Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது : ஆர்ப்பாட்டம்

இனியொரு... by இனியொரு...
08/21/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

ஈழ அகதிகள் மூவரை நாடு கடத்தும் மத்திய மாநில அரசுகளைக் கண்டிக்கிறோம்!

செந்தூரன் செந்தூரன் உண்ணாவிரதம் (கோப்புப் படம்).
செந்தூரன்
செந்தூரன் உண்ணாவிரதம் (கோப்புப் படம்).

செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய ஈழ அகதிகள் மூவரை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களை நாடு கடத்துவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. தங்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வதைப்பதற்கு எதிராக இவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதும், மற்ற ஈழ அகதிகளுக்கு உளவுத் துறையினர் இழைக்கும் கொடுமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள் என்பதும்தான் மத்திய மாநில உளவுத்துறைகள் இவர்கள் மீது ஆத்திரம் கொள்ளக் காரணம்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த செந்தூரன் தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு இப்போது வெளியில் இருக்கிறார். ஈழ நேரு திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார். ஈழ அகதிகளை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு பொய் வழக்கை இவர் மீது கியூ பிரிவு போலீசு போட்டிருக்கிறது. கியூ பிரிவு போலீசார் இந்த வழக்கையே நடத்துவதில்லை என்பது மட்டுமல்ல, வாய்தாவுக்கு கூட அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல் வழக்கை வேண்டுமென்றே ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர். நீதிமன்றத்துக்கு அழைத்துப் போவதற்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையே உள்ளது. இவர் மீதான வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

போலீசின் இத்தகைய முறைகேடுகளை எதிர்த்துப் போராடிய காரணத்தினால்தான் நாடு கடத்தல் என்ற சதியை மத்திய மாநில அரசுகள் அரங்கேற்றுகின்றன. இவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பது அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு ஒப்பானதாகும். இது அகதிகளின் உரிமையை மீறுகின்ற கொடும் குற்றமாகும்.

இனப்படுகொலையைக் கண்டிப்பதாகவும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் முதல்வர் வாய் வீச்சு அடித்துக் கொண்டிருக்க, அகதிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், நாடு கடத்துவதையும் தமிழக போலீசு செய்து கொண்டிருக்கிறது. 2009 இனப்படுகொலைக்குப் பின்னர், எல்லா ஈழத்தமிழ் அகதிகளையும் மீண்டும் இலங்கைக்கு போகச்சொல்லி மத்திய மாநில உளவுத்துறை போலீசார் மறைமுகமாக நிர்ப்பந்தம் கொடுத்து வருகின்றனர்.

ஈழத்தமிழ் அகதிகள் மீதான இக்கொடுமைகளுக்கு எதிராகத்தான் மே நாள் அன்று எமது அமைப்புகளின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்,

ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது.

சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களை கலைத்து அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

ஈழத் தமிழ் அகதிகள் மீது தமிழக போலீசு இழைத்துவரும் துன்புறுத்தல்களை, குறிப்பாக பெண்களுக்கு

எதிராக போலீசு நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழ் அகதிகள் அனைவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

இதனை வலியுறுத்தி எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவண்,

அ. முகுந்தன்,
ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

சென்னை, 21.8.2013

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மரிக்கான பிணங்களைத் தாண்டி இலங்கை சென்ற நவி பிள்ளையும் செல்வம் அடைக்கலநாதனின் காத்திருப்பும்

மரிக்கான பிணங்களைத் தாண்டி இலங்கை சென்ற நவி பிள்ளையும் செல்வம் அடைக்கலநாதனின் காத்திருப்பும்

Comments 2

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ஈழத் தமிழர் விவகாரத்தில் , மேற்குலக நாடுகள் 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக தீர்வைக் காண சதி செய்கின்றன . அந்த தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. நவனீதம் பிள்ளை அவர்கள் சர்வதேச விசாரணை நோக்கிய பயணதையும் , 13 ஆம் திருத்த அமுலாக்க வினைத் திறனையும் ஆராய சிறீலங்கா செல்கின்றார்.  

    இந்த விடயங்கள் பேசு பொருளாகாமல் பார்க்க இந்திய மீனவர்கள் கைது படலம் ஒரு புறம் , மறு புறம் இந்த நாலுபேர் நாடுகடத்தல் , போதாக்குறைக்கு மட்ராஸ் கபே 

    என கனக்ச்சிதமாக இந்திய சிறீல்ங்க உளவு நிறுவனங்கள் புகுந்து விளையாடுகின்றன .
    போதக்குறைக்கு குழப்பி விட என்ற சதித் திட்டத்துடன் “சொறியனுகளும் “Suryan” , சொறிய Suriya   ஊடகங்களும் சதிகாரர்களால் திட்டமிடப்பட்டு இறக்கி விடப்படுள்ளார்கள். 

    their aim is ////Stir up people and disturb any constructive discussion with theor Royal mind set of “Eat-Sleep-Remarry”

    பரபரப்பு மீட்டர் வியாபார ஊட்கங்கள் அரசியல் வாக்கு வேட்டை சுயனலமிகள் என எல்லாமே தவறாகவே நடக்கின்ரது என்பது என் அபிப்பிராயம் .
    ===================================================================
    மட்ராஸ் கபே ஈழத் தமிழர் அவலத்தைக்
    காட்டவில்லை எண்டு கூத்தாடும் ,  சீமான் , வைகோ , உட்பட அனைவரிடமும் ஒரு கேள்வி , ஈழத் தமிழர் அவலத்தை , முள்ளிவாய்க்கால் அவலத்தை , விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் ஒரு ஆங்கில படத்தை
    அல்லது சர்வதேச அரங்கில் எமது போராட்ட நியாயத்தை எடுத்துக் காட்டும் ஒரு படத்தை சீமான் , வைகோ , மணியரசன் ஆகியோர்  ஏன் எடுக்கவில்லை. இவர்களின் சுயநல அரசியல் வாக்கு வேட்டைக்  கூத்துக்கு ஆடுவோர் இதை அவர்களிடம் ஏன் கேட்கவில்லை ? முதுகெலும்பு இல்லையா ? அல்லது மூளை சரியில்லையா ?

    சனல் 4 கலம் மைக்கிரே அளவு தகவல் 

    சீமானிட்டை இல்லையா ? 
    வைக்கோவிட்டை இல்லையா ? 
    அல்லது அத்தைய தகவல் இல்லாதவர்களா “புலன் பெயர்” செந்தமிழன் வாலுகள் .

    தலைவருடன் பேசுகின்றேன் எனச் சொல்லும் கோமாளிகளிடம் நல்ல படம்
    எடுக்க தகவல் இல்லையா ? 

    அல்லது அப்படி ஒண்டும் செய்ய வேண்டாம் எண்டு
    தலைவர் இவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்தாரா ?

     நாலுவருசமா ஒண்டும்
    செய்யாதவனுகளை இனியும் நம்பி இருக்க முடியாது .

    ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டு வேறான முடிவை எதிர்பார்ப்பது பைத்தியக் காரத் தனம் என ஐன்ஸ்டைன்  சொல்லி இருக்கின்ரார் .

    ஈழத் தமிழர் விவகாரத்தில் சர்வதேச முக்கியமான சம்பவங்கள் நடந்தால் ,
    சீமான் , வைகோ , திருமுருகன் காந்தி பெயர்களை “செந்தமிழர்” ஊட்கங்கள் ,
    முகனூல் என அனைத்து இடங்களையும் நிரப்பும் .

    ஒருக்கா , பெரியாறு அணை எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் இரண்டு மாதத்தில் காத்திலை போச்சு. அந்த போரட்டம் வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு .

     ,

    பிறகு மரண தண்டனைக் கைதிகள் முருகன் ஆகியோர்  எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் இரண்டு மாதத்தில் காத்திலை போச்சு இந்த  போரட்டமும்  வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு .

    பிறகு என்னடா எண்டா பொது வாக்கெடுப்புக்கு கோரி இந்தியா எல்லாம் சுழலப் போறம் எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் அதுவும்  காத்திலை போச்சு . இதுவும் வெறும் பம்மாத்து என்பதைக் வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு .

    சரியான நேரத்தில் முக்கியமான சம்பவத்தை மறைத்து பரபரப்பு செய்தியை
    பம்மாத்து பூரட்டங்க்களை முதன்மைச் செய்தியாக்கி ஈழத் தமிழர்
     விடயங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை  கச்சிதமா திட்டமிட்டு திசை திருப்பும்  வேலையை இவங்களில்  சிலர் மிகத் திட்டமிட்டு செய்வதாக நான் குற்றம் சாட்டுகின்றேன் . பாவம் நல்ல உணர்வுள்ள சனங்களும் ஏமாறுதுகள்  இதற்கென்று ஊடகச் சிப்பாய்களும் சிறீலங்க இந்திய அரசுகளால் இறக்கி விடப்பட்டுள்ளனர்
    .
    இன்றுள்ள நிலை என்ன ? 
    முதலாவதாக , சர்வதேச விசாரணை , இனப்படுகொலை , பொது வாக்கெடுப்பு நோக்கி எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு அங்கமாக நவனீதம் பிள்ளை அம்மையார்
    கொழும்பு செல்கின்றார்  அந்த செய்தி பின் தள்ளப்படுகின்றது .

    இரண்டாவதாக, சாத்தியமற்ற மாகாண சபை தேர்தலில்  சிறீலங்கா அரச குண்டர்கள் புரியும் அடாவடித் தனங்கள் இணையங்களில் வருவதில்லை .
    மாகாண சையில் அதிகார பரவலாக்கம் இல்லை என வேட்பாளர்கள் சொல்வது வெளியிடப்படவில்லை .

    மூன்றாவதாக , பொதுநலவாய மகானாடு நடக்க இருக்கின்றது  அது பற்றி பேசுவாரில்லை .

    நாலாவதாக , முள்ளிவாய்க்கால்  அழிவிற்கு ஆதாரம் காட்டு என கோத்தபாயா கொக்கரிக்கின்றான் .

    இது என்னடா எண்டால்  மனுசி நவனீதம் பிள்ளை கேட்கக் கூடியதாக
    இந்தியாவில் பதுங்கும் திரு வும் பேசவில்லை , பிரான்சில் பதுங்கும் ஜெயா
    தம்பதிகளும் பேசவில்லை . வேறு எவரும் பேசுவாரில்லை இணைய விபச்சாரிகளும்
    பேசவில்லை.

    ஆபத்துக்கு உதவாப் பிள்ளை தாகத்தைத் தீரா தண்ணீர் என்று பாட வேண்டி இருக்கு .

    சீமானும் , வைகோவும் , ……மட்ராஸ் கபேயை தடை செய் என்று கதைவிடுகினம் . அதை பலர் துக்கிப் பிடிச்சு ஆடுகினம் .

    இதிலை யார் இந்திய சிறீலங்க அரசுகளின் கையாள் யார் ஏமாளி என்பது
    எனக்குத் தெரியாது . சோனியா கும்பலின் கிண்டுஸ்தான் யாருக்குச் சேவை
    செய்யுதோ அவன் இந்திய உளவாளிதான் .இப்பொழுது உள்ள ஆதாராங்களின் படி சீமானின் அறிக்கைகளை கொட்டை எழுத்தில் போடுவது சோனியா கும்பலின் கிண்டுஸ்தான் தான் !!! தமிழ் நெட் அதை மறு பிரசுமும் செய்யுது !!!

    உளவு நிறுவனங்கள் சும்மா பேன் பார்த்ததுக் கொண்டு இருக்குது அல்லது வெறும் பக்கிரியான நான் தான் உளவாளி என நீங்கள் நினைத்தால் 
    எமது அழிவு நிச்சயம் . 

    உளவாளி தீர்மானக்களை அறிபவனாகவும் 
    அதன் மீது செல்வாக்குச் செலுத்துபவனாகவும் இருப்பான் .
    அவன் முள்ளிவாய்க்கால்  தீர்மங்க்கலிலும் பங்கு கொண்டிருப்பான் .
    முள்ளிவாய்க்காலில் முக்கியஸ்தர்களுடன் பேசி இருப்பான் .

    எம் மீது செல்வாக்குச் செலுத்தும் ஆகக் குறைந்து ஒருவன் உளவாளி 
    இன்னமும் எம்முள் இருக்கின்றான் . 
    இல்லையெனில் நான்கு வருடமாக இந்த நிலை நீடிக்காது ? 
    அவன் யார் ? யார் ? நாம் கண்டு பிடித்தேயாகவேண்டும் 

    மட்ராஸ் கபே ஈழத் தமிழர் அவலத்தைக் காட்டவில்லை எண்டு கூத்தாடும் ,
    சீமான் , வைகோ , உட்பட அனைவரிடமும் ஒரு கேள்வி , ஈழத் தமிழர் அவலத்தை , முள்ளிவாய்க்கால் அவலத்தை , விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் ஒரு ஆங்கில படத்தை அல்லது சர்வதேச அரங்கில் எமது போராட்ட நியாயத்தை எடுத்துக் காட்டும் ஒரு படத்தை சீமான் , வைகோ , மணியரசான் ஆகியோர்  ஏன் எடுக்கவில்லை.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Still our people are suffering as refugees. That is very bad and sad.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...