Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழத் தமிழ் சமூகம் ஏன் பின் தங்கிய நிலையிலுள்ளது – கிரேக்கப் படிப்பினைகளிலிருந்து…:கோசலன்

இனியொரு... by இனியொரு...
07/08/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

முதலாளித்துவப் பணக் கொள்ளையர்களை நிராகரித்த கிரேக்க மக்களின் வெற்றிக் கொண்டாட்டம்சூழ்நிலை மட்டுமே முன்னேறிய மக்கள் பிரிவுகளை உருவாக்கும் என்பது வரலாற்றின் நியதி. கிரேக்க மக்கள் ஐரோப்பாவில் மட்டுமல்ல உலக மக்களின் கவனத்தை ஈத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்ற்றியத்தின் தலைவர்களும் அதிகாரவர்க்கத்தின் தலைமையும் ஐரோப்பிய ஒன்ற்றியத்தின் தீர்மானத்திற்கு வாக்களிக்குமாறு அருவருக்கத்தக்க மிரட்டல்களை விடுத்தனர்.

ஊடகங்களில் போலியான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. பல்தேசிய நிறுவனங்களால் நடத்தப்படும் கிரேக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ஆதரவான கிரேக்கர்களின் கருத்துக்களைப் மட்டும் வெளியிட்டன.

ஐரோப்பிய ஜனநாயாகம் என்ற மாயை கிரேக்கத்தின் சர்வசன வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்துபோன ஐந்து நாட்களுக்குள்ளாகவே தகர்ந்துவிட்டதாக சதீஸ் கோவலாக்கிஸ் வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரித்தானியாவில் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பேராசியராகக் கடமையாற்றும் சதீஸ் கோவலாகிஸ் சிஸ்ரா கட்சியின் மத்திய குழு உறுப்பினர்.

கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; 18 தொடக்கம் 24 வயதானவர்களில் 85 வீதமானவர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இன்று 07.07.215 நடைபெற்ற பேச்சுவாத்தையில் கிரேக்கத்திற்கு கடன்வழங்க எந்த அடிப்படையும் கிடையாது என ஜேர்மனிய அரசு அறிவித்துள்ளது. மக்களைச் சூறையாடுவதற்கு கிரேக்க அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே கிரேக்க அரசிற்கு ஆதரவு வழங்கப்படும் என்பதில் ஐரோப்பிய நாடுகள் உறுதியாகவுள்ளன. கிரேக்க அரசை தமது நாட்டின் மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயற்படுமாறு கூறுகின்றன. அதனை ஜனநாயகம் என அழைத்துக்கொள்கின்றனர்.

கிரேக்க மக்கள் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கின்றனர் என்றும் வறுமையை எதிர்கொள்ளப் போகின்றனர் என்றும் பல்தேசிய வர்த்தக ஊடகங்கள் தமது பிரச்சாரத்தைத் தொடர்கின்றன. தமது வறுமை அதிகரிக்கும் என மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக தாம் தொடர்ந்து பல்தேசிய நிதிப் பயங்கரவாதிகளின் கொள்ளையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறுகின்றனர். அதனால் மக்களின் வாக்களிப்பு சோசலிசப் புரட்சிக்கான முன்னுரை என்பதை ஐரோப்பிய அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்கிறது.

இதனால் இரண்டு முக்கிய வேலைத்திட்டத்தை ஏகாதிபத்திய அரசுகள் முன்வைக்கின்றன.
முதலாவதாக சிஸ்ரா கட்சியை வலதுசாரி முதலாளித்துவ அடியாட்களின் கூடாரமாக மாற்றுவதற்குச் சதி செய்வது.

இரண்டாவதாக, கிரேக்க மக்களைப் பழிவாங்கும் வகையில் மீண்டும் மக்களைக் கொள்ளையடிக்கும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது.

உலகம் முழுவதும் கிரேக்க மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் பல்லாயிரக்கணகான மக்கள் கலந்துகொள்கின்றனர்.

கிரேக்கத்தை மேலும் சூறையாடுவதைத் தவிர, ஏனைய ஐரோப்பிய நாடுகளும் கிரேகத்தைப் பிந்தொடரலாம் என்ற அச்சமும் ஐரோப்பிய அதிகாரவர்க்கத்திடம் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது.

ஒரு வார எல்லைக்குள் நடைபெற்ற வாக்களிப்பு உலக மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தைக் குலுகியுள்ளது. ஐரோப்பிய உழைக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கை வித்துக்களை விதைத்துள்ளது. கிரேக்கத்தின் சிஸ்ரா அரசிடம் உறுதியான அரசியல் வேலைத்திட்டம் என்ற எதுவும் கிடையாது எனினும் கிரேக்க மக்கள் ஐரோப்பிய மக்களின் முன்னேறிய பிரிவினராகத் தம்மை அறிவித்துள்ளனர்.

உலகத்தின் ஒரு எல்லையில் சமூகத்தின் பெரும்பகுதி அழிவுகளிலிருந்து தம்மைச் சுதாகரித்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அதன் மற்றொரு முனையில் பின் தங்கிய சமூகத்தை தொடர்ந்து பாதுகாத்துப் பேணிக்கொள்ள அதன் தலைமைகள் முயல்கின்றன.

கிரேக்க மக்களுக்கு ஆதரவாக பரீஸ் நகரில் ஆர்ப்பாட்டம்
கிரேக்க மக்களுக்கு ஆதரவாக பரீஸ் நகரில் ஆர்ப்பாட்டம்

கிரேக்கத்தின் ஒரு சில நாட்கள் உலகம் முழுவதும் அதனை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து அவர்கள் போராடத் தயாராகவிருந்தது தான் காரணம்.

முள்ளிவாய்க்காலில் அழிப்பு நடைபெற்ற போது உலகத்தில் யாரும் திரும்பிப்பார்க்க முடியாத அளவிற்கு தமிழர்களின் பிற்போக்கு பழமைவாதத் தலைமைகள் நடந்துகொண்டன.

இனவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஏகாதிபத்தியக் கூலிகளாகவும் தம்மை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்திய அதே தலைமைகள் இலங்கை அரசின் அழிப்பின் பின்புலத்தில் செயற்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் ஒட்டுக்குழுக்கள் போன்று செயற்பட்டன. மாபியாக் குழுக்கள் போன்ற சாயலைக் கொண்டிருந்தன. தம்மைச் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும், நேர்மையான விமரசனங்களை முன்வைக்கவும் தவறி மக்களை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றன.

அவர்கள் இன்றும் தொடர்கின்றனர். தம்மைத் தாமே தலைமைகள் எனக் கூறிக்கொண்டு மக்களை அழிக்கத் துணைசெல்கின்றனர். உலக மக்களிடமிருந்து போராட்டத்தை அன்னியப்படுத்தி அதிகாரவர்கத்திடம் அதனை ஒப்படைத்துள்ளனர்.

இனவழிப்பு நடைபெற்று ஆறு வருடங்கள் கடந்து சென்ற பின்னரும் பழமைவாத வலதுசாரிக் குழுக்கள் பாராளுமன்ற ஆசனங்களுக்காக மோதிக்கொள்ள புலம்பெயர் குழுக்கள் அதனைப் £10 பற்றுச்சீட்ட்டிற்கு விற்பனை செய்கின்றன.

pro_ltte_protestsஇலங்கையில் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றென அதற்கான நியாயத்தை கிரேக்க மக்களைப் போன்று உலக மக்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக உலக மக்களின் எதிரிகளின் அரவணைப்பில் பிழைப்பு நடத்துகின்றனர்.

ஏகாதிபத்தியங்களால் அவற்றின் அடிமையான இலங்கை அரசின் ஊடாக இனப்படுகொலை நடத்தப்பட்டது. இச் சூழ்நிலை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொண்ட முன்னேறிய மக்கள் அணியை ஈழத்தில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் சூழ்நிலையை மாற்றுவதற்காக தமிழ் பாராளுமன்ற அரசியல் தலைமைகளும், புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் களமிறக்கப்பட்டன. அது ஈழத் தமிழ்ச் சமூகத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக பின் தங்கிய நிலையிலேயே வைத்துள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மகிந்த வேட்பாளரா? : மக்களிடமிருந்து உண்மையை மறைக்க்கும் ‘நல்லாட்சி’ மைத்திரி

மகிந்த வேட்பாளரா? : மக்களிடமிருந்து உண்மையை மறைக்க்கும் 'நல்லாட்சி' மைத்திரி

Comments 1

  1. Suntha Sunthararajan says:
    11 years ago

    “கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; 18 தொடக்கம் 24 வயதானவர்களில் 85 வீதமானவர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.”, the thinking behind it is that if you are a leftist they think they do not have to pay back their loans. I am sorry, wrong assumption. No one is going to subsidize your easy living for nothing, not even the Chinese or the Uncle Putin 🙁

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...