ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று, தண்டவாளத்தில் இருந்த கல்லில் மோதியதை அடுத்து, ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியுள்ளார் டிரைவர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணிக்கு நிகழ்ந்துள்ளது. வண்டியில் இருந்து இறங்கிய டிரைவர், கல்லை அப்புறப்படுத்திவிட்டு, அருகில் இருந்த விஜயமங்கலம் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் 5 நிமிடத்துக்கு பிறகு சரக்கு ரயில் கிளம்பி சென்றது. இதையடுத்து ஈரோடு – திருப்பூர் ரயில் பாதைகளில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் இப்போது வந்திருக்கும் முதல் தகவல் உண்மையிலேயே தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலைக்கு யாரும் திட்டமிடுகிறார்களா? அல்லது தொடர்ந்து இம்மாதிரியான அச்சத்தை மக்களிடம் பரப்புவதம் மூலம் ஆளும்வர்க்க கும்பல் ஆதாயம் அடைய விரும்புகிறதா? என்பது புரியாத புதிராக இருக்கிறது.