Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானியா 80 களிலிருந்தே உதவுகிறது:புதிய ஆவணங்கள் வெளியாகின

இனியொரு... by இனியொரு...
01/18/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

Sri-Lanka-army582014 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு வெளியிட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஆவணங்களிலிருந்து பல தகவல்கள் வெளியாகின. சீக்கியர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்கான பொற்கோவில் மனிதப்படுகொலையின் பின்னணியில் பிரித்தானிய அரசு செயற்பட்டதற்கான தகவல்கள் வெளிவந்தன. இதே காலப்பகுதியில் இலங்கை அரச படைகளுக்கு பிரித்தானியாவின் முன்னை நாள் SAS படைகள் பயிற்சியளிப்பதற்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியிருந்தது என்ற தகவல் இப்போது வெளியகியுள்ளது. இலங்கை அரச படைகளுக்கு வழங்கப்பட்ட விசேட பயிற்சி என்பது சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய தமிழ்க் குழுக்களை அழிப்பதற்கானதாகும்.

இதே காலப்பகுதியில் இந்திய அரசு ஈழப்போராட்டத்தை தனது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துவதற்காக ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்கியது. ரெலோ, ஈரோஸ், புலிகள், ஈபிஆர்எல்எப் ஆகிய விடுதலை இயக்கங்கள் இந்திய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டன.

சீக்கியர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை பிரித்தானிய அரசின் துணையோடு மூர்க்கத்தனமாக அழித்த இந்திரா காந்தியின் அரசு ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடகமாடியது. இந்த நிலையில் இலங்கையில் பிரித்தானியாவின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்பது ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது..

சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய தமிழ் இயக்கங்களை அழிப்பதற்காக இலங்கை அரச படைகளுக்கு பிரித்தானிய நிறுவனம் பயிற்சி வழங்குவதை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய அரசு பிரித்தானியாவைக் கோரியது.

புதிதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரவிருந்த ஜெவ்ரி ஹவ் இன் பிரத்தியோகச் செயலாளர், பிரதமர் மாக்ரட் தட்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக் கடித்தத்தின் அடிப்படையில் இலங்கை அரச படைகளுக்குப் பயிற்சியளிப்பதற்கு SAS உடன் தொடர்புடைய நிறுவனத்தை அனுமதிக்குமாறு கோருகிறார். வெளிவிவகாரச் செயலாளரின் பிரத்தியோகச் செயயலாளரான பீட்டர் ரிக்கி மாக்ரட் தடசரின் பிரத்தியோகச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் பகுதி : –

“இலங்கை அரசு மற்றொரு நிறுவனத்தையும் (வெளியான ஆவணத்தில் பெயர் நீக்கப்பட்டுள்ளது) இராணுவப் பயிற்சியளிக்க அமர்த்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்காகவே இப்பயிற்சி வழங்கப்படுகிறது.முன்னை நாள் SAS இன் ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம் இலங்கையில் நிலைகொண்டிருப்பது தொடர்பாக இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. நாம் இது முற்றுமுழுதான வியாபார ஒப்பந்தம் என்பதால் நாங்கள் பயிற்சி வழங்க அனுமதித்துள்ளோம்என இந்திய அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளோம், “

1984 ஆம் ஆண்டில் அதாவது சீக்கியப் படுகொலை நடத்த இந்திராகாந்தி உத்தரவிட்ட அதே காலப்பகுதியில், இலங்கை அரசிற்கு இராணுவ உதவிகளையும் ஆலோசனைகளையும் நிறுத்துமாறு மாக்ரட் தட்சருக்கு இந்திராகாந்தி எழுதிய கடிதம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இவற்றின் தொகுப்பை நோக்கும் போது இந்திய அரசு தெற்காசியாவில் தான் மட்டுமே அழிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியாவைக் கோருகின்றது. பிரித்தானியாவோ தனக்கும் அழிப்பதில் பங்கு தேவை என்பதில் உறுதியாக இருக்கின்றது.

30 வருடங்களுக்கு ஒரு முறை முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டு வெளியாகும் இந்த ஆவணங்களிலிருந்து பருமட்டான சில தகவல்களைத் தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
எது எவ்வாராயினும் முப்பது வருடங்கலின் பின்பும் முன்னைய நாடகம் மீண்டும் அரங்கேறுகிறது. ராஜபக்ச என்ற இனக்கொலையாளியை, கிரிமினலை பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவியில் அமர்த்திவிட்டு தூக்கில் போடப்போகிறோம் என்று பிரித்தானியா நாடகமாடுவதும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய பதிவுகள் :

பொதுநலவாய மாநாட்டில் இலங்கையின் இலவச மருத்துவத்திற்கும் ஆப்பு வைக்கபட்டது : புதிய ஒப்பந்தம் அம்பலம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்

யாழ்ப்பாணத்தில் மக்களை மிரட்டிய டேவிட் கமரன் : சுதர்சன்

மக்கள் அவலக்குரல், கமரன் அலட்சியம், ஊடகங்கள் வியாபாரம்

டேவிட் கமரன் மகிந்த சந்திப்பு – ரோமில் மகிந்த

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யாழ்ப்பாண இளையோர் இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்படுவார்களா:கட்டளைத் தளபதியின் வாக்குமூலத்தின் பின்னால்..

யாழ்ப்பாண இளையோர் இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்படுவார்களா:கட்டளைத் தளபதியின் வாக்குமூலத்தின் பின்னால்..

Comments 3

  1. Alex Eravi says:
    12 years ago

    This not a NEW “News” for me…
    If we trust these countires… it’s our mistake… this is the reality & fact of the world politics… ஒரு சில நாடுகளின் ஆளுமைக்காகவும்… (இதை சிலர் பெரும் தேசிய வணிகம் என்றும்… சொல்வார்கள்) ஆயுத விற்பனைக்காகவும்… அமையாக இருக்கும் நாடுகளினுள் உட்புகுகிறார்கள்…

    உதாரணத்திற்கு அமைதியாக தமக்கொருவான பாரம்பரிய கலாச்சார விழுமியங்களோடு இருந்த ஆப்கானிஸ்தானில்… கனிமன்களுக்காக சென்ற இரசிய படைகள் ஆளுமை கொள்ள… அவர்களை வெளியேற்ற அமெரிக்க அரசாங்கம் முஜாஹிதீன் என்ற புரட்சிப் படைய உருவாக்க… அப் புரட்சிப் படையோ அமெரிக்க ஆதரவுடன் ருசிய படைகளை வெளியேற்றியபின்… வளர்த்த கடா மார்பில் பாய்வது என்ற பாதிரி… அதே புரட்சிப் படைகள் ஜனாயக விழுமியங்களுக்கு எதிராகவும்… அமெரிக்காவுக்கு எதிராகவும்… தமது ஆயுதங்களை திருப்ப… அமெரிக்க படைகள் தாம் வளர்த்தவர்களையே மக்களோடு… மக்களாக… குண்டு போட்டு அழிக்க… இன்றும் தினமும் நடக்கும்… தற்கொலைக் குண்டு வெடிப்புகளும்… கொலைகளும்…

    இதே மாதிரி… ஈரானிற்கு எதிராக… மேற்க்கத்திய நாடுகளினால் இரசாயன ஆயுதங்கள் உட்பட ஆயுதங்கள் விற்கப்பட்டு பலம் பொருந்திய நாடாக உருவாக்கப்பட்ட… இராக்கிற்கு எதிராக… இஸ்ரேலை குளிர்மைப் படுத்தவும்… தாம் கொடுத்த இரசாயன ஆயுதங்கள் தமக்கு எதிராக திரும்பினாலும் என்ற பயத்தினாலும்… “அவ் ஆயுதங்கள் எங்கே…?” என்று கேட்டு…அதே மேற்க்கத்திய நாடுகளின் துணையுடன் அமெரிக்கா குண்டு மாரி பொழிதளுடன்… படையெடுத்து… அமைதியாக இருந்த… அல்குவைடா போன்ற தீவிரவாதிகளின் ஊடுருவல் இல்லாமல் இருந்த… உலகின் பழமை வாய்ந்த… பல கலாச்சார பாரம்பரியங்களையும்…. பாரசீகம்…. என்ற நாகரீகத்தையும் கொண்ட பாக்தாத்தை நீர்மூலமாக்கியது மட்டுமல்லாமல்…. இன்று முழுநாட்டையும் ஓர் சர்வதேச கொலைக்களமாக மாற்றியுள்ளார்கள்…

    அதே நேரம் இன்றைய நிலையில் ஓர் பகுதியினர் ஈராக்கிய நாட்டின் ஓர் பகுதியை தம் வசமாக்க… தற்போதைய ஈராக்கிய அரசாங்கம் அமெரிக்காவிடம் உதவி கேட்க்க… “இது உங்கள் பிரச்சனை… நீங்கள் தான் தீர்க்க வேண்டும்…” என்று கூறிவிட்டார்கள்…

    இதுதான் இன்றைய உலக நிலை…
    நாமும் விதிவிலக்கா… இந்தியா இந்திய சமுத்திரத்தில் முக்கிய பங்கு வகித்தது…

    எனது பாடசாலைப் பருவத்தில் இருந்து பார்த்துக் கொண்டு வருபனவற்றை பலவற்றை மீட்டிக் கொண்டு செல்லலாம்…. In the Russian-American cold war time பாகிஸ்தானின் முன்னால் இராணுவ தளபதியும்… ஜனாதிபட்துயுமான ஜியா குள் கக் முக்கிய அமெரிக்க-பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் சென்ற விமானம் வானில் வெடித்து… சகலரும் உயிர் இழந்தது…

    இந்திய இராணுவம் சீக்கிய பொற்க்கொவினுள் சென்ற பொது… இங்கிலாந்தின் Special Air Servic
    e or SAS இந்திய இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க… (Golden Temple SAS claims overlooked in India – http://www.bbc.co.uk/news/world-asia-india-25741861 ) இங்கிலாந்திலும் காலிஸ்தானிய தன்னாட்சி குழுவினர் தமககேன்றொரு passport… currency கூட அச்சடித்திருந்தார்கள்…

    இது உருத்திரகுமார் கூட்டம் அமெரிக்காவில் கொடி பிடிக்க… அமேரிக்கா புலியை அழிக்க உதவி செய்தது மாதிரி…
    இந்கிலாந்து சென்ற ஜனாதிபதி மகிந்தவிற்கு புலிக்கூட்டம் புலிக் கொடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய இங்கிலாந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பது மாதிரி…

    இதைத்தான் கூறுவது… “தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவது”

    This is world politics…

    We all trapped in world politics…

    But, we can’t say “noting in our hand”
    When we unite no one can’t come between us
    I mean whole nation

    நாம் பொறுமையாக… ஒற்றுமையாக இருந்தால் மற்றவர்கள் எப்படி உட்புகமுடியும்…?

    Related links… news…
    UK to investigate possible SAS role in Golden Temple attack
    http://in.reuters.com/article/2014/01/14/britain-india-golden-temple-idINDEEA0D08O20140114

    Sikh with Khalistan passport

    https://www.google.ca/search?q=khalistan+passport&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=-_faUp-lC9S62gXijIDYBw&ved=0CC0QsAQ&biw=1280&bih=550

    https://www.facebook.com/SikhLionrajKaregaKhalsaOnWorld/posts/161978973948969

    எழுதிக் கொண்டே போகலாம்…

    கிளிண்டன் பாகிஸ்தான் செல்லு முன் இந்தியாவில் நிற்கும் போது காஷ்மீரில் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டமை…
    இலங்கை கிரிக்கட் வீரர்கள் சென்ற பேரூந்து பாகிஸ்தானில் வைத்து தாக்கப்பட்டமை…

    ஒரே நேரத்தில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது…
    அனுராதபுர புத்த மடாலய தாக்குதல்.. ராஜீவ் கொலை…

    இப்படிப் பல…
    ஆட்டுவிப்பார் யாரோ… ஆடுவது யாரோ… என்றாலும் பறுவாயில்லை… இது மனித அழிவில்லவா…? ஹ்ம்ம்…

    Wait for the Sochi (Russia) Olympics (Putin-Obama cold war)… hmm…

  2. S.G.Ragavan (Canada) says:
    12 years ago

    இலங்கை வான்பரப்பிற்குள் விமானத்தை அத்துமீறி அனுப்பி, யாழில் உணவுப் பொட்டலத்தை போடும் துணிச்சல் அன்று இந்திரா காந்திக்கு மட்டுமே இருந்தது. ஆனால் அவர் வழி வந்த , எவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதுவரை இருந்ததே இல்லை.
    நன்றி “அதிர்வு” , பிரித்தானியாவின் மூத்த ஊடகம் எனக் கூறும் அதிர்வு வெளியிட்ட செய்தி தான் மேல் உள்ளவை ஆக இந்த ஊடகங்கள் இந்திரா காந்தி எப்ப மரணித்தவ எப்ப யாழ்பாணத்தில் இந்திய ராணுவம் உணவு பொட்டலம் போட்டவை என்பது கூட தெரியாது இணையம் நடத்துகினம்.

    • Kumar says:
      12 years ago

      தாயாக இருந்தாலென்ன மகனாக இருந்தாலென்ன எல்லோரும் காந்தி என்றபடியினால் பரவாயில்லை என்று எண்ணிவிட்டார்கள் போலும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...