இலங்கையில் மக்கள் அவலத்துள் வாழ்கின்ற நிலயில் உலகம் முழுவதும் மக்களின் அவலத்தைச் மூலதனமாக்கிக்கொள்ளும் வியாபாரிகள் தமது அரசிய லை எந்தத் தடையுமின்றி நடத்துகின்றனர். தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே சிறப்பு முகாம்களுக்குள் ஈழத் தமிழர்களை விலங்குகள் போன்று சிறைவத்துக்கொண்டு ஜெயலலிதாவும் கருணாதியும் அவர்களின் அடிவருடிகளும் ஈழத்தமிழரின் உரிமைக்காகக் குரல்கொடுப்பதாக மக்களை ஏமாற்றிவருகின்றனர்.
வன்னிப்படுகொலைக் காலத்தில் இலங்கை அரசோடு இணைந்து அரசியல் நாடகம் போட்ட கருணாநிதி டெசோ என்ற பெயரில் ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பைத் தோற்றுவித்து உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் அவலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
அதன் மற்றொரு வடிவமாக கருணாநிதி குடும்ப வாரிசுகளில் ஒன்றான மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கட்டைப்பஞ்சாயத்து திருமாவளவன் போன்ற சிலர் இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து ஈழத் தமிழர்க்ள் குறித்த மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
எண்பதுகளில் விடுதலைப் புலிகளை எம்.ஜீ.ஆர் ஊடாகவும், ஏனைய அமைப்புக்களை கருணாநிதி ஊடாகவும் இந்திய உளவுத்துறை கையாண்டது. அந்தக் காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட அமைப்பான டெசோ இப்போது மீட்சி பெற்றுள்ளது. டெல்லியில் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஸ்டாலினும் டெசோ உறுப்பினர்களும் சந்தித்து `டெசோ ’ அமைப்பின் கண்துடைப்புத் தீர்மானங்களை பிரணாப்பிடம் வழங்கி, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். அவர்களிடம்,‘பிரதமரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக’ இந்தியாவின் முன்னை நாள் பாதுகாஅப்பு அமைச்சரும் இன்றைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி கூறினார்.
சந்திப்பின் பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின் குழு பத்திரிகைகளுக்கு அறிக்கைவிட்டு விளம்பரப்படுத்திக்கொண்டது. இலங்கையில் இனச்சுத்திகரிப்பு யாருடைய தொந்தரவும் இன்றி தொடர்கிறது.
Yes, we are like the Palestinians one one hand. They have started a tirade against the High Commissioner Ms. Navi Pillay in Geneva. Honourable Mahinda Samarasinghe said that she may be biased as she may be Tamilian.