இலங்கையின் இனப்படுகொலையில் பங்களித்த இந்திய அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான நாடகம் ஆரம்பித்துவிட்டது. தேர்தல்காலத்தில் வாக்குப் பொறுக்குவதற்கான இந்த நாடகத்தின் முதலாவது காட்சியாக இலங்கை அரசை இந்திய ஆளும் காங்கிரஸ் அரசு கண்டிப்பதும் அதனை இலங்கை அரசு எதிர்ப்பதும் அமைகிறது. இரண்டாவது காட்சியாக இந்துப் பயங்கரவாதக் கட்சியும் தான் ஆட்சியிலிருக்கும் போதெல்லாம் இலங்கை அரச பேரினவாத ஒடுக்கு முறையை ஆதரித்த கட்சியுமான பாரதீய ஜனதா இலங்கை இனப்படுகொலை குறித்து அக்கறை கொள்வது நடைபெறுகிறது.
இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துத் தெரிவிக்க, இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ராஜபக்ஷ 100 சதவீத பொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உண்டு. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணரவேண்டும் எனப் தமிழக பாரதீய ஜனதா கருத்து வெளியிட்டுள்ளது.
மக்களின் கண்ணீரிலும் அவலங்கள் மீதும் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்தியாவின் இந்தக் கூட்டங்கள் ஈழப் பிரச்சனையிலிருந்து விலகிச் சென்றாலே மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளப் பழகிக் கொள்வார்கள்.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் சிதைத்து அழிப்பதில் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்து இந்தியா வரை பரந்திருக்கும் பிழைப்புவாதக் கும்பல்களின் பங்களிப்புக் கணிசமானது.
சரியான கருத்து. இலங்கை ப்ரிரச்சினை இந்தியாவில் அரசியலாக்கப்பட்டு விட்டது ஐக்கிய நாடுகள் சபையும் கண்டுகொள்ள வில்லை தமிழனிடமும் ஒர்ட்டுமை இல்லை தமிழன் காசு பதவிக்காக எதையும் செய்வான் என்பது நிறுபனமாகி விட்டது
your content is 100% true………..here all indian polical parties r beggers beg votes highlighting ellam tamil matter,but the reality is somhow everyone contributed destroying ltte in somemanner along with the indian culprit government…………
independence to tamils in cannot be bought thro such indian polititions…..for that the tamils in ellam to fight on their own with their own stretegy & strength to get that….may not be possibble now…..but one day sure they get it…………kumar
உண்மைக்கு ஒரு உலகத்தை தேட இறைவனுக்கு ஒரு இடம் வேண்டும் இதயத்தில் மனிதன் தமிழனாக பிறந்ததால் உலகத்தில் எதனையும் ஏற்க்கவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் தன்னையும் தன்னித்தையும் தவமாக மட்டுமல்ல தறுதலைகளாகவும் வாழ கற்றுக்கொண்டதால் . உலகத்தில் தமிழர்களைக் காப்பாற்ற இறைவன்தான் வரம் அளிக்க வேண்டும் என்றாகி விட்டது. அதனைத்தான் தந்தை செல்வா கூறிமறைந்தது மட்டுமல்ல எமக்கான ஒரு வரலாற்றுப் போரை சுமந்த மாவீரர்களும் விட்டுச் சென்றுள்ளார்கள்.
காரணம் இந்தியா என்றும் சர்வதேசம் என்றும் எதிர்பார்க்கும் நம்மால் தமிழர்களால் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும். 30வருடப் போருககு ஒரு தலமைத்துவத்தை ஏற்காத தமிழினம் சமமான கட்டமைப்பான அரசியலுக்குள் செயல்படாத தமிழினம் தமது சுயநலன்களுக்காக தியாக வரலாற்றை அழிப்பதற்கு அடுத்தவர்களில் பழிகளைதேட முன்பு நாம் எமக்குள் ஒன்றுபட்டு உண்மை பேச எமது மதத்தைகூட மதிகத்தெரியாத வர்கள் என்பதனை இந்த உலகம் அறிந்தமைதான் எமது விடுதலைக்கான பின்னடைவாக உள்ளது.
புத்தரும் யேசுவும் இறை தூதர்களாக மக்களோடு மக்களாக வாழ்ந்து முடிந்தவரகள் ஆனால் இந்துக்கள் ஆன நாம் அந்த இறைசக்தியையே நேரடியாக நம்பிவாழ்பவர்கள் என்பதனை முள்ளிவாய்கால் அவலம் கூட இன்றைய மாற்றங்களுக்காக தாங்கிவந்த செய்திஎன்பதனை உணராமல் மனிதன் உண்மை பேசவும் சந்தற்பத்தை தேட வேண்டும் என்பதே காலத்தின் விதி ஆகும்.
மக்களின் அவலத்தை வைத்து… யாழிலும் கூட்டமைப்பிற்கு சவாலாக கட்சி உள்ளது…
வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் தான் கடிதங்கள் எழுதுகிறார் என்றால் பாரம்பரிய அமைச்சரும்… கடிதங்கள்.. எழுதத் தொடக்கி விட்டார்…
அதுவும் பாரம்பரிய அமைச்சர் எழுதவில்லை… கட்சிதான் எழுதியுள்ளது…. (வலிகாமம் வடக்கு அதிஉயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் அங்கிருந்த மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அங்கு கோவில்களும் கல்லூரிகளும் இடித்து அழிக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதை தடுத்துநிறுத்த மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் உடனடி உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி அவசர கடிதமொன்றை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளது)
மேலும் கடிதத்தைப் பார்த்தால்… “அங்கு கோவில்களும் கல்லூரிகளும் இடித்து அழிக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மையாக இருந்தால்”
மேலும் கடிதத்தைப் பார்த்தால்… ஜனாதிபதிக்கு கட்டளை இடுவது மாதிரி “அதை தடுத்துநிறுத்த மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் உடனடி உத்தரவு பிறப்பிக்கவேண்டும்” என்றும்…
யாழிலோ சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சகோதரர் இராமநாதன் அங்கஜன் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஆயிரக்கணக்கான வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்ட நிலையிலும்… அமைதியாக தன்னால் முடிந்தவற்றை மக்களிற்கு செய்து கொண்டு இருக்கும் நிலையில்… இதையையும் வாசியுங்கள்… (http://www.epdpnews.com/news.php?id=22147&ln=tamil)
மேலும் ஜனாதிபதி “உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று எழுதிய கடிதத்தில்… “வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமக்கு வெற்றிவாய்ப்பை தருவார்களாக இருந்தால் பலாலி வரை எமது மக்களை மீள்குடியேற்றுவோம் என கூறி இருந்தோம். அதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால், மாகாண சபை அதிகாரத்தை திறம்பட செயற்படுத்த தெரியாத அல்லது விரும்பாதவர்களின் பொருத்தமற்ற வாக்குறுதிகளுக்கு எடுபட்டு ஆணைவழங்கி எமதுமக்கள் நல்லதொரு வாய்ப்பை மீண்டும் இழந்து இருக்கிறார்கள்.” என்றும் எழுதியுள்ளார்கள்…
ஏன் அந்த நடைமுறை சாத்தியமான திட்டங்களை இப்போது நடைமுறை படுத்த முடியாது…???
மக்கள் வெற்றிவாய்ப்பை கொடுத்திருந்தால் தான் நடைமுறை சாத்தியமான திட்டங்களை நடைமுறை படுத்துவார்கள்…???
அப்படிஎன்றால் இக்கட்சியினர் வலி-வடக்கு மக்களுக்கு கொடுக்கும் தண்டனையாஇது…???
கூட்டமைப்பின் உணர்ச்சிகர பிரச்சாரத்தில் வாக்களித்த ஓட்டுமொத்த வடக்கு மக்களிற்காக… வலி-வடக்கு மக்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று இக்கட்சியினர் கூறுகின்றனரா…???
யாருக்கும் தெளிவு இருந்தால் கூறுங்களேன்…