Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழப் போராட்டத்தில் முதலாவது வாழும் சாட்சி … நூலுருவில்..

இனியொரு... by இனியொரு...
01/07/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
12
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஈழப் போராட்டடம் ஆயுதப் போராட்டமாகத் துளிர்விட்ட ஆரம்பக் காலப்பகுதியின் வாழும் சாட்சி கணேசன்(ஐயர்). ஐயர் என்ற புனைபெயரில் அறியப்பட்ட கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரபாகரனோடு ஆரம்பித்தவர்களில் ஒருவர். பல சிக்கல்கள் நிறைந்த தனது அரசியல் நினைவுகளை ஐயர் இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்திருந்தார்.

இவரின் பதிவுகள் பல புதிய தகவல்களோடு செழுமைப்படுத்தப்பட்ட வடிவில் நூலுருவில் வெளியாகின்றது. உலகம் முழுவதும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் ஐயரின் நூல் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசியல் குறித்த விமர்சனம் என்பது சேறடிப்பாக அன்றி எதிர்கால எதிர்ப்பியக்கத்தை அனுபவங்களிலிருந்து செழுமைப்படுத்தும் செயற்பாடாக அமையவேண்டும் என்பதே ஐயரின் கருத்து.

சமூக உணர்வுள்ள அனைவர் மத்தியிலும் ஐயரின் அனுபவ வரலாறு ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கியிருந்தது.

பேரினவாத்தின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் வீரம்மிக்க போராட்டத்திற்கு ஐயரின் நூல் காத்திரமான பங்களிப்பை வழங்கும்.

தமிழ் நாட்டில் நூல் ஏலவே வெளியாகியுள்ளது. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றுப் பதிப்பகத்தின் புத்தகச் சந்தையில் ஐயரின் நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று!
கடை எண் 404 -405.
5.1.2012 முதல் 17.1.2012 வரை.

பிரித்தானியாவில் இனியொருவும், கனடாவில் தேடகம் அமைப்பும், பிரான்சில் சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் நூல் வெளியீட்டை ஏற்பாடுசெய்துள்ளன.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!

Comments 12

  1. ஜோன் says:
    14 years ago

    பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கும்போது அவருடன் சேர்ந்து ஆரம்பித்தவர்களில் இன்று உயிர்ரொடு இருப்பவர்களில் ஒன்று கலாபதி பாலசுப்பிரமணியம், மற்றவர் வாத்தி நாகராஜா இவர்களோடுதான்
    1975 ஆண்டு பிரபாகரன் அல்பேட் துரையப்பாவை சுட்டுக்கொண்டார் கலாபதியும், நாகராஜாவும் 1980 வரை பிரபாகரனுடன் இருந்தவர்கள். ஐயர் 1976 – 1980 வரை பிரபாகரனுடன் இருந்தவர்தான் ஆனால் 1970 –
    1976 வரை இவர் இருக்கவில்லை ஆகையால் இப்பதிப்பு முழுமையானதாக ஏற்றுக்கொள்ளமுடியாது

  2. அரிச்சந்திரன் says:
    14 years ago

    பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசத்துடிக்கின்றது.

  3. Pingback: Indli.com
  4. நெருஞ்சி says:
    14 years ago

    எழுத வாசிக்கத் தெரியாத நிலையிலா கலாபதியும்,வாத்தியும் இருக்கிறார்கள்;எழுதச் சொல்லுங்கள்.

    ஆண்டு போட்டு எழுதச் சொன்னவர்கள்,”அறளை பேர்ந்து” போகுமுன் வெளிவரச் சொல்லுங்கள்.அதுவரை ஐயரின் எழுத்து ஒரு கல்வெட்டு.

    .பின் எது பூ,எது நார் என்பதை எங்கள் தீர்மானத்திற்கு விட்டுவிடுங்கள்.

    • மகேன் மாசில் says:
      14 years ago

      மிக சரியாக சொன்னீர்கள் நெருஞ்சி!

  5. thamizhan says:
    14 years ago

    கலாபதிக்கும் , நாகராஜனுக்கும் வாசிக்கத் தெரியாது, எழுதத் தெரியாது என்பதற்க்காக ஏதொ குத்துமதிப்பாகத் தெரிந்த ஜயர் எப்படி பிழையாக வரலாறை எழுத முடியும்.அப்படி என்றால்நீங்கள் இப்படிச் செய்யாலாமே,,ஜயர் எழுதியநூலை வாத்தியிடமும், கலாபதியிடமும்வாசித்துக் காட்டிப் பிழையைத் திருத்திவிட்டு தயவு செய்து வெளியிடலாமே.வரலாறு ஒன்றும் பொழுபோக்குப் புத்தகம் அல்ல.

    • நெருஞ்சி says:
      14 years ago

      ஒண்டு வரட்டும்;பிறகு திருத்திய(upgrade) பதிப்பு வரட்டும்;பிறகு அடுத்த பதிப்புரு(newer version) வரட்டும்..
      கணனிக்கு எழுதுற மென்பொருள் மாதிரி மனிதர்களுக்கு வரலாறு.
      எல்லாம் பொழுதுபோக்கானது;வாழ்க்கை ஓட்டத்தான்.
      thamizhan! சும்மா குறை பிடிக்காதேயுங்கோ.வியாசர் மகாபாரதம் எழுதும் போது ஒண்டியாத்தான் எழுதினார்.கணேசையர் எழுத, கனபேர் வேணுமெண்டிறது நல்லாயில்லை பாருங்கோ!.

  6. Inthu says:
    14 years ago

    புத்தகத்தை எழுதுவதில்நாகராஜவின் பங்களிப்பும் இருந்ததாக அறிகிறேன்,நன்றிகூடப் போடவில்லை.

  7. நெருஞ்சி says:
    14 years ago

    எழுதியவையில் வந்த எல்லாக் கதாபாத்திரங்களும் பங்களிப்பிற்கு உரியவையே;நன்றி சொல்வதற்கு விரும்பினால், புண்ணியாமீனைப் பிடித்து,விக்கிபீடியாவில் வெளியிடுங்கள்.

    புண்ணியாமீன்: உலகில் அதிக கட்டுரைகளை விக்கிப் பீடியாவில் ஏற்றியவர்.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen

    • நெருஞ்சி says:
      14 years ago

      பிழை திருத்தம்:
      உலகில் அதிக கட்டுரைகளை,தமிழில், விக்கிப் பீடியாவில் ஏற்றியவர் என்று வந்திருக்க வேண்டும்.

  8. கலையன் says:
    14 years ago

    இந்த புத்தகத்தில்,

    ஐயர் தனக்கொரு வரலாற்றை தேட முற்பட்டுள்ளார் இதுதான் உண்மை. உமா மகேஸ்வரன் பற்றியும் அவருடைய தனி நபர் ஒழுக்கம் பற்றியும் முழுமையாக குறிப்பிடப்படவில்லை
    இதேபோல் சோட் பாலா பற்றியும் பெரிதாக ஒன்றுமில்லை , பஸ்த்தியம்பிள்ளை உட்பட நாலு போலீஸ்காரர்கள் மிதான தாக்குதலை விரிவாக குறிப்பிட்டுள்ளார் ஏன்னென்றல் அந்த
    சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்தவர் என்றபடியால் அவருக்கு அதைப் எழுத முடிந்தது.
    அல்பர்ட். துரையப்பா மிதான தாக்குதல் பற்றியும், திட்டமிடல் எப்படி இருந்தது தாக்குதல் எப்படி நடைபெற்றது இதில் யார்யார் பங்குகொண்டார்கள் என்பதுபற்றி முழுமையாக இல்லை
    இது கண்டிப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இது விடுதலைப் புலிகளின் முதல் நடவடிக்கையாகும் முதல் அனுபவமாகும் . ஐயர் தெரிந்த விடயத்தை மட்டும் எழுதியுள்ளர்

    1980 ஆண்டு நீர்வேலியில் உள்ள வாய்க்கால்துறை என்னும் இடத்தில் அனைத்து உறுப்பினர்களும் முதன்முதல் சந்தித்த ஒன்றுகூடல் இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்குதலை
    நிறுத்தி வெகுசன இயக்கமாக மாற்றப்படவேண்டும் என்ற கருத்துக்கு அமைய இந்தஒன்று கூடல் நடந்தது இந்தக் கருத்தை எதிர்த்தவர்கள் யார்யார் என்பதுபற்றியும் முழுமை இல்லை.

  9. நெருஞ்சி says:
    14 years ago

    கலையன்! கலாவதியை கலைச்சு, கோழி அமுக்கிற மாதிரி அமுக்குங்கோ,”அந்த அல்பிரட்” வருவார்..

    “ஐயர் தெரிந்த விடயத்தை மட்டும் எழுதியுள்ளார்.”அதுதான் நல்லது.தெரியாததை எழுதினா ,அது கதை.

    //1980 ஆண்டு நீர்வேலியில் உள்ள வாய்க்கால்துறை……..//

    “நெல்லுக்கு இறைத்த நீர் “வாய்க்கால்” வழியோடி,புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.” அந்தாள் சொன்னது சரியாப்போச்சு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In