செங்கல்பட்டு, ஜன. 4: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளை உடனடியாக திறந்தவெளி முகாமிற்கு மாற்றக்கோரி செங்கல்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முனிச்செல்வம், விஜயன் ஆகியோர் தலைமையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளை உடனடியாக திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை உடனடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும், மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதோடு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான பேருந்து வசதி, விளையாட்டு மைதானம், தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் சிறப்பு உதவி தொகையை நிபத்தனையின்றி வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.