பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்துக் கண்டறியும் நோக்கோடு மலேசிய மற்றும் இந்திய நாட்டிலுள்ள பெண்களமைப்புக்கள் இலங்கை சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளன. இலங்கைக்கு உள்ளும் புறமும் உள்ள மகிந்த அரச ஆதரவுக் கும்பல்கள் மேற்கொள்ளும் வன்முறைப் பிரச்சாரத்திற்கு மாறாக இலங்கை அரசின் ஒடுக்குமுறையை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை அரசு சர்வதேசத்திடம் கூறுவதுபோல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை. வன்னியில் எங்கும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு, பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மலேசியாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இலங்கைக்குப் பயணம் செய்து திரும்பிய குழுவினர் நேற்று சென்னையில் நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தத் தகவல்களை தெரிவிக்கையில் ,
இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச்சூழல் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐவர் குழு தமிழகத்தில் இருந்து இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்றது.
இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் சொல்வது போல அங்கு ஒன்றுமில்லை.பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி விட்டோம் என்பதெல்லாம் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது. மேலும் யுத்தகளத்தில் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
30 ஆண்டுகால போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு அல்லது ஒருவர் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவராக இருக்கின்றார்.
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியமர்த்தப்படவில்லை. இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றுள்ளது.
சோமாலியா போன்ற நாடுகளில் கூட இவ்வாறான அவலத்தைக் காணவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
புலி என்றால்த் தமிழன், தமிழன் என்றால்ப் புலி என மார்தட்டிய புலிகள் இராணுவத்துக்குத் தாம் ஒன்றும் சளைத்தவரல்லர் என்ற எக்காளத்தில் இராணுவத்தைவிட அதிகமாகத் தமிழரைக் கொன்று தள்ளினர். இதனைப் பெரும்பாண்மைத் தமிழர் கைதட்டி ரசித்து, ஆர்பரித்து மகிழ்ந்தனர். இது தவறான பாதை என வாதிட்ட என்போன்றவர்களுக்கு துரோகிப் பட்டம் சூட்டி சமுதாயத்தில் இருந்து புறம் தள்ளினர். இப்போ எல்லாவற்றையும் இழந்த புலிகளின் தலைமைகள் அரசுடன் சேர்ந்து தமிழர் விரோத சக்தியாக மாறிவரும் இந்நிலைமையில் புலிகளை மட்டுமல்ல, புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், புலிகளுக்கு வக்காலத்து வாங்கியவர்கள், புலிக் கோசம் போட்டவர்களென எல்லோரையும் தீண்டத்தகாத அசிங்கஙகளாகவே உலகம் பார்க்கிறது. புலம் பெயர் வசூல்ராஜாக்களம், புலிகளுடனான ஒட்டுன்னிக் குழுக்களும் தங்களுடைய தவறுகளைத் திருத்தி, புலிக்கோசத்தைக் கைவிட்டு மக்களிடம் கொள்ளை அடித்தவற்றை மக்கள் பொதுநலப் பணிகளில் மூலதனமாக்கி போரினால்ப் பாதிக்கப் பட்டோரின் வாழ்வாதாரங்களைச் சீர்தூக்கி விடாதவரை உலகம் தமிழர்களை நம்பப்போவதும் இல்லை. எமது இறைமைக்கான முன்னெடுப்புகள் நகரப்போவதுமில்லை.
பௌத்த சிங்கள பேரினவாத அரசின் அறுவதாண்டுகளுக்கு மேலான, தமிழின அழிப்பை,அதன்பொய்ம்முகங்களை, இராணுவ ஆக்கிரமிப்பை,பணையக் கைதிகளான தமிழ் மக்களை,நேரில் பார்த்த,வெளியார்களின் கருத்து,செய்தியாக வருகிறது.
இதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாது,ஒரு காலை தூக்கி,ஓலமிட்டு ஓடினால்,யாரு என்ன செய்ய முடியும்?
மோடன் நரகலை மிதித்தால் மூன்று இடத்தில் சேதம் என்பார்கள். அது உங்களைப் போன்றோருக்காக எழுதப்பட்ட வாக்கியம்தான்.
முருகன் விடான்.எளீய சிங்கள நாயெல்லாம் சிதரிச் சாகும்.