாய்மார்களும் பொதுமக்களும் தங்களுக்காக, தங்களின் இனத்துக்காக தன்னுயிர் ஈந்தவன் முத்துக்குமார் என்பதால் அவனை ஒரு மகனாக நினைத்து தமிழ்த் தாய் வணங்கி நிற்கிறாள். அப்படி தமிழ் தாய்மார்களின் வணக்கத்திற்குரியார்கள்தான் பிரபாகரனின் தம்பிகள் என்பதை நாம் தன்னலமற்ற தியாகத்தால் உலகுக்கிற்கு உணர்த்தியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.இதை எல்லாம் விட மிகச் சிறந்த வரலாற்று முன்னுதாரணமாக எம்மினத் தலைவர் அண்ணன் பிரபாகரனும் சான்றாகி நிற்கிறார். எதிரிக்கும் கூட கருணை காட்டு என்கிற விடுதலைப் போர் மரபுத் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஈழ விடுதலைப் போராளிகளே அதற்குச் சான்று. அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்திற்குள் அப்பாவி தமிழ் மக்களை அழைத்து வந்து லட்சம் லட்சமாக கொன்றொழித்தது பேரினவாத இலங்கை அரசு.தம் கண்ணெதிரே எந்த மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்தினரோ அந்த மக்களே கொன்றொழிக்கப்பட்ட போது கூட தங்களிடம் இருந்த கனரக ஆயுதங்களாலோ, நவீன விமானங்களாலோ புலிகள் சிங்களர்களான பொது மக்களைத் தாக்கியதில்லை. பேரிவனவாத இலங்கை அரசின் பொருளாதார நலன்களையும், ராணுவக் கட்டமைப்பையும் சிதைப்பதாகத்தான் புலிகளின் தாக்குதல் இருந்தது. ஏழு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அதில் ஒரு சிங்கள பொதுமகனாவது கொல்லப்பட்டிருப்பனா? என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். போரை முன்னெடுத்த இலங்கை அரசிற்கும், போருக்கு துணை போன காங்கிரஸ் அரசிற்கும் எதிராக ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கியதும் பேரினவாத யுத்தக் குற்றவாளிக்கு டில்லியில் சிகப்புக் கமபள வரவேற்போடு, விருந்து கொடுத்து கௌரவித்ததையும் நினைத்து தமிழ் மக்கள் மனக் கொந்தளிப்புக்குளாகியுள்ளனர். தமிழகமெங்கிலும் பல்லாயிரம் பேர் ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து போராடி கைதாகினர். தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சீமான்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

டக்ளஸ் தேவானந்தா கைது? - மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்

Comments 9

  1. Mahendra says:
    16 years ago

    ராஜீவ்காந்தியின் கொலைப் பின்னணியையும் மனிதத்துடன் வாழவிரும்பும் மனிதர்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்.

  2. JAMES FRIEDRICH says:
    16 years ago

    திரு மகேந்திரா!!,”இராஜீவ் காந்தி அவர்களை கொன்றவர்கள் இலங்கைத் த்மிழர்களே”!.இதில் எந்தவித மறுப்பிற்கும்,சந்தேகத்திற்கும் இடம் கிடையாது!.ஆனால் ஒரு விதி விலக்கு உண்டு! அதாவது…நீங்கள் இதே கருத்தை “தமிழ்நாட்டை சேர்ந்தவர்களைதவிர” மற்றவர்களுடன் விவாதிக்கும் போது மட்டும் உங்களின் “ராஜீவ்காந்தியின் கொலைப் பின்னணியையும் மனிதத்துடன் வாழவிரும்பும் மனிதர்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்.” இக்கருத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்!.அதாவது..தமிழ்….குழப்பங்கள் நீடிப்பதற்கு யார் காரணம்?????

    • Soorya says:
      16 years ago

      பக்கத்திலிருந்து பார்ததுபோல் எந்த ஒரு பொறுப்புமின்றி கண்ணை மூடிக்கொண்டு கருத்தெழுதுவது மோடத்தனம் என்பது தெரியாத முன்னுக்குப்பின் அர்த்தம் இல்லாத பின்னூட்டம் எழுதும் எல்லாம் தெரிந்த அதிமேதாவி அறிவது,
      இராஜிவ் காந்தியை யார் கொன்றார்கள் என்பது இதுவரை உண்மையில் நிரூபிக்கப் படவில்லை. இலங்கைத் தமிழர் இதற்காக பலிஆடாக்கப் பட்டார்கள் என்பதுதான் உண்மை. திரும்பத் திரும்ப உண்மையில்லாத ஒன்றை மலைக்குமேல் நின்று சொன்னாலும் நம்புவதற்குநாம் தமிழர் ஒன்றும் முட்டள்கள் அல்ல. குழப்பங்கள் நீடிப்பதற்குக் காரணம் உஙளைப்போன்ற அதிமேதாவிகளால்தான்.

      • JAMES FRIEDRICH says:
        16 years ago

        திருவாளர்கள்.ராமி,ஞானம்,சூரியா….பிரபாகரனோ,அமிர்தலிங்கமோ,ராஜீவ்காந்தி அவர்களோ,தற்போதைய மேனனோ,நாராயணனோ,ராஜபக்ஷேவோ,முட்டாள்கள் அல்ல… ஆயுத பலத்தின் மதிப்பை அறிந்தவர்கள்!.அவரவர் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்!..எப்படியெல்லாமோ இருந்த சூழ்நிலை இப்படி ஆகிவிட்டது!.
        ராஜீவ் காந்தியை யார் கொன்றார் என்று எனக்கு அக்கறை இல்லை!.பைலை மூடிய பிறகு உங்களுக்கும் அக்கறை யில்லை என்று நினைக்கிறேன்!.இந்தக்க கட்டுரைப் பகுதியில்,நான் தெளிவாக குறிப்பிடுவது…”இலங்கைத் தமிழர் மீது சுட்டுவிரலை காட்ட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால்”,தெளிவான அரசாங்கத் தரப்பு,அறிக்கைகள்,நீதிமன்ற தீர்ப்புகள்..போன்ற ஆவணங்களின் ந்கல்கள் இல்லாமல்,/ராஜீவ்காந்தியின் கொலைப் பின்னணியையும் மனிதத்துடன் வாழவிரும்பும் மனிதர்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்./–(இந்தக் கட்டுரை விழுப்புரம் குண்டுவெடிப்புக்கு,இந்திய உளவுத் துறையை சீமானால் குற்றம் சாட்டப்படுகிறது,இதே நபர் ராஜீவ்காந்தி கொலைக்கு இந்திய உளவுத்துறையை குற்றம் சாட்டியதாக பதிவுகள் இல்லை)- இது போன்ற வரிகளை(மகேந்திரா) பதிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!.இராஜீவ் கந்தியை கொன்ற சில மணினேரங்களுக்கு நானும் இதை இலங்கைத் தமிழர்கள் செதிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்தேன்!.கொலை செய்யப்பட்ட மே 21 அன்று,கொலைசெய்யப்பட்ட சீரீபெரம்பத்தூரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில்,ஒரு அரசியல் கட்சித் தலைவரின் அருகிலிருந்து கேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன்!அந்தத் தலைவர் அடுத்த கணமே கூறிவிட்டார் யாரென்று!.அவர்தான் முதலைக்கண்ணிர் வடிக்கிறார்!.எனக்கு அந்தக் கொலையின் பின்ணணியை புரிந்துக் கொள்வதற்கு..இருபது ஆண்டுகள் பிடித்தது!.

        • rammy says:
          16 years ago

          ராஜீவைக் கொன்றது தமிழ் பேசும் இலங்கையர் தான் என்பது உலகமே அறியும்! எந்த கொலையாளி உண்மையை ஒப்புக் கொள்கிறான்! சாட்சியம் இல்லை/நிரூபணம் ஆகவில்லை என்பதால் மட்டுமே உண்மையை மறுதலிக்க முடியாது!
          எம் மண்ணில் நடந்த அந்த “துன்பியல் சம்பவம்”, எம்மை(இந்தியத் தமிழர்களை) மீளாத் துயரத்தில் ஆழ்த்தி, மிகப் பெரும் தலை குனிவை ஏற்படுத்தி விட்டது!
          தமிழ் பேசும் இலங்கையர் செய்த அந்த வரலாற்று பிழையால், இந்தியத் தமிழர்களால் கை கழுவி விடப்பட்டு, அரக்கத் தலைவனால், வாழ்விழந்தனர்.
          ஆகவே, ராஜீவை விமர்சிக்க, இலங்கை தமிழர்களூக்கு,அருகதை இல்லை!

          • JAMES FRIEDRICH says:
            16 years ago

            /தனிப்பட்ட ஒருவரின் துயரத்தை அனைவருக்குமாக மாற்றுகிற, பழி வாங்கும் படலத்துக்கும், திசைதிருப்பும் முயற்சிக்கும், வெறிச்செயல்களுக்கும் எங்கள் தமிழகம் களமாவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!/–திண்மணி ஆசிரியர் தலையங்கம்!. – 14 Jun 2010 01:29:39 AM IST.

  3. Gnanam says:
    16 years ago

    தேசத்துரோகி ராஜீவ் தூக்கிலிடப்படவேண்டிய குற்றவாளி.ஆயுத ஊழல் மற்றும் விசவாய்வால் லட்சக்கணக்கான அப்பாவிமக்களை கொன்றவனை தப்ப வைத்தவன். குற்றம் செய்தவனைவிட துணை போனவனெ பெரும் குற்றவாளி ப……………………………………………………………

    • rammy says:
      16 years ago

      நம்பி பின் வந்த இனத்தை தன் அரக்க குணத்தால், பிடிவாதத்தால், மூடத்தனத்தால் பலியிட்டவன்?

  4. rammy says:
    16 years ago

    யார் குண்டு வைத்திருப்பினும், வன்முறைக் கலாச்சாரத்தால் எதையும் சாதிக்க முடியாது! தனக்கோ,தன்னைச் சாரந்தவர்க்கோ,நல்வழி காட்டமுடியாது! வன்முறை என்பது பூமராங் போல! ஏவியவரையும் கண்டிப்பாக காவு வாங்கி விடும்! இந்தநவீன உலகில், சாதிக்க,வன்முறையை விடநண்பர்களை தான் அதிகம் பெற முயற்சிக்க வேண்டும்! வன்முறையில் தொடங்கினாலும், சிறிது காலத்திற்கு பின் அதை கைவிட்டு,மற்றவர்களுடன் இணைந்து அமைதி வழியில் தீர்வு காண வேண்டும்!இதற்குநேபாளமே சாட்சி!
    ந்ண்பர்களை வளர்க்காமல், வன்முறையை மட்டும் நம்பியதாலேயே ஈழத் துயரம் ஏற்பட்டது!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In