ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். ஈழத் தமிழர்கள் குறித்து அவர்களைத் தவிர அதிகாரத்திலுள்ள அனைவரும் பேசுகிறார்கள்.
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கை சுதந்திரம் பெற்றப் பிறகு சிங்களத்தோடு தமிழுக்கும் சமஉரிமையும் சிங்களரோடு தமிழர்களுக்கும் சமஉரிமையும் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அறவழியில் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிங்கள அரசு முயற்சி செய்தது. இந்த நிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழர்கள் 1977ஆம் ஆண்டு முடிவு செய்தனர். அதையே அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன் வைத்தனர். தமிழர் பகுதியில் இருந்த ஒரே ஒரு தொகுதியைத் தவிர அத்தனைத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே கோரிக்கைக்கு மக்கள் பேராதாரவு தந்து வந்திருக்கின்றனர். தமிழர் பகுதியில் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றை கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல் இலங்கையில் இருந்த சில மணி நேரங்களில் யாரோ சிலரை பார்த்துப்பேசிவிட்டு முடிவு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரும் பொறுப்பை வகிக்கும் சுஷ்மா சுவராஜிக்கு அழகல்ல.
கடந்த போர் முடிந்த பிறகு ராணுவக் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய இராசபக்சே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தோற்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார். ஆனாலும் மக்கள் ஆதரவினால் அவர்கள் வெற்றிபெற்றார்கள். சிங்கள அரசோடு இணங்கி அவர்கள் அளித்த அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிற தமிழர்கள் வேண்டுமானால் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல சொல்லியிருக்கலாம். ஆனாலும் அந்த மக்கள் முழுமையாக இன்னமும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தியே வருகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் அந்த மக்கள் மீது திணிக்க முடியாது. அவ்வாறு கூறுவது அந்த மக்களை அவமானப்படுத்துவதாகும். இப்போதும் ஐ.நா. மேற்பார்வையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அந்த மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பது வெளியாகும். இந்தக் கோரிக்கையை ராசபட்சேவிடம் வலியுறுத்துவதற்கு சுஷ்மா சுவராஜ் தயாரா? என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன்.
இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்திக்காக போராடியவர்கள் யார் என்பதும் நெடுமாறனுக்கு தெரியும்… பிரெமதசவுடன் சேந்து ஒப்பந்தத்தை இல்லாமல் பன்னியது யார் என்பதும் தெரியும்….ஈழதேசிய ரானுவத்தை சிங்களத்தோடு நின்ரு அழீத்தது யார்…யார்….ஐய்யா…….ஈழத் தமிழர்களை முட்டால்கள் என்ரு சொல்ல வாரார தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தியே வருகிறார்கள்.புலி சாராமல்……..நெடுமாறன் யார்….புலி …..யார்…….அறைகூவல் விடுக்கிறேன்…நெடுமாறன் கோபலசமி சீமான் நாவடக்கினால் தமிழீழம்மலரும்
He is also just another voice like Dr. Wickremabahu Karunaratne. In 1990 they had the book written in Tamil by Kalaignar Kaunanithy about the Central Government and Regional Autonomy. This time they had the book written in English by Arulpragasam about the Traditional Homeland.
மிழீழ விடுதலைப் புலிகள் உதயமாகிய முப்பத்தாறாவது வருட நிறைவு
– டி.பி.எஸ். ஜெயராஜ்
நண்பர்களே!
இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாக ஸ்ரீலங்காவின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ), செயற்பாட்டுக்குரிய ஒரு உட்பொருளாக இன்று இல்லை. எல்.ரீ.ரீ.ஈ ஒரு செயல் அமைப்பாக இன்று இருந்திருந்தால் அது தனது 36வது பிறந்தநாளை கடந்த மே 5ந்திகதி கொண்டாடியிருந்திருக்கும்.
மே 2009ல்,யுத்தத்தில் ஏற்பட்ட எதிர்மாறான விளைவுகள் காரணமாக, ஸ்ரீலங்காவின் வடபகுதியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு ஏற்பட்ட இராணுவ தோல்வி,ஸ்ரீலங்காவில் புலிகளின் இருப்புக்கு ஒரு முடிவினைக் கொண்டுவந்தது. இது அநேகமான எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களுக்கும், அனுதாபிகளுக்கும் பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
எல்.ரீ.ரீ.ஈ, ஸ்ரீலங்காவின் ஆயுதப்படைகளை முற்றாகத் தோற்கடித்து, ஒரு சுதந்திரத் நாடான தமிழீழத்தை ஒரு தட்டில் வைத்து நீட்டப்போகிறது என்று எண்ணியவர்கள் பலர் இருந்தனர். எல்.ரீ.ரீ.ஈ.யினால் மேற்கொள்ளப்பட்ட பல்வகையான மனித உரிமை மீறல்களையும், கண்டு கொள்ளாமல் இருந்ததுடன் அவைகளைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அவைகயை அப்பட்டமாக மறுப்பதற்கும் தயாராக இருந்தனர், ஏனெனில் விடுதலைப் பாதையில் இவைகள் தவிர்க்கமுடியாத தீயசக்திகள் என அவர்கள் நினைத்ததுதான் இதற்கான காரணம். எனினும் யாராவது ஆக்கபூர்வமான விமர்சனத்தை வெளியிட்டால்கூட அவர்களை அவதூறாக பேசி,துரோகி என்று கண்டனம் செய்தனர்.
மேலும் எல்.ரீ.ரீ.ஈ பின்பற்றிவரும் நடவடிக்கைகள் வெற்றியை பெற்றுத் தராது, மற்றும் தீக்க்கமான தோல்வியே அதன் தலையில் எழுதப்பட்டு வருகிறது என்று சுட்டிக் காட்டினால் கூட அத்தகைய அறிவுரைகள் புலிகளாலும் அவர்களது சகபயணிகளாலும் நிராகரிக்கப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டன. இராணுவ ஆதிக்க சிந்தனையே புலிகள் வட்டாரத்தில் பரவியிருந்ததுடன், இராணுவ வெற்றியே ஒரே தீர்வு என்கிற நம்பிக்கையே அவர்களை நல்லெண்ணத்துடன் கூறப்பட்ட அறிவுரைகளை அவமதிப்பு செய்ய வைத்தது.
புலிகளை அவர்கள் ஒப்புக்கொண்ட இலட்சிய நோக்கத்தில் வெற்றியடையப் போவதில்லை என்று எச்சரிக்கை செய்யத் துணிந்ததற்காக, எல்.ரீ.ரீ.ஈயினர் மற்றும் அவர்களது ஏவலர்கள் இடத்தில் கொடூரமான அவமதிக்கத்தக்க உபசரிப்பை பெற்றதற்கு எனக்கு தனிப்பட்ட முறையில் அனுபவம் உண்டு. நான் பல சந்தர்ப்பங்களில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றுக்கான உடனடி திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியதுண்டு.எனக்கு வேண்டியிருந்ததெல்லாம் எல்.ரீ.ரீ.ஈ தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதுதான், ஆனால் சுய – கற்பனையான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.
2008 மே,5ல் எல்.ரீ.ரீ.ஈ தனது 32வது வருட நிறைவை அனுஷ்டித்தபோது, “பொட்டம் லைன்” பத்திரிகையில்; ,2008 மே,7ல் எழுதிய ஒரு கட்டுரையில், புலிகளின் முன்னேற்றத்தை குறிப்பிட்டு, தமிழ் மக்களின் மிகப்பெரிய நலனைக் கருத்தில் கொண்டு எல்.ரீ.ரீ.ஈ அதனது சாத்தியமற்ற கனவான தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டுமென்று புலிகளிடம் கெஞ்சிக் கேட்டிருந்தேன்.அந்தக் கட்டுரையின் தலைப்பு “ 32 வது வயதில் எல்.ரீ.ரீ.ஈ: எங்கு போகிறது எல்.ரீ.ரீ.ஈ?” என்றிருந்தது. வாசகர்கள் பலராலும் அந்தக் கட்டுரை வரவேற்கப்பட்டு,சாதகமான மின்னஞ்சல்கள் ஏராளம் அவர்களால் எனக்கு அனுப்பப்பட்டது. அதேநேரம் புலிகளும் புலிகளுக்கு சார்பான சக்திகளும் ,இராணுவ வெற்றி நிச்சயம் மற்றும் தமிழீழம் தவிர்க்க முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டு தரக்குறைவான மிகப்பெரிய மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள்.
அதன்பின்னர் அதே கட்டுரையை 2009 ஜனவரி,19ல் “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கு போகிறது?” என்கிற தலைப்பில் எனது வலைப்பதிவில் மறுபிரசுரம் செய்திருந்தேன். அதற்காக 125 கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தன.அப்போது புலிகள் இராணுவ பதிலடிகளை ஏற்று பின்வாங்கிச் சென்றுகொண்டும், இராணுவம் வெற்றியை சுகித்தவாறே முன்னேறிக் கொண்டும் இருந்தது. இந்தச் சமயத்தில் வலைப்பதிவில் எதிரொலித்த கருத்துக்களில் அநேகமானவைகளின் தொனியிலும், போக்கிலும் அந்த மனநிலை பிரதிபலித்தது, நிச்சயமாக சில தீவிர புலி ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான கண்டனங்களும் வந்திருந்தன.
ஏறக்குறைய நாலு மாதங்களின் பின்னர்,எல்லாமே முடிந்துவிட்டது ,மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நந்திக்கடல் ஏரியின் கரையில் இறந்து கிடந்தார். இது எண்ணற்ற மரணங்களுக்கும் அளவிடமுடியாத அழிவுகளுக்கும் மற்றும் பாரிய இடப்பெயாச்சிக்கும் வழிவகுத்த தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் சிறப்பான மறைவை அடையாளமிட்டது.
இன்று உடைந்து நொறுங்கிப்போய், எண்ணிக்கையில் குறைந்து தீவின் நான்காவது பெரிய இனம் என்கிற நிலையை எட்டிப்பிடித்துள்ள ஸ்ரீலங்காத் தமிழர்கள், உடைந்த பாகங்களை பற்றிப்பிடித்து வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொறுப்புடன் மிக ஆழமாகச் சிந்திக்கும் தமிழர்களால், வாழ்க்கை ஒருபோதும் முன்னரைப்போல இருக்காது என்பதை நன்கு உணரமுடியும்.
அன்று என்னை கசப்புடன் விமர்சித்தவர்களில் அநேகர் இன்று இந்த நிகழ்வுகளின் திருப்பத்தால் திகைப்படைந்து குழம்பிப்போயுள்ளார்கள். தற்போதைய நிலமையைக் குறித்து வாசகர்களிடமிருந்து கிடைத்துவரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களின் எண்ணிக்கை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.சிலர் பொட்டம் லைன் ,மற்றும் எனது வலைப்பதிவான டிபிஎஸ்ஜெயராஜ். கொம் என்பனவற்றில் வெளியிட்டிருந்த எனது முந்தைய கட்டுரையை சுட்டிக்காட்டி, யதார்த்தத்தை அறிந்தபின் உண்டாகும் ஞானம் தங்களின் முந்தைய எண்ணத்தை மாற்றிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
பிரபாகரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு திருப்தியான ஒரு தீர்வைக்கண்டு அதை முடித்து வைப்பதற்கான சக்தியையும், தகுதியையும், கொண்டிருந்தும் அதை நிறைவேற்றத் தவறிவிட்டதுடன், இறுதி ஆய்வின்படி தமிழ்மக்களை வஞ்சித்தும் விட்டன.
எல்.ரீ.ரீ.ஈ நல்ல நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைகளில் கலந்துகொண்டு,ஐக்கிய ஸ்ரீலங்காவிற்குள் தமிழர்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் தீர்வினை கொழும்புடன் பேரம்பேசல் மூலம் பெற்றிருந்தால் என்ன, என்று நான் சிலசமயம் எண்ணிப் பாக்க்கும்போது சோகமான உணர்வுகள் என்னை வாட்டி வதைப்பதுண்டு.
தற்சமயம் நடைமுறைக்கேற்ற ,சுயநலமற்ற தலைமை பறிக்கப்பட்ட தமிழ்மக்கள், போலிப் பசப்புரைகளை பேசி, நீண்டகால நடைமுறையில் செயலற்று தோல்வியடையக்கூடிய, நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுபவர்களை நம்பியதால் தலையற்ற கோழிக்குஞ்சைப்போல வெறிபிடித்து ஓடித்திரிகிறார்கள்.
நான் அனுபவிக்கும் இந்த வேதனை சாகுமட்டும் என்னைவிட்டு நீங்காது என்பது எனக்குத் தெரியும். ஸ்ரீலங்காவில் தமிழ்மக்கள் ஒரே சீராக குறைந்து மற்றும் அழிந்து போவதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். ஆனால் தத்துவரீதியாகவும் மற்றும் சேர்.எட்வட் பிட்ஸ்ஜெரால்ட், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த உமர்கயாமின் நான்குவரிப் பாடலில் வரும் மறக்கமுடியாத வாசகங்களை எண்ணிப்பார்த்தும் என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.
“நகரும் விரல் எழுதுகிறது,மற்றும் அது எழுத்துக்களை வைத்து மேலும் நகருகிறது,
அல்லது உங்கள் எல்லா நல்லவைகளையும் அல்லது புத்தியையும்
திரும்பவும் வசப்படுத்தி ஒரு அரை வரியை அழிப்பதற்காக, அல்லது
உங்கள் எல்லாக் கண்ணீரும் அதிலுள்ள ஒரு வார்த்தையை கரைப்பதற்காக”
இந்தப் பின்னணியில் எல்.ரீ.ரீ.ஈ யின் 36 வது பிறந்த வருடத்தில் அந்தக் கட்டுரையை நான் மீண்டும் மறுபிரசுரம்; செய்கிறேன்.கடந்த காலத்திலிருந்து, நிகழ்காலத்தை புரிந்து கொள்ளக்கூடிய, மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள உதவக்கூடிய பாடங்களை ஒருவர் கற்றுக்கொள்ள விரும்பினாலே அன்றி, கடந்தகாலத்தைப்பற்றி பேசுவது பயனற்றது என்பதை நானறிவேன். அதை திரும்பவும் இங்கு பிரசுரிப்பதன் எனது நோக்கம் அதை வாசிக்கும் தீவிர ரசிகர்களது பதில்களையும் மற்றும் தாக்கங்களையும் அறியவேண்டும் என்பதே.சில ஏற்புடைய கருத்துக்களும் வரக்கூடும் என நான் நினைக்கிறேன்.
தேனி இனையத்தில் டிபிஎஸ் ஜெயராஜ்
டிபிஎஸ் போல ஒரு பொறம்போக்க இங்க மேற்கோள் காட்டிக்கொண்டு …
Honourable Ranil Wickremasinghe was at Batticaloa. Honourable Royalist Habir Hasheem of Mawanella is correct. He kept his word. He removed the road blocks. Honourable Alizahir Moulana of Eravur brought him to Batticaloa, then.
D. B. S. Jeyaraj is in Canada. They publish his writings here as he has an established reputation. Nobody is ready to publish my writings here, yet. Mr. Sri Kuganesan (1965) is back at Batticaloa s the Senior Superintendant of Police after 10 years. In 2002 he was an Assistant Superintendant of Police. I also have an American Orignale. The Grand Old Party – LSSP – Dr. Sumanasiri Liyanage: There is a Tamil Nation in the island of Sri Lanka – Shri Lanka.