புலம்பெயர் தமிழர்களைச் தென்னிந்திய சினிமா மோகவலைக்குள் சிக்கவைக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற அறிகுறிகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. அரசியல் வழிமுறை தொடர்பான சரி தவறு என்ற விமர்சனங்களுக்கு அப்பால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட சமூக உணர்வு அதிகாரவர்கத்தைச் திரும்பிப்பார்க்க வைத்தது. இன்று இணைய ஊடகங்கள் உட்பட புலம்பெயர் ஊடகங்கள் அனைத்தும் லைக்கா லிபாரா என்ற பல்தேசிய நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டு முழுமையான கேளிக்கைகளின் காவிகளாக மாற்றமடைந்துள்ளன.
அவலத்துள் வாழும் ஈழத் தமிழர்களின் கலை கலாச்சார எழுச்சியை அழித்து அவற்றைக் கோடம்பாக்கத்திற்கு அழைத்துச் சென்று வியாபாரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக லிபாரா ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. ஐ.பி,சி என்ற ஊடகத்தைக் கையகப்படுத்தியுள்ள லிபாரா இதுவரை நடந்திராத அளவில் சினிமா மோகத்தைத் தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுகிறது. பிரான்சில் அந்த நிறுவனம் நடத்தும் தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் கேளிக்கை நிகழ்ச்சியில் பாடி வெற்றிபெறும் ஒருவருக்கு கோடம்பாக்கத்தில் குடியிருக்க்கும் இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் பாடுவதற்குப் பிச்சை போடுவோம் என லிபாரா அறிவித்துள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளைப் புறக்கணிப்பதண் ஊடாகவே கோடம்பாக்கத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ்த் தேசியக் கலைகளை மீட்க முடியும்.
மக்களின் போராட்ட உணர்வையும் சமூக அக்கறையையும் மழுங்கடித்து இலங்கை அரசு உட்பட்ட அதிகாரவர்க்கம் கேளிக்கைகளை நோக்கித் திட்டமிட்டுத் திசை திருப்பும் நோக்கத்தையும் புறக்கணிப்பின் ஊடாகவே எதிர்கொள்ள முடியும்.