முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* மத்திய கல்வித்துறை சார்பாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதோடு கல்வி துறையில் மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி உரிமை வழங்கிட வகை செய்யும் முறையில் கல்வி அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்வியை பொது பட்டியலில் இருந்து நீக்கி மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
* இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை ஏவிவிடும் வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான முடிவினை ஏற்படுத்திடும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* தமிழகத்தில் தொழில் வர்த்தகம் பெருகிடவும், நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் அதிகரித்திடவும், மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயரவும், தென் மாவட்டங்கள் பெருமளவிற்கு வளர்ச்சி பெறவும் வழிவகுக்கும் சேதுசமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* திருமணங்களை பதிவு செய்யும் சட்டத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவன செய்ய வேண்டும்.
* மாநிலத்தில் உள்ள பல்வேறு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசை பாராட்டுவதுடன், மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்.
* இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழ் மொழியை உயர் நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாச்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாச்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
* 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டதிட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* கரும்பு விவசாயிகள் மத்தியில் பொறுப்பற்ற முறையில் தவறான தகவல்களை அளித்து அவர்களை திசைதிருப்பும் ஜெயலலிதாவின் பொய் பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர்,
KP என்றழைக்கபடும் குமரன் பத்மநாதன் தற்போது அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் பல நாடுகளில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ராஜபட்சவுக்கு ஆதரவாக செயல்படுமாறு கேட்டுக்கொள்வதாக தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜபட்ச அரசுக்கு எதிராக வலுப்பெறும் சர்வதேச எதிர்ப்புகளை தணிப்பது மற்றும் வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களின் செயல்பாடுகளை தடுக்கும் பணி ஆகியவை கே.பி.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கும் கே.பி. இவ்வாறு வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசுவது, அவர் கைது செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்புவதாக உள்ளது என்றும் இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை
ரவி நீங்கள் குறிப்பிட்டது போல இணையத் தளங்களில் செய்திகள் கசிய விடப்பட்டுள்ளது உண்மையே!அத்துடன் இலங்கை எதிர்க் கட்சித் தரப்புகளும் கே.பி பற்றி இல்லாத பொல்லாத செய்திகளை சொல்கின்றன!பூரண பாதுகாப்புடன் வெளி நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும்,சொகுசு மாளிகையில் குடி வைக்கப்பட்டிருப்பதாகவும்,பசில் ராஜபக்ஷவுடன் தோளில்?கை போட்டபடி சுற்றுவதாகவும் சொல்கிறார்கள்!ஆனாலொன்று,எவருமே நேரிலோ,ஆகக் குறைந்தது ஒரு பக்கமாகவோ கூட கே.பியை பார்த்ததாக இல்லை!இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது!எங்கள் காது வெறுமே தான் இருக்கிறது பூ சுற்ற வசதியாக!!!!இந்தத் தகவல் கொலைஞருக்கும் சேர்த்துத் தான்!!!!!!!!!!!!
கே.பி. கடத்தப்பட்ட மர்மம் பற்றி புலி ஆதரவுப் பிரமுகர்களிடமிருந்து நம்பகமான விளக்கங்கள் எதுவும் இது வரை இல்லை.
ஹொட்டேல் சம்பவம் பற்றிய கதை மிகப் பலவீனமானது. பிரபாகரன் உயிருடன் இருக்கிற கதை போலத் தான் அதுவும்.
எங்கள் காது வெறுமே தான் இருக்கிறது பூ சுற்ற வசதியாக???
மே 18 பின்னர்:
தேச விடுதலைக்கு பணிசெய்தோருக்கும், செய்வோருக்கும் தமிழ் தேசியம் வழங்கும் அதி உயர் விருது “தமிழின துரோகி”
[ ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010, 10:50.53 மு.ப | இன்போ தமிழ் ]
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத் தமிழினம் மிக மோசமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் வழிகாட்டியாக- அவர்களின் உரிமைக்குரலாக ஓயாமல் இயங்கிய புலிகள் இயக்கமும், அதன் தலைமைத்துவமும் இல்லாது போயுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை இது.
தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற அச்சம் இப்போது உலகெங்கும் வலுப்பெறத் தொடங்கி விட்டது. இதற்குக் காரணம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் புலிகள் இயக்கம் சந்தித்த பேரழிவுக்குப் பின்னர்- அதனைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தான்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
– இன்போ தமிழ் குழுமம் –
கேபி மீது விமர்சனம் செய்தல் என்பது ஒருவகையில் தமிழீழத் தேசியத் தலைமையை விலைபேசுவதற்க்கு ஒப்பானது
செத்தால் மாவீரன், சிறைப்பட்டால் துரோகி இது இன்றைய வரைவிலக்கணம்.
செத்தவனையும் சிறை சென்றவனையும் விவாதிப்பதற்க்கு எவருக்கும் உரிமை இல்லை இது கரிகாலன் தத்துவம்
இனி …
தமிழின துரோகி முத்திரை -இலவசம்
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இந்த முத்திரை தயாரிக்கப்பட்டு கடைத் தெருவுக்கு வந்தது. இதற்கு விலை வைத்திருந்தால் கூட யாருமே வாங்க தயங்கியிருப்பார்கள்.. இலவசம் என்று சொன்னவுடன் முத்திரையை அனைவரும் வாங்கினார்கள்.. கலைஞர் மு.கருணாநிதி ராசியானவர் அச்சாரம் போட்டார் முதல் முத்திரை அங்கு குத்தப்பட்டது, பின்பு தமிழின உணர்வாளர் ஜயா நெடுமாறன் தொடர்ந்து இலட்சிய வீரர்களுக்கு வழங்கிவந்தார்.
அதிலிருந்து உலகின் அனைத்து தமிழரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தமது கருத்துக்கு எதிர்வினை கொள்வோருக்கு எதிராக அவர்களை வன்மம் செய்து ’தமிழின துரோகி’ முத்திரை குத்தப்பட்டு இணையத்தளங்களினூடாகவும் சில மனிதர்களூடாகவும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது…
ஈழம், சகோதர யுத்தம் , தேசியத் தலைவர் பிரபாகரன், தேசியத்தலைவரின் வீரச்சாவு, ஈழப்போரின் இறுதி யுத்தமும் தமிழர்களின் எதிர்காலமும், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழக தலைவர்களுக்கான கருத்துருவாக்கம், தமிழீழ மக்களுக்கான எதிர்கால ஆரோக்கியமான செயற்பாடு, என ஏதாவது ஒன்றை சொன்னாலோ ஒன்றை பற்றி பேசினாலோ இது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
சிறு குறிப்பு உடனிருந்தவர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்,
தேசியத் தலைமைக்கு எதிராகவும், தமிழ் தேசிய விடுதலைக்கும் எதிராக பல எதிர்விளைவுகளை செய்தவர்களுக்கு கூட தமிழீழத் தேசியத்தலைவர் துரோகி என தன் வாயால் சொன்னதே இல்லை. இன்று அந்த தலைவன் புகழ் பாடுவோர் அந்த தலைவனோடு 37 ஆண்டுகள் நடந்து வந்தவர்களையும், தலைவர் சொன்னவற்றை செய்தவர்களையும் தொடர்ந்து அந்த தலைவனின் இலட்சிய கனவை நனவாக்க முனைபவர்களையும் துரோகிகள் என முத்திரை குத்தி அன்னியமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, வேதனையானது அநாகரீகமானது. விடுதலை என்பது சுதந்திர செயற்பாடு அது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கப்படவில்லை.
http://www.infotamil.ch/ta/view.php?2b44OS84a4aTd4O24b3EEQM2e22g0AKecd2YcoCce0de0MqEce0dcYJv2cd0EgmA20
இது கே.பீ. பற்றிய விமர்சனமல்ல.
இது, இது வரை எமக்குக் கூறப்பட்டு வந்த இவ்வாறான பொய்கள் பற்றிய விசாரணை.
விடுதலையின் பேரால் 2.5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
விடுதலையின் பேரால் 5 லட்சம் பேர் அகதி வாழ்வு வாழ்கின்றனர்.
விடுதலையின் பேரால் 10 லட்சம் பேர் நாடு நீங்கியுள்ளனர்.
இவற்றுக்கு ஒரு மனிதரோ ஒரு இயக்கம் மட்டுமோ பொறுப்பல்ல.
தமிழ்த் தேசியம் சென்ற பாதை நேர்மையாக விசாரிக்கப் பட வேண்டும்.
உண்மைகட்கு அஞ்சி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது.