Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழப் போராட்டம் எழுச்சிபெற மாவோயிஸ்டுக்கள் ஆதரவு வழங்கத் தயார்

இனியொரு... by இனியொரு...
07/06/2012
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

இந்திய மாவோயிட்டுக்கள் சார்பில் பேசவல்ல ஒருவர் இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியதே இந்தியா தான் என்றும், இந்தியாவுடன் இணைந்து அனைத்து உலக ஏகாதிபத்தியங்களும் மக்களையும் போராட்டத்தையும் அழித்தனர் என்று தெரிவித்தார். தாம் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை நடத்திவருவதாகக் குறிப்பிட்ட அவர், பலவீனமடைந்துள்ள ஈழப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவும் பங்களிப்பும் உண்டு என்றார். இந்தியாவின் ஹைதராபாத் பகுதியிலிருந்து இனியொருவிற்கு நேர்காணல் வாழங்கினார். அவரது நேர்காணலின் முழுமையான பகுதி நாளை இனியொருவில் வெளிவரும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கார் தாக்குதல்

Comments 9

  1. tholar.balan says:
    14 years ago

    நல்ல முயற்சி. இனியொருவுக்கு எனது பாராட்டுக்கள். இலங்கைத் தமிழர்களின் போராட்டம் வெற்றி பெற தமிழ்-சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மட்டுமன்றி இலங்கை-இந்திய புரட்சிகர சக்திகளின் ஜக்கியமும் அவசியமாகும். அதற்காக எடுக்கப்படும் எத்தகைய முயற்சிகளும் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை.

  2. Dr/ Sri S. Sriskanda says:
    14 years ago

    Tholar.balan it is nice that your are talking about the working class. I am still with the Fourth International convened by Leon Trotsky.In Sri Lanka we are in the three R’s – reconciliation, rehabilitation and reconstruction..

  3. நெடுதுயிலோன் says:
    14 years ago

    மன்னிக்கவும் நேயர்களே…
    உங்கள் வானொலியின் ஒலி அளவை குறைத்துவிட்டு கருத்தை சொல்லுங்கள் ஏனென்றால் கேட்பவர்களுக்கு தெளிவில்லாமல் இருக்கிறது 

  4. tholar.balan says:
    14 years ago

    ட்ரொஸ்கியவாதம் பற்றி –தோழர்.சண்

    ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்;கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலர் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.

    ட்ரொஸ்;கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்;கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை.. அதனைச் செய்ய முடியும் என்பதை ஸ்டாலின் உலகிற்கு நிருபித்தார்.

    ஜரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட கங்கேரி ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரஸ்சியப் புரட்சியை ரஸ்சியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர்வரை அழுக விடுவதா?”

    லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில் “முதலாளித்துவதத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்

    இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்துவிட்டது.

    ஆனால் ட்ரொஸ்;கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரஸ்சியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார்.

    வுpவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்;கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னனிப்படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”.

    லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்;கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரஸ்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னனிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன)அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”.

    ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்;கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும்.ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை வழங்கி முன்னேறிச் சென்றது.

    அடுத்து லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்;கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்;கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம். வரலாற்றின்படி ட்ரொஸ்;கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான்.

    அப்போது 1912ல் ட்ரொஸ்;கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்;கி” என்று அழைத்தார்.

    1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

    1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார். ஸ்டாலின்தான்; மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார்.

    இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது.இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள்.அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார். இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை. இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார்.

    ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது.
    விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.

    1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும்.

    ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது.1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது. சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொஸ்க்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பது பற்றியோ இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை .அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள்.

    இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுதுபோக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவைபற்றி விவாதிப்பார்கள். ஆதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரஸ்சியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது. ஆனால் இன்று ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம்..ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

    • Ratnam Ganesh says:
      14 years ago

      வாழடயச.டியடயn 
      ட்ரொஸ்கியவாதம் பற்றி –தோழர்.சண்….

      சண் உயிருடன் இருந்த போது அப்படி அவருக்கு  புலன்பட்டிருக்கு   என்பதில் ஐயமில்லை.அவரது  பிற்காலங்களில் அவரே சீன புரட்ச்சியின் பின் புலன்களை  நேரடியாக அவதானித்து  அங்கு மாவோ வின் தத்துவங்கள்   உதாசீனப்படுத்தப்பட்டத்தை  விமர்சித்தார். 
      முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெற்ற பின் அந்நாடுகள் சர்வதேச மாற்றத்திற்கு முகம்கொடுக்க வேண்டும். மூன்றாவது அகிலம் லெனின்  இருக்கும்வரை   செயற்பட்டது. எனவே லெனின் உலகம் முழுவதும் சோசியலிச புரட்சியின் முக்கியத்தை ஆதரித்தார். 
      எது எவ்வாறாக இருப்பினும்  இன்று சீன ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு”  சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பதும் ஒரு காரணமாக கொள்ளலாம் அல்லவா? ஆகக்குறைந்தது நிரந்தரபுரட்சியின் முக்கியம் விளங்குகிறத. இன்று அவர் உயிருடன் இருந்ததால் ஒருவேளை சில வித்தியாசமான கருத்துக்களை தந்திருப்பார்இ 

      ரட்ணம் கணேஷ்.

  5. tholar.balan says:
    14 years ago

    /எது எவ்வாறாக இருப்பினும் இன்று சீன ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு” சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பதும் ஒரு காரணமாக கொள்ளலாம் அல்லவா? /
    இதேபோல் உலகம் முழுவதும் புரட்சி நடந்திருந்தாலும் மீண்டும் முதலாளித்துவம் ஆட்சியைப் பிடித்திருக்காதா என்றும் கேட்கலாம். எனவே சீன ரஸ்சிய வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை அந்த புரட்சியை மேற்கொண்ட தலைவர்களே கூறியிருப்பதை தயவு செய்து நன்கு படிக்கவும். குறிப்பாக ஸ்டாலின் மரணத்திற்கு பின்பு குருசேவ் தலைமையிலான திருத்தல்வாத கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியபோது தோழர் மாசேதுங் அவர்கள் இந்த அபாயம் சீனாவிலும் ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டியதோடு அதறகு எதிராக என்ன செய்யவேண்டும் என்பதை சுறியதையும் மறந்து அல்லது மறைத்து ரொக்சியத்திற்கு வக்காலத்து வாங்குவது என்பது தெரிந்துகொண்டே புரட்சிக்கு செய்யும் துரொகமாகும்.

  6. tholar.balan says:
    14 years ago

    இலங்கையின் ரொக்சியவாத தலைவர்கள்.

    இலங்கையில் ரொக்சியவாதக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் ஏறக்குறைய அனைவரும் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தார்கள்.அவர்களில் சிலர் சக்தி வாய்ந்த நிலப்பிரபுத்துவ குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.வேறு சிலர் பெரிய பணக்காரக் குடும்பங்களில் இருந்து வந்தார்கள்.பெரும் மூலதனமும் வசதியும் பிணைந்த வாழ்வு ஒரு பக்கமும் தொழிலாளி வர்க்க இலட்சியத்திற்காக போராடி தமக்கு வசதியான வாழ்வைத் தரும் ஊற்று மூலமான சுரண்டலை அழித்தொழிப்பது என்ற பாசாங்கு மறுபக்கமும் கொண்ட இந்த முரன்பாடு லங்கா சமசமாஜக்கட்சித் தலைவர்களின் வாழ்க்கை பூராவும் பரவி இருக்கின்றது. சுpவப்புச் சட்டை அணிந்து காலிமுகத்திடலில் ஜனத்திரளுக்கு முன் கூச்சல் இடுவது பின்னர் காலிமுக ஓட்டலில் அப்பழுக்கற்ற மாலை உடை அணிந்து மதுவருந்தி விருந்துண்டு நடனமாடுவது -இது இந்த தலைவர்களின் நித்திய இரட்டை வாழ்க்கையாகும்.

    இன்றுவரை இந்த இரட்டைத் தன்மை லங்கா சமசமாஜக் கட்சித்தலைவர்களின் இயல்பாக இருந்து வருகின்றது.அவர்கள் புரட்சி பற்றியும் சோசலிசம் பற்றியும் தொண்டை கிழியக் கத்தினார்கள். இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் பர்மாவிலும் அதனைப் புகுத்த ஆசைப்பட்டார்கள். அதேவேளையில் கவனமான முதலீடுகள் மூலமும் உழைப்புச் சுரண்டலைப் பயன்படுத்திப் பெற்ற அமிதப் பெறுமதியின் திரட்டு மூலமும் அவர்கள் செல்வத்தைக் குவித்துக் கொண்டார்கள்.

    லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் அநேகரை நாம் பார்ப்போம் எனில் அவர்களில் எவருக்காவது புரட்சியிலோ சோசலிசத்திலோ உண்மையான நம்பிக்கை அக்கறை இருந்திருக்கும் என்று எவரும் நினைக்க முடியாது. கம்யுனிஸ்ட் கட்சியின் வாரப்பத்திரிகைகள் ஒரு தடவை லங்கா சமசமாஜக் கட்சித்தலைவர்களான டாக்டர்.என்.எம்.பெரரா டாக்டர்.கொல்வின்.ஆர்.டி.சில்வா லெஸ்லி குணவர்த்தனா ஆகியோரின் வருமானவரிக் கணக்கைப் பிரசுரித்தன. அவர்களுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் மற்றும் கம்பனிகளில் இருந்த பங்குகளின் விபரங்கள் ஆகியவற்றை இந்த கணக்குகள் காட்டின. “கொள்ளையர்கள் பொருட்களுடன் பிடிபட்டனர்”என்ற தலைப்பில் வெளியான இந்த கணக்கு வழக்குகள் குறித்து லங்கா சமசமாஜக் கட்சித்தலைவர்கள் இதுவரை பதில் எதுவும் கூறவில்லை.

    டாக்டர்.என்.எம்.பெரரா விவசாயகடன் கூட்டுத் திட்ட நிறுவனத்திடமிருந்து பல லட்சம் ரூபாய் கடன் பெற்று வாங்கிய ஆக்லன்ட் தோட்டத்தின் கதையை பலர் அறிவார்கள். பெரிய தோட்டங்களை வாங்குவதற்கான பெரிய கடன்களை வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாக அது இல்லை என்பது ஒருபுறம் இருக்க இக் கடனுக்கு உத்தரவாதம் செய்தவர் பெரும் வர்த்தகப் புள்ளியும் பிரபல்யமான யு.என்.பி கட்சியினருமான சேர்.சிறில்.டி. சொயிசா ஆவார். இவ் விபரங்கள் வெளியாகி அம்பலமானவுடன் பொதுமக்கள் ஆட்சேபனை காரணமாக என்.எம.பெரரா அவர்கள் இத் தோட்டத்தை விற்க நேரிட்டது. ஆனால் அவர் அதை பல லட்சம் ரூபா இலாபத்தில் விற்றார் என்பது பின்னர் அறிய வந்தது.

    பின்னர் அவர் கம்பனிகளில் முதலீடு செய்தார். அவர் கிரிதரா ஆலையை வாங்கினார்.மீண்டும் பொது ஜன ஆட்சேபனை காரணமாக அதனை ஈட்டுக்கு கொடுத்தார். மாதத்திற்கு பல ஆயிரம் ரூபா ஈட்டுக்கு அவர் அதனைக் கொடுத்தார் என அறிய வந்தது. இவ்வளவு பணம் அவருக்கு எதற்கு என்று கேட்டபோது தனது ஓய்வு நாட்களுக்கு வேண்டும் என்று கூறினாராம்.இந்த லங்கா சமசமாஜக் கட்சித்தலைவருக்கு தனது வாழ்நாளில் புரட்சியை சோசலிசத்தை அடையப் பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை என்பது மட்டுமல்ல அவர் ஓய்வு பெற்ற பின்புகூட தனது சுரண்டலைத் தொடரும் கனவை அவர் கொண்டிருந்தார் என்பதையே இது காட்டுகின்றது.

    லங்கா சமசமாஜக் கட்சியின் மற்ற தலைவர்களான டாக்டர்.கொல்வின்.ஆர்.டி.சில்வா லெஸ்லி.குணவர்த்தனா போன்றோரும் இப்படிப்பட்டவர்களே. கோல்வின்.ஆர்.டி.சில்வாவின் மகளுக்கும் திரிபுவாதத்தலைவர் ஒருவருக்கும் திருமணம் நடந்தபோது பிரதமர் முதல் யு.என்.பி அமைச்சரவை முழுவதும் அதில் கலந்து கொண்டிருந்தது. இத்தகைய வர்க்க சமரச சல்லாபம் லங்கா சமசமாஜக் கட்சியின் விசேட முத்திரை. உங்கள் வர்க்க எதிரியுடன் பாணம் அருந்தி விருந்துண்ணும் அதேவேளையில் அவனுக்கு எதிராகப் போராட தீர்க்கமான தயாரிப்புக்களை செய்யமுடியுமா? லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ஜேக்.கொத்தலாவ இலங்கை பெருந்தோட்ட முதலாளிகள் சம்மேளனத்தின் சட்ட ஆலோசகராக இருக்க அனுமதிக்கப்பட்டார். அவர் பின்னர் யு.என்.பி யில் சேர்ந்து ரஸ்சிய நாட்டுத் தூதுவரானார். அவர் தொழிலாளருக்கு எதிராக முதலாளிமாருக்கு வாதாடினார். இதுதான் நரிகளுடன் ஓடிக்கொண்டு நாய்களுடன் வேட்டையாடுவது. பத்தேமக லங்கா சமசமாஜக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலஞ் சென்ற நீல்டி அல்விசும் தென் மாகாண தோட்ட முதலாளிகள் சங்கத்தின் தலைவராக ஒரு காலத்தில் இருந்தார்.

    லங்கா சமசமாஜக் கட்சித்தலைவர்களில் ஒருவரான பிலிப் குணவர்த்தனா இறந்தபோது யு.என.பி கட்சித்தலைவர் டட்லி சேனநாயக்கா அவர்கள் இறுதிக் கிரியை உரையாற்றினார். அதன் பின் டாக்டர். என்.எம்.பெரரா அவர்கள் இறந்தபோது ஜனாதிபதி ஜே.ஆர. ஜெயவர்த்தனா உரையாற்றினார். முதலாளித்துவப் பத்திரிகைகள் எல்லாம் அவர்களைப் பாராட்டி கட்டுரைகள் எழுதின. இது ஏன்? அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்திற்கு நல்ல சேவை புரிந்துள்ளார்கள். இப்படித்தான் சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் எப்பொழுதும் ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுகின்றன. உழைப்பின் சுரண்டலில் வாழும் எந்தத் தலைவனும் அதே சுரண்டலை ஒழிக்கத்தான் பாடுபடுவதாகக் கூறுவதை எவரும் பாரதூரமாக எடுக்க முடியாது.

    உண்மையில் லங்கா சமசமாஜக் கட்சித்தலைவர்கள் புரட்சிவாதிகள் அல்லர். ஆவர்கள் போலிப் புரட்சிவாதிகள். அவர்களின் வர்க்க இயல்பைப் பார்க்கும் போது ட்ரொக்சியவாதம் என்னும் எதிர்ப் புரட்சிகர தத்துவத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டது அதிசயமல்ல. ட்ரொக்சியவாதம் இத்தகைய உயர் மத்தியதர அறிவு ஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் எப்பொழுதும் புரட்சிக்கு எதிரானது.ஸ்டாலின் சோவியத் யூனியனுக்கு எதிரானது.அதாவது அது தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது. ஆக்டோபர் புரட்சிக்கு பின்னர் லெனின் சரியாகப் பிரகடனம் செய்தவாறு சோவியத்யூனியனைப் பொறுத்த மனோபாவம் ஒரு சோசலிஸ்ட்க்கு உள்ள உரைகல்லாகும். பின்னர் மாவோவின் சீனாவைப் பொறுத்த மனோபாவம் ஒரு சோசலிஸ்ட்டுக்கு உள்ள உரைகல்லாக இருந்தது.

    இந்த உரைகல்லின்படி லங்கா சமசமாஜக் கட்சித்தலைவர்கள் முன்னரும் பின்னரும் சோசலிசத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். ஆனால் அதேவேளையில் அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக பாசாங்கு செய்தார்கள். நாற்காலியில் இருந்துகொண்டு ஏகாதிபத்தியத்தையும் சோவியத்யூனியனையும் விமர்சிப்பதும் ஆனால் அப்பொழுது சோசலிசத்தின் உருவகமாக இருந்;த சோவியத்யூனியனை தமது பிரதான தாக்குதல் முனையாக்குவதும் முதலாளித்துவ அறிவு ஜீவிகளின் விருப்பமான பொழுதுபோக்கு.

  7. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Tholar..Balan nice narration of the GOP (Grand Old Party) of Sri Lanka – Shri Lanka. In USA they use the word for the Republican Party. Sri Lankan Tamils did an American Special. The VVT guys are great. Free enterprise and economy driven by the market forces.

  8. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Tholar. Balan. 1956. Dr. Colvin r de Silva: Two Languages and One Nation. Melbourne Olympics.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...