கிழக்கின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், ஏனைய போர் அகதிகளுக்கும் உதவி வழங்குமாறும் இல்லையெனில் அவ்வாறான உதவி வழங்குதலை தடுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை அங்கீகரித்து அழுத்தம் வழங்குமாறும் கோரும் கடிதம் ஒன்றை புதிய திசைகள் பல அமைப்புக்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் கடித்ததின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. சமூகப்பற்றுள்ள ஒவ்வொருவரும் இக்கடிதத்தை இங்கு இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களுக்கு தத்தமது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பிவைக்குமாறு புதிய திசைகள் வேண்டுகோள்விடுக்கிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது முள்ளிவாய்க்கலோடு நிறைவடைந்த சடங்குக்கான சம்பவமல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒடுக்கப்படுமின்ற மக்கள் வாழ்ந்தாலும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களும் வாழும். நாம் இந்த நூற்றாண்டின் ஒடுக்கப்படுகின்ற மக்கள் கூட்டத்தின் இன்னொரு அங்கம் என்பதை உணர்தலும் அதற்கெதிரான போராட்டங்களை எஞ்சியுள்ள அனைத்து வலிமைகளையும் பிரயோகித்து முன்னெடுத்தலும் அவசியமாகிறது.
உலகின் அனைத்து ஒடுக்கு முறை அங்கங்களும் இணைந்து அவற்றின் முழுமையான ஆதரவோடு ராஜபக்ச அரசின் தலைமையில் இந்திய இலங்கை அரசுகளால் நிகழ்த்தப்பட்ட வன்னிப்படுகொலைகளை இவர்கள் கண்டுகொண்டதில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்கிறது என்ற வெற்றுச் சந்தேகத்தின் பேரிலேயே நாடுகளை ஆக்கிரமிக்கும் மேற்கு அதிகாரங்கள் இலங்கையில் சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்ட போது கண்துடைப்புக்காக் கண்டனம் மட்டும் தெரிவித்துவிட்டு வாழவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள், தன்னார்வ நிறுவனங்கள், உதவி வழங்கும் நாடுகள் என்ற நீண்ட பட்டியலில் அடங்கும் அதிகாரங்களின் அனைத்து அங்கங்களையும் நோக்கிக் கேள்வி கேட்கும் உரிமை எமக்குண்டு.
அதி வல்லமைபெற்ற இராணுவத்தையும், மின்னியல் கண்காணிப்புக் கருவிகளையும், உளவு நிறுவனங்களையும் கொண்டிருக்கின்ற இவர்கள் ரஜபக்ச அரசு அனுமதிக்கவில்லை என்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை என்கிறார்கள்.
பரந்துபட்ட மக்களின் ஒருங்கிணைந்த கருத்தும் அதன் வழியேயான நடைமுறையும் வெற்றிகளை எவ்வாறு பெற்றுத் தந்திருக்கின்றது என்பதை விக்கிலீக்ஸின் வெற்றியும், துனிசியப் போராட்டங்களும் கற்றுத் தந்திருக்கின்றன.
இந்த வகையில் தன்னார்வ நிறுவனங்களுக்கும், ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புக்களுக்கும் அழுத்தம் வழ்ங்கும் மின்னஞ்சல் போராட்டம் ஒன்றை நடத்துவதாக புதிய திசைகள் அமைப்புத் தீர்மானித்துள்ளது.
கிழக்கின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், ஏனைய போர் அகதிகளுக்கும் உதவி வழங்குமாறும் இல்லையெனில் அவ்வாறான உதவி வழங்குதலை தடுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை அங்கீகரித்து அழுத்தம் வழங்குமாறும் கோரும் கடிதம் ஒன்றை புதிய திசைகள் பல அமைப்புக்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் கடித்ததின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. சமூகப்பற்றுள்ள ஒவ்வொருவரும் இக்கடிதத்தை இங்கு இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களுக்கு தத்தமது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பிவைக்குமாறு புதிய திசைகள் வேண்டுகோள்விடுக்கிறது.
-புதிய திசைகள், 19.01.2011
1.Copy and paste the attached request letter”Act now or face the consequences”.
2.Send that letter to :Copy and paste e mail ids from attached emails document.
3.To send the letter to all of the e mail ids , you may repeat the steps 1 and 2 for few times.
அனுப்பவேன்டிய மின்னஞ்சல்கள்: E-mails
அனுப்பவேண்டிய கடிதம் : Act_now_or_face_the_consequence









யாழ்ப்பாணத்தார் தம்மை ஒடுக்கபட்ட இனத்தில் சேர்த்து கொள்ள விரும்பமாட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் ஆண்ட பரம்பரையினர் .அவர்களை பொறுத்தவரை ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் சாதியில் குறைந்தவர்களையே சாரும்.அவர்கள் தாம் மனப்பூர்வமாக தம்மை ஒடுக்கப்பட்டவர்கள் என்று எப்போது உணருகிறார்களோ அப்போது தான் உண்மையான விடுதலைக்கான மார்க்கம் கிடைக்கும்.
இல்லாவிட்டால் இப்படி புலிக்கொடியை சர்வதேச தெருக்களில் தூக்கிக் கொண்டு அரசியல் அனாதைகளாக திரிய வேண்டியது தான்.
அது மட்டுமல்ல ஈழத்தமிழ்மக்கள் புலம்பெயர் தமிழ்மக்களின் அரசியல் ஒடுக்கு முறையில் இருந்தும் காட்டிக்கொடுப்பில் இருந்தும் அரசியல் ரீதியிலும் துண்டித்து கொள்ளவேண்டும்.இவர்கள் ஆதாயத்தாக தமது சொந்த இனத்தையே பலிகொடுக்கத் தயங்கமாட்டார்கள். இதுவே கடந்தகால அனுபவங்கள் இதை புலிகள்தான் செய்தார்கள் என்று இல்லை. தாம்புலி இல்லையென்று சொல்வர்களும் இன்று புலிவேலையையே செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் தொலைகாட்சிகளும் வானொலிகளும் இணையத்தளங்கள் கூட அதே வேலையை தான் செய்துகொண்டிருக்கின்றன.இவர்களுக்கு ஒருநாளைக்கு ஒரு சினிமாபடமும் அழுதுவடிகிற சீரியலும் இலங்கையில் யுத்தமும் தேவை. மகிந்தாவைமேற்குலகத்திற்கு பிடித்து திண்ண குடுத்தால் அது இவர்களுக்கு தீபாவளியாக இருக்கும். குண்டிகாய்கிறதிற்கெதிராக போராட்டம் நடத்தும் வரை இது தொடர்ந்து கொண்டேயிருக்கும்.அதுவும் சந்தேகமாக இருக்கும்.மற்றநாட்டுகாரன் போராடி எமக்கு தரக்கூடாதா?என்றும் முடுக்கு கதை கதைப்பார்கள்.தமிழன் என்ற பெயரை நம்பியாரும் ஆற்றில் இறங்காதீர்கள். மின்னஞ்சல் போராட்டம் நடத்தாதீர்கள். கணணிபொட்டியை வித்தும் காசாக்கிவிடுவார்கள். முடிந்தால் அகிலஇலங்கை ரீதியாக வர்க்கப்போராட்டத்திற்கு அழைப்பு விடுங்கள்.இதில் எத்தணை தேறுகிறது என்றுபார்போம்.இதுகள் உலகம் சுத்திய கட்டாகாலிமாடுகள்.புல்கண்ட இடத்தில் மேய்சலுக்கு நின்றிடும்.சுட்டுப்போட்டாலும் அரசியல் வராது.வந்தால் ஆதாயத்தோடு தான்.யாரும் என்னில் கோபப்படுவதாக இருந்தால் உண்மையை சொல்லுகிறேன் என்பதற்காகவே ஆத்திரம் கொள்ள முடியும்.
நம்புயாரும், எம்ஜிஆரும் போய்ச்சேர்ந்து புண்ணீயத்தைக் கட்டிக் கொண்டார்கள் இன்னும் நம்பியாரும் எம்ஜிஆரும் எண்டு பேசிக் கொண்டிருப்பது சந்திரன் ராசாதான்.நண்பேண்டா.
இனியொரு இணையத்தளம் நல்ல நோக்கத்திற்காகத் தான் ஆரம்பிக்க பட்டது. உங்களை போல் சில அறுவார்களால் இழுத்து மூடவேண்டுமென்றால் அந்த விதியை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?.
சந்திரன் ராசா இழுத்து மூடி படுத்துக் கிடந்தால் குளீருக்கு சுகமாகத்தான் இருக்கும் ஆனால் வீட்டுக்கு காச ஆர் கட்டுறது.இதயத்தை திறந்து நியாயத்தை பேசுங்கள்.
ஓடிப்பிடித்து விளயாடுவதை விட ஓடி விளயாடுவதுதான் சரி ஆனால் அவர்கள் எமது மெயிலை தேடிப்பிடிக்காது எரித்து விட்டால் என்ன செய்யுறது.நைஜீரியாக்காரன் பத்து ரூபாயை முப்பது ரூபாய் ஆக்குறன் என அனுப்புறதும்,முப்பது ரூபாயுக்கு வாற பில்லும் எண்ட தலைவலி அவயுக்கும் இருக்கும்தானே.யோசிக்காம அனுப்புறன் வாறதப் பார்ப்பம்.
ஆண்ட பரம்பரை என்பது யாழ் தமிழனை மட்டும் சாராது அது ஈழததமிழ் இனத்தையே சாரும். இங்கு சாதிப் பிரச்சனைகளை இழுத்து இழுக்குச் சேர்ப்பது சரியல்ல. அந்த புலிக் கொடி ஏந்திய மைந்தர்களால் தான் கொஞ்ச நஞ்ச தமிழனாவது உயிர் தப்பியது. அநாதைகளாக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு எழுந்துநிற்கும் பலம் கொடுத்தது.
ஒருவா் ஒன்றை செய்யும்படி வேண்டுகின்றார் இன்னொருவா் இல்லை செய்யாதீா்கள் இவா்கள் கள்வா்கள் என்கின்றார்,இரண்டு பகுதியினரையுமே எமக்கு யார் என்று தெரியாதபோது நாம் எப்படி முடிவெடுப்பது?
அவரவா் அறிவிற்கேற்ப நடந்துகொள்ள விடுகிறீா்களா அண்ணன்மார்களே?
இது இணையத்தளம் எந்தப்புற்றுக்குள் எந்தப்பாம்பு இருக்கின்றதென்று ஆண்டவனிற்கே வெளிச்சம் இதில் நானும் அடக்கம்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு அதிகம்போ் யாழ்ப்பாணத்தவா்கள் மேல் வெறுப்புக்கொண்டு புலம்புவதை காணமுடிகிறது,மனிதரில் நல்லவா்,கெட்டவா்,கொலைகாரா்,நம்பிக்கைத்துரோகிகள்,ஏற்றத்தாழ்வு பார்ப்பவா்கள்,திமிர்கொண்டவா்கள் என்று இல்லாத ஒரு இடத்தையோ மக்கள் கூட்டத்தையோ எங்காவது யாராவது காட்டமுடியுமா??
எனக்கொரு நண்பன் இருந்தான் அவன் ஒரு பெண்ணை காதலித்தான்- அது நடந்தது புலம்பெயா்ந்த நாடொன்றில் -இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள் ஒரு நாள் அவன் அழுதபடி என்னிடம் வந்து //எனது குடும்பத்தினா் எனது காதலுக்கு மறுப்புக்கூறுகின்றார்கள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றான்//
என்ன காரணம் என்று கேட்டபோது நான் அதிர்ந்துபோனேன், சாதி எனும் கொடிய புற்று நோய் எப்படியெல்லாம் நம் வாழ்வில் புகுந்து சிதைக்கின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
எனது குடும்பம் வெள்ளாளரின் உடைகளை கழுவுவது எனது காதலியின் குடும்பம் தாழ்த்தப்பட்டவா்களின் உடைகளை கழுவுவது இதுதான் காரணம்.ஆக சாதி மட்டுமல்ல,சாதிக்குள்சாதி என்ன கொடுமை- இவா்கள் யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா்களல்ல.
இந்தா எங்கட இவர் நிற்கிறார், பழயகடை பாக்கியம் நிற்கிறார் எல்லாரும் ஒன்றாய் இருந்து குடிக்கினம்.அவங்கட வீடுகள்ல உவங்கள் ஏன் போய்க் கிடக்கிறாங்கள் என மனுசிமார் புலம்புகினம்.இதுவெல்லாம் அரசியலப்பா?
வாழ்த்துக்கள் யாழ். தமிழும் தமிழ்சாதியும்(இனம்) சாகாது தமிழ் கருவில் பிறந்த தமிழனர் நாம் இருக்கும் வரை.
உங்களது பிரச்சனைதான் என்ன? துணீ துவைக்கிறது அதைக் காயப்போடுறதும்தானா இல்லை அதற்கும் மேலா? உங்கட சொந்தத்தில கல்யாணம் கட்டி ஊரோடு வாழறத விட்டுப் போட்டு ஏனய்யா ஊர் மேயுறீயள்?
இந்த கம்யூனிஸ பேச்சு எல்லாம் பேசுகிறவர்கள் தாழ்த்தபட்ட சாதியினரே ! அவர்களை நம்ப முடியாது என்பது பழுத்த தமிழ் பெருங்குடி மக்களின் நம்ம்பிக்கை.கீழ் சாதிகளோடு மணம் முடிப்பதை விட சிங்களவர்களிடம் அடிமைகளாகவும் இருக்க தயங்காதவர்கள் .சாதிக்காக அவர்கள் தம்மை அழிக்கவும் தயாராக இருக்கும் மக்கள் கூட்டம் அவர்கள்.
ஆனால் இன்றைய நிலைமை என்னவென்றால் நாம் யாரையும் நம்ப முடியாது.எந்த உளவு படையின் வழிகாட்டலில் யார் யார் இயங்குகிறாகள் என்பதை கண்டு பிடிக்க முடியாது.
மின்னஞ்சல் போராட்டம் என்பதை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்பதிலிருந்து “கள்ள ” நோக்கம் புரிகிறது.
மிகுதி அவரவர் மனோதர்மத்திற்கு உரியது.
கணேசு சொல்வதை நான் ஏற்றூக் கொள்கிறேன்.கமக்காரர்,கமக்காரர் என் கவிழ்த்து விடும் கள்ள நோக்குகள நான் அவதானித்திருக்கிறேன்.ஆனால் கம்யூனிசுக்காரர் எல்லாம் முதலிப் பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் யாரை அடையாளம் காட்டுகிறீர்கள்.
உமது கமக்கட்டு நாற்றத்தை ஏன் மற்றவர்களுக்கு மணக்க விடுகிறீர்கள். பிரயாணத்தை முடிக்கும் வரை இறுக்கப் பொத்திப் பிடியும்.
நீங்களூம் வெள்ளயள் மாதிரி மாதத்துக்கு ஒருக்காதான் குளீக்கிறனீயளே சந்திரன் ராசா.இந்த துலாவும் கிணறூம் எங்கட தேசிய சின்னமெண்டதை மறந்திட்டியள் போல.என்ன செய்யுறது எல்லாம் காலமாற்றம்.
புதிய திசைகளின் போராட்டம் வலுவுடையதாக ஆக்கப்பட வேண்டும். ஆயினும் பின்னூட்டங்கள் கவலை விளைவிப்பனவாக இருக்கின்றன.