2009- மே மாதத்திற்குப் பின் கொடூரமான முறையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர். இலங்கையில் இருந்து தமிழகள் உயிர் தப்பி கடல் வழியாக பல நாடுகளுக்கும் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கின்றனர். ஆஸ்திரேலியா அருகில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் பல நூறு ஈழ அகதிகளும் ஆப்கான் அகதிகளும் இருப்பதாகவும். அவர்களை ஏற்றுக் கொள்வது தொடர்பாக கடும் சர்ச்சைகள் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் மேல்மட்டத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பான எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இலங்கை அகதிகள் தொடர்பாக எதிர்கட்சிகளே ஒரு நல்ல தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அகதிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து வெறும் கோஷங்களை எழுப்பி வருவது ஏற்புடையது அல்ல. இதில், அரசியல் நோக்கம் மட்டுமே உள்ளது. எனினும், இலங்கை அகதிகள் விஷயத்தில் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி முடிவை அறிவிப்பேன். ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப் படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது. போரால் அபாயகரமான பயணத்தின் பின்னர் ஆஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே ஆபத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை. இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் ஆஸ்திரேலியா வருகின்றவர்களுக்கு கருணை காட்ட வேண்டியதும் அவசியம்,” என்றார் ஜூலியா கில்லார்டு.