இந்திய மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவரச அரசணையில் (எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ் மக்கள் படுகொலை தொடர்பாக தமிழகத்தில் நிலவும் மனக்கசப்புகளை ஆபத்தான உணர்வு என்று சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பை இலங்கையில் நிலவும் கொந்தளிப்பான நிலையை பயன்படுத்தி அந்த அமைப்புக்காக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், நிதிகள் திரட்டி தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
போரின் முடிவின் போது பெரும்பலான புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்திய, இலங்கை அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பழிவாங்கும் அணி சேர்ப்பு ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
மேலும் எஞ்சியுள்ள போராளிகளில் பலர் சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தை தங்கு தளமாக பயன்படுத்தி மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கோடு இருப்பார்கள் என்பதை புறந்தள்ளி விட முடியாது.
அகதிகளுக்கு வைத்த ஆப்பு
மேலும் அகதிகள் என்னும் போர்வையில் வருவோரும் இந்தியா மீது பழிவாங்கும் உணர்வுடனே இருப்பார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். உலகம்
முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.
1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;
2) புலிகள் மீது தடை அமலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.
3) இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.மேலும்
அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும்,
ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின்
(1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.இவ்வாறு இந்த அவரச கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
காரணகர்த்தா யார்? என்ன நடக்கும்?
போருக்குப் பின்னர் உயிர் தப்பி வந்த ஏராளமான போராளிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் தமிழகத்தில் தங்கியிருக்கிறார்கள். விரைவில் இவர்களை கைது செய்யவோ அல்லது முழுமையான கண்காணிப்பின் கீழோ கொண்டு வருவதும், விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஆளும் கருணாநிதி, சோனியா, மன்மோகன் கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் மீண்டும் ஈழப் பிரச்சனையை பிரச்சாரக் கருவியாக பயன்படுத்தினார். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் என்று அவர்களை முடக்கவும்.
இனக்கொலைக்கு எதிராகப் பேசும் ஜனநாயக சக்திகளை நிரந்தரமாக சிறையிலடைக்கவும். எழுத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க்கும் வகையிலுமே இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆதரவாக பேசுவது மட்டுமல்ல இனகொலைக்கு எதிராகவோ, இலங்கை அரசுக்கு எதிராகவோக் கூடப் பேசினால் கூட தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ணும் கருப்புச் சட்டம் பாயும் வாகையில் இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் சூத்திரதாரி கருணாநிதிதான்.
காரணம் ஈழப் போரின் போது செய்த துரோகங்களும் அதையொட்டி உலகம் முழுக்க எதிர்ந்த கருணாநிதி எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் திணறும் நிலையில் மீண்டும் தேர்தல் வருகிறது. கருப்புச் சட்டத்தின் துணையோடும் போலீசின் துணையோடும் இதை அடக்கவே மத்திய உள்துறை அமைச்சகத்தை கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார் என்பதோடு பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில்தான்.
புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளை விமர்சிக்கிறவர்கள் கூட விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்தியாவின் போர் வெறிக்கு எதிராக பேசினால் கூட தண்டிக்கப்படுவார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
why indian government behaves like this.it is because srilankans are blackmailing india with the confessons of kumaran padmanathan which would have indicted congi .why you are not raking up rajiv gandhi case.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!!…..//அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.//– வினவு.காம்- “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்! – வணக்கம் நன்றி “FOR EVER!”.
ஈழத்தமிழர்கள் இனியும் இந்திய அரசை நம்பி ஏமாறக் கூடாது. இந்தியாவின் காலனிப்பகுதியாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் சுரண்டல் நோக்கங்களுக்காகவே ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு காவு கொடுக்கப்பட்டுள்ளது. இனியும் இந்தியா ஈழத்திற்கு உதவும் என்று நம்புகிறவர்கள் முட்டாள்களே! தனது உளது நிறுவனம் மூலமாக ஜெகத்கஸ்பர், பாலகுரு, பத்திரிகையாளர்? பாண்டியன்… இன்னும் சிலர் மூலம் தொடர்ந்து ஈழ மக்களின் உணர்வுகளை திசை திருப்பி வருகிறது இந்தியா. தமிழக முதல்வர் கருணாநிதி இன்றைய இந்திய தேசிய அரசியலில் மிகப்பெரிய நுகத்தடியாக மாறிப்போயுள்ளார். இனியும் கருணாவிடம் கருணையை எதிர்ப்பாக்கிறவர்கள். ஈழ சிந்தனைக்கு எதிரானவர்கள் என்றே நினைக்க வேண்டியுள்ளது.
அன்பன், நீங்களும் “இந்திய நிர்வாகத்தை எதிர்க்கிறீர்கள்” “நானும் எதிர்க்கிறேன்”.”ஜே.வி.பி. யும் எதிர்க்கிற்து!,நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் வழியில்,”லங்கா சம சமாஜியியும்” மகிந்தா போல் எதிர்க்கிறது.மகிந்தா இதன் வழி வந்தவர்!.பண்டார நாயக்காவின்,”சிங்களம் மட்டும் சட்டத்தை” “லங்கா சசமாஜ கட்சி ஆதரித்தது”.நடைமுறை என்ன??!!….கலிகாலம்…”தமிழ் நாடு என்பது இந்தியாவின் 26 மாநிலங்களில் ஒன்று என்பதுதான்”!.இலங்கைத் தமிழரின் “ஜமீந்தார் விளையாட்டு சரிவராது!”.சரிவரும் என்று சொல்பவர்கள்,கைகளில் “மல்லிகைப் பூ சுற்றி” மைனர் விளையாட்டு விளையாடுபவர்களிடம் வியாபாரம் செய்ய நினைப்பவர்களின் கூற்று.இதில்,”யாழ்ப்பாணம் கல்லியங்காடு(டெலோ சபாரெத்தினம்) மற்றும் காஞ்சீபுரம் “செங்குந்த முதலியார்களின்” பாசத்தில் இழைபவர்கள்??”.இந்த குழப்பம் நீங்கி தெளிவு வேண்டுமென்றால்,”ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட சிந்தனை தேவை!”,அது சிங்களவர்களிடமும்,இந்திய “காலனித்துவ நிர்வாகத்தினடமும்” இருக்கிறது(இதனுடன் ஏன் முரண்படுகிறீர்கள் என்பதுதான் என் குழப்பம்)!….ஒரே குஷ்டமப்பா!..ஆளை விடுங்களப்பா!..
பண்டார நாயக்காவின்,”சிங்களம் மட்டும் சட்டத்தை” “லங்கா சசமாஜ கட்சி ஆதரித்தது” — James F.
எப்போ? ஏங்கே?
தெரியாததை எல்லம் இப்படி எழுதித் தள்ள FRIED FISHக்கு ஒரு அபார திறமை வேன்டும்.
Under the British Empire, English was the language of rule in Sri Lanka (then known as Ceylon). Until the passage of the Free Education Bill in 1944, education in the English language was the preserve of the subaltern elite and the ordinary people had little knowledge of it. A disproportionate number of English-language schools were located in the mostly Tamil-speaking north. Thus, English-speaking Tamils held a higher percentage of coveted civil service jobs, which required English fluency, than their share of the island’s population.
After their election to the State Council in 1936, the Lanka Sama Samaja Party (LSSP) members N.M. Perera and Philip Gunawardena demanded the replacement of English as the official language by Sinhala and Tamil. In November 1936, a motion that ‘in the Municipal and Police Courts of the Island the proceedings should be in the vernacular’ and that ‘entries in police stations should be recorded in the language in which they are originally stated’ were passed by the State Council and referred to the Legal Secretary.
In 1944, J.R. Jayawardene moved in the State Council that Sinhala should replace English as the official language.
However, nothing was done about these matters and English continued to be the language of rule until 1956.
உண்மை தெரிஞ்சாகணும்!,யார் துரோகி?.
/Sri Lanka gained dominion status in 1948 with a peaceful struggle, the passage to sovereignty from the British to the Sri Lankan subaltern elite was a peaceful one. For the first years of independence there was an attempt to balance the interests of the elites of the main communities, the Sinhalese and the Tamils. Most Sinhalese did however harbour the view that the Tamils had enjoyed a privileged position under the British. This was mainly due to the British policy of “divide and rule”. In 1949, with the concurrence of the leaders of the Ceylon Tamils, at the behest of the foreign plantation owners, the government disenfranchised the Indian Tamil plantation workers, who accounted for 10% of the population./– இது ஒரு துரோகம்,”முள்ளியவாய்க்கால் இரண்டாவது துரோகம்!.
லங்கா சமசமாஜ கட்சி,1956 ல் தமிழர்களுக்கு ஆதரவாக நியாயம் பேசியிருந்தாலும்,அதை எந்த தமிழ்த் தலைமைகள் மதித்தது?.அவர்கள் இளிச்சவாயர்களகத்தான் பார்க்கப்பட்டார்கள்!- இன்றுவரை….இலங்கைத்தமிழருக்கு இணையாக “நடைமுறையை??” வெளிப்படுத்தியது…சிரிலங்கா சுதந்திர கட்சிதான்!…இந்த அழுத்தத்திற்கும்,ஆதரவின்மைக்கும்,லங்காசமசமாஜ கட்சி பிறகு மெளனமே சாதித்தது!.
In 1951, the ambitious Solomon Bandaranaike broke with his party, the conservative United National Party (UNP) and created a new centrist party, the Sri Lanka Freedom Party (SLFP). IN 1955 the SLFP decided to break ranks with the general consensus on the Left to have both Sinhalese and Tamil as official languages and campaign on the slogan “Sinhala Only”.The Left bitterly opposed it, with Dr N.M. Perera moving a motion in Parliament that the Act “should be amended forthwith to provide for the Sinhalese and Tamil languages to be state languages of Ceylon with parity of status throughout the Island.”
Dr Colvin R de Silva of the LSSP responded, in what some regard as famous last words: “Do we… want a single nation or do we want two nations? Do we want a single state or do we want two? Do we want one Ceylon or do we want two? And above all, do we want an independent Ceylon which must necessarily be united and single and single Ceylon, or two bleeding halves of Ceylon which can be gobbled up by every ravaging imperialist monster that may happen to range the Indian ocean? These are issues that in fact we have been discussing under the form and appearance of language issue.”
The passage of the law was met with demonstrations from Tamils, which were repressed.Parts of the law was reversed in 1958, after the so-called “Sinhala Only, Tamil Also” compromise made by the Tamil leaders. On 3 September 1958 the Tamil Language (Special Provisions) Act – which provided for the use of the Tamil language as a medium of instruction, as a medium of examination for admission to the Public Service, for use in state correspondence and for administrative purposes in the Northern and Eastern Provinces – was passed. The Left parties continued to demand parity of status until after the Tamil electorate voted overwhelmingly in the 1960 elections for the same leaders who had agreed to the compromise.
What has this to do with the stupid, baseless claim:
பண்டார நாயக்காவின்,”சிங்களம் மட்டும் சட்டத்தை” “லங்கா சசமாஜ கட்சி ஆதரித்தது”?
The Left parties continued to demand parity of status”UNTIL”(What does it MEANS?) after the “Tamil electorate voted overwhelmingly in the 1960 elections for the same leaders who had agreed to the compromise”.
You are trying hard to wriggle out of a lie.
This is not the first time and this will not be the last.
FRIED FISH, your cheap gimmicks stink.
XXX or XX, you are the one who is trying to hide the real facts.
LSSP was part of the Sirima government from 1970 and Colvin R de Silva was the architect of the 1972 Republican constitution. This constitution was the one that declared Sri Lanka as a Unitary State, made Sinhala as the only official language and made Buddhism the only state religion. Yes, Colvin said “One language, two countries; two languages, one country” when he had no power.
But what did he do when he had the power to do something? Some LSSP supporters say he was forced by Sirima / Felix to draft this constitution. But he should have refused and resigned if he was a sincere person with principles. The drafting of this terrible constitution is many times worse than supporting Sinhala as the official language.
LSSP was kicked out of the government by Sirima in 1975.
The Sinhala Only Act was introduced in 1956 and the LSSP along with the CP vehemently opposed it.
Please read what JF wrote and then some history before rushing to comment.
You will also do well to read earlier utterances by JF on several matters where he has tried to deflect attention from the central issue by offloading chunks of irrelevancies and distortions.
I generally ignore his nonsense.
I am not trying to defend JF or what he writes. I am just pointing out the fact that Colvin of LSSP was the architect of the 1972 constitution. Some people keep quoting the “One language, two countries; two languages, one country” hiding the fact that the same Colvin brought this terrible constitution. I agree that the LSSP and CP opposed the 1956 Sinhala Only Act. But what matters most is what they did when they had power. They also supported the anti-Tamil media-wise standardisation for university admissions of the Sirima government as they were part of that government.
An Act can be repealed by the parliament with a simple majority. O the other hand, a constitutional provision can only be changed with a two-third majority and a referendum. The entrenched “Unitary Country” clause in Colvin’s 1972 constitution is one of the major obstacles to any meaningful devolution of power. Doesn’t LSSP deserve blame for this mess? The 1978 constitution used these provisions in the 972 constitution as a basis.
RTL2
JF made a false utterance and I pointed it out.
I had not discussed anything further. You jumped into the fray, and accused me of “trying to hide the real facts”. There was no need for me to conceal anything. The point that I made was that the likes of JF got away with far too many falsehoods.
I do not care whether you defend JF or God Almighty, or if you have to say anything about the LSSP or JVP, CP, your great grandfather or his next door neighbour. Please yourself.
But none of that is the issue at stake for me in this string of comments.
இந்தியாவின் 28 மாநிலங்களில் இரண்டு எப்ப தொலைந்தது? உஙளை யாரப்பா பிடித்து வைத்திருக்கினம்? கண்டதையும் எழுதிப் போட்டு ஓடவெண்டியதுதானே!
எழுதியவரின் நோக்கம், கருணாநிதியை மட்டுமே குறி வைத்து தாக்குவதாக இருக்கிறது…
சட்டம் போட்டு இருப்பவர்கள் இந்திய உள்துறை, நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது உள்துறை அமைச்சர், பிரதமர்…
தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி செய்தால் ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்த மக்களை வரவேற்பாரா? விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி விடுவாரா?
ஈழ தமிழர்கள் கொல்லப்பட்ட போது கண்டு கொள்ளாத கருணாநிதியை மட்டும் குறி வைக்கும் நீங்கள்… ஈழத்தில் மக்கள் கொலை செய்யப்பட்ட போது அதற்கு துணை நின்ற எம்.கே.நாராயணன், சிவ சங்கர மேனன், பிரனாப் முகர்ஜி, மன்மோகன் சிங் போன்ற பாசிசவாதிகளை காப்பாற்றுவது போலவே தெரிகிறது…
இந்த கட்டுரையாளர் இந்தியாவின் ஒட்டு அயோக்கியதனங்களை கருணாநிதியின் பக்கம் திருப்பி விட்டு… இந்தியாவின் பாசிசத்தை மறைக்கும் ஹிந்திய உளவாளியா?
தமிழ் குரலைப் போல பலர் கருணாந்தியைக் காப்பாற்றக் கிளம்பியவர்கள்தான். சுபவீ மாதிரி திருமா மாதிரி புலிகளிடமும் புலம்பெயர் மக்களிடமும் வாங்கித் தின்றூ விட்டு இன்று மாற்ரிப் பேசுகிறார்கள். ஈழத்தில் மக்கள் படுகொலையான போது அங்கு போரே நடைபெற வில்லை என்றூ சொன்ன கருணாநிதியை ஏன் காப்பாற்ற வேண்டும். தமிழ் மக்களைக் கொல்ல பேரவிழிவு ஆயுதங்களும் கொடுத்து போரையும் நடத்திய இந்தியாவும் எங்களின் எதிரிதான். அந்தப் போருக்குத் துணைபோன கருணாநிதியும் எதிரிதான். உங்களைப் போன்ற கருணாநிதியின் ப்ரியர்கள் கருணாவைப் பற்ரி கவலைப்படுகிறிர்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம்.
இப்போது ஹிந்திய அரசு கொண்டு வந்துள்ள பாசிச சட்டம், தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கானதே…
தமிழ் நாட்டு மக்களை பற்றி கவலைப்படுவதை விட்டு… ஈழத்தில் குற்றுயிறும், கொலையிறுமாக இருக்கும் மக்களை பற்றி பாருங்கள்…
இன்னும் கருணாநிதியை தமிழரின் குரல் நம்பாது!
ஜெயலலிதா எதிரி. ஆனால் கருணாநிதி துரோகி….இன்னும் ஈழத்திற்காக உழைப்பது போல் நடிப்பு எதற்கு?
தமிழ் குரல் உங்களின் கடைசி குற்றச்சாட்டு பற்றி சிரிப்புதான் வருகிறது. மற்றபடி நீங்கள் எழுட்தியவைக்கான என் பதில் இட்தோ நேர்மையாக பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்”
எழுதியவரின் நோக்கம், கருணாநிதியை மட்டுமே குறி வைத்து தாக்குவதாக இருக்கிறது…” என்று எழுதியிருக்கிறீர்கள். கருணாநிதியைத் தாக்காமல் வேறு யாரைத் தாக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்திய மாநில அரசதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது திமுகதான், கருணாநிதி மாதிரியான தமிழ் இன விரோதிகளின் சந்தர்ப்பவாத அரசியலைப் புரிந்துகொள்ள சரியான தருணம் வாய்க்கும் போது அதை அம்பலப்படுத்தாமல் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
அடுத்து- – ஜெயலலிதா பற்ரி எல்லாம் கேட்டிருக்கிறீர்கள் அது உங்களின் அறிவுக்குறைவைக் கட்டுகிறது. ஜெயலலிதா ஈழம் பெற்றுக் கொடுப்பார் என்று நீங்கள் நம்பியதால் வந்த பிரச்சனை அது……………. அப்புறம் இந்தியா, எம்.கே.நாராயணன், ப.சிதம்பரம், சிவசங்கரமேனன் எல்லோரும் சேர்ந்து நடத்திய ஈழப் படுகொலைகாளுக்கு எதிரான தமிழக எதிர்ப்புகளை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி/. ராமதாஸ், உள்ளிட்ட எல்லா அரசியல்வாதிகளு தமிழகத்தில் சந்தர்ப்பாதிகளே என்பதை நிரூபித்தது ஈழப் போராட்டம்தான். சமீபத்தில் கோத்தபய ராஜபட்சே கருணாநிதி பற்றி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்று சொன்னார். தவிறவும் இப்போது செம்மொழி மாநாடு நடத்துகிறாரே? எதர்கு தமிழன் எல்லாம் சாகட்டும் தமிழ் வாழட்டும் என்றா? உங்களைப் போல பலபேர் கிளம்பியிருக்கிறார்கள். அதாவது எத்தனை லட்சம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை கருணாநிதி பெயர் கெட்டு விடக்கூடாது என்று. எமது மக்கள் படுகொலைகளுக்கு முன்னால் அதற்கு நாடகங்கள் நடத்தி இந்திய போர் வெறியர்களுக்குத் துணை போன கருணாநிதியின் முக மூடி எல்லாம் ஒரு மயிரும் கிடையாது. தவிறவும் ஹிந்து உளவாளி என்றூ என்னை எழுதியிருக்கிறிர்களே! தன்னுடைய பதவியை ஒவ்வொரு முறை காப்பாற்றிக் கொள்ளவும் தமிழ் மக்களை டில்லிக் காரனிடம் அடகு வைத்த கருணாநிதி யார்? பதில் சொல்வீரா?
நீங்கள் கருணாநிதியை தாக்குவது பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…
கருணாநிதியில் முதுகெலும்பை காங்கிரஸ் கட்சி உடைத்து விட்டது… அந்த முதுகெலும்பற்ற மனிதரை நீங்கள் விமர்சனம் செய்வது தவறு என நான் சொல்ல வில்லை…
இப்போது ஹிந்திய அரசு வெளியிட்டு இருக்கும் சட்டத்தின பின்னணி…
IIFA கொழும்பில் நடப்பதற்கு எதிரான போராட்டம்… பாம்பாய், சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் ஹிந்திய திரையுலகினரை எதிர்த்து தமிழின உணர்வாளர்கள் நடந்த போராட்டங்கள்…
படித்தவர்கள் குழுக்காளாக ஈழ ஆதரவு திரட்ட கிளம்பியது…
சிங்கள அரசின் போர் குற்றங்கள் பற்றி வெளி வந்த ஆதாரங்கள்… தமிழக மக்களை போய் சேரமால் இருக்க வேண்டும்…
இந்த பாசிச சட்டதை… நீதி மன்றத்தின் மூலம் உடைத்தெறிய வேண்டுமே தவிர்… கருணாநிதி திட்டுவாதால் எந்த பலனும் இல்லை…
நீங்கள் சொல்வது தமிழ் நாட்டில் மக்களிடம் ஈழத்திற்கு ஆதரவான பெரிய எழுற்ச்சி… கடந்த ஆண்டு 2009இல் கிளம்ப வில்லை என்பதே உண்மை… அப்படி உண்மையான எழுற்ச்சி இருந்தால் காங்கிரஸ் கட்சி எப்படி 10 இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும்…
நான் 1983இல் கண்ட எழுற்ச்சி நடக்க வில்லை… காரணம் 1991இல் நவீன நீரோ மன்னன் செத்த பின் ஈழம் பற்றி பேசுவதை எல்லோரும் தவிர்த்தே வந்துள்ளனர்… ஆனால் அதனை பேசி சிறை சென்றவர்கள் பழ.நெடுமாறனும், சுப.வீ. போன்ற உணர்வாளர்கள் மட்டுமே…
உலகமயமாக்கலுக்கு பிறகு உள்நாட்டு முதலாளிகளும்… பன்னாட்டு முதலாளிகளும் ஹிந்தியாவை ஆதிக்கம் செலுத்துவதை யாரும் கண்டு கொள்ள வில்லை…
ஈழத்தின் எதிரி கருணாநிதி அல்ல… ஹிந்தியா…
ஹிந்தியாவுக்கு கருணாநிதி எனும் ஒருவர் இல்லையென்றால் வேறு ஒரு ஏவல் நாயை கொண்டு அடக்குமுறையை நடத்துவார்கள்…
இப்போது ஹிந்தியாவிற்கு பிரச்சனையே ஈழம் பேசும் மிக சிறுபான்மை தமிழர்கள்… அவர்களை ஈழ தமிழர்களிடம் இருந்து விளக்கி வைக்க “ரா” செய்யும் வேலைகள் தவிர கடந்த திங்கள் அன்று அறிவிக்கப்பட்டு இருக்கும் பாசிச அடக்குமுறை சட்டம்…
உங்களுக்கு பிரச்சனையாக தெரிவது பாசிச அடக்குமுறை சட்டம்தானே?
கருணாநிதியின் அயோக்கியதனங்களை காட்ட தனியே எழுதுங்கள்…
எல்லாவற்றிலும் கருணாநிதியை இழுப்பதால்… அடக்குமுறை சட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் திசை மாறி கருணாநிதியின் பக்கம் மட்டுமே விமர்சனம் செல்லும்…
யார் யார் துரோகி என சொல்லி கொண்டே போனால்… தமிழன்… ஒருவன் முடியை மற்றொருவன் பிடித்து கொண்டு… நீ துரோகி… நான் துரோகி என சொல்லி கொண்டு இருக்க வேண்டியதுதான்…
தமிழ் குரல் உங்கள் பதிலுக்கு நன்றி, கருணாநிதியைத் திட்ட வேண்டும் என்று திட்டவில்லை. யுத்தக்குற்றவாளிகள் ராஜபட்சே, கோத்தபய, பொன்சேகா மட்டுமல்ல மன்மோகன், சோனியா, சிதம்பரம், ப்ரணாப்முகர்ஜியும்தான்……… ஆனால் கருணாநிதி நிச்சயமாக யுத்தக் குற்றவாளி என்று நான் சொல்லவில்லை. ஆனால் வரலாற்றுத் துரோகி……. உங்களைப் போன்ற ஒரு கருணாநிதியின் அனுதாபியாக நான் இருந்ததில்லை. அனுதாபம் கொள்ள ஏதும் இல்லை. தனது குடும்பம்,. அதிகாரம், சொத்து, என ஆசியாவின் விஸ்தரிப்புக் கனவுகளோடு வளர்ந்து வரும் கருணாநிதியின் வளர்ச்சி இந்த இனத்தோடு சம்பந்தப்பட்டது. இன்று கருணாநிதியிடமிருக்கும் சொத்தில் ஒரு கால் பங்கு கூட பார்ப்பன ஜெயலலிதாவிடம் இல்லை. ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் ஊழலையே பெரிது படுத்திக் காட்டியவர்கள் இந்தியாவின் ஆகபெப்ரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைப் புரிந்தார்கள். நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான் ஜெயலலிதாவுக்கும்… கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம்?
நான் கருணாநிதியின் ஆதாரவாளன் இல்லை…
ஈழப் பிரச்சனையில் கருணாநிதியின் நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்க வில்லை…
ஒரு ஆணையிட்டு தமிழர்களின் உணர்வுகளை, கருத்துக்களை ஒடுக்க கிளம்பும் ஹிந்திய அரசின் பாசிச பணியில் கருணாநிதியை கலக்கும் போது… ஈழ தமிழர்களை கொன்று குவித்த கூட்டம் சோனியா-ராகுல், பிரனாப், மேனன், நாராயணன் போன்ற பாசிச கூட்டம் தப்பித்து கொள்ளும்…
வெந்த புண்ணில் வேல் பாய்ப்பது போல இலங்கியர்களின் துன்பங்களை ஏன் அதிகரிக்க வேண்டும்? உதவி செய்யாவிட்டாலும் சட்டங்களிலாலும் வார்தைகளிலாலும் அவர்களை துன்புருதாதீர்.
SoulVish
என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள். இனி தமிழ் மக்களை துன்புறுத்த என்ன இருக்கிறது. எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இந்தப் போரை நடத்தியவர்களையும் அதற்குத் துணை போனவர்களையும் அம்பலபப்டுத்தாமல் விட்டால் எஞ்சியிருக்கும் மக்களையும் காப்பாற்ற முடியாது. மக்களை அரசியல் விழிப்புணர்வாக்கியாக வேண்டும். இனியும் தமிழ். தமிழ் என்றூ பேசும் கருணாநியை அம்பலப்படுத்தாமல் விட்டால் அது நாம் நமது எதிர்கால சந்ததிக்குச் செய்யும் துரோகம்…இல்லையா?
எதிர்பார்க்க என்ன இருக்கிறது? எதிர்பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆதரவு தருகிறோம் என்று வாய் இனிக்க பேசியவர்கள், அரசியல் போர்வையில் குளிர்காய்கிறார்களே தவிர எண்ணங்களில் கூட பிறரின் வேதனைகளை எண்ணியதில்லை. இதில் உங்கள் கருத்துகளுக்கு நான் ஆமோதிக்கிறேன் மனிதன்!
கொடிய கால ஓட்டத்தில் எல்லாமே தலை கீழாக மாறும்…..காலச்சக்கரம் தன் சுழற்சியை யாருக்காகவாவது இடை நிறுத்திவைப்பதில்லை