தமிழகத்தில் பதிந்தும் பதியாமலும் லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களில் முகாம்களில் வசிக்கும் அகதிகள் நிலை பரிதாபகரமான ஒன்றாக உள்ளது இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் ஈழ அகதிகளுக்கு பத்து முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதிய வீடுகள்
முகாம்களில் மிகவும் பழுதடைந்துள்ள வீடுகளில் 7 ஆயிரத்து 469 வீடுகள் புதிதாக கட்டிக் கொடுக்கப்படும். முதற் கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்ட நடப்பு நிதியாண்டில் 108 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்படும்.
#
முகாம்களில் அடிப்படை வசிகளான மின் வசதி கழிப்பிட வசதி குடிநீர் வசதியை மேம்படுத்த 30 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆண்டு தோறும் இவைகளை செப்பனிட 5 கோடி செலவிடப்படும்.
#
கல்வி உதவித்தொகை
பொறியியல் கல்விக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.
#
கலை அறிவியல் படிப்புகளுக்கு கல்வி ஊக்கத்தொகை 20 ஆயிரம் வரை ஆண்டொன்றுக்கு வழங்கப்படும்.
#
மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும்.
#
விலையில்லாத எரிவாய்வு சிலிண்டர்கள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.
#
ஆண்டு முழுக்க ஒரு குடும்பத்திற்கு தேவையான அரிசி இலவசரமாக வழங்கப்படும்.
#
கோ ஆப்டெக்ஸ் மூலம் அகதிக் குடும்பங்களுக்கு தேவையான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடைகள், போர்வைகள் வழங்கப்படும்.
#
அகதிகளுக்கான ஆலோசனைக்குழு
அகதிகளுக்கான பிரச்சனைகளை உடனுக்குடன் இனம் காணவும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்கவும்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும்.
என அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.